நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன்.நான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறேன்.எமது இயக்கம் மதுரை உத்தப்புரம்,திருச்சி எடமலைப்பட்டி,கோயம்புத்தூர் நாகராஜபுரம் ஆகிய இடங்களில் தீண்டாமைச் சுவர்களை அகற்றியது.எமது இயக்கம் 25 கும் மேற்பட்ட ஆலயங்களில் சமத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி வன்கொடுமைகளுக்கு எதிரான எங்கள் வழக்கில் தான் ரூ.7.50 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.இதனை அன்றைய தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்ட மன்றத்தில் அறிவித்தார்.நாங்கள் நடத்தி வருகிற டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு இலவச மையத்தின் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு துறைகளில் பணியாற்றுகின்றனர்.எங்களுக்குபெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக தேனி மாவட்டம் கோடங்கிப் பட்டியைச் சேர்ந்த வசுமித்ரா என்பவர் தனது முகநூலில் இந்திய அரசியல் அமைப்பின் தந்தை பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளார்.ஒடுக்கப்பட்டோர் நலனில் அக்கறை செலுத்திக் கொண்டே இந்தியாவின் ஒட்டுமொத்த நலன்களுக்கான அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கித் தந்தவர் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர். இந்நிலையில் மேற்படி வசுமித்ரா சாதி மேலாதிக்க உணர்வுடன் “ புத்தரின் ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும் அம்பேத்கர்“ என டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை மிகக் கீழ்தரமாக இழிவு படுத்தியுள்ளார். மார்க்சிய, மற்றும் அம்பேத்கரிய இயக்கத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிலையில் அதனை சீர்குலைப்பதும் மேற்படி வசுமித்ராவின் நோக்கம். எனவே டாக்டர் பி. ஆர். அம்பேத்கரை இழிவு படுத்தி முகநூல் பதிவு செய்த சாதி இந்துவான வசுமித்ரா மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியனர் உயர்வாக மதிக்கப்படுபவரை இழிவு செய்வதற்கு எதிரான சட்டப்பிரிவுகளான SC/ST வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018ன் பிரிவுகள் 3(1) (t), 3(1) (u), 3(1) (v) ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்குதங்கள் உண்மையுள்ள (கே. சாமுவேல்ராஜ்