”அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டையும் அவரது நியூ டீலையும் (சமூக நல அரசு மற்றும் கீன்சிய பொருளாதாரக் கொள்கைகள்) அமெரிக்க நிதி மூலதனத்தின் ஆகப் பிற்போக்கான வட்டாரங்கள் கடுமையாகத் தாக்குகின்றன. அவர்கள்தான் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாசிஸ்டு இயக்கத்திற்கு ஊக்கமளிக்கிறார்கள். உருவாக்குகிறார்கள் என்பதையும் பார்க்க மறுக்கலாகாது. இந்த வட்டாரங்களின் மோசடித்தனமான மாய்மால வார்த்தைகளுக்குப் பின்னால்தான் அமெரிக்க ஐக்கிய நாட்டின் உண்மையான பாசிசத்தின் தொடக்கம் இருக்கிறது என்பதைப் பார்க்காமல் இவர்களுடைய அமெரிக்க பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது ஏனும் வாய் ஜாலங்களுக்குப் பின்னால் பாசிசம் மறைந்து கிடப்பதைப் பார்க்காமல் இருப்பது தொழிலாளி வர்க்கத்தை அதன் படுமோசமான எதிரியை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு தவறான வழியில் கொண்டுசெல்வதற்கு ஒப்பாகும்” என்று தோழர் டிமிட்ரோ கூறினார்.
இதன் பொருள் என்ன?
1) தொழிலாளர்களின் எதிரிகளில் மிகவும் மோசமான எதிரியை எதிர்த்துப் போராடும்போது பிரதானமற்ற பிற எதிரிகளையும் பிராதனமான எதிரிகளையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்கிறார்.
2) நமது எதிரிகளுக்கு இடையிலான முரண்பாட்டை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.
3) முதன்மையான எதிரியை எதிர்த்தப் போராட்டத்தில் நாம் யாரை எதிர்த்து யாருடன் கூட்டு சேரவேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்கிறார்.
பிரதானமான எதிரியை எதிர்த்தப் போராட்டத்தில் பிரதானமற்ற எதிரியின் கொள்கையான ஏகாதிபத்திய நலன் காக்கும் கீன்சியக் கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டு அந்த கொள்கைக்காக போராடவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரா? இல்லை. ஆனால் இங்கே சிலர் அவர்களை மார்க்சிய லெனினியவாதிகள் என்று கூறிக்கொண்டே தோழர் டிமிட்ரோ சொன்ன இந்த கூற்றைக்கொண்டு பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு கீன்சிய பொருளாதார திட்டத்தை முன்வைக்கிறார்கள். முதலாளித்துவவாதிகளுடன் நாம் நடைமுறையில் விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொள்ளலாம், ஆனால் எக்காரணம்கொண்டும் கோட்பாட்டில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்ற மார்க்சிய லெனினிய கோட்பாட்டை கைவிட்டுவிட்டு ஏகாதிபத்திய நலன் காக்கும் கீன்சிய கொள்கையை ஏற்றுக்கொண்டு பாட்டாளிவர்க்கம் போராட வேண்டும் என்பது கோட்பாட்டு சமரசவாதம்தானே. இது உண்மையில் சந்தர்ப்பவாதமே.
1) பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு குறிப்பான திட்டம் அவசியமே. அத்தகைய குறிப்பான திட்டம் யாரால் வகுப்படவேண்டும் என்பது நம்முன் உள்ள கேள்வி. அதற்கு எமது பதில் குறிப்பான திட்டத்தை பாட்டாளிவர்க்க கட்சிதான் வகுக்க வேண்டும்.
2) குறிப்பான திட்டம் எந்த வர்க்க நலன்களிலிருந்து வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு எமது பதில் அது பாட்டாளிவர்க்கம் மற்றும் பரந்துபட்ட மக்களின் நலனிலிருந்து வகுக்கப்பட வேண்டும்
3) குறிப்பான திட்டம் யாருக்கு எதிராக வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு எமது பதில் நிதிமூலதன ஆதிக்க ஏகாதிபத்திய வர்க்கங்கள் மற்றும் அதன் சார்பான வர்க்கங்களுக்கு எதிராக வகுக்கப்படவேண்டும்.
இந்த நிலைபாடுகளுக்கு மாறாக ஏகாதிபத்திய நிதிமூரதன கும்பலை பாதுகாக்கவும் புதிய காலனியத்தை ஆதரிந்து நியாயப்படுத்தவும் அல்லது அந்த ஆதிக்கத்தை மூடிமறைக்கவும் பயன்பட்ட கீன்சிய ஏகாதிபத்திய பொருளியல் கொள்கைக்காக போராடுவது என்பது கோட்பாட்டு சமரசவாதமே. அது மார்க்சிய லெனினியம் இல்லை.
முக்கியமாக குறிப்பான திட்டத்தை வகுக்க புரட்சிகரமான பாட்டாளிவர்க்க கட்சி தேவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அத்தகைய பாட்டாளிவர்க்க கட்சி நம் நாட்டில் உள்ளதா? மார்க்சிய லெனினியவாதிகள் சிந்திக்க வேண்டும்.
தோழர் ரவீந்திரன் முகநூல் பதிவு இதற்கான வினையாற்றல் கீழே…
பல நூறு ஆண்டுகளாக பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்து பாசிச ஆட்சிதான் இங்கு நடக்கிறது. சில வேளையில் அது வெளிப்படையாகத் தெரியும் சில வேளைகளில் வெளிப்படையாகத் தெரியாது. இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. கம்யூனிஸ்டு கட்சியால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும்
குழுக்களை வைத்துக்கொண்டு அதுதான் கடசியென்று கூறிக்கொண்டு அதையும் பெருமையாக பேசிக்கொண்டு திரியும் மானங்கெட்ட ஜென்மங்கள் இருக்கின்றன . பாசிச எதிப்பு முன்னணிப்பற்றி பேசுவதேல்லாம் சவடாலாகவும் முதலாளிய வர்க்கத்தின் வாலைப்பிடித்துக் கொண்டு பின்செல்வாதாகதான் முடியும் மாறாக பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்கு துளியளவுகூட பயன்படாது .தோழர் பன்னீர் செல்வம் பதிவு.
Panner Selvam
பதில் 1
ஆ) குறிப்பான திட்டம்
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியது ஒரு குறிப்பான திட்டம்.
கட்சியின் அரசியல் நடத்தை வழியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வர்க்கச் சக்திகளின் அணிசேர்க்கைக்கு ஏற்ப புரட்சிகரச் சக்திகளின் அணிசேர்க்கையிலும், எதிர்ப்புரட்சிகரச் சக்திகளின் அணி சேர்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, பிரதான எதிரியை எதிர்த்துப் போரிடும் சக்திகளின் நலன்களைக் கருதி உடனடிக் கோரிக்கைகள் அடங்கிய ஒரு குறிப்பான திட்டம் பாட்டாளி வர்க்கக் கட்சியினால் முன்வைக்கப்படவேண்டும்.
இக்குறிப்பான திட்டம் கட்சியின் குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் (மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தின் அடிப்படையில்) அமைய வேண்டும். இக்குறிப்பான திட்டம் கட்சியின் குறைந்தபட்சத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அதை நிறைவேற்றும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட வேண்டும். அக்காலக்கட்டத்திற்கு உகந்த சில அரசியல் சமூகப் பொருளாதாரத் துறைகளில் உடனடிக் கோரிக்கைகள் அடங்கியது. அக்காலக்கட்டத்தின் அரசியல் நடத்தை வழிக்கேற்ப, விவசாயிகளின் விவசாயத் திட்டத்தின் ஒரு பகுதியையோ அல்லது ழுமுமையையோ இந்த குறிப்பான திட்டம் கட்டாயமாக உள்ளடக்கியிருக்க வேண்டும். பிரதான எதிரியைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் நம்முடன் ஐக்கிய முன்னணியில் பங்குகொள்ள முன்வரும் வர்க்கங்களுக்கு, குறிப்பாக ஆளும் வர்க்கங்களில் ஒரு பிரிவு ஐக்கிய முன்னணியில் பங்குக்கொள்ள முன்வருமானால் அவற்றிற்கும் சில சலுகைகளைத் தரும் வகையில் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும். எதிரிகளுக்குள்ளே உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், பலருடன் ஐக்கியப்படுவதற்கும், ஒருநேரத்தில் சிலரை எதிர்த்தும் எதிரிகளைத் தனித்தனியாக ஒழித்துக்கட்டவும் மாவோ வகுத்துத் தந்த செயல்தந்திர நெறிமுறைகளைச் சரியாகக் கையாளும் நோக்கத்தின்படி குறிப்பான திட்டம் அமையவேண்டும். தோழர் மனோகரன் பதில்
Panner Selvam பதில் 2
குறிப்பான திட்டம் பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்வதாக அமைய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு உகந்ததாக வகுக்கப்படும் கட்சியின் அரசியல் நடத்தை வழியும், அதனடிப்படையில் அமைந்த குறிப்பான திட்டமும் தொலைநோக்குடையதாக இருக்க வேண்டும், நீண்ட புரட்சியில் அடுத்துவரும் காலக்கட்டத்திற்குத் தேவையான நிலைமைகளை இந்தக் காலக்கட்டத்திற்குள் தோற்றுவிப்பதாக அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு உகந்த அரசியல் நடத்தை வழிக்கு ஏற்றவாறு வகுக்கப்படும் குறிப்பான திட்டம், அந்த அரசியல் நடத்தை வழிக்கேற்ப அரசியல் அதிகாரத்திற்கான தீர்வை அந்த குறிப்பான திட்டம் வகுக்க வேண்டும். அத்தருணத்திலுள்ள எதிரிகளிடமிருந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் அல்லது ஏற்கெனவே உள்ள அரசு இயந்திரத்தின் மூலமோ அல்லது அதனிடம் கோரிக்கைகளாக முன்வைத்து நிறைவேற்றக்கூடியதாகவோ ஒரு குறிப்பான திட்டம் அமையக்கூடாது. போலிப்பாராளுமன்ற ஆட்சிமுறை இருப்பதனாலும், ஒழுங்கமைக்கப் பட்ட திருத்தல்வாதக் கட்சிகளின் பிரச்சாரத்தினாலும் இந்த அரசு அமைப்பு முறைக்குள் ஒரு குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் என்ற மாயை தோற்றுவிக்கப்படும். ஆகையால் இந்த அரசு முறை பயனற்றது. இதன்மூலம் ஒரு குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது இயலாது. இந்தக் குறிப்பான திட்டம் நிறைவேற்றப்படவேண்டுமானால் இந்த அரசுமுறை துடைத்தெறியப்பட வேண்டும் என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும்.
ஆளும் வர்க்கங்களும் சமரசச் சக்திகளும் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரத் திட்டங்களுக்கு மாற்றாக பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் உகந்த குறிப்பான திட்டங்களை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்காகப் போராடுவதன் மூலமாகத்தான், மக்களை அவர்களின் செல்வாக்கிலிருந்தும், தலைமையிலிருந்தும் வென்றெடுக்க முடியும். இவ்வாறு ஒரு குறிப்பான திட்டத்தையும், அரசியல் முழக்கங்களையும் முன்வைக்காமல், ஒவ்வொரு மக்கட் பகுதியினரும், வர்க்கமும் தத்தம் பகுதி நலனுக்கான போராட்டங்களையும், பொருளாதாரப் போராட்டங்களையும் நடத்திக்கொண்டிருக்கும்போதே ஒரு பொதுவான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் (புரட்சிகர) அரசியலைப் பிரச்சாரத்தைச் செய்வதன் மூலம் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், வர்க்கங்களையும் ஒன்றுபடுத்த முடியாது. மக்களுக்குப் புரட்சிகர அரசியல் உணர்வைக் கொண்டுவர முடியாது. அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் திரட்டவும் முடியாது. இத்தகைய இயக்கங்கள் பொருளாதாரவாதத்திற்கும், தன்னியல்பிற்கும் தலைவணங்கியே தீரும். மக்களை ஆளும் வர்க்கக் கட்சிகள், சமரசக் கட்சிகள், திருத்தல்வாதக் கட்சிகள் ஆகியவற்றின் செல்வாக்கிலிருந்து மீட்காது. ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொரு காலக்கட்டத்தில் நிலவும் பருண்மையான சூழ்நிலைக்கு உகந்த அரசியல் நடத்தை வழியின் அடிப்படையில் அமைந்த குறிப்பான திட்டத்தையும், அரசியல் முழக்கத்தையும் முன்வைத்து அவற்றை நிறைவேற்றப் போராடுவதன் மூலமாகத்தான் பாட்டாளி வர்க்கம் சமுதாயத்திலுள்ள அனைத்து மக்கள் பிரிவினரோடு திட்டமிட்ட முறைப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு விரிவுபடுத்த முடியும்; அவர்கள் அனைவரையும் புரட்சிகரப் பேராட்டங்களுக்குத் திரட்ட முடியும்.
Panner Selvam மேற்கண்ட இரண்டு பதிலும் இவர்கள் 2016ல் ஏறுக்கொண்ட தீர்மானம்!
இன்று இவர்கள் அதற்கு எதிராக எழுதுகின்றனர்!
பாசிசத்தை கம்யூனிஸ்ட்கட்சி மட்டுமே வெல்ல முடியும் என வாய்ச்சவடால் அடித்து ஐக்கிய முன்னணி பற்றிய விஞ்ஞானத்தையே கொச்சைப்படுத்துகின்றனர்!
குறுங்குழு வாதிகளாக மாறி பாட்டாளி வர்க்கத்தை தனிமைப்படுத்ததும் வேலையை செய்கிறார்கள்!!!தோழர் மனோகரன் பதிில்
ஒரே குழுவாகயிருக்கும்போது அதன் மாநாட்டிலோ சிறப்புக்கூட்டத்திலோ ஏகமனதாகவோ பெரும்பாண்மையாகவோ நிறைவேற்றப்பட்டத்தீர்மானத்தை புறக்கணிக்க அவ்வமைப்பின் எப்படிப்பட்ட ஒரு உறுப்பினருக்கோ இல்லை ஒரு பிரிவுக்கோ அதிகாரமில்லை. அப்படி மீறிசெயல்படுபவர்கள் அமைப்பு விதியையும் ஒழுங்கையும் கெடுக்கும் குற்றத்தை செய்தவறாக கருதபடுவர் . இக்குற்றத்தை செய்வதற்கு முன்பே அத்தீர்மானம் தொடர்பான கருத்து மாறுபாடுகளை விவாதிக்கவும் அதைமாற்றியமைக்க வழங்கப்பட்ட சனநாயக வாய்ப்பையும் மாறுபாட்டை தீர்க்கமுடியவில்லையென்றால் சிறப்புக்கூட்டத்தையோ மாநாட்டையோ கூட்டி அதுகுறித்த திருத்தங்களையோ வேறுமுடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. அதற்காக அமைப்பை உடைக்க என்ன அவசியம் வந்தது. ? இந்த சனநாயக முறையையெல்லாம் மீறப்பட்டு அமைப்பை உடைப்பவர்கள் அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாகயிருந்தாலும்அவர் சொந்தமாக அமைப்பை கட்டினாலும் வேறு அமைப்பில் இணைந்தாலும் அவரால் கட்டுபாட்டோடு இயங்கும் ஆற்றலில்லாதவராகவேயிருப்பார் . தோழர் பன்னீர் செல்வம்.