நான்கு கும்பல் | Gang of Four

நான்கு கும்பல் என்று சீன திருத்தல்வாதிகளால் அழைக்கப் பட்ட நான்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களைக் கொண்ட ஒரு அரசியல் பிரிவு. கலாச்சாரப் புரட்சியின் போது (1966–76) அவை முக்கியத்துவம் பெற்றன,

மாவோவின் மறைவுக்கு பின்னர் ஆட்சியை கைபற்றிய திருத்தல்வாத கும்பல் கட்சி துரோக குற்றங்களுக்காக என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டனர். முன்னணி நபர் ஜியாங் கிங் (மாவோ சேதுங்கின் கடைசி மனைவி). மற்ற உறுப்பினர்கள் ஜாங் சுன்கியாவோ, யாவ் வென்யுவான் மற்றும் வாங் ஹொங்வென்.

இவை முழுமையாக எழுதவிட்டாலும் சீன அரசியலில் இந்த நால்வர் பற்றி அன்றி சீன ஆட்சி மாற்றம் எப்படி நடந்தேறியது அதில் திருத்தல்வாதிகள் செயலை மட்டுமே குறிப்பிடுகிறேன். இங்குள்ள CPM கூறுவது போல் சீனாவில் ஆட்சி அதிகாரம் படைத்தவரகள் கம்யூனிஸ்டுகள் அல்ல திருத்தல்வாதிகளே.

1976 ஆம் ஆண்டின் செப்டம்பர் 9 ம் தேதி மாபெரும் மார்க்சிய லெனின்யவாதியும் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய மனிதர்களில் ஒருவருமான மாசேதுங் மரணமடைந்தார், இச்செய்தி மின்னதிர்ச்சி போல உலகில் பல்வேறுபாகங்களில் பல்வேறு வழிகளில் பாதித்தது. மாவோவின் மரணம் சர்வதேசிய ரீதியில் என்பது இலட்சோப இலட்சம் அடக்கி ஒடுக்கப் பட்ட மக்களும் தொழிலாளர்களும் கம்யீனிஸ்ட்டுகளும் எல்லையற்ற துக்கத்தில் ஆழ்ந்தனர், ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களுடைய அடிவருடி எக்களிப்புக் கொண்டார்கள். சர்வதேசிய கம்யூனிச இயகங்களுக்கும் புரட்சிகர் இயக்கத்துக்குகும் ஒளியூட்டு வழிகாட்டிய கலங்கரை விளக்கு சடுதியில் மறைந்துவிட்டது.
சீனாவில் மக்கள் துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் கலாசாரப் புரட்சியில் தப்பி பிழைத்தவர்களுமான திரிபுவாதிகளும் முதலாளித்துவப் பாதையாளர்களும் தமது மறைவிடங்களிலிருந்து வெளியே வர ஆரம்பித்தார்கள். 20 நூற்றாண்டின் 20 ஆண்டுகளில் இந்த உலகைக் குழுக்கும் இயகத்தை ஆரம்பித்த முதலாவது சந்ததி கம்யூனிஸ்டு இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் அல்லது துரோகிகளாகி கலாசார புரட்சியின் போது அம்பலப்படுத்தப் பட்டு விட்டார்கள். திரிபுவாத இப்போது முன்னோரு காலத்தின் அங்கி கட்சியின் பொதுக் காரியதரிசியாகவிருந்த தெங்சியாவ்-பிங் கிடைத்தது. கலாசாரப் புரட்சியின் போது அவர் இர்ண்டு தடவை அவமானப்படுத்தப்பட்டு கட்சி யிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால்த்தான் அவர் உடனடியாக முதலாளித்துவப் பாதையாளர்களை அதிகாரத்துக்கு கொண்டுவர முடியவில்லை. ஒரு தற்காலியக் தலைவரைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று . மாவோவின் புரட்சிகரக் கொள்கைக்கு எதிராக சூ-என் லாய் முதலாளித்துவப் பாதையாளர்களை தஞ்சம் அளித்துக் காப்பாற்றினார். அதில் ஒருவரே தெங்சியாவ்-பிங் .

தெங்-சியாவ்-பிங்கிற்கு முழுதாகப் புனர்வாழ்வு அளிக்கும் வரை அந்த இடத்தை நிரப்புவத்ற்க்கு குவா கோ பெங் தேர்ந்தெடுக்கப் பட்டார்.. இவர் தேர்ந்தெடுக்கபட்டதற்கு மாவோவின் உடன்பாடு இருந்த்தாகக் கூறப்படுகிறது ஆனால் இதற்கான ஆதாரம் இல்லை. மாவோ மறைந்த சில மாதங்களுக்குள் அவர் மனைவியான சியாங்சிங் உட்பட மாவோவின் நெருங்கிய தோழர்கள் அனைவரும் எந்தவித விசாரணையுமின்றி நியாயமுமின்றி மத்தியக் கமிட்டியினதோ அரசியல் குழுவின் அங்கீகாரமின்றி கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார்கள், இந்தத் தலைவர்களுக்கு எதிராகப் பெரும் அவதூறு இயக்கம் ஒன்று அவிழ்த்து விடப்பட்டது. ‘நாலு பேர் கும்பல்” என அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இது உண்மையில் மாவோவின் புரட்சிகரக் கொள்கைகளை நிராகரிப்பதன் ஆரம்பமேயாகும். சிறைவைக்கப்பட்ட தலைவர்கள் மாவோவின் புரட்சிகரக் கொள்கையின் ஆதரவாளர்களே தவிர வேறொருவரும் அல்ல. ஆகவே அவர்களை சிறையிலிட்டது மாவோவை நிராகரிப்பதேயாகும் ஆனால் இந்த வேளையில் மாசேதுங் விமர்சிக்கப்படவில்லை, மாவோ கடவுளைப்போல மேலே உயர்த்தப்பட்டிருந்தார்.
மாசேதுங்கைப் பகிரங்கமாகக் கண்டிபது நடைபெறவில்லை ஆனால் புதிய ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கேற்ப அவருடைய கொள்கைகள் நிராகரிக்கப்பட்டன திரித்து வளைக்கபட்டன

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!