தேசபக்தியில் திளைக்கும் திருட்டு கட்சிகளின் திருமகன்களுக்கு….இராணுவத்தை சந்தேகப்படக்கூடாது என முட்டிக்கொண்டிருக்கிறிர்கள். அடேய்ய்ய்ய்ய்ய் அப்ரண்டிசுங்களா அப்டி விட்டுத்தாண்டா குட்டிச்சுவரா இருக்கு ராணுவம். …. அடி முதல் நுனி வரை கலர் கலரா அரசியல் செய்யுற இடத்துல ராணுவம் மட்டும் புனிதமாகிடுமா என்ன? சவப்பெட்டி வாங்குனதுல,ட்ரக் வாங்குனதுல,வீடு கட்டுனதல,நவீன உபகரணங்கள் வாங்குனதுலன்னு ஆரம்பிச்சி இப்ப உயிரை வாங்குறது வரை அத்தனைலயும் ஊழல் செய்தா எப்படிடா மக்கள் நம்புவாங்க?பட்ஜெட்ல பணம் அதிகமா ஒதுக்கப்படுவது ராணுவத்துக்குதான். கடை நிலை சிப்பாய்க்கு எவ்வித பலனும் சேராமல் மேலேயே ஏப்பம் விடப்படுவதை எந்த நியூஸ் ஹவர்லயாச்சும் எந்தப்பல்லியாச்சும் கேட்குதா?கேட்ட தெஹல்காவையும் கிள்ளிட்டான் முள்ளிட்டான்னு கலைச்சி விட்டதுதானடா உங்க நாய் அரசியல்..ராணுவத்தான் சொதந்திரம் அடைந்ததிலிருந்து அதே குளிரு அதே மழைல நனையுறான் காயுறான்னு படிக்கிங்களே அத மாத்தனும்னு தோணல? அம்புட்டு பட்ஜெட்டையும் எங்க தூக்கி போடுறான்னு கேட்கனும்னு அறிவில்ல? நாலாயிரம் மொபைல்ல போர் போர்னு கூவுறவனுங்க எத்தன பேரு அவனவன் புள்ளய எஞ்சினியரு,டாக்டருன்னு கடந்து ராணுவத்துக்குனு கனவு கண்டிருப்பிங்க? அட விடுங்க… உன் வீட்டு குழந்தைக்கே ஒன்னுமில்லாத ஏ பி சி டில ரைம்ஸ் பாட லட்சம் ரூவா டொனேசன் கொடுத்த வீரந்தானே நாம.உங்க ஜெய்ஹிந்த் வீடியோ ,சல்யூட் மருவாத போட்டோ வீடியோல்லாம் பார்த்தா பட்டாளாத்தான மஞ்ச தேய்ச்சி குளுப்பாட்டி அறுத்துப்போட தலைய கொடுக்குற ஆட்ட ரெடி செய்ற மாதிரியே இருக்குது. ஆர்மிக்காரன் பொண்டாட்டி தனியா இருப்பா,தாகமா இருப்பான்னு கணக்கு போடுற நாய்ங்க இங்கன இல்லன்னு நெஞ்ச தொட்டு சொல்லுங்கடா வெண்ணைகளா…. உங்களால முடியாது.அத்தனையும் வேசம்.ராணுவத்துல,போலிசுல சேர்ந்த பொம்பளப்புள்ளய நாம பார்க்கிற யோக்யத தெரியாதா என்ன? அட வயசுப்பசங்கள விடுங்க…வயசான பெருசுங்க தன்னோட புள்ளைக்கு சம்பந்தம் பேசுவாங்க?ஆக இந்த தேசபக்தி ஜெய்ஹிந்த் எல்லாம் நம்மள நேரடியா நட்டப்படாத வரைக்கும் பிரச்சனையே இல்ல. கார்கிலுக்கும் அள்ளிக்கொடுப்போம் கபாலிக்கும் அள்ளிக்கொடுப்போம். எல்லாமே ஹைப்புதான்.பார்டர்ல ஆடு மேய்க்கிற கெழவன வம்படியா ஊர விட்டு கெளப்பிருக்கு உங்க போர் விளையாட்டு. விதைக்கவும் அறுக்கவும் ரெடியானவன சொந்தக்காரன் வீட்ல பிச்சைக்கு சாப்ட்டுட்டு இருப்பான். நீங்க கே எப் சில வழிச்சி நக்கி பெப்சில வாய் கொப்புளிச்சு ஐநாக்ஸ்ல தேசிய கீதம் வாசிப்பிங்க. இதாண்டா நிஜம் . போதும்டா உங்க தேசப்பத்து.தேசம்னா மக்கள்டா… எந்த மக்களை மதிச்சோம்? பாகிஸ்தான்ல நாலு கட்சி ,இங்கன நாலு கட்சி, அங்கிட்டு நாலு மதம் இங்கிட்டு நாலு மதம்… வேற என்ன வித்தியாசம் உழைக்கும் மக்களிடம்? ஒரு வாய் உணவுக்கு ஓடுறவனையும் பைத்தியமாக்கி வைச்சிருக்கிங்க தேசப்பத்து பேரச்சொல்லி.அதானிக்கும் மோடிக்கும் அம்பானிக்கும் இல்லாத பத்து உனக்கெதுக்கு? சம்பாதிக்க அவனுங்க செத்துப்போக பட்டாளத்துக்காரனா? பெரும்பான்மை மக்கள் விரும்புவதைத்தான் அரசு செயல்படுத்தும். சிங்கள பெரும்பான்மை மக்கள் போருக்கு எதிராக வீதி கண்டிருந்தால் ?ராஜபக்சே தோற்றிருப்பான்… பிரபாகரன் என்றோ ஆயுதத்தை வீசியிருப்பான்.புத்தி கெட்ட தேசப்பத்து மக்களின் ஆதரவோடு சக மக்களை கொன்றொழித்தது தவிர சாதித்ததென்ன? இரு நாட்டு மக்களும் போருக்கெதிராக கூடும்பட்சம் அடையாளம் தெரியவரும் பயங்கரவாதிகளை ஊட்டி வளர்ப்பது யார் என்று…மதம் ,நாடு,மொழி என ஏதேனும் ஒன்றினால் சிந்திக்க தடை செய்யப்பட்ட மக்கள்தான் தேசப்பத்து அரசியலின் பகடைக்காய்கள்.வெகுண்டெழ வேண்டியது இந்த கேடுகெட்ட அரசியலுக்கு எதிராக…கேள்விக்கேட்க வேண்டியது அடிப்படை மதவாதத்தையும்,அதனை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளையும்தான். இது இரு நாடுகளிலும் நிகழ்ந்தால் போதும் . அம்பலப்பட்டுப்போவார்கள் அரசியல் வியாதிகள். அசிங்கபட்டு விலகுவார்கள் ஆயுத வியாபாரிகள்.பகுத்தறியும் மக்களிடம் மத ரீதியான எவ்வித புனிதப்போர்களும் எடுபடப்போவதில்லை. இன ரீதியான துவேசம்களை “நாம் மனிதர்கள்” உணர்வு மட்டுமே ஒழித்துக்கட்டும். தேவை நிதானமான மனித நேயமே அன்றி வெறுப்பு அரசியல் அல்ல.நம்மிடம் இருப்பதில் மலிவான எளிதான ஒன்று என்னவென்றால் அடுத்தவனை பலி கொடுப்பதுதான். அதனைத்தான் ஒவ்வொரு ராணுவத்தானிடம் செய்கிறீர்கள். இறந்துபோன ராணுவ வீரர்கள் நேரடிப்போரில் சாகவும் பொங்கியெழும் அதே நேரத்தில் போலி விதை,போலி மருந்து என மறைமுகமாக கொல்லப்படும் மனிதர்களுக்காக,தற்கொலை என பெயரிடப்பட்டு கொல்லப்படும் விவசாயிகளுக்காக என்ன செய்தோம்? இன்று போர் என்றால் உயிரைக்கொடுக்கவும் தயாரகும் கூட்டம் தெருமுனையில் நடக்கும் போராட்டக் கூட்டத்தை கேலி செய்து கடந்தவர்கள்தானே!வம்படியாக பாகிஸ்தானும் இந்தியாவும் போரை செலுத்துமெனில் அதற்காக பணிக்கப்பட்ட ராணுவம் கவனித்துக்கொள்ளட்டும். உள்ளுக்குள் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் ஆதாயம் பார்க்கும் அரசியல்வாதிகளை என்ன செய்யப்போகிறோம்?போர் ஒன்று நிகழ்ந்தால் அது தொடருமே அன்றி முடியாது. பாகிஸ்தானுடனான நான்கு போர்களிலும் ஜெயித்து விட்டதால் என்ன பயன் கிடைத்தது? அமைதி? சமாதானம்?ஒப்புரவு? பங்களாதேஷ்? இறப்பைக்குறித்து கவலையில்லை ஒப்பந்தப்பட்ட பட்டாளத்தானுக்கு. மூடத்தனமான தேசப்பத்து அரசியலுக்கு பலியாவதுதான் அநியாயம். டாட்.சக மக்களுக்காகவும்…சக பட்டாளத்துக்காரர்களுக்காகவும்….-தேசத் துரோகி சதிஷ் செல்லத்துரை.06/10/16 .WAR IS COST ….PEACE IS FREE…