The Kashmir file -பட விமர்சனம்- சி.ப
The Kashmir file -பட விமர்சனம்- சி.ப

The Kashmir file -பட விமர்சனம்- சி.ப

நான் இந்த படத்தை விமர்சிக்க விருப்பம் இல்லை, இருந்தும் சில முற்போக்காளர்களே இந்தப் படத்தை உச்சி முகரும் பொழுது விலகி போக மனம் இல்லை; அதனால் எழுதும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இங்கு முற்போக்களர்கள் இடதுசாரிகள் என்னும் இயக்குனர்களின் படங்களே ஒடுக்கும் வர்க்கத்தை குளிர்விக்க, அல்லது சின்ன பிரச்சினைகளை பேசி மக்களை திசைத் திருப்பும் தங்களின் வியபார நோக்கில் செயல்படும் பொழுது, வலதுசாரிகளை குளிர்விக்க எடுக்கப் பட்ட படம் சாதரண உழைக்கும் மக்களுக்கானதாக எடுத்துக் கொள்ள முடியுமா உண்மையை பேசும் என்று எதிர்பார்க்க முடியுமா???

ஆளும் கும்பலின் பல பத்தாண்டு பொய்மையை அந்த நடந்த நாடக பாணி பின்னணியை பேசாமல் பொய்யை தூக்கி நிறுத்தியுள்ள இப்படம் யாரை குளிர்விக்க எடுக்கப் பட்டது என்றால் நான் சொல்லிதான் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமா என்ன?

உழைக்கும் மக்களை பிறித்தாளும் உத்தியை சூழ்ச்சியை ஆளும் கும்பல் செய்கிறது என்றால், அதனை இந்தப் படம் கன கட்சிதமாக செய்து முடித்துள்ளது என்பேன்.

மோடியின் பொய் வாக்குறுதிகளை மூடி மறைத்து அவரை கடவுளின் அவதாரமாக அவதானிக்கும் இது போன்ற பொய்யர்களை நாம் தினம் சந்தித்துக் கொண்டுதான் உள்ளோம், ஆக அவர்களின் நோக்கம் உண்மையில் யாரின் தேவைக்கானவை என்பதே நமது தேடுதல்.

சரி பட விமர்சனத்திற்க்கு முன் சில வார்த்தைகள்.
சுரண்டுபவன் சுரண்டலுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவையெல்லாம் செய்துக் கொண்டேதான் உள்ளான். மக்கள் தவறியும் ஒன்று பட்டு விட கூடாது என்பதுதானே பிரித்தாலும் சூழச்சி.

உலகெங்கும் இன்றை உலக மயமாக்கல் சூழலில் சுரண்டலாளர்கள் செய்துக் கொண்டுள்ள சூழச்சி ஒன்று இரண்டல்ல அவை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தியா போன்ற பின் தங்கிய நாட்டில் பாபர் மசூதியை தொடர்ந்து மதவாத செயல்கள் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டுள்ளதில் ஆட்சியில் உள்ளவர்களின் ஆசியோடுதான் நடைப்பெற்றுக் கொண்டுள்ளது என்பது நாடறிந்த ஒன்றே. எல்லா நிகழ்வு போக்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும் தக்க வைத்துக் கொள்ளவும் என்னும் பொழுது இந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றமும் சிலரின் லாப வெறிக்கானதே என்றால் அவை மிகையன்று இதில் ஈடுபட்டவர்களின் அரசியல் பொருளாதார நலங்களை மூடி மறைத்து அப்பாவி மக்களை பலிகடாவாக்கிய அவர்களை பற்றி பேசாமல் யார் மீதோ பழி சுமத்தி ஒழிந்து ஓடாதீர்கள் கனவான்களே!!!.

இங்கே மதத்தை முன்னிருத்தி மக்களை துண்டாடி அவர்களை அவர்களுக்குள் பகைமையை மூட்டி அதில் தங்களின் சுரண்டலை நிலை நிறுத்த மதம் என்ற கோடாரி பயன்படுவது போலாவே இந்தப் படமானது ஆராம்ப காட்சியே பொய்யான தகவலை கொடுத்துள்ளது (2016 நிகழ்வை) இதிலிருந்து இந்தப் படத்தின் தன்மையை நான் சொல்லத் தேவையில்லை.
உண்மை இப்படி இருந்தும், பேச வேண்டிய தேவை உள்ளது.

ஆக படத்தின் விமர்சனத்திற்க்கு நுழையும் முன் முற்போக்கு வேசம் போடுவோரிடம் பேசி விடுவது சரியாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

அசிபாவை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன், ஏன் குல்பர்க்க (குஜராத்) சொசைட்டியை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தன் கருத்தை சொல்லிய கவுரி லங்கேசை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் இதனை சற்று அசை போட்டு வாருங்கள் படம் “தி காஷ்மீர் பயில்” பற்றி பேச புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனது தென்காசி இராணுவ நண்பரோடு (இவர் ஆர் எஸ் எஸ் பயிற்ச்சி எடுத்த சங்கி இன்றோ மதிமுகாவின் பிரசாரகர் தேவை படுவோர் பேசலாம் அவரின் போன் நெம்பர் தருகிறேன்) பேசும் பொழுது நான் வைத்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். “ இஸ்ரேலின் கொடுங்கரங்களால் ஒடுக்கப் படும் பாலஸ்தீன குழந்தையிடம் கேளுங்கள் ஒடுக்குமுறை என்றால் என்னவென்று சொல்லும், ஈழ போரில் மாய்ந்து போனோரை மறந்திருக்கலாம் ஆங்காங்கே அகதிகளாய் தஞ்சம் புகுந்துள்ள ஈழ அகதிகளிடம் கேளுங்கள் அகதிகளின் கொடுமை, ரோகிங்கா அகதிகளை ஏற்க்க மறுத்த உலக நாடுகள் அங்கே அங்கே கும்பல் கும்பலாக கொலையும் திக்கற்று ஓடும் அவர்களிடம் கேளுங்கள் நாட்டின் இழப்பு பற்றி” ” இப்படி போர் வெறியர்களால் குற்றுயிரும் கொலையுயிருமாக விசாப்படும் மக்கள் மத்தியில் காஷ்மீர் பண்டிட்களின் இடம் எங்கே என்பேன்”,. அவரும் விளக்கம் அளிப்பார் நான் ஏற்க்க மாட்டேன் ஏனெனில் வரலாற்று நிகழ்வு அதுவல்ல ஆக அதற்கான பதில் அவசியம் உங்களுக்கு அளிப்பேன்.

சரி பட விமர்சனத்திற்க்கு முழுமையாக செல்லும் முன் எனது சில வரிகள், “எல்லாவகை போராட்டமும் மக்களுக்கானது அல்ல, சில ஆளும் கும்பலுக்கு சேவை செய்வதே என்பது உறுதி! ஒன்றுபட்ட ஜம்மு-காஷ்மீரின் சுய நிர்ணயத்துடன் கூடிய விடுதலை மட்டுமே தீர்வாகும். பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ நிர்பந்ததினால் இருப்பது சுதந்திரம் ஆகாது” இவைதான் என் நோக்கு என் பார்வை. காஷ்மீருக்கு எப்படியோ அதே நீதிதான் ஈழத்திற்கும் அதனையும் கணக்கில் கொண்டால் சிறப்பு.

படத்தின் முதல் காட்சி புரான் வாணி என்ற தீவிரவாத குழுவின் தலைவன் ஒரு பெண்ணுடன் பேசுவதும் பின் அப்பெண்ணுடன் ஏற்படும் மோதலால் அவளை வல்லுறவு கொல்வதும், அவனின் நடத்தையை கொச்சைப் படுத்த பயன் படும் காட்சி, படமாக்கி உள்ள விதம் எவ்வளவு அருவருப்பாக உள்ளது என்றால் காஷ்மீரில் 2016 நிகழ்வுகளை கவனித்தவர்களுக்கு உண்மை சம்பவம் என்னவென்று தெரிந்திருக்கும்.
மேலே சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிக்கு காஷ்மீரில் கூடிய கூட்டத்திற்க்கு இந்த பட இயக்குனருக்கு பிரச்சினை போல அதனால்தான் படத்தில் தன் கருத்தை தலைகீழாக்கி உள்ளார்.

அந்த புரான் வாணி தீவிரவாதி சுட்டு கொலை ஆகி சில ஆண்டுகளுக்கு முன் நடந்தவையேதான், ஆனால் இந்த பட இயக்குனர் அதனை தலை கீழாக பேசுவதோடு அல்லாமல் கதைப் பாத்திரம் மூலம் பேச வைத்துள்ளார் , “மோடி கவர்ன்மெண்ட் இனி தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டி விடும்” என்று.

உண்மையில் மோடி ஆட்சி அதிகாரம் பற்றி பேசுவதை விட ஜம்மு-காஷ்மீரில் இவர்களின் அதிகார கட்டிலில் ஏறியதை தெரிந்துக் கொள்ள வேண்டாமோ?
மோடி ஆட்சி ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட பி.டி.பியின் அரசியல் தற்கொலையே என்றால் மிகையாக இருக்காது என்றே நினைக்கிறேன் அதனை இன்று அங்கு நடந்தேறும் நிகழ்வுகள் சாட்சியம் அளிக்கின்றது.

“ஒரு சிறிய உதாரணம் மட்டும் சொல்கிறேன்.. சாதாரணமாக இராணுவத்தால் கொல்லப்படும் (இவர்களின் வார்த்தையில்) தீவிரவாதி ஒருவரின் சவ ஊர்வலத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.. ஆனால், பி.டி.பியின் தலைவரான முப்தி முகமதுவின் சாவுக்கு சில ஆயிரம் மக்கள் கூட வரவில்லை.. ஒரு அனாதைத் தெருநாயைப் போல முப்தியை குழியில் இட்டு மூடினார்கள்”. இவைதான் மோடியின் மகிமை.

நிலைமை இப்படி இருக்க படத்தில் “மோடியின் ஆட்சியில் இனி தீவிரவாதிகள் தினம் இதுபோல் கொன்றொளிக்க படுவார்கள் என்று கதை நாயகன்” சொல்லும் பொழுது. அதை ஏற்க்க மறுக்கும் அத்தாய், “எத்தனை பிரதமர் மாறினாலும் எங்கள் பிரச்சினை மாறப் போவதில்லை”, என்னும் பொழுது தன் நிலையில் மோடியின் மீதான அவ நம்பிக்கையை துடைக்க முயற்ச்சிக்கிறார் இயக்குனர்.

இன்னொரு காட்சி ராம் லால் பேசும் பொழுது “ஜம்மு – காஷ்மீரில் இந்திய பாக் போரில் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணின் மனநிலை பாதிப்பு” பற்றி பேசுவார். அந்தப் பெண் இந்திய தேசியக் கொடியை எடுத்துக் கொண்டு திரிவதையும் அவரின் கொடிக்கான காரணம் புரியவில்லை!!! அப்படியே இந்த இயக்குனர் என்ன தேசியவாதத்தை முன் வைத்து பேசுகிறார் அப்படி பேச என்ன அருகதை உள்ளது என்று தன் நாக்பூர் தலைமையகத்தை பேசி இருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

படத்தில் சொல்வதுபோல் காஷ்மீர் பண்டிட்களை விரட்டியது யார்?

“பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது தான்” ஆனால், படம் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பிக்கிறது மறுபக்கத்தையும் பாருங்கள் அவை எப்படி நிகழ்ந்தது? பண்டிட்டுகள் வாழ்ந்த பகுதிகளில் திடீரென முஜாஹிதின்கள் பெயரில் சில நோட்டீசுகள் தோன்றியிருக்கின்றன. அதில் பண்டிட்டுகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. உடனடியா இந்திய இராணுவம் அவர்களை பாதுகாப்பாக இராணுவ ட்ரக்குகளில் ஏற்றி வெளியேற்றியது .. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு ஏதாவது பாதுகாப்புப் பிரச்சினை என்றால் அரசு என்ன செய்ய வேண்டும்? அவர்களைப் பாதுகாக்க வேண்டுமா? வெளியேற்ற வேண்டுமா?” இதை என்னவென்று சொல்ல? ஒரு பத்திரிக்கை கேள்வி இது.

படத்தின் அடுத்தப் பகுதிக்கு போகும் முன் வினவு இணையத்தில் ஒரு JNU மாணவியின் நேர்காணலின் சிறிய பகுதி கீழே
காஷ்மீரின் பக்கத்தில் முசுலீம்களிடையே வகாபிய போக்கு தற்போது செல்வாக்கோடு வளர்ந்து வருகிறது
”சரியான கேடுகெட்டவர்கள் இந்த வகாபிகள் இப்போது காஷ்மீரில் தர்காக்களை இடிக்க வேண்டும் அது இது என்று உளறிக் கொண்டு திரிகிறார்கள். வகாபியகள் இந்திய அரசின் உளவாளிகளாதான் இருப்பார்கள் என்பேன்”

வரலாற்று ரீதியில் காஷ்மீரில் இசுலாம் அறிமுகமானதே சூஃபி ஞானிகளின் வழியே தான். அது மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்… இப்போது வகாபியம் என்ன செய்கிறதென்றால் காஷ்மீரின் சுதந்திர போராட்டத்திற்கு இனம் கடந்து மத சாயம் பூசுகிறது. இசுலாமிய வெறியையும் பாகிஸ்தானையும் தாலிபானையும் முடிச்சுப் போடுவதும் அதன் தொடர்ச்சியாக காஷ்மீரியின் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்துக் காட்டுவதும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எளிதானது தானே? அந்த வகையில் இவர்கள் மறைமுகமாக இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்கிறார்கள்”

“சமீபத்தில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டது… எல்லாருக்கும் அதை இடித்த வஹாபிய கும்பல் யாரென்பது நன்றாகவே தெரியும்.. இந்தியாவுக்கும் தெரியும் – அங்கே தான் இந்தியாவுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாதே.. ஆனால், ஒருவர் மீது கூட போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. தர்ஹா இடிக்கப்பட்ட பின் மக்களிடையே இரண்டு பிரிவினரும் அடித்துக் கொண்டனர்.

படம் பற்றி விமர்சனம் தொடரும் அடுத்தடுத்த பதிவில் தோழமைகளே.

உங்கள் கருத்துகள் உண்மையின் அடிப்படையில் இருக்குமேயாயின் அவசியம் பதிலளிக்க முயற்ச்சிப்பேன் தோழமைகளே….
https://youtu.be/1Ys67CAAe38

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *