இடதுசாரிகள் மக்களிடமிருது அன்னிய படும் இடம் எது தோழர்களே.
இடதுசாரிகள் மக்களிடமிருது அன்னிய படும் இடம் எது தோழர்களே.

இடதுசாரிகள் மக்களிடமிருது அன்னிய படும் இடம் எது தோழர்களே.

இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும் அளவு வளர்ச்சி மட்டுமே ஒரு தத்துவ தலைமைக்கு அழகு அவையின்றி அரசியல் ஓட்டையாண்டிகளாகி போனவர்கள் இதனை எதிர்த்து போராட திறன் அற்றவர்களே.

முதலாளிகளின் தேவைகளுக்காக ஓடோடி வரும் வலதுசாரிீ இயக்கம் மக்களை ஏமாற்றி மக்களின் நாயகர்களாக வலம் வரும் பொழுது , மக்களின் இந்த எல்லா ஒடுக்கு முறைக்கும் முடிவுகட்டி மக்கள் ஒடுக்குமுறையற்ற ஒரு நல் வாழ்க்கை அளிக்க முனையும் புரட்சியாளர்கள் இடதுசாரிகள் மக்களிடமிருது அன்னிய படும் இடம் எது தோழர்களே.(பதில் எதிர்பார்க்கிறேன் தோழர்களே).

இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும் பல மா-லெ அமைப்புகள் தங்களை புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொண்டே எதிர்புரட்சிக்கு வித்திடும் போக்கை கணக்கில் கொண்டே எழுதுகிறேன்…

இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய- நிலவுடமை கலாச்சாரமாகும். இன்றைய நிலையில் இருவேறு ஏகாதிபத்திய கலாச்சாரம் இந்திய மக்களை ஆட்டிப் படைக்கிறது. ஒன்று அமெரிக்கா மற்றொன்று ரஸ்ய ஏகாதிபத்தியம்.

முதலில் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தம் கலாச்சாரத்தை எப்படி பரப்புகின்றது என்று பார்ப்போம். (1) தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது. (2)வரைமுறையற்ற ஆபாசத்தை பர்ப்புகிறது. (3)விரக்தியை தூண்டும் நடவடிக்கைகள். (4) உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது. (5)அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது. (6) மேட்டிமைதனத்தை பரப்புதல். (7)புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனின்யத்தைச் சிதைத்தல்.

மற்றொரு புரம் ரஸ்ய ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனின்யத்தை திரித்து, இங்குள்ள பண்டைய இந்திய இதிகாசங்களுடன் இன்றைய அறிவியலையும், தொழிற் நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன) மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக உள்ளது. அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்; புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியம் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது, அதனை எதிர் கொள்ள திறன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்க்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை…. புரட்சிகர அமைப்புகள் இதே சமூகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர் அவர்கள் மார்க்சியம் பயின்றிருந்தாலும் அவர்களின் சிந்தனை போக்கு கணக்கில் கொள்ள வேண்டியதன்றோ?

(இடதுசாரிகள் சிந்திக்க வேண்டியவையில் இவையும் ஒன்று)… தொடரும்- சிபி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *