“28 ஜீலை தியாகிகள் தினம்”
“28 ஜீலை தியாகிகள் தினம்”

“28 ஜீலை தியாகிகள் தினம்”

“28 ஜீலை தியாகிகள் தினம்” இந்தியாவில் பொதுவுடமை படைக்க தன் இன்னுயிரை நாட்டுக்காக ஈந்த தோழர்களை நினைவு கொள்வதற்க்காக இன்நாளை தெரிவு செய்த வரலாறு அறிதல் அவசியம் அன்றோ?

இமயமலையின் அடிவாரத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களில், 1967 ஆம் ஆண்டில் விவசாயிகள் ஆயுதபோராட்டத்தை தொடங்கினர், நகசல்பாரி பகுதியில் வெடித்தெழுந்த விவசாயிகளின் கிளர்ச்சி பாராளுமன்ற பாதையை நிரகரித்தும் ஆயுத போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைபற்றவும் வழிகாட்டியது.

அமிர்தசரஸில் ஏபரல் 1958-ல் நடைபெற்ற சி.பி.அய்யின் மாநாடு,”கேரளா வழிகாட்டுகிறது என்ற சி.பி.அய்யின் வழியில் சி.பி.எம்மும் பாராளுமன்ற சாக்கடையில் புரட்சிகர வழிக்கு முரணாக உள்ள அமைதியான சரணாகதி பாதையில் வர்க்க கூட்டுக்கும், வர்க்க சரணாகதிக்கும் இட்டு சென்றது. தொழிலாளிகள், விவசாயிகள், பிற உழைக்கும் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைபற்றுவார்களா? அல்லது வாக்குபெட்டி மூலமாக அதிகாரத்தைக் கைபற்றுவார்களா? என்பதுதான் மார்க்சிய லெனின்யத்திற்க்கும், வலது சந்தர்ப்பவாததிற்க்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருந்தது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் அனுபவம் தெளிவாக காட்டுவதைப் போல கேரளாவின் பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக அரசாங்கங்கள் மட்டுமே மாற்றபட முடியும், ஆனால் அனைத்துவகையான அநீதி, சுரண்டல்,ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு ஆணி வேராக உள்ள தற்ப்போதைய பொருளாதார, அரசியல் அமைப்பை மாற்றமுடியாது. வன்முறை புரட்சியின் மூலம் மட்டுமே தற்போதுள்ள ஆளும் வர்க்கமும் அவர்களுடை அரசும் தூக்கியெறியப்படும் ஒரு புதிய பொருளாதார, அரசியல் அமைப்பு உருவாக்க முடியும் எங்கின்ற கருத்தை மா-லெ வாதிகள் உறைப்பது போல், “வன்முறைதான் புதிய சமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின்  மருத்துவச்சியாக உள்ளது,” என்றார் மார்க்ஸ்.

இந்திய கம்யூனிச இயகத்தின் நீண்டகால வரலாற்றில் முதன்முறையாக மக்கள் ஜனநாயகத்தையும், சோசலியத்தையும் அடைவதற்க்கான ஒரே பாதை மா-லெ பாதைதான் என்பதை நக்சல்பாரி நிரூபித்தது. இதற்க்கு முன்பாக நடத்தபட்ட தெலுங்கான போராட்டமானது இந்திய அரசாங்கத்திற்க்கு எதிரான போராட்டமாக அமையவில்லை. புரட்சிகர வன்முறையை பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே நிலவுகின்ற அரசியல், பொருளாதார அமைப்பை ஒடுக்கபட்ட வர்க்கங்களால் தூக்கியெறிய முடியும் என்றும், அப்போதுதான் மேம்பட்ட இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் நக்சல்பாரி  துணிவுடன் அறிவித்தது. மோசடியான, போலியான பாராளுமன்ற பாதையால் ஈர்க்கப்பட்டிருந்த இரு கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் தலைமைகளையும் நக்சல்பாரி அம்பலப்படுத்தியது. இந்தப்பாதை(CPI,CPM) வர்க்க போராட்டத்தின் உயரிய வடிவமான புரட்சிகரப் பாதையிலிருந்து மக்களை திசை மாற்றுகிறது, சுரண்டலும், ஒடுக்கு முறையும் நிறைந்துள்ள அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்க்கு பதிலாகக் கேரளாவின் பாதை அதனை தொடரவே வழிவகுக்கின்றது. புரட்சிகர பாதை என்பது மிருதுவான, நேரான பாதையல்ல, மாறாக, வளைவுகளும், சுளிவுகளும், மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த கரடுமுரடான பாதை. இப்பாதையானது எதிர்காலத் தலைமுறைகள் பொருளியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் செழுமையான வாழ்க்கை வாழ்வதற்க்காகவும், சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வை வாழ்வதற்க்காகவும் நிகழ்காலத்தில் இன்றியமையாததாக உள்ள இடர்பாடுகளைக் கொண்ட நீண்ட பாதையாகவும், அவ்வப்போது தோல்விகளைச் சந்திக்கக் கூடிய பாதையாகவும், மாபெரும் தியாகங்களையும் கோருகின்ற பாதையாக உள்ளது. நக்சல்பாரிதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் மீது ஆதிக்கம் செழுத்தி அதன் ஆற்றலை இழக்கச் செய்திருந்த சந்தர்ப்பவாதத்தின் நீண்டகாலப் பிடியை உடைத்தெறிந்து, அதனை விடுவித்தது.

சி.பி.ஐ, சி.பி.எம் இரண்டு குழுக்களும் மார்க்சிய-லெனினியத்தை நிராகரித்து, குருசேவ் மற்றும் அவரை தொடர்ந்து வந்தவர்களால் முன்வைக்கபட்ட “புதிய திசையமைவு”, “புதிய கருத்தாக்கங்கள்” போன்ற திரிப்புவாதக் கண்ணோட்டத்தால் அக்கட்சி வழி நடத்தபட்டபோது, நக்சல்பாரி மா-லெ-மா சிந்தனையை உயர்த்திபிடித்து தெள்ளதெளிவாக முழங்கியது, அது பாராளுமன்ற பாதையை நிராகரித்து, மக்கள் ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் நிறுவுவதற்காகப் புரட்சிகரப் பாதையைக் கடைப்பிடிப்போவதாக உரக்க அறிவித்தது.

1915 ஆம் ஆண்டில் லெனின் கூறினார், “ புரட்சிகர அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கப்பட வேண்டும், அது புதிய வரலாற்று சூழலின், பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடவடிக்கைச் சகாப்தத்தின் கட்டாயமாகும். ஆனால் புரட்சிகர ஆற்றலை நசுக்குபவர்களான பழைய தலைவர்களையும், பழைய கட்சியின் தலைமையையும் அழிப்பதன் மூலமாக மட்டுமே அது தொடங்க பட முடியும்” என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *