1968-ல் மார்ட்டின் லூதர் கிங் படுகொலைக்கு பின் இனக் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் அமெரிக்கா

By Mathivanan Maran| Updated: Tuesday, June 2, 2020, 0:04 [IST]

நியூயார்க்: 1968-ம் ஆண்டு மகத்தான கறுப்பர் இன புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங் படுகொலைக்குப் பின்னர் மிகப் பெரும் இன அடிப்படையிலான கொந்தளிப்பை அமெரிக்கா எதிர்கொண்டிருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

வெடித்தது மக்கள் போராட்டம்… சிவில் வார் அச்சத்தில் அமெரிக்கா

அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (ஜார்ஜ் பிளாய்டு, ஜார்ஜ் பிளைய்டு, ஜார்ஜ் ஃப்ளாய்டு) போலீசாரின் காவலில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு எதிராகத்தான் அமெரிக்காவில் 6 நாட்களாக போராட்டம் பற்றி எரிகிறது.

அவனை கொன்றுவிட்டனர்.. டிரம்ப் என்னை பேச கூட விடவில்லை.. ஜார்ஜ் மரணம் பற்றி சகோதரர் பகீர் பேட்டி!

போர்க்களமான நகரங்கள்

போர்க்களமான நகரங்கள்

அமெரிக்காவின் சுமார் 75 நகரங்களில் இந்த போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. முதன்மை நகரங்களான வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்டவை பலவும் போர்க்களங்களாக உருமாறி நிற்கின்றன. எங்கெங்கு பார்த்தாலும் கடைகள் சூறை, போலீஸ் ஒடுக்குமுறைகள்.. இப்போராட்டங்களுக்கு வெள்ளை இனமக்களும் இப்போது ஆதரவு தருகின்றனர்.

எரிந்த வாஷிங்டன்

எரிந்த வாஷிங்டன்

ஒருபக்கம் போராட்டக்காரர்களின் ஆவேசம்.. மறுபக்கம் போலீசாரின் தடுப்பு நடவடிக்கைகள்.. போராட்டக்காரர்களை ஒடுக்க கண்ணீர்புகை குண்டு வீச்சுகள், பெப்பர் குண்டு வீச்சுகள்.. ஆனாலும் எந்த ஒரு பயனும் இல்லை.. உக்கிரமான போராட்டங்கள் தொடருகின்றன. வரலாறு காணாத வகையில் வாஷிங்டனில் வன்முறை வெடித்து தீக்கிரை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

1968க்குப் பின்..

1968க்குப் பின்..

1968-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங், வெள்ளை இன பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவருக்கு வாக்குரிமை உள்ளிட்ட மனித உரிமைகளை பெற்றுத் தந்த மகத்தான மனிதர்; ஒடுக்குண்ட மக்களுக்கு அஹிம்சை ஒரு மாபெரும் ஆயுதம் என்பதில் நம்பிக்கை கொண்ட மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்ட போது கறுப்பர் இன மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தியதால் அமெரிக்கா பற்றி எரிந்தது. அதேபோன்ற ஒரு நிலைதான் தற்போது இருக்கிறது என்கின்றனர் அங்கிருக்கும் மூத்த பத்திரிகையாளர்கள்.

ஐரோப்பாவுக்கும் பரவுகிறது

ஐரோப்பாவுக்கும் பரவுகிறது

வன்முறைகளில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சுமார் 5,000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் கூடுதல் படையினர் வாஷிங்டன் நகரில் குவிக்கப்பட்டும் உள்ளனர். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் பதுங்கி இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இந்த போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி வருகிறது.


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *