அரசு பற்றி
அரசு பற்றி

அரசு பற்றி

அரசு பற்றி-1 சி.பி+++++++++======தோழர்களே “சாத்தான் குளம்” சம்பவத்திற்க்கு பிறகு “போலிஸ்” மீதான கோவத்தை எல்லோரும் வெளிக்காட்டிக் கொண்டுள்ளனர். இதில் பலர் எழுதுவதை ஏற்றுக் கொண்டு கடந்து போக முடியவில்லை அதற்க்கானதே இந்தப் பதிவு.மார்க்ஸ் விளக்கியது போன்று அரசாங்கமென்றால் ஒருவர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு கருவி. அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசாங்கமாகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களைகீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அது.வர்க்க சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும்.’அரசு’ என்பது எவ்வாறு தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தது என்பதற்கு வெவ்வேறு கோட்பாடுகளின் மூலமாக பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசு பற்றிய கோட்பாடு ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதாகவும் அத்தகைய வர்க்கங்களின் ஆட்சி உரிமையை நியாயப்படுத்துவதாகவும் இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. அரசு தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் அது தெய்வீகத்துடன் தொடர்புடையது என்றும் மக்கள் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் , மேலும் அரசு அனைத்து மக்களினதும் தேவைக்கும் நன்மைக்கும் உரிய நடுநிலையானதும் நீதியை பாதுகாக்கும் தூய்மையான நிறுவன வடிவமென்றும் கருத்துருவக்கப் பட்டுள்ளது.ஆயுதப் படைகள் மட்டுமல்ல நீதித்துறை, சிறைச்சாலைகள், கொழுத்த சம்பளம் பெறும் அதிகாரத்துவம் ஆகியனவே அரசு இயந்திரத்தின் மற்றைய வடிவங்களாகும். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தே அரசு அல்லது அரசு இயந்திரம் எனக் கூறுகின்றோம்.அரசானது நினைவிற்கு எட்டாத காலத்திற்கு முன்னர் இருக்கவில்லை என்பதை இது தெளிவாக …..ஆரம்பகால மனித நாகரீகத்தை பின்னேக்கிப் பார்ப்போம். இன்றுவரை உலகம் புராதனப் பொது உடமை, அடிமை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, சோசலிச சமுதாயங்கள் ஆகிய ஐந்து வகைச் சமுதாயங்களைக் கண்டிருக்கிறதென. வரலாற்று பொருள் முதல்வாதம் நமக்குப் போதிக்கின்றது. நாகரிகத்தின் மிக ஆரம்பக் காலத்தில் புராதனப் பொது உடமைச் சமுதாயம் இருந்தது. உற்பத்திச் சாதனங்கள் சீராக வளர்ச்சி அடையாதிருந்த காலத்தில் இந்த அமைப்பு இருந்தது. வளர்ச்சியின் அந்தக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் காட்டு மிருகங்களை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவற்றிலேயே வாழ்ந்துவந்தனர். வர்க்கங்களற்ற புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் அரசாங்க இயந்திரம் இருக்கவில்லை. அப்பொழுது வர்க்கங்களற்ற சமுதாயம் இருந்தமையால் ஒரு வர்க்கத்தை வேறோரு வர்க்கம் அடக்கி வைத்திருப்பதற்குத் தேவையான காரணம் ஏற்படாததேயாகும். அவ்வாறானால் ஒழுங்கு எவ்வாறு நிலை நாட்டப்பட்டது? ஒவ்வொரு பூர்வீகக்குடியும் தம்முள் ஒருவரைத் தலைவராக அல்லது முக்கியஸ்தராகத் தெரிவுசெய்தனர். பொதுவாக அவன் வேட்டையாடுவதற்கும், யுத்தத்திற்கும், அவர்களைத் தலைமைதாங்கும் உடல் வலிமை பெற்றவனாயிருந்தான். ஆனால், அவன் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு அவனிடம் அரசாங்க இயந்திரமான ஓர் இராணுவத்தையோ அல்லது பொலீஸ் படையையோ கொண்டிருக்கவில்லை. சுயமாகவே மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஒவ்வொருவரும் அவனது சொல்லை ஏற்றுக் கொண்டனர். ஒரு பூர்வீகக்குடியில் தலைவனுக்குக் கிடைத்த மனப்பூர்வமான மரியாதையும் கீழ்ப்படிவம், முதலாளித்துவ சமுதாயத்தில் எந்தவொரு சக்திவாய்ந்த தலைவனுக்கும் கிடைத்ததில்லை.தோழர்களே பதிவு நீண்டுவிட்டது ஆகவே அடுத்த பதிவில் தொடரும்…..சி.பி

அரசு பற்றி-2 சி.பி============சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் (தந்தை மகன்) இருவரின் படுகொலைக்கு காரணமான காவல் நிலையத்தைச் சார்ந்த போலீசார்கள், போலீசல்லாத நபர்கள், உடல்நலச் சான்றிதலளித்த அரசு மருத்துவர், சிறையிலடைக்க கையொப்பமிட்ட நீதிபதி, கோவில்பட்டி சிறை அதிகாரி அனைவரும் குற்றவாளிகள்தான். இந்த உளவியல் எப்படி?போலீசை பொதுமக்கள் கேள்வி கேட்டால் “என்னையே எதிர்த்து பேசுறியா?” “என்கிட்டேயே சட்டம் பேசுறியா?” என்பதுதான். எப்படி வந்தது இந்த மனோபாவம்?.நீதிபதிகளும் வழக்கறிஞர் – போலீசிடம் கேஸ் விவரத்தை முதலில் கேட்டுவிட்டு பிறகு ஒப்புக்காக கேள்விக் கேட்டால் “ஆம், இல்லை” என்ற பாணியிலேயே பதில் வேண்டும் ஏதாவது சொல்ல முற்பட்டால் நீதிபதியே “கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்” என அதிகார தோரணையில் கர்ஜிப்பதும் அன்றைய காலனிய நடைமுறையிலிருந்து மாறவில்லையே!!!! இந்த ஆளும் வர்க்கத்தின் அடிமை கூட்டம் அது சார்ந்து நிற்க்கும் கூட்டத்திற்க்கான சேவையை சரியாக செய்கிறது ஆனால் உண்மையில் இவர்கள் யார்?படித்து வேலையற்ற ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்றழைந்து ஏதோ ரெக்மெண்ட் லஞ்சம் கொடுத்தேனும் வேலையில் சேர்ந்த பின் தனது வர்க்கத்தை மறந்து எதிரி வர்க்க அடிமையாகி போன இவர்களை விட இவர்களை தாங்கி நிற்க்கும் அமைப்பை நிர்மூலமாக்க வேண்டுமல்லவா?அப்படியெனில் இதன் வரலாறு அறிவோம்….முதற் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகும். அதன் சிறந்த உதாரணங்களை கிரேக்கத்திலும் ரோம சாம்ராஜ்யத்தின் காலப்பகுதியில் காணலாம். இந்த சமுதாயம் அடிமையை வைத்திருப்போன் – அடிமை என்ற எதிர் எதிர்வர்க்கங்களாகப் பிளவுபட்டிருந்தது. வல்லமைமிக்க ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஸ்பார்ட்டகஸ் தலைமை தாங்கிய மிகப் பிரபல்யம் வாய்ந்த கிளர்ச்சிகள் உட்பட பல அடிமைக் கிளர்ச்சிகளை இந்தச் சமுதாயம் கண்டது.இக்கட்டத்தில் அடக்குமுறை இயந்திரம் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. அடிமைகள் மிகக் கடுமையான கசையடி மூலமும், பிரமாண்டமான சுதந்திர மனிதர்களின் படையுடனும் கோரமாக அடக்கியாளப்பட்டனர். ஆனால், வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து சமுதாயம் அடுத்த கட்டமான நிலபிரபுத்துவத்திற்கு வளர்ச்சியடைந்ததும் மேலும் மோசமான அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை உணரப்பட்டது. நிலையான இராணுவம் உருவாக்கப்பட்டது. நீதித் துறையும் சிறைச்சாலைகளும் தோன்றின. சிறிது சிறிதாக அரசு இயந்திரம் வளர்ந்து வர்க்க முரண்பாடு மிக உச்சக் கட்டத்தில் கூர்மையடைந்துள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் உயர் இராணுவ மயமாக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் தோன்றியது.இதிலிருந்து வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசாங்கம் தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.கொழுத்த சம்பளம் பெறும் அதிகாரத்துவமும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவம், போலீஸ் அதிகாரிகளும் அடிப்படையில் அப்படியே இருக்கின்றனர். அவர்கள் அதே வகையில் தன் எஜமானர்களுக்கு, அதே நலன்களுக்குச் சேவை செய்கின்றனர். அந்த மனிதர்கள் தான் உண்மையில் ஆட்சி செய்கிறார்கள்.இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும், போலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது. அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க , அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வலம் வருகின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்கமாட்டார்கள். எவ்வாறாயினும், பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நூறுக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலைமைகளில் எவ்வாறு அவர்களால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களைப் பலவந்தப்படுத்திச் சுரண்ட முடிகின்றது. அவர்களின் காவலாளிகளான இராணுவம், போலீஸின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளின் சக்தியே அது. அதனாலேயே தோழர் மாசேதுங், அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கின்றது என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும் என நமக்குக் கற்றுத்தந்தது நூறுவீதம் சரியாகின்றது. அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சிசக் கோட்பாட்டை இதுவே.இந்தக் துப்பாக்கிகள் கைமாறும் போதே, சுரண்டப்பட்ட வர்க்கங்கள் புரட்சிகரப் பலாத்காரத்தினால் இந்தக் துப்பாக்கிகளைப் பறித்துத் தொழிலாளர்களினதும் அவர்களினது நேச அணிகளினதும் கைகளில் அவற்றை ஒப்படைக்கும்போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள். வேறு எந்த மார்க்கமும் இல்லை. மற்றவை யாவும் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட முயற்சி அல்லது போலியாகும்.இந்த உண்மையை மறைப்பதற்கும், மக்களைக் குழம்பச் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும் மற்றைய பிற்போக்குச்சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டுபிடித்தனர். பாராளுமன்றம் மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும், பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது.இன்று இவர்கள் கோரும் சீர்திருத்தம் எந்த பயனையும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு தாரா…!!!!உங்கள் கருத்துகளை எதிர் நோக்கும்…சி.பி.

அரசு பற்றி-3 சி.பி———————-இன்று நமது போராட்டகாரர்கள் செய்ய வேண்டியதை அறியாமையால் இதற்க்குள் தீர்வு காணவும் மக்களின் உயிருக்கு உயர்ந்த பாதுகாப்பு வேண்டி போராடுகின்றனர் ஆனால் இவர்கள் போராடி பெற்ற பல சுதந்திரம் இந்த அதிகார வர்க்கம் மதிப்பதே இல்லை என்பதுதான் நடைமுறை உண்மையல்லவா?ஊபியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை துறத்தும் இந்த மக்கள் காவலர் ஏன் நமது நிதி மூலதன கொள்ளையர்களை பிடிக்க இந்த ஸ்டைல் உபயோகிப்பதில்லை என்பதோடு இந்த மாயையிலிருந்து நீங்கள் விடிபட வேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம் தோழர்களே.பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையை முதலாளிகளும் மற்றைய பிற்போக்குச்சக்திகளும் கண்டுபிடித்தனர். பாராளுமன்றம் வெறுமனே கதையளக்கும் கூடாரமே தவிர வேறொன்றும் இல்லை. அது மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும், பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது.இந்த வாக்குரிமை என்பது வளர்ந்து வந்த ஏகாதிபத்திய எதிர்ப்பை மக்கள் போராட்டங்களை நீர்த்து போக செய்ய மக்களை மத, இன, சாதி ரீதியிலும், வேறு வழிகளிலும் பிளவுபடுத்தினர். அவர்களின் எண்ணங்கள் பொய்ப்பிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் கடைபிடித்த எல்லா முறைகளையும் அவர்களது அடிவருடிகளும் அப்படியே கடைப்பிடிப்பதிலிருந்து விளங்கவில்லையா இந்த அரசு என்பது யாருக்கானது என்று? திறமைமிக்கோரைப் பாராளுமன்றம் அனுப்பினால் எல்லா மக்களுக்கும் விடிவு கிடைக்கும் என்போரே பாராளுமன்றத்திற்கு வெளியே நிலவிய உழைக்கும் மக்களைச் சுரண்டும் முறையானது எந்த அளவிலாவது குறைக்கப்பட்டுள்ளதா? திட்டவட்டமான பதில் இல்லை என்பதேயாகும். ஏனெனில் சுரண்டலைப் பாராளுமன்றம் பாதுகாக்கவில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரமே சுரண்டலைப் பாதுகாக்கின்றது. பாராளுமன்றத்தில் நடைபெறும் நாடகமாவனது எதற்க்கானது?சுரண்டலின் தரத்திலென்றாலும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? இல்லை. அதே சுரண்டல் தொடர்கின்றது. செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்ற அதே வேளை ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். ஏனெனில்,முதலாளித்துவப் பராரளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மாற்றங்கள் பொருளாதாரக் கட்டுக்கோப்பில் அல்லது அதைப் பாதுகாக்கின்ற முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்திலோ எந்தவித அடிப்படைமாற்றமெதுவையும் கொண்டுவரவில்லை., முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக நாடகத்தின் மூலம் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமாட்டாது என்ற உண்மையைகவனத்தில் கொள்ளவேண்டும்.தோழர் மாசேதுங் குறிப்பிட்டதுபோல, உலகின் பிரதான போக்கு புரட்சிதான். புரட்சிப் பாதையை ஏற்றுக் கொள்வது உண்மையான புரட்சியாளன் ஒவ்வொருவரினதும் திட்டவட்டமான முன் தேவையாகும்.தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பாவிக்க இயலாது. அதனால் தான் மார்க்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோர் முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் நிச்சயமாத நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக்கூறினர். அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது. முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது. அதனால்த்ான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது பொறுப்பென மார்க்சிசம் – லெனினிசம் – மாசேதுங் சிந்தனை போதிக்கின்றது. பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விபரித்தார்.இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. ஒக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சி நடைபெறவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்களுக்கு லெனின் அறைகூவல் விடுத்து துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கியதன் மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது. அவர்கள் பழைய நீதித் துறையை் தொடர்ந்தும் வைத்திருக்கவோ அல்லது நீதி துறையின் சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக்கொண்டிருக்கவில்லை. சோஷலிச சட்டத்தை ஏற்ற புரிந்துக் கொண்ட புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.தேவையென்ரால் தொடரும் தோழ்ர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *