CPI, CPM திருத்தல்வாதிகளே-cp
CPI, CPM திருத்தல்வாதிகளே-cp

CPI, CPM திருத்தல்வாதிகளே-cp

அன்பு தோழர்களே நான் முக நூல் பகுதியில் பல்வேறு கட்டங்களில் எழுதியதன் தொகுப்பே இந்தப் பகுதி இதில் அன்றைய எனது அரசியல் நிலையில் இருந்தும் நான் நம்பிய ஊடக செய்தின் அடிப்படையிலும் இதனை எழுதியுள்ளேன் இதனை எழுதிய பொழுது எனது அரசியல் மட்டம் புரிந்துக் கொள்ளமுடியும்… வாசித்து கருத்து கூறுங்கள் தோழர்களே.

 மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை -cp

1967 ஆம் ஆண்டு நக்சல்பாரி போரட்டத்திற்குப் பிறகு இந்திய சமூகத்தைப் பற்றிய வர்க்க ஆய்வினை மிகச் சரியாகவே ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவற்கான முயற்சிகளை மேற்கொண்டது குறித்த அனுபவங்களை நாம் மார்க்சிய லெனினிய இயக்க வரலாற்றினை படிக்கும்போது அறிய முடிகிறது. மக்கள் போரட்டங்களையும் கட்சி கட்டும் முயற்சிகளிலும் அது சிறிது முன்னேற்றம் அடைந்தது எனினும் வழக்கம்போலவே உலக அளவில் கம்யூனிஸ்ட கட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம், பாராளுமன்றவாதம் போக்குகளைப் போலவே இந்திய மா-லெ இயக்கங்களுக்குள்ளும்  பல்வேறுவிதமான போக்குகள் எழுந்தன. இதனால் இந்தியா முழுமைக்குமான உருவான மா-லெ இயக்கம் பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட பல மா-லெ இயகங்களாக பிரிய ஆரம்பித்தது இன்று பல குழுக்களாக் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது புரட்சிக்கு மாபெரும் பின்னடைவுதான்.கிட்டதட்ட அய்ம்பதாம் ஆண்டை நெருங்கப் போகிற மா-லெ இயக்கங்களின் வரலாற்றையும் மற்றும் இதுவரைக்கும் அவர்கள் அடைந்த வள்ர்ச்சிகளையும் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டிய இத்தருணத்தில், ரஸ்சிய புரட்சியின் முன்னும் பின்னும் எழுந்த திர்த்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடினார். அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு முறியடித்தார் என்பதை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனின்யம் நமக்கு சுட்டிகாட்டுகிறது.

முதலாளித்துவவாதிகள் தங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் தங்களுடைய ஆட்சிமுறைக்கு ஒரு பங்கம் ஏற்படுகின்றதென்றால் அதை முறியடிக்க அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் இணைந்துகொள்கிறபோது, ஒட்டு மொத்த சமூகத்தையே காப்பாற்ற நினைக்கும் மா-லெ புரட்சியாளர்கள் நாட்டில் உள்ள சாதாரண பிரச்சினைக்கான போரட்டத்தில்கூட ஒன்றினைந்து செயல்பட முடியாமல் போனதற்க்கு காரணம் என்ன?

சமூக மாற்றம், புரட்சியும்,மார்க்சியமும் யாருடைய தனிப்பட்ட சொத்தல்லவே, நாங்கள்தான் இந்நாட்டில் புரட்சி செய்வோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது.  நாடோ வலது அரசியலை நோக்கி திருப்பட்டுள்ளது அதனை ஒட்டி அனைத்து பிழைப்புவாத கட்சிகளும் ஒருங்கிணைந்துகொண்டுள்ளது.

மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை லெனின்யம் வரையறுத்துள்ளது. லெனின் அவர்கள் சொன்னது போல் சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் நீடித்த நோய்தான், அதைக் குணப்ப்டுத்திக் கொண்டிருக்க வேண்டுமாயின் புரட்சியாளர்கள் நீடித்த ஒற்றுமையும், அவர்களுக்குள் நீண்ட நெடிய விவாதமே அந்த நோய்க்கு மருந்தாகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)?  26/07/2016

நான் தொடர்சியாக வரலாற்றை எழுத முடியாமைக்கு வருந்துகிறேன், நான் நேற்று கேட்டகபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே இந்த பதிவை எழுதி கொண்டுள்ளேன். CPI,CPM தோழர்கள் சிந்திக்க நான் கேள்விகளை அடுக்கி கொண்டும் வரலாற்று நிகழ்வுகளை துணை கொண்டும் விளக்கவே இப்படி கையாலும் நிலை. சில CPI,CPM தோழர்கள் மா-லெ அமைப்பே தகற்ந்துவிட்டது நீங்கள் எழுத என்னவுள்ளது என்றெழுதியுள்ளார். CPI லிருந்துதான் CPMம் CPMலிருந்துதான் CPI(ML)ம் உருவாகின இவை தத்துவார்த்த ரீதியாக வளர்ச்சி போக்கில். போலிகளிலிருந்து பலர் நாளை உண்மையான தத்துவார்த்ததை தூக்கிபிடித்து மார்க்சிய லெலின்ய மாசெதுங்க் பாதையில் கட்சியை வளர்த்தெடுக்கலாம் ஆகையால் வரலாற்றில் தவறுகளை விமர்சன பூர்வமாக அணுகி உண்மையான கம்யூனிஸ்டாக வாழ முயற்சிப்போம் ..சி.பி

எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ‘நூல் இழையில்’ மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும். ஆம் இவர்கள் குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையே “மண்ணுகேற்ற மார்க்ச்சியம்” என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை, நேருவும் காந்தியும் இவர்கள் தலைவர்கள் ஆகும்போது இவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது அறிவது மிக சுலபம். ஆனால் அன்றைய வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கப் போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம். விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது போலிகள் இன்னும் முழுமையாக, ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்ன?
அப்படிப்பட்ட சமரசமற்ற களப்போராட்டத்தைக் காட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா வரிசையில் அதிகார புரோக்கர்களான  இ.எம்.எஸ்யும், சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் …. காணச் சகிக்க முடியாது. CPI மிலிருந்து வெளியேறிய CPM  எதோ மார்க்ச்சியத்தை காப்பது போல் புறப்பட்ட வேகத்திலே மார்க்ச்சிய-லெனின்யத்தை தூக்கிபிடித்து உலுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்று 1967 ல் வெடித்த மக்கள் போராட்டங்களை தனது போலிசுடன் மத்திய அரசு படை பலத்தால் கொன்றொழித்த கைவர்கள் இன்றும் மார்க்ச்சியத்தின் பெயரால் வாழ்ந்து கொண்டிருக்கும் கம்யூனிச துரோகிகள். அசலை வெளிக் கொணர்ந்தால் நகல் நகைப்பிடமாகும்.
கீழத்தஞ்சையின் வர்க்கப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வரலாற்றையும் மக்களிடம் கொண்டு சென்றால், பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும், வெளியே கட்சி ஆபிசிலும் பணபட்டுவாட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் குட்டு உடைந்து விடும். 48, 50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுந்துவிடும்.
ஆதிக்கச் சாதியினரின் அடக்கு முறைக்கு சாதி வெறிக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டு கட்சி டீக்கடையில் அமர்வோம், கோயிலில் நுழைவோம் என்று நுழைந்து காட்டியது. இன்றோ மேல் சாதியின் மனம் மாறாமல் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்கின்றனர் போலிக் கம்யூனிஸ்டுகள்.
டீக்கடை பெஞ்சில் உட்கார உரிமை கோரிப் போராடிய சீனிவாசராவ், தனுஷ்கோடி எங்கே? பிரதமர் நாற்காலியில் குந்த கட்சியிடம் உரிமை கோரி ‘போர்க் கொடி’ தூக்கிய ஜோதிபாசு எங்கே?
 “சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக்கானோரையும் செங்கொடி தந்தது. நீலக்கொடி தராதது ஏன்?
கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும், அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
இதை வலது, இடது கம்யூனிஸ்டுகள் இன்று கோர மாட்டார்கள்; கிளற மாட்டார்கள். அன்றைய விவசாயிகள் இயக்கம் அவர்களது தொண்டையில் முள்ளாய் சிக்கியிருக்கிறது. அந்த இறந்த காலத்தைத் தட்டியெழுப்பினால் அது இவர்களது நிகழ்காலத்தைக் கொன்று விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இவையோ முந்திய வரலாறு என்றால், இப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு என்ன செய்து கொண்டுள்ளனர்?.
மே.வங்கத்தில் நடந்தது என்ன? சில நிகழ்வுகளை பார்ப்போம்; ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை.
புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகளின், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான ‘தேசிய’ பத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொய் வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ, பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.
வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!
அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி போராடியவர்களை அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடினர்.
இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால், இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள். ‘இடதுசாரி’ அரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏய்க்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ. 47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.
இது மட்டுமின்றி,  தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும், பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி, பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.
போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால், இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.
தேர்தல் முடிந்த பிறகு, மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், 2008 ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.
இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சொந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது ‘இடதுசாரி’ அரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சொந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.-( நன்றி வினவு)
இப்படி சீரழிவு பாதையில் பயணித்து கொண்டிருக்கும் இவர்கள் மக்கள் விரோதிகளாக ஆட்சிக்காக எதையும் செய்யும் கீழ்தரமான நிலையில்.. மற்றவை நாளை தொடருவேன்…..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)?  27/07/2016

முதலில் சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். பின்னர் மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டதற்கு அண்மைக்கால நிரூபணங்களே இவை. இப்போலி கம்யூனிஸ்டுகளை நேற்றுவரை நம்பிய மே.வங்க உழைக்கும் மக்களே. அவர்களின் பாசிச ஒடுக்குமுறைக்கும் முதலாளித்துவ சேவைக்கும் எதிராகப் பேரெழுச்சியில் இறங்கியுள்ள நிலையில், புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். அணிகள் இனியும் இத்துரோகக் கட்சியில் நீடிக்க அடிப்படை ஏதாவது இருக்கிறதா?
CPI,CPM தோழர்கள் சிந்திக்க, இந்த சம்பவங்களை கூறுவதன் நோக்கம் இந்த செயல்பாட்டிலிருந்து உண்மை நிலையை புரிந்து கொள்ளதான்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென், மே.வங்கத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார்.( 2008 ல்) அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும், இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.
 “மக்கள் பிரச்சினையை கையில் எடுத்த இப்பயங்கரவாதத்தை மாவோயிஸ்ட்டுகள் செய்தனர், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் ‘பயங்கரவாதத்தை’ ஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.

இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்; நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள், கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி, கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.
லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.
புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், ஏகாத்தியபத்திய சுரண்டலின் உச்சகட்ட சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க ‘இடதுசாரி’ அரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை ‘விடுதலை’ செய்து ‘அமைதி’யை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ ‘இடதுசாரி’ அரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.
–புதிய ஜனநாயகம், ஜூலை-2009
போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்” என்று அலறியது, மே.வங்க போலி கம்யூனிச அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டது” என்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். […]
தோழர்களே மற்றவை நாளை தொடருவேன்….சி.பி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்” என்று அலறியது, மே.வங்க போலி கம்யூனிச அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டது” என்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். “இம்மாவட்டங்களில் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லை” என்றுபீதியில் கூச்சலிட்டனர் அரசு அதிகாரிகளும், போலீசாரும்.
வில்அம்பு, கோடாரி, அரிவாள் முதலான மரபு வழி ஆயுதங்களுடன் பல்லாயிரக்கணக்கான சந்தால் பழங்குடியின மக்கள், இம்மாவட்டங்களிலுள்ள போலீசு நிலையங்களை முற்றுகையிட்டு, போலீசாரை உள்ளே வைத்துப் பூட்டினர். இம்மாவட்டங்களை இணைக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் அகலமான குழிகளை வெட்டித் துண்டித்தனர். சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு தடையரண்களை உருவாக்கினர்.
“கடந்த பத்தாண்டுகளாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி வதைத்துச் சிறையிடப்பட்டுள்ள அனைத்து அப்பாவி பழங்குடியினரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; கடந்த நவம்பர் முதல் வாரத்தில் லால்கார் பகுதியில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுப் பழங்குடியினரை மிருகத்தனமாக வதைத்த குற்றத்துக்காக, போலீசு உயரதிகாரி ராஜேஷ்சிங், சந்தால் பழங்குடியின மக்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டுப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; தாக்குதலில் ஈடுபட்ட லால்கார் போலீசார் மக்கள் முன் மூக்கு தரையில்படும்படி கீழே படுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதோடு, புறக்கணிக்கப்பட்ட இம்மாவட்டங்களில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
வறுமைவேலையின்மை, அரசின் புறக்கணிப்பு, போலீசின் அடக்குமுறை முதலானவற்றால் ஏற்கெனவே குமுறிக் கொண்டிருந்த சந்தால் பழங்குடியின மக்களை, நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட போலீசு அடக்குமுறையானது பேரெழுச்சிக்குத் தள்ளியது. சந்தால் பழங்குடியின மக்கள் மீதான போலீசு வெறியாட்டத்துக்குக் காரணம் என்ன?
மே.வங்கத்தின் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்கள், காடுகள் நிறைந்த பின்தங்கிய பகுதியாகும். சந்தால் பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள இம்மாவட்டங்களில் சமூக நலத்திட்டங்கள் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு, சந்தால் பழங்குடியின மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இப்பகுதியில் இயங்கிவரும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் இம்மகளை அமைப்பாக்கி, அரசியல்படுத்திப் போராட்டங்களைக் கட்டியமைத்து வந்தனர். நக்சல்பாரி தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில், மே.வங்க போலீசு பயங்கரவாதிகள் இப்பகுதியில் அப்பாவி மக்கள் மீது வன்முறைவெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதும், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அப்பாவிகளைக் கைது செய்து வதைப்பதும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது.
இச்சூழலில், உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாச சேவை செய்துவரும் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், இப்பகுதியில் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவக் கிளம்பினார்கள். ஏற்கெனவே சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பொ.மண்டலத்தை நிறுவி, மக்களின் எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்கி, நாடெங்கும் அம்பலப்பட்டுப் போன சி.பி.எம்.ஆட்சியாளர்கள். இம்முறை இத்திட்டம் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமல், சதிகார முறையில் நிறைவேற்றிடத் துடித்தனர்.
இருப்பினும், ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனத்தின் எஃகு ஆலைக்காக சந்தால் பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து 5,000 ஏக்கரில் சி.பொ.மண்டலம் நிறுவப்படவுள்ள உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கியதும், மாவோயிஸ்டுகள் இச்சிறப்புபொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பழங்குடியின மக்களைப் போராட்டத்துக்கு அணிதிரட்டி வந்தனர். கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அவசர அவசரமாக இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அறிவிக்கப்பட்டு, மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மைய அரசின் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில், மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தி எச்சரித்தனர். இத் தாக்குதலில் வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டதைத் தவிர, வேறு எவருக்கும் பாதிப்பில்லை.
இருப்பினும், மறுநாளே மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்கள் மீது மே.வங்க போலீசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. பழங்குடியின மக்களின் அற்ப உடமைகளையும், சைக்கிள்பாத்திரங்கள் போன்றவற்றைக் கூட விட்டுவிடாமல் நாசமாக்கிய போலீசார், மூன்று பள்ளிக்கூட மாணவர்களை அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து வதைத்தனர். சீதாமணி முர்மூ என்ற பெண்ணை துப்பாக்கிக் கட்டையால் போலீசார் தாக்கியதில் அவரது கண்களில் இரத்தம் பீறிட்டு, இன்று அவர் பார்வையிழந்துள்ளார். பல கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பலருக்கு எலும்பு முறிந்து மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர், வியாபாரி, கண்பார்வையற்ற முதியவர் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டுக் கொடூரமாக வதைக்கப்பட்டனர். உள்ளூர் போலீசும் ரிசர்வ் போலீசும் சேர்ந்துகொண்டு விடியவிடிய 3 நாட்களுக்கு நடத்திய இத்தாக்குதலால் மித்னாபூர் மாவட்டமே பீதியில் உறைந்து போனது.
போலீசு அடக்குமுறையால் துவண்டுபோன சந்தால் பழங்குடியின மக்களிடம் நம்பிக்கையூட்டி அணிதிரட்டிய மாவோயிஸ்டுகள், லால்கார்ஜார்கிராம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட கிராமத் தலைவர்களைக் கூட்டி விவாதித்து, அதனடிப்படையில் 10 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர். மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்கள் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு அவற்றை ஒருங்கிணைக்கும் “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி” நிறுவப்பட்டது. அதன் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 6ஆம் தேதி இரவு 5,000 பேருக்கு மேலாக வில்அம்பு, கோடரி, அரிவாள்களுடன் அணிதிரண்ட பழங்குடியின மக்கள் லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுச் சூறையாடி, போலீசாரை நையப்புடைத்துக் கொட்டடியில் தள்ளிப் பூட்டினர். தொலைபேசிமின்சார இணைப்புகளைத் துண்டித்தனர்.
மறுநாள், நவம்பர்7; அந்நவம்பர் புரட்சி நாளில் மேற்கு மித்னாபூர் மாவட்டமெங்கும் ஆயுதமேந்திப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்திய பழங்குடியின மக்கள், அம்மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அகலமான குழிகள் வெட்டி முற்றாகத் துண்டித்தனர். சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டுத் தடையரண்களை ஏற்படுத்தினர். சமரசம் பேச வந்த கீழமை நீதிமன்ற துணை மாஜிஸ்திரேட் பழங்குடியின மக்களால் “கெரோ” செய்யப்பட்டதால், அவரும் போலீசாரும் வாகனங்களை விட்டுத் தப்பியோடினர்.
அடுத்த இரு நாட்களில் மித்னாபூர் மாவட்டம் மட்டுமின்றி சந்தால் பழங்குடியினர் நிறைந்த புருலியா, பங்குரா மாவட்டங்களிலும் வில்அம்பு, கோடாரி, அரிவாள், துடப்பக்கட்டையுடன் போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும், சி.பொ.மண்டலத்துக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சிமிகு பேரணிகள் தொடர்ந்தன. இம்மாவட்டங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, போலீசு நிலையங்களும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. போலீசாரும் அரசு உயர் அதிகளாரிகளும் இம்மாவட்டங்களை விட்டுத் தப்பியோடினர். நவம்பர் 10ஆம் தேதியன்று பல்வேறு பழங்குடியின அமைப்புகள் ஒன்றிணைந்து தாஹிஜுரி எனுமிடத்தில் சாலை மறியல் நடத்தியபோது, தடியடி நடத்திக் கலைக்க முயன்ற போலீசாரை 5000க்கும் மேல் திரண்ட பழங்குடியின மக்கள் ஏறத்தாழ 5 கி.மீ.தொலைவுக்குத் துரத்தி துரத்தி வந்து விரட்டியடித்தனர். இம்மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து, பழங்குடியின மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் ‘விடுதலைப் பிரதேசங்களாக’க் காட்சியளித்தன.
அரண்டு போன போலிக் கம்யூனிச ஆட்சியாளர்கள் சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டி, பழங்குடியின மக்களிடம் சமரசம் பேச வருமாறு அழைத்தனர். ஆனால், எல்லா ஓட்டுக்கட்சிகளும் தங்களுக்குப் பழங்குடியின மக்களிடம் செல்வாக்கு இல்லை என்று கூறி மறுத்துவிட்டன. மித்னாபூர் மாவட்டம், பின்பூர் தொகுதியில் பழங்குடியின மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற ஜார்கந்து கட்சி (நரேன்பிரிவு) எம்.எல்.ஏ.கூடச் சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தூது செல்ல மறுத்துவிட்டார். இதற்கிடையே, போலீசு அடக்குமுறையைக் கண்டித்து, திரிணாமூல் காங்கிரசு கட்சியினர் மித்னாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய சோசலிஸ்ட் ஐக்கிய மையக் கட்சியினர் ஜார்கிராம் பகுதியில் கடையடைப்புப் போராட்டத்தையும், பேரணிமறியல் போராட்டங்களையும் நடத்தினர். ஜார்கந்த் திசாம் கட்சி மூன்று மாவட்டங்களில் வெற்றிகரமாக கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது.
மே.வங்க ‘இடது சாரி’ கூட்டணியிலுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான நந்தகோபால் பட்டாச்சார்யா, “அரசு அடக்குமுறையின் எதிர்விளைவுதான் சந்தால் பழங்குடியனரின் எழுச்சி” என்று ‘இடதுசாரி’ அரசைச் சாடியுள்ளார். கூட்டணியிலுள்ள பார்வர்டு பிளாக் கட்சியின் செயலரான அசோக் கோஷ்,”பழங்குடியின மக்களை நீண்டகாலமாகப் புறக்கணித்து ஒடுக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் இக்கிளர்ச்சி. இதற்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடுவதில் பயனில்லை” என்று சி.பி.எம். ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மறுபுறம், நந்திகிராம வழியில் மோட்டார் சைக்கிள் ரௌடிப் படைகளைக் கொண்டு தாக்க சி.பி.எம்.குண்டர்களை ஏற்பாடு செய்தனர். சி.பி.எம்.கட்சியின் அமைச்சர் சுஷந்தாகோஷ், மாவட்டச் செலாளர் தீபக் சர்க்கார் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டுகளுடன் குண்டர் படை கட்டியமைக்கப்பட்ட போதிலும், பழங்குடியின மக்களின் கோபாவேசத்தைக் கண்டு அஞ்சி, இத்தாக்குதல் திட்டத்தை சி.பி.எம்.கட்சி நிறுத்தி வைத்துவிட்டது.
வேறுவழியின்றி பழங்குடியின மக்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்களை கமிட்டி”யிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விழைவதாக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். மக்கள் கமிட்டியினரோ, இப்பேச்சுவார்த்தை பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் முன் பகிரங்கமாக நடத்தப்பட வேண்டும்; அதற்கு முன் போலீசு அதிகாரிகள் மக்களிடம் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அதிகார வர்க்கமோ தங்களை “கெரோ” செய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சி , இதற்கு உடன்பட மறுத்தது.
இந்த இழுபறியோடு போராட்டத்தை மேலும் நீட்டித்தால், கூலிஏழைகளான பழங்குடியினருக்கு மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் இடர்ப்பாடுகள் பெருகும் என்பதால் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டு, போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தைச் சமூகப் புறக்கணிப்பு செய்யுமாறு பழங்குடியினருக்கு மக்கள் கமிட்டி அறைகூவல் விடுத்துள்ளது. இதனால் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவோ, அதிகார வர்க்கபோலீசு ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டு விட்டதாகவோ கருத முடியாது. மக்கள் கமிட்டியின் சமூகப் புறக்கணிப்பு அறிவிப்பினால், இனி தவித்த வாய்க்கு தண்ணீர் கூட பழங்குடியின மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்று உள்ளூர அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது அதிகார வர்க்கமும் போலீசும். இதுவே பழங்குடியின மக்களின் பேரெழுச்சிக்குக் கிடைத்த வெற்றி.
நேற்று, சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். இன்று, மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டதற்கு அண்மைக்கால நிரூபணங்களே இவை. இப்போலி கம்யூனிஸ்டுகளை நேற்றுவரை நம்பிய மே.வங்க உழைக்கும் மக்களே. அவர்களின் பாசிச ஒடுக்குமுறைக்கும் முதலாளித்துவ சேவைக்கும் எதிராகப் பேரெழுச்சியில் இறங்கியுள்ள நிலையில், புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். அணிகள் இனியும் இத்துரோகக் கட்சியில் நீடிக்க அடிப்படை ஏதாவது இருக்கிறதா?

புதிய ஜனநாயகம்டிசம்பர் 2008.

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)?   25/07/2016

நான் நேற்றைய பதிவில் தலைப்பு மாற்றியிருந்தேன் ஆனால் இவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்தான் என்பதனை பல நிக்ழ்வுகள் நிருபிக்கின்றன அதனால் இதே தலைப்பில் தொடரும் எண்ணத்தில் உள்ளேன் தோழர்களே கருத்துகளை தெரிவிக்கவேண்டும் அப்போதுதான் உண்மையான தேவையான இலச்சியத்தை அடைய முடியும் இனி இரு வேறு நிகழ்வுகள் மூலம் போலி கம்யூனிஸ்டுகள் ஏன் என்பதனை அறுவிக்க கீழே:-
போலி கம்யூனிஸ்டு AITUC சங்கம் தொழிலாளர்களுக்காக போராடுவதைப்போல நடித்து, முதலாளிகளுக்கு சேவை செய்து, தொழிலாளர்களுக்கு துரோகமிழைப்பதை பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இங்கு அதையும் தாண்டி ‘எகிறிக்குதித்து’ முன்னேறி விட்டனர். “எங்க முதலாளி நல்ல முதலாளி” என்று பாட்டுப்பாடி ஆட்டம் போடாத குறையாக ராம்கோ முதலாளியை ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.- வினவு, August 26, 2014
சும்மாவா! ராம்கோ முதலாளி கட்சியின் முக்கியப் புரவலராயிற்றே! கட்சியின் நகரக்குழு அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுக்கட்டாக பணமும் கொடுத்தவரல்லவா முதலாளி! அவ்வளவு ஏன்? கட்சியின் மாநிலக்குழு கூட்டமே ராம்கோ முதலாளி நடத்தும் பள்ளியில் தான் நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவ்வளவு நெருக்கம்! தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணத்தில் முதலாளியிடம் விருந்து சாப்பிடுகிறார்கள். சி.பி.ஐ யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.
இந்த எடுபிடிகள் பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில் என்ன கூறியுள்ளனர்?
எவ்வித சட்ட உரிமையும், பாதுகாப்பும் இல்லாத தொழிற்சாலைகளிலெல்லாம் இவர்களது தொழிற்சங்கம் போராடி வருகிறதாம்! ஆனால், ராம்கோவில் அப்படி இல்லையாம்!
உண்மையில் இந்த எடுபிடிகளை தொழிலாளர்கள் குப்பையாக ஒதுக்கித் தள்ளி விட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டதால் குமுறிக் கொண்டிருந்த இராஜபாளையம் மில்ஸ் சி யூனிட் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் செய்து சம்பள உயர்வைப் பெற்றனர். சி யூனிட் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது போராட்டத்தின் வீரியத்தை மட்டுப்படுத்த வந்த எடுபிடி சங்கங்களை தொழிலாளர்கள் புறக்கணித்து விரட்டியதை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த லட்சணத்தில் சட்டத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறார் ராம்கோ முதலாளி என்கிறார்கள் இந்த எடுபிடிகள். (நன்றி வினவு, August 26, 2014)
தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க பல லட்ச ரூபாய்கள் நிதி உதவி, தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொந்த பணத்தில் நிலம் வாங்கி அதனை குறைந்த விலையில் தொழிலாளிகளுக்கு கொடுத்தது, தொழிலாளர்களின் சுபநிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபம் கட்டியது, பள்ளி, கல்லூரிகளை உருவாக்கியது என்று கோயபல்சுகளே வெட்கப்படும் அளவுக்கு இந்த போலி கம்யூனிச எடுபிடி தொழிற்சங்கங்கள் முதலாளிக்கு கூஜா தூக்கியிருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராம்கோ முதலாளி பிறந்தநாள் கொண்டாங்களை எதிர்த்து தன்னிச்சையாக தொழிலாளர்கள் ஒட்டிய சுவரொட்டிமுதலாளி பி.ஏ.சி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே தொழிலாளிகளின் சம்பளத்தில் கட்டாய வசூல் செய்த ஆலை நிர்வாகமா தொழிலாளிகளின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளி கல்லூரிகளும், தொழிலாளர்களுக்காக வீடும் கொடுக்கப்போகிறது? கல்லூரியில் இடம் வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். இராஜபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலங்களும், குளங்களும் ராம்கோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், இதற்காக யார் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும் அவர்களுக்கு கார் பரிசளிப்பதும் வாடிக்கை என்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, இராஜபாளையம் மக்களே பேசுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட நிலங்களைத்தான் செண்டுக்கு ரூ 4,000 எனும் விலையில் தொழிலாளர்கள் தலையில் கட்டி கொள்ளை லாபம் சம்பாதித்தது ஆலை நிர்வாகம்.
போலி கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க அழைத்து விட்டு அதை மனித முகம் கொண்ட முன்னேற்றம் என்கிறார்கள். இவர்களோ ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரனை வள்ளல் என்கிறார்கள். வேண்டுமானால் இந்த எடுபிடிகள் இன்னொரு நோட்டீஸ் போட்டு அதில் என்ன செலவில் எவ்வளவு நிலம் பெறப்பட்டது? எத்தனை தொழிலாளிக்கு நிலம் கொடுத்தார்கள்? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற விபரங்களை வெளியிடட்டும்.
தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு திருமண மண்டபம் கட்டி தன் பெயரில் பதிவு செய்து கொண்டிருக்கிறார் ராம்கோ முதலாளி. இந்த மண்டபத்தில் எந்த தொழிலாளியின் சுபநிகழ்ச்சிக்காவது இலவசமாகக் கூட வேண்டாம் குறைந்த வாடகையிலாவது கொடுத்ததிருக்கிறார்களா? ஆனால் வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் தொழிலாளியின் வீட்டு வைபவம் என்றால் முன்னுரிமை கொடுப்பார்களாம். என்ன பித்தலாட்டம் இது! ஆனால் தற்சமயம் முன்னுரிமை கூட கொடுப்பதில்லை என்பது தான் உண்மை. ===========நன்றி வினவு, August 26, 2014++++++++++++++++++++ கீழே மற்றொரு நிகழ்வு+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. கமல் பத்ராவின் சகோதரர்களும், மகனும் காணாமல் போகடிக்கப்பட்டிருந்தனர். போலீசு வழக்கம் போலவே, இதையும்  தற்கொலை  என்றுதான் கூறியது.
இக்கோரச் சாவுகள் தொடர்கதையாகிப் போன அந்தக் கிராமத்தையொட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நவீன கேளிக்கை நகரம் உள்ளது. வார இறுதியில் இருள்கவியத் தொடங்கிவிட்டால், அவ்விடத்தின் அமைதியைக் கிழிக்கும் வகையில் காதைப் பிளக்கும் மேற்கத்திய இசையும், கட்டவிழ்த்து விடப்படும் கேளிக்கைகளும், மேல்தட்டு விபச்சாரமும் அங்கே அரங்கேறத் தொடங்கி விடுகின்றன. அருகிலுள்ள பெருநகரத்து மேட்டுக்குடி இளசுகள், கப்பல் போன்ற நவீனரகக் கார்களில் வந்து குவிகிறார்கள். இந்தக் கேளிக்கை நகரம் அந்தக் கிராம மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உருவாக்கப்பட்டது.
குடியும் கூத்துமான அத்தகைய முன்னிரவுப் பொழுதில், வெறுப்பின் உச்சத்திலிருந்த அந்தக் கிராம மக்கள்  அங்கே ஊடுருவித் தாக்க ஆரம்பிக்கின்றனர். கேளிக்கை விடுதி குண்டர்படைக்கும், கிராம மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கிறது. கேளிக்கை விடுதியின் ஒரு பகுதி முற்றிலும் உடைத்து நாசம் செய்யப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் ராஜர்காட் எனும் கிராமப் பகுதியில்தான் இவை அனைத்தும் கடந்த ஆகஸ்ட்(2008) மாத இறுதியில் நடந்தன.
மேற்கு வங்கத்தைத் தொழில் வளமிக்க மாநிலமாக மாற்றுவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் புத்ததேவ் பாணியில், அடித்து உதைத்து நிலங்களைப் பறித்தெடுக்காமல்,  ராஜர்காட் பகுதியில் ‘அமைதியான முறையில்’ நிலம் கையகப்படுத்தப்பட்டதாம். இதுதான்  மூத்த தலைவர் ஜோதிபாசுவின் பாணி!
இந்தப் பகுதியில் “ராஜர்காட் புது நகரம்” என்ற திட்டத்தின் பெயரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுடன் சேர்ந்து கேளிக்கை விடுதிகளும், பூங்காக்களும், மேல்தட்டு விபச்சார விடுதிகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட கேளிக்கை பூங்காக்களில் ஒன்றுதான் “வேதிக் வில்லேஜ்’’.
கிராம மக்களும், குண்டர்களும் வேதிக் வில்லேஜ் என்ற கேளிக்கைப் பூங்காவில் மோதிக் கொண்ட பிறகுதான், அம்மக்களிடம் நிலங்களைப் பறித்த அரசுக்கும் மாபியா கும்பலுக்குமிடையிலான வலைப்பின்னல்களும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கைநனைத்த மோசடிகளும், சி.பி.எம். கட்சியினர் இம்மோசடியில் முங்கிக் குளித்ததும் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கின.
வேதிக் கிராம நிர்வாக அமைப்பின் துணை மேலாளரான பிப்லவ் பிஸ்வாஸ், குண்டர்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டு கிராம மக்கள் மீது தாக்குதலை ஏவியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு, வேதிக் கிராம ஓய்வு விடுதி கம்பெனி (VRC)யின் நிர்வாக இயக்குனரான ராஜ்மோடி மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமினல் குண்டர்கள் துணையுடன் நிலமோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளைப் பெரும்பான்மையாக கொண்ட ராஜர்காட் பகுதி, மேற்கு வங்கத்திலேயே மண்வளமிக்க பகுதிகளில் ஒன்று. வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு போகம் வரை விளையக்கூடிய  அளவுக்கு மண்வளமும், நீர்வளமும் அபரிமிதமாக உள்ளது.  அனைத்து பயிர் வகைகளும், தானியங்களும், காகனிகளும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேவையில் 20 முதல் 25% இந்தப் பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியின் நீர்பாசனத்திற்கு மட்டும் ஐந்து கால்வாகள்  உள்ளன. இந்த கால்வாகளையும், பிற செயற்கை மீன்பிடிக் குட்டைகளையும் நம்பி மீன்பிடித் தொழிலும் வளமாக உள்ளது.  பால் உற்பத்தியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் வளமிக்க அந்த மண்ணை நம்பித்தான் உள்ளன.
இந்தப் பகுதியில்  புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைகளும் அது சார்ந்த பிற உள்கட்டுமானங்கள், கேளிக்கை விடுதிகள், வீட்டுவசதிகள் போன்றவற்றை நிர்மாணிப்பது என்ற பெயரில்  ரியல் எஸ்டேட் வியாபாரமும் 1999-க்குப் பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியது. டி.எல்.எப், கெப்பெல் லாண்ட், யுனிடெக் குரூப், சிங்கப்பூரைச் சேர்ந்த அஸென்டாஸ், வேதிக் ரியால்டி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கின. 2005-இல் டி.எல்.எப்.-பின் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
இவற்றுக்குத் தேவையான நிலங்களைத்தான் மிகக் கொடூரமான, விரிவான சதித் திட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பறித்துள்ளது சி.பி.எம். அரசு. 1995-லேயே இந்தப் பகுதி நிலங்களும், நீர்நிலைகளும் “ராஜர்காட் நகர்ப்புறக் குடியிருப்பு” என்ற திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட  உள்ளதாக அரச அறிவித்தது.   இதையொட்டி சுமார் 7000 ஹெக்டேர் அளவிலான நிலமும், நீர்நிலைகளும் கையகப்படுத்தப்படுவது 1999-லிருந்து தொடங்கியது. இத்திட்டம் வரும் முன்னரே, காங்கிரசு கட்சியால் பாதுகாக்கப்பட்ட ரவுடியான ருதஸ் மண்டலை சுவீகரித்துக் கொண்ட சி.பி.எம். கட்சி, 1993-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அவனைக் களமிறக்கியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லுகள் செய்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இவனை வெற்றியடையச் செய்தது சி.பி.எம். இவனைப் போன்ற ஒரு ரவுடியை அதிகாரத்தில் வைப்பதன் மூலம் மக்களை மிரட்டி நிலங்களை அபகரிக்க முடியும் என்ற திட்டத்துடன்தான் சி.பி.எம். அரசு இதனைச் செய்தது.
ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னரே மேற்கு வங்கத்தின் மிகப் பெரிய நில விற்பனைத் தரகு மாபியாவும், சி.பி.எம். கட்சியின் நெருங்கிய நண்பனுமான, கமல் காந்தியும் அவனது மார்வாரி நண்பர்களும் இந்தப் பகுதியில் நிலங்களை வாங்கிப் போடத் தொடங்கினர். சி.பி.எம். கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கின் மூலம் ராஜர்காட் பகுதியில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளதை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்தான், கமல் காந்தி. நிலங்களைக் கொடுக்க மறுத்த விவசாயிகள் இவனால் கடுமையாக மிரட்டப்பட்டனர்.  சில கொலைகளும் விழுந்தன. நிலங்களை கைமாற்றியதில் சி.பி.எம். பிரமுகர்கள் பலரும் நேரடியாக லாபம் அடைந்தனர்.  போலீசு-சி.பி.எம்.கட்சி-ரவுடிகள் கூட்டணியுடன் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கத் தொடங்கினான் கமல் காந்தி. வாங்கிய நிலங்களில் ஒரு பெரும் பகுதி சி.பி.எம். கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினரும், கமல் காந்தியின் உறவினருமான சரளா மகேஸ்வரிக்குச் சொந்தமாக்கப்பட்டது. இதன் காரணமாக சி.பி.ஐ. (மார்வாரி) கட்சி என்ற பெயரும் சி.பி.எம்.-முக்குக் கிடைத்தது.
1999-இல் அரசு நிர்ணய விலையே ஒரு காதா (மேற்கு வங்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு நில அளவை)விற்கு ரூபா 40,000 லிருந்து 50,000 வரையாகும். ஆனால் ராஜர்காட் நிலங்களுக்கு அரசு தந்ததோ வெறும் 4000 முதல் 5000 ரூபா வரை மட்டுமே. இதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இந்த அநியாயத்துக்குத் துணை போகுமாறு உள்ளூர் சி.பி.எம். கமிட்டிகளே கூட செயலிழக்கச் செய்யப்பட்டன.  இவற்றைத் துணிச்சலோடு எதிர்த்தவர்கள் காணாமல் போயினர்; அல்லது கொடூரமாகக் கொல்லப்பட்டு, தற்கொலை என சோடிக்கும் வகையில் மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இது போலக் கொல்லப்பட்டவர்கள் 50 பேருக்கும் மேல் இருக்கும்.
சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் நில அபகரிப்பை எதிர்ப்பதில் ஈடுபாடு காட்டினால், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டனர். முன்னணியில் நின்று செயல்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு நடைபிணமாக்கப்பட்டனர். நந்திகிராம் பாணியில், சிகப்பு நிற நெற்றிப் பட்டையைக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான சி.பி.எம். குண்டர்கள் கிராமங்களில் வலம் வந்து மக்களை மிரட்டினர். இந்நிலையில், நில அபகரிப்பை எதிர்த்த விவசாயிகள் ஒரு இயக்கம் கட்டினர். அதே போல, விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டதால் வேலை இழந்தோர் இன்னொரு இயக்கம் கட்டினர். இவ்விரண்டு இயக்கங்களின் தலைவர்களும் தனியே  அழைத்து வரப்பட்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான ராபின் மண்டல் முன்னிலையில், சி.பி.எம். குண்டர் படையினராலும்  போலீசு குண்டர் படையினராலும்  மிரட்டப்பட்டனர். குனி,  ஜட்ராகச்சி மற்றும் சுலன்குரி போன்ற பகுதிகளில் மக்களின் போராட்டங்கள்  சி.பி.எம். குண்டர் படையாலும், போலீசாலும் ஒடுக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான போலீசு படை, இப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
இன்னொரு பக்கம், மக்களின் எதிர்ப்பு நாளுக்குநாள் வலுத்து வந்த நிலையில், ராஜர்காட்டில் சி.பி.எம்.மிலிருந்து வெளியேறிய கமல் பத்ரா என்பவர் தலைமையில் ஒரு இயக்கம் உருவானது. சி.பி.எம். குண்டர் படை இவரைக் கடத்திச் சென்று கொன்று பிணத்தை மரத்திலே தொங்கவிட்டது. இவரது படுகொலை, ராஜர்காட் பகுதியின் எதிர்ப்பியக்கங்களுக்கு பேரிடியாக அமைந்தது. எதிர்ப்பியக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தன.
ராஜர்காட்டில் நடந்த இந்த நிலப்பறிப்பு மோசடிகள் அனைத்திலும் அனைத்துக்  கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும், ரவுடிகளும் நேரடியாக லாபம் அடைந்தனர். எனவேதான், நந்திகிராமிலும் சிங்கூரிலும் விவசாயிகளுக்காகப் போராடுவதாக நாடகமாடிய மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு, ராஜர்காட் மோசடிக்கெதிராக ஒப்புக்குக் கூட பேசவில்லை. ஒருபடி மேலே சென்று, விவசாயிகளை நம்ப வைத்து அக்கட்சி கழுத்தறுத்தது.  கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நில அபகரிப்பை எதிர்த்து விவசாயிகளின் இயக்கம் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. திரிணாமுல் காங்கிரசும் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. இந்நிலையில், “நாங்களே வழக்கு நடத்துகிறோம், எங்களால்தான் வழக்குக்கான பொருளாதாரச் சுமைகளை சமாளிக்க இயலும்” என்று கூறி விவசாயிகளின் வழக்கை அக்கட்சி வாபஸ் பெற வைத்தது.  அதைத்தொடர்ந்து, உடனே திரிணாமுல் காங்கிரசும் வழக்கைத் திரும்பப் பெற்று கழுத்தறுத்தது.
அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தான்மே மண்டல், ராஜர்காட்டில் எஞ்சியுள்ள நிலங்களைக் குறைந்த விலைக்கு அபகரித்து, அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளான். எஞ்சியுள்ள நிலம் குறித்த விவரங்களை சி.பி.எம். கட்சிக்காரர்களின் உதவியுடன் ஹிட்கோ (HIDCO) அரசு அலுவலகத்தில்  இருந்து இவன் பெற்றுள்ளான். இந்த சி.பி.எம்.  திரிணாமுல் காங்கிரசு கூட்டணி ஒரு காதாவிற்கு ரூபா பத்தாயிரம் முதல் 15 ஆயிரம்  வரை மட்டுமே கொடுத்துவிட்டு, அதனை ரூபா 5 முதல் 6 லட்சம் வரை விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது.
எதிர்ப்புகள் ஒடுக்கப்பட்ட நிலையில், ராஜர்காட்டின் வளமிக்க குளம், குட்டைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் நிரவப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சி.பி.எம்., காங்கிரசு, திரிணாமுல் கட்சியினர் இவற்றில் முதலீடு செய்து கொழுத்த லாபமடைந்தனர்.  மாநகராட்சி விதிமுறைகளில் தில்லுமுல்லுகள் செய்து பல கோடிகள் சுருட்டப்பட்டன. புற்றீசல் போல கேளிக்கை பூங்காக்கள் பெருகின. விபச்சாரமும், குடியும் கூத்தும் தலைவிரித்தாடின. இப்படிப்பட்ட கேளிக்கை விடுதிகளில் ஒன்று, சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு வீராங்கனையுமான  ஜோயிதிர்மயி சிக்தரின் கணவருக்குச் சொந்தமானதாகும். வேதிக் வில்லேஜ் கேளிக்கை விடுதியே சி.பி.எம்.மின் கூட்டாளியான மார்வாரி கமல் காந்தியின் நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜர்காட்டில் இப்பொழுது மீதமிருக்கும் விவசாய நிலங்களையும் அபகரிப்பதற்காக இன்னொரு திட்டம் அங்கு செயல்படுத்தப்பட உள்ளது. பாங்கோட் ராஜர்காட் பகுதி மேம்பாட்டு நிறுவனம் (BRADA-Bhangot Rajargat Area Development Authority) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் செயலாளராக இருப்பவர் சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினரான ராபின் மண்டல். இந்தத் திட்டத்திற்காக ஒரு காதாவிற்கு ரூபா எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கொடுத்து வாங்கியுள்ள ராபின் மண்டல் கும்பல், அதனை ரூபா 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்றுக் கொள்ளை லாபம் அடைந்துள்ளது.
சி.பி.எம்.-மின் நில மோசடி சந்தி சிரிக்கத் தொடங்கியவுடன், அந்தக் கட்சியின் மாநிலக் குழு தலையிட்டு ராஜர்காட் திட்டத்தைக் கைவிடச் சொல்லி அறிவுரை கூறியுள்ளது. சி.பி.எம். அரசோ தேனெடுத்த கையால் புறங்கையை நக்கிப் பழகிவிட்டது. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடத் தயங்கியது. சி.பி.எம். கட்சியின்  நிலம் மற்றும் நிலச் சீரமைப்புத் துறை அமைச்சரான அப்துர் ரெசாக் மொல்லா பின்வருமாறு திமிராக கூறினார்: “பொழுதுபோக்கு மையத்திற்கும், கேளிக்கை விடுதிக்கும் நிலம் கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்று.  அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் உள்ள சீத்தாரம் யெச்சூரியோ “விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ராஜர்காட்டில் நிலம் ஒதுக்குவதை நிறுத்தக் கூடாது” என்கிறார்.
மம்தா பானர்ஜி ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சினையில் ஆழ்ந்த மௌனம் சாதித்தார். பின்னர் விவசாயிகளின் அதிருப்தியைத் தொடர்ந்து, எதிர்ப்பது போலப் பாசாங்கு செய்தார். இப்பொழுது சி.பி.எம். அரசே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு பின்வாங்கும் நிலையில், நிலங்களை மீண்டும் கைப்பற்றி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகளிடம் சவடால் அடிக்கிறார். ஆனால், விவசாயிகளால் மீண்டும் விவசாயம் செய்ய இயலாது. ஒருவனைக் குடிபோதையில் தள்ளிவிட்டு மீண்டும் குடிக்காதே என்று சொல்லுவது போல, நவீன நகரத்தை உருவாக்கி விவசாயிகளை உதிரிப் பாட்டாளிகளாக மாற்றிவிட்டு, அத்தகைய கலாச்சாரத்தில் தள்ளிவிட்டு, இப்பொழுது மீண்டும் விவசாயம் செய்யச் சொன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  பழைய வாழ்க்கைக்கும், புதிய வாழ்க்கைக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் விவசாயிகள் சிக்கியுள்ளனர்.
சி.பி.எம். தலைவர்கள் நேரடியாகவே ராஜர்காட் நில மோசடியில் ஈடுபட்டு அம்பலமாகியுள்ளனர். கட்சியோ இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்குத் தயாராக இல்லை. ஊழல் பெருச்சாளிகளான உள்ளூர் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மே.வங்கத்தில் சி.பி.எம். கட்சியே காணாமல் போய்விடும். எனவேதான், விசாரணை ஏதுமின்றி திட்டத்தைக் கைவிடச் சொல்லி சாமர்த்தியமாக களவாணித்தனத்தை மறைப்பதற்குக் கற்றுத் தருகிறது. இந்த ஞானோதயம் கூட சி.பி.எம். கட்சிக்கு நேர்மையின் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தோன்றவில்லை. ஏற்கெனவே நகர்ப்புறங்களில் கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த நடுத்தர வர்க்கம், அறிவுஜீவிகள், தொழிலாளி வர்க்கம் போன்றவை, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியைக் கைகழுவி விட்டன. அடுத்து வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் விவசாயி வர்க்கமும் கைகழுவி விட்டதென்றால், மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் எனும் அச்சத்தின் காரணமாகவே இந்த ஞானோதயமும் வந்துள்ளது.
சி.பி.எம். கட்சி, ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல்களின் கூடாரமாக மாறிவெகுகாலமாகிவிட்டது. அது, மக்களையே ஒடுக்கும் பாசிச கும்பலாக  மாறி விட்டது. இப்படிச் சொன்னால், சி.பி.எம். கட்சியிலுள்ள அணிகளுக்கும் அக்கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள பலருக்கும் சந்தேகமும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படலாம். ஊழலையும் மோசடியையும் எதிர்த்துப் போராட உறுதி கொண்டவர்களும், புரட்சியின் மீது பற்று கொண்டவர்களும்  ராஜர்கட் பகுதிக்குப் போய்ப் பாருங்கள். அல்லது, சி.பி.எம். தலைவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது,  உள்ளூர் தலைவர்களின் ஊழல் சந்தி சிரித்த பின்னரும் விசாரணை நடத்தாதது ஏன் என்ற கேள்விகளைக் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பாருங்கள். எச்சரிக்கை! கமல்பத்ராவுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் ஏற்படலாம்.
-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

“லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது. மே.வங்க லால்கார் வட்டாரத்தின் ஜித்கா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை வெளியேற்றுவோம் என்று மே.வங்க ‘இடதுசாரி’ அரசின் போலீசுப் படையும், மைய அரசின் துணை இராணுவப் படைகளும் அதிரடிப் படைகளும் அதிநவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. […]    நன்றி வினவு

நான் என்னுடை பதிவு நாளை எழுதுவேன் குருசேவ் பாதையில் மார்க்சியத்தை திரித்தவர்கள் இன்று லெனின்யம் காலவதியாகிவிட்டது என்கின்றனர் அப்படியெனில் மார்க்சியமும் இல்லை லெனினியமும் இல்லை வெரும் வாய் சவடால் கட்சியாய், மக்கள் விரோதிகளாக முதலாளிகளின் பாதம்தாங்கிகளாக மாறியுள்ள இவர்களை என்னவென்று அழைப்பது அவர்களே கூறட்டும்…. நாளை CPI, CPM முகதிரையை கிழிக்க புதிய பகுதியுடன் தொடர்வேன்…சி.பி +

23/07/2016

CPI, CPM ன் நிலைபாடு என்ன? மக்கள் விடுதலைக்கு?தோழர்களே நான் இன்று எழுதும் நிலையில் இல்லை ஏனெனில் என்னுடை போன் பழுதடைந்துவிட்டது ஆகையால் திங்கள்வரை எழுத முடியாது என்றிருந்தேன் ஆனால் என்னை எழுத வைத்த திரிப்புவாதிகளையையே சாரும்!!! நான் போலிகள் என்ற வார்த்தையை வேறுவாக மாற்றிவிட்டேன், மார்க்சியம் அறிந்த முதல் வார்த்தை சமத்துவம் சகோதரவதுவம், நாம் முதலாளிய பிற்போக்குவாதிகள் அல்ல!! தோழமை என்ற வார்த்தையின் மகத்துவம் அறிவார்களா அதையையும் முதாலாளிகலிடம் அடகு வைத்துவிட்டார்களா? தெரியவில்லை? நமது வாதம் கம்யூனிசம் வளர்த்தெடுக்க மார்க்சிய சிந்தனையை தேடும் அதே வேளையில் முன்னோடியான CPI, CPM ன் வரலாற்றை உற்று நோக்குதல் அவசியம் அன்றோ, ஆகையால் வரலாற்றில் CPI,CPM ன் போக்கில் முதலாளித்துவத்திற்க்கு பல்லாக்கு தூக்கி மக்களை திசையின்றி நட்டாற்றில் விட்டுள்ளதையும் அதே போல் முதலாளிகளின் வளர்ச்சிக்கு முன்னனியில் சேவை செய்யும் இவர்களின் போக்கையும் மார்க்சியத்தின் பரிணாம வளர்ச்சி என்று மெச்சுவதா? இவர்களை நாம் கேள்வி கேட்பதனால் விழிதெழுவார்களா? இதோ நம் தோழர் ஒருவரின் விமர்சனம் கீழே:- வினவின் பதிவு …நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர்.

நாங்கசேகுவேராவைச் சொன்னாலும்
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.
முதலாளித்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை
அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் !அது வரைக்கும் ?போயசு தோட்டம்தான் !கேட்டவர் அதிர்ச்சியடைய
‘டோட்டலாய்’ விளக்கினார் தோழர் :யாருடைய காலில் விழுந்தாலும் – சி.பி.எம்.
தன் கொள்கையை மட்டும் இழக்காது.மக்கள் விரோதிகள் எவரும் இனி
மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும்
‘அம்மா’ சபதம் முடிக்காமல் ‘பொலிட்பீரோ’ அடங்காது.அப்புறம் எப்போது புரட்சி?அது இருக்கட்டும் தோழரே,
சி.பி.எம். வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:அன்று நேருவை அடையாளம் கண்டோம்
அவரிடம் சோசலிச வாடையை வளர்த்தோம்.காங்கிரசுக்கு உள்ளே இருந்தே
முற்போக்கு சக்திகளை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.அப்புறமா … கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம்னு
ஆட்சியைப் பிடிச்சோம்.அடுத்தது புரட்சி ?பின்னே ஆயுதம், வன்முறை இல்லாமல்
அனைவருமே சமமாகி சோசலிசம் படைக்க
நம்ம நம்பூதிரிபாடு ஆட்சியிலதான்
நாட்டிலேயே முதன்முதலா
லாட்டரி சீட்டு அடிச்சோம் !அல்லாவை வென்றெடுத்து
மத நல்லிணக்கம் நிலைநாட்ட
முசுலீம் லீக் கூட்டணி முடிச்சோம்இந்துக்களிடமும் வர்க்கத்தீயை மூட்டிவிட
சபரிமலையில் மகரஜோதி பிடிச்சோம் !காசு சேர்த்து நிலத்தை வாங்கி
பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிச்சோம்போர்க்குணத்துடன் போலீசை பயிற்றுவித்து
போய்…. நக்சல்பாரிகளைக் கடிச்சோம் …இப்படி …. கச்சிதமா கம்யூனிசத்தை முடிச்சோம் !சரி புரட்சி எப்போது ?அட ! டாடாவையே வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
விவசாயிகள் மண்டையை உடைச்சோம்.பெண்களென்னும் பேதம் பார்க்காமல்
புடவையை பிடித்து கிழிச்சோம்.வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி, தொழிலாளி வர்க்கத்தையே ஒழிச்சோம் !இதுவா புரட்சி !இது மட்டுமா ! சாதி ஆதிக்கத்தை ஒழிக்க
உத்தபுரம் சுவரை நாங்கதான் இடிச்சோம்.
சிறுதாவூர் தலித் நில பிரச்சனைக்கும்
நாங்கதான் கொடி பிடிச்சோம்
இப்ப, செயல்தந்திர அரசியல்படி
அம்மா தோட்டத்திலேயே அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.போர் என்றால் நாலுபேர்
சாகத்தான் செய்வார்கள் என்று
இழவெடுத்த புரட்சித்தலைவி – இப்போது
போர்நிறுத்தம் வேண்டுமென்று
உண்ணாவிரதம் இருந்தது கண்டு
உண்டியலுக்கு வெளியே காணிக்கையாய் கிடந்தோம் !”ஊரை அடித்து உலையில் போட்ட பானையோ ! – இன்னும்
யாரை மிதிக்கக் காத்திருக்கும் யானையோ” என்றுஅம்பிகையைப் பார்த்தவுடன் அந்தக்கால நினைவு வந்தபோதும்,
பாதம் பணிந்த ஓ. பன்னீரும், பஜனை குழுவோரும்
பசியெடுத்த அம்மாவின் பக்கத்தில் நில்லாமல்
ஒரு காதம் விலகி வேண்டி நின்ற போதும்.ஈழத்தமிழருக்காய் ஈரம் கசிந்து
ஓதம் காத்த அந்தச் சுவரோரம்
அஞ்சாமல் ஒதுங்கிய எங்கள் போர்த்தந்திரம் சும்மாவா ?இதிலென்ன புரட்சி ?சமரச சுத்த சன்மார்க்க சபை கலைந்து – எங்கள்
சமரச சித்தாந்த சன்னதியின் தீக்கதிரில் நாக்குழறி
எச்சு ஊறி எங்கள் எச்சூரி பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுத்து
கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியை
ஒழிக்கப் பார்த்தான் காங்கிரசு ! கடைசியில் என்னாச்சு ?
நம்ம துணையில்லாமல்
அவனால் நாடாள முடிந்ததா ?நள்ளிரவில் எழுப்பி விட்டு
நம் அரசு ஊழியர் வர்க்கத்தை
சிறையில் தள்ளினாளே ஜெயலலிதா
இப்போது என்ன ஆச்சு ?வலது, இடதாக தா. பாண்டியனையும், வரதராசனையும்
ஜெயலலிதா வளைத்துப் பிடிப்பதைப் பார்த்து
தோட்டத்து சசிகலாவே வாட்டத்தில் பொருமுகிறாள்.நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?போதும் … எப்போதுதான் புரட்சி ?வந்தது கோபம் தோழருக்கு :அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி, புரட்சின்னா…. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?– துரை. சண்முகம்தோழர்களே நான் எழுத நிறையவே உள்ளது ஆனால் நமது தோழர்கள் எழுதவிட்டால்தானே!!!புரட்சி…. தொடரும்…..சி.பி
Ravindran 1-முதல் உலகப்போர் காலத்தில் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினது மதிப்பீட்டின் அடிப்படையில் ஏகாதிபத்தியவாதிகள் உலகை மறுபங்கீடு செய்வதற்காக போர் நடத்திட ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களது தீய நோக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி போரை தடுத்திடவேண்டும். அவ்வாறு தடுக்க இயலாதபோது, போர் துவங்கிவிட்டால், போரில் ஈடுபட்டிருக்கும் சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தி பாட்டாளி வர்க்கமானது ஆளும் வர்க்க ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சியை நிறுவிடவேண்டும் என்று லெனின் சொன்னார். அவர் சொன்னதை பல நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள் அகிலத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டவர்களும் ஏற்றுக்கொண்டாலும் போர் துவங்கியவுடன் அகிலத்தின் முடிவிற்கு மாறாக சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுடன் கூட்டுசேர்ந்து உள்நாட்டு போரை நடத்த தவறியவர்கள் சோசலிச லட்சியத்தை அடையமுடியாமல் தோழ்விகண்டனர். ஆனால் இந்த நிலைபாட்டில் உறுதியாக நின்று உள்நாட்டுப்போர் என்ற வழியில் போராடி சோசலிச லட்சியத்தில் ரஷ்ய பாட்டாளிவர்க்கம் வெற்றிகண்டது. அதற்குப் பின்பு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மீதும், கம்யூனிச கொள்கையின் மீதும் நம்பிக்கைகொண்டு உலகில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் உருவாக்கப்பட்டு மூன்றாம் அகிலத்தின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி கம்யூனிஸ்ட்டுகள் ஒரே அமைப்பாகவே உலகம் முழுவதிலும் செயல்பட்டனர். முதல் உலகப்போரின்போது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சிக்கான சாதகமான சூழல் நிலவியபோதும் அதனை சரியாக பயன்படுத்த தவறியது அந்த நாடுகளிலிருந்த கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் தலைமை. அதனால் மோசமான தோழ்வியை சந்தித்தனர்.தோழர் அ.க. ஈஸ்வரனின் வலை பூவிலிருந்து                “தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம் ஒளிவுமறைவில்லாத வகையில் வெளிப்படுத்தப்படுகிறது. சுரண்டல் முறைக்கு தமது எதிர்ப்பை, நேரடியாக தெரிவிக்கிறது, சுரண்டலை போக்குவதற்கான வழிமுறைகளைக் கையாள்கிறது. தமது சித்தாந்தத்தை பாட்டாளி வாக்கம் சமூகத்தின் செயல்பாடுகளையும், வளர்ச்சி விதிகளையும், வரலாற்றில் அதன் புறநிலைப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகிறது, அதனால் இந்த சித்தாந்தம் விஞ்ஞான வகைப்பட்டதாக இருக்கிறது. பொதுவாக ஆளும்வர்க்கச் சித்தாந்தம், அன்றைய ஆளும் சித்தாந்தமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டும், சமூக வளர்ச்சியின் போக்கை அறிந்து கொண்டும், அன்றைய மற்றும் தொலைதூர திட்டங்களை அமைத்தும் செயல்படுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாத வழியில் அமைந்த விஞ்ஞான கம்யூனிசம் பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமாகும்”.

22/07/2016

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? ஜாக்மதி ஜேங்குவ்ன் ( JagmatiSangwan) என்ற சிபிஐ எம் மத்திய கமிட்டி உறுப்பினர் அக்கட்சியின் கலகக்காரர் என்று இப்போது அறியப்படுகிறார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்திற்குப் பின்பு அவர் மத்திய கமிட்டி உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார். அவரை அக்கட்சி நீக்கம் செய்துள்ளது. காங்கிரசுடன் கூட்ட இல்லையா இதே நிலைபாட்டிலிருந்துதான் CPI(M) CPI யிலிருந்து விலகியது 1964 க்கு பிறகு சில மாநில சட்ட மன்றத்தை கைபற்றிய இந்த போலிகள் செய்தது என்ன? தளி ராம சந்திரன் போன்ற மாப்பியாவை வளர்த்து சாதனை புரிந்தது மட்டுமே!!!! இதேபோல் ஜாக்மதியும் எதிர்க்கும் காங்கிர்சுடன் கூட்டு தவறு எங்கிறிந்து கூறுவாரா? 
இவரை போன்றே இ.க.க லிருந்து விலகி புரச்சிக்குவித்திட்ட ஒரு தோழரின் வார்த்தையை இங்கே பதிவு செய்கிறேன் நாளை அதாவது திங்கள் தொடருவோம் மற்றவையை……..சி.பி (22/07/2016)
நாம் இந்த சட்டமன்றத்திற்க்கு வரும்போது சிலர் பட்டினிப் போராட்டத்தை நடத்துவதையும், சம்பள உயர்வு கோரி மற்றவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது, இவர்களுக்காண தீர்வு தடியடி அல்லது கைது நம்மிடம் திட்டமோ தீர்வோயில்லை. இத்தனை ஆண்டுகளில் அரசானது விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நடுத்தர மக்களிடையே நம்பிக்கையையும் அமைதியையும் நிலை நாட்ட முடிந்ததா? மக்களின் மீதான நெருக்கடி தீவிரம் அடைந்து கொண்டேயுள்ளது. இதனை அறிய மாநில மத்தி அரசின் செயல் திட்டங்கள் பற்றிபார்ப்போம்; மாநிலத்தின் பொருளாதாரம் மாநில அரசிடமில்லை அப்படியெனில் மத்தியரசிடம் உள்ளதா என்றால் அங்கேயுமில்லை அப்படியெனில் யாரிடம் உள்ளது தோழர்களே? இதனை தன் சட்டமன்ற நடவடிக்கையில் பேசிய தோழர் தனது சேவை மக்களுக்கானது அல்ல ஆகவே இந்த பாராளுமன்ற பாதையை புறக்கணிக்கிறேன் என்று புரட்சிக்கான பாதையை தேர்ந்தெடுத்தார்….. இதனை விரிவாக எழுதுவேன் வரும் நாட்களில்….தற்பொழுது ஜாக்மதியின் எதிர்ப்பு பற்றிபார்ப்போம்:-
Marxist Leninist Articles and Publications23 June at 00:08 ·CPI M கட்சிக்குள் எழுப்பப்படும் கேள்விகள்
====================================
https://www.facebook.com/jagmati.sangwan?fref=ts
ஜாக்மதி ஜேங்குவ்ன் ( Jagmati Sangwan) என்ற சிபிஐ எம் மத்திய கமிட்டி உறுப்பினர் அக்கட்சியின் கலகக்காரர் என்று இப்போது அறியப்படுகிறார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்திற்குப் பின்பு அவர் மத்திய கமிட்டி உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார். அவரை அக்கட்சி நீக்கம் செய்துள்ளது.
அவர் அளித்துள்ள செய்தியில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் மேற்கொண்ட ‘புரிதல்’ கட்சி வழிக்குப் புறம்பானது என்று அவர் சொல்லியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்க சிபிஐ எம் கட்சி ஒட்டுமொத்த கட்சியையும் பிளாக் மெயில் செய்து “’மென்மையான’ பாதையை மேற்கொள்ளும்படி கட்சியை நிர்ப்பந்தம் செய்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜக்மதி ஹரியானா சிபிஐ எம் கட்சியின் தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமல்லாமல், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர்.
அவரின் விலகலும் அதனைத் தொடர்ந்து அவர் நீக்கம் செய்யப்பட்டதும் அக்கட்சிக்குள் நிலவும் குழப்பமான நிலையைப் பிரதிபலிப்பதாக பத்திரிகைகள் எழுதின.
இரண்டு வழிகள் முட்டிக்கொள்வதாக தெரிகிறது. விசாசகப்பட்டினம் காங்கிரஸ் படி பார்த்தால் காங்கிரசுடன் கொண்ட (மேற்கு வங்க) சரிகட்டுதல் தவறானது என்பது ஒன்று. அது கட்சி வழியுடன் இசைந்ததாக இல்லை என்ற கருத்து அரசியல் தலைமைக் குழுவின் சிறுபான்மையாக இருக்க, அது கட்சி வழியை மீறியதாகும் என்ற கருத்து அக்குழுவின் பெரும்பான்மையாக இருந்தது என்று ஜக்மதி சொல்லியுள்ளார்.
அரசியல் தலைமைக் குழுவின் சிறுபான்மை கருத்தை சிபிஐ எம் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் யெச்சூரி மத்திய கமிட்டியில் முன் வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ள்ளார். மத்திய கமிட்டி கூட்டத்தில் சுற்றுக்கு விடப்பட்ட பெரும்பான்மை கருத்து மேற்கு வங்க தேர்தல் முடிவு கட்சி வழிக்கு புறம்பானது என்று சொன்னதாக ஜக்மதி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கமிட்டி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் , மேற்கு வங்க தேர்தல் முடிவு கட்சிக்கு வழிக்குப் புறம்பானது என்றும், அது கட்சியின் வளர்ச்சியைத் தமது மாநிலங்களில் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்றும் ஜக்மதி சொன்னார்.
மேற்கு வங்க தேர்தல் தந்திரத்திற்கு எதிரான போக்கை அக்கட்சியின் மேற்கு வங்க பிரிவினர் அனுமதிக்கவில்லை ‘‘அச்சுறுத்தல்‘ செய்தனர் என்றும் அவர் சொல்லியுள்ளார்.
மத்திய கமிட்டி கூட்டத்தின் இறுதியில், பெரும்பன்மை அரசியல் தலைமை குழு கருத்தில் இருந்த ‘வழி விலகல்‘ என்ற கருத்துக்குப் பதிலாக, ‘ஒத்துப்போகவில்லை என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது.
காங்கிரசுடன் மேற்கொண்ட ‘புரிதல் கட்சி வழியிலிருந்து விலகுவது பற்றிய மிக மோசமான உதாரணம் என்றும், அதன் காரணமாகத்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வியை தம் கட்சி தழுவியது என்றும், முதலாளித்து கட்சிகளுடன் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்ப வாதக் கூட்டணியை மக்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்குகிறார்கள் என்றும் ஜக்மதி கடுமையாக விமர்சித்துள்ளார். அக்கட்சி “மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கொண்ட தேர்தல் உறவை ஆதரித்தும் மத்திய கமிட்டியின் நிலைக்கு எதிராகவும் மாநிலத் தலைவர்கள் பலர் பேசுவது அவர்கள் மக்களின் விருப்பத்திருந்து தனிமைப் பட்டிருப்பதைக் காட்டுகிறது“, என்றும் அவர் சொன்னார்.
கட்சியிலிருந்து தான் விலகியதற்கான காரணம் கருத்தியல் பிரச்சனைதான் என்று சொன்ன அவர் “கட்சியின் நலனையும் மக்களை நலனையும் பாதிக்கும் வழியைப் பின்பற்ற எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை”, என்று சொன்னார்.

Comments