தோழர்களே நமது கடந்த கால தவறுகளில் இருந்து படிப்பினை பெறாவிட்டால் நமது இலக்கு ஆம் இந்த இத்துப் போன அமைப்பு முறையை தூக்கி எறியாமல் விடிவு இல்லை என்பதனை தோழர்கள் புரிந்துக் கொள்ள உதவும் என்று நினைக்கிறேன்….
CPI, CPM கட்சிகள் கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறக்கணித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தகுதிகளை வரையறுத்துள்ள மூன்றாம் அகிலத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்படுகின்றன. இவை புரட்சிகர மாற்றத்தை கொண்டு வர பாடுபடும் கட்சி அல்ல.
முதலாளிய தேர்தல்களுக்கு மட்டுமே தயார் செய்கின்றவை. முதலாளிய ஜனநாயகத்திறக்குள் தங்களை அடக்கி கொள்வது, அதைப் பொதுவாக ஜனநாயகம் என்பது, அதன் முதலாளித்துவ தன்மையை மூடி மறைத்திடுவது. முதலாளித்துவ உடைமை முறை இருக்கும் வரை எல்லோருக்கும் வாக்குரிமை என்பது முதலாளிய அரசின் ஒரு கருவி என்பதை மறப்பது பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாகும்.
“மாபெரும் புரட்சி ஒன்றுகூட இராணுவம் சீர்குலையாதபடி நடந்தேறிய தில்லை, நடந்தேறுவதுமில்லை, ஏனெனில் பழைய ஆட்சியை ஆதரிப்பதற்கு இராணுவம்தான் மிகக் கெட்டிப்படுத்தப்பட்ட கருவி. முதலாளிய ஒழுக்கக் கட்டுபாட்டின் மிக இறுக்கப்பட்ட கொத்தளம் இராணுவமே, இராணுவம்தான் முதலாளித்துவ ஆட்சியை சப்பை கட்டு கட்டி வைத்திருக்கிறது. புதியதொரு சமுக வர்க்கம் அதிகாரத்துக்கு வரும் போது, பழைய இராணுவத்தை முற்றிலும் குலைதிடாமல் அதிகாரத்துக்கு வருவது என்பது முடியாத காரியம், எப்போதும் முடியவும் முடியாது” தோழர் லெனின் கட்சிமாறியான காவுத்ஸ்கிக்கு அளித்த பதில் இங்கே அப்படியே CPI, CPM கட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
மேலும் லெனின் காவுத்ஸ்கி கும்பலை” உழைக்கும் வர்க்க இயயக்கத்துக்குள் முதலாளிய ஏஜேண்டுகள்” என்றும் “முதலாளிய வர்க்கத்தின் தொழிலாளர் படைத்தலைவர்கள்” எனவும் அழைத்துள்ளார்.
“போக்கிரிகள் மட்டுமே அல்லது சிறுமதி கொண்டவர்கள் மட்டுமே பாட்டாளி வர்க்கம் முதலில் முதலாளிய வர்க்க அடிமைதனத்தில் கீழ் நடத்தப் படும் தேர்தல்களிலும், கூலி அடிமைதனத்திலும் கீழ் பெரும்பானமையைப் பெற்றிட வேண்டும்: அப்புறம் அதிகாரத்தைக் கைபற்ற வேண்டும் என்று கூறிடுவார்கள். இது மூடத்தனத்தின் உச்சகட்டமாகும். அல்லது மாய்மலத்தின் உச்ச நிலை, வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சியை பழையமுறையின் கீழும், பழைய அதிகாரத்தின் கீழும் உள்ள தேர்தல்களை அதற்க்குப் பதிலாக வைக்க முயல்கிறது”, என்று மென்சுவிக்குகளுக்கு எதிராக தோழர் லெனின் முன் வைத்துள்ள விமர்சனம் CPI, CPM கட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
தொடரும் தோழர்களே..