முதலாளித்துவ ஜனநாயகமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும்
முதலாளித்துவ ஜனநாயகமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும்

முதலாளித்துவ ஜனநாயகமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும்

அன்மையில் தோழர் ஒருவர் லிபரேசன் “தீப்பொறி” இதழில் எழுதியுள்ளதன் அடிப்படையில் கேள்வி எழுப்பினர் அதன் பிறகுதான் அந்த பத்திரிக்கை வாசித்த பின்னர்தான் புரிந்தது அவை பேசுவதே மார்க்சிய லெனினியமல்ல அவை முதலாளித்துவ 2 அகில காவுட்ஸ்கிவாதம் என்பது ஆகவே அவர்களின் ஜனநாயகம் காப்பதன் நோக்கமென்பதே முதலாளித்துவ பாராளுமன்றத்தை காக்கும் செயல்தான் என்பதனை நமது ஆசான்களின் எழுத்து மூலமறிந்தேன் அதனை பற்றியதே இதப் பதிவு.

மாலெ தீபொறி இதழ்

முதலாளித்துவ ஜனநாயகமும் என்றால் என்ன முதலில் பார்ப்போம்.

முதலாளித்துவத்தின் ஜனநாயகம் என்பது ஆளும் முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமே. சுரண்டல் தன்மையுள்ள, அடிமைப்படுத்தும் முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறும் எல்லாவிதமான சீர்திருத்தங்களும் வெறும் ஒட்டு வேலைகள்தான் – கிளாரா ஜெட்கின், (5 ஜூலை 1857 – 20 ஜூன் 1933) .

மக்களாட்சி அல்லது ஜனநாயகம் (Democracy) என்பது “மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்” என முதலாளித்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறினாலும் ; சிறுபான்மையிலான ஆளும் வர்க்கம் (முதலாளி)  பெரும்பானமையிலான உழைக்கும் ஏழை எளிய மக்கள் மீது நிறுவும் ஆட்சியதிகாரம் எப்படி மக்களாட்சி ஆகிவிடும்?.

ஆக

நமது காலத்தின் அபத்தமும் ஆபத்தும் நிறைந்த அடையாள அரசியல் போன்ற கலைப்பு வாதங்களுக்கு எதிரான நிரந்தர வழிகாட்டியாக இருப்பது புரட்சிகர மார்க்சியத் தத்துவத்தின் ஸ்தாபன வடிவமான “போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறாகும்”. ஏனெனில் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியானது பாட்டாளிகளை அணிதிரட்டி பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்திக் காட்டிய முதல் வரலாற்று சாட்சியாக இருக்கின்றது. அதிலிருந்தே விவாதத்தை ஆரம்பிபோம் தோழர்களே.

காரல் மார்க்ஸ் காலம் தொடங்கி அவரது இயக்கவியல் தத்துவத்திற்கு எதிரான இயக்கமறுப்பியல் தத்துவத்தின் பல்வேறு வகையான போக்குகள் இன்றுவரை உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. இதில் தற்போதைய முக்கியத்துவம் என்னவெனில், இந்த இயக்கமறுப்பியல் கருத்துக்கள் மார்க்சியவாதிகள் என்ற போர்வையில் உள்ளவர்களால், மார்க்சிய தோரணையில் முன்வைக்கப்படுவதாகும். இவ்வகையில் தற்போது நம்மிடையே பரவலான புழுக்கத்தில் இருப்பது “பண்பாட்டு மார்க்சியம்” (Cultural Marxism) என்கிற போக்காகும். இப்பண்பாட்டு மார்க்சியம் என்கிற போக்கு பின்நவீனத்துவம் எனப்படுகிற நவீன முதலாளித்துவ தத்துவத்தின் ஒரு பிரிவாக இருந்து செயல்படுகிறது.

நேரடியான பின் நவீனத்துவ வாதங்கள் தற்போது நீர்த்துப் போன நிலையை அடைந்து வருவதால், அது கணந்தோரும், இடந்தோரும் தன்னை உருமாற்றிக் கொண்டே செல்கிறது. எனவே, அதன் தற்போதைய உருவம், அரசியல் அரங்கில் “அடையாள அரசியல்” (Identity Politics) என்பதாக இருக்கிறது.

இந்த மார்க்சிய விரோதிகள் விரிக்கும் வலையில்  மர்க்சியவாதிகளும் ஏன் இன்று இடதுசாரி கட்சிகளே சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை பேசவே ஒரு முயற்சி தோழர்களே.

ஜனநாயகம் என்பது பொதுவான ஒன்றாக இருக்கவே முடியாது ஏனென்றால் நாம் வாழும் வர்க்க சமூகத்தில் உள்ள வர்க்கத்தின் நலனிலிருந்தே எல்லாம் தீர்மானிக்கப் படும் பொழுது, பொதுவாக ஜனநாயகம் பற்றி பேசுவது எந்த வர்க்கத்திற்கானது  என்று அவசியம் ஒரு மார்சியவாதி அறிந்திருப்பான்.
வர்க்கங்கள் நிலவுகின்ற வரையில் தூய ஜனநாயகம் பற்றி பேச முடியாது. வர்க்க ஜனநாயகம் பற்றி மட்டுமே பேச முடியும்.
தூய ஜனநாயகம் என்பது உழைக்கும் ஏழை எளிய மக்களை ஏய்க்கும் மிதவாதிகள் பயன்படுத்தும் ஒரு பொய்யான தொடராகும்.

மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்த போதிலும்,  அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாயும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கத்தையும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாயப்பொறியாயும் மோசடியாகவும்  நிலவும். ஒவ்வொரு முதலாளித்துவ ஜனநாயகம் செல்வந்தருக்குகந்த ஜனநாயகமாகும்.

உண்மையில் அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஒரு இயந்திரமே தவிர வேறு ஏதுமல்ல இது முடியரசில் போலவே சற்றும் குறையாத அளவில் ஜனநாயகக் குடியரசிலும் கண்கூடு.(மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டு போர் என்ற நூலுக்கு  எங்கெல்ஸ் முகவுரையில்).

நவீன அரசுகளின் அடிப்படையில் நியதிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றின் ஆட்சி நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கூட்டம் சேரும் சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம், சட்டத்தின்முன் எல்லா குடிமக்களின் சமத்துவம் – என்னதான் பேசினாலும் சுரண்டப்படும் வர்க்கம் தனது அடிமைத்தனத்துக்கு எதிராக நடக்க முயலுமானால் அவர்களுக்கு எதிராக வன்முறையாக அரசு எந்திரம் செயல்படும். ஆக முதலாளித்துவ  ஜனநாயகம் என்பது சிறுபான்மையாக முதலாளி நலன் காப்பதே. இங்கே எல்லோருக்கும் சமமானது அல்ல.

ஜனநாயக குடியரசான அமெரிக்காவின் உலகெங்கும் கொலை களமானது கணக்கில் கொண்டாலே அவை யாருக்கான ஜனநாயகம் என்று புரிந்து கொள்ள முடியும்

ஜனநாயகத்தூணான முதலாளித்துவ நாடாளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம்.ஜனநாயகம் எவ்வளவு அதிகம் உயர்வாக வளர்ச்சி அடைகிறது அவ்வளவு அதிக அளவில் முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் பங்கு மார்க்கெட் மற்றும் வங்கி அதிபர்களால் ஆட்படுத்தப்படுகின்றன. ஆக முதலாளிகளால் வழங்கப்படும் ஜனநாயகம் ஆனது ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கானவை அல்ல .

இந்த முரண்பாட்டை முதலாளித்துவத்தின் அழுகல் தன்மையை பொய்மையை ஏமாற்று தனத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். 

தூய ஜனநாயகம் அதிகமாக வளர வளர இவை மேலும் அதிக தந்திரமும் திறனும் உடையதாககின்றது. மக்களை ஆட்சி நிர்வாகப் பணிகளில் இருந்தும் பத்திரிகை சுதந்திரத்திலும் இருந்தும் கூட்டம் சேரும் சுதந்திரத்தில் இருந்தும் விரட்டு வெளியேற்றி விடுகின்றனர். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் இது முக்கியமான பிரச்சினைகளை என்றுமே முடிவு செய்வதில்லை. இவை பங்கு மார்க்கெட் மற்றும் வங்கிகளால் முடிவு செய்யப்படுகின்றன. முதலாளித்துவ நாடாளுமன்றம் ஏழை எளிய மக்களுக்கு அந்நியமாக இருப்பதும் பாட்டாளிகளை முதலாளிகள் ஒடுக்குவதற்கான கருவியாக பகைமை வர்க்கத்தின் சுரண்டும் சிறுபான்மையினரின்  நிறுவனமாக இருப்பதை உழைக்கும் ஏழை எளிய மக்கள் நன்றாக அறிகின்றார்கள் உணர்கிறார்கள் காண்கிறார்கள் அனுப்பப்படுகிறார்கள்…

பாட்டாளி வர்க்க ஜனநாயகம் எந்த முதலாளித்து ஜனநாயகத்தை விட பன்மடங்கு அதிக ஜனநாயகமானது இவை பெரும்பான்மையான மக்களின் ஜனநாயகம் ஆகின்றது.

உழைக்கும் மற்றும் ஏழை எளிய சுரண்டப்படும் மக்கள் அனைவரையும் அவர்களின் முன்னணி படையான பாட்டாளி வர்க்கத்தின் கீழ் ஒன்று திரட்டுகிறது. பழைய முதலாளித்துவ பொறியமைவு அதிகார வர்க்கம் செல்வம் முதலாளித்துவ கல்வி சமுதாய உறவுகள் மற்றும் தனி உடமைகள் அனைத்தையும் அனைத்து மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கே உழைக்கும் ஏழை எளிய பாட்டாளி வர்க்கம்  பெரும்பான்மையினர் அவர்களின் பத்திரிகை முதல் எல்லா சுதந்திரமும் இன்று வரை ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் கோணத்தில் இருந்து பிரச்சனை முன்வைக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்க ஜனநாயகமானது ஏழை எளிய உழைக்கும் மக்களின் ஜனநாயகமாக இருக்கிறது.

இங்குள்ள ஜனநாயகமானது உழைக்கும் ஏழை எளிய பெரும்பான்மையான மக்களின் ஜனநாயமாகும். 

ஆக பொதுவாக வர்க்கங்கள் பற்றி பேசாமல் வெறும் ஜனநாயகம் என்பது வர்க்கத்தை மறந்து விட்டு வர்கத்துக்கு அப்பால் ஜனநாயகத்தை தூக்கி பிடிப்பதாகும் .

எல்லா குடிமக்களுக்கும் சமத்துவம் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை.

சுரண்டப்படுபவருக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் இருக்க முடியுமா?.

சுரண்டலாளர்கள் மக்கள் தொகையில் வெறும் சிறு பகுதியினரே.

சுரண்டப்படுவோர் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர்.

சர்வாதிகாரம் என்றால் என்ன?

சர்வாதிகாரம் என்பது எல்லையற்ற அதிகாரம் என்பதாகும்.அது சட்டத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை வன்முறையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் பெரும்பான்மையோர் மீது நடத்துகின்ற சர்வாதிகராம். குறைவான எண்ணிக்கையில் உள்ள போலீஸ்கள் பெருந் திரளான மக்கள் மீது நடத்தும் சர்வாதிகாரம்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன?.

பாரிஸ் கம்யூன் படிப்பினைகளிலிருந்து மார்க்ஸ் எங்கெல்ஸ்  கருத்துக்கள் கீழே,  தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை தமது புரட்சிகர சர்வாதிகாரத்தினால் மாற்றீடு செய்யும் போது….. முதலாளி வர்க்கத்தின் எதிர்ப்பை உடைப்பதற்காக ….. தொழிலாளர்கள் அரசுடன் ஒரு புரட்சிகரமான மற்றும் இடைமாற்றமான  வடிவத்தை இணைவிக்கிறார்கள் ….. 

மேலும் எங்கெல்ஸ் கூறுகிறார்,… தமது விரோதிகளை பலப் பிரயோகம் மூலம் அடக்கி வைக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தில்,  புரட்சியில் பயன்படுத்தப்படும் ஓர் இடைக்கால நிறுவனமே அரசு என்பதால் …. பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் அரசு தேவைப்படும் வரையில் அதற்கு அரசு தேவைப்படுகிறது சுதந்திரத்தின் நலங்களுக்காக அல்ல மாறாக அதன் விரோதிகளை அடக்கி வைப்பதன் பொருட்டே ஆகும். …

மேலும் மார்க்ஸ் எங்கெல்ஸே விளக்கம் தருகிறார்கள்.

= முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பை உடைப்பதற்காக 

=பிற்போக்காளர்களுக்கு அச்சம் ஊட்டுவதற்காக

=முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மக்களின் அதிகார பலத்தை கட்டி காப்பதற்காக.

=பாட்டாளி வர்க்கம் பல பிரயோகம் மூலம் தனது விரோதிகளை அடக்கி வைப்பதற்காக. 

தெளிவாக புரிந்து கொள்வதற்கு …

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தால் சுரண்டுப்படுவதற்கான சாத்திய கூறுகள் யாவும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் ஒழிய மெய்யான நடைமுறையில் உள்ள சமத்துவம் இருக்க முடியாது.

சுரண்டலாளர்களை ஒரே அடியில் அழித்துவிட முடியாது. எந்த ஒரு பெரிய நாட்டிலும் எல்லா நிலப்பிப்புகளையும் முதலாளிகளையும் ஒரே அடியில் உடைமை நீக்கம் செய்வது என்பது சாத்தியமல்ல . உடைமை நீக்கம் மட்டுமே ஒரு சட்டப்பூர்வ அல்லது அரசியல் நடவடிக்கை என்ற முறையில் இந்த விவகாரத்தை வெகு தொலைவுக்கு தீர்த்து விடாது. காரணம் நிலப்பிரப்புக்களையும் முதலாளிகளையும் உண்மையிலேயே  உயர்நிலையில் இருந்து அகற்ற வேண்டும்…. புரட்சிக்குப் பிறகு நீண்ட காலம் சுரண்டலாளர்கள் பல மாபெரும் நடைமுறை சாதகங்களை தவிர்க்க முடியாதபடி நீடித்து வைத்து இருப்பார்கள் : அவர்களிடம் பணம் மற்றும் பதவி அனுபவம் கல்வி அனுபவம் பல்வேறு மட்டங்களில் உள்ள தொடர்பு … ஆக ஏக காலத்தில் பல்வேறு நாடுகளில் புரட்சி நடந்து சுரண்டலாளர்களை ஒடுக்கினால் மட்டுமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பயனுள்ளதாக இருக்கும்…

இவை நமக்கு நமது மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழி தோழர்களே

மேலே கூறியது போல ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் வளர்ச்சி அடைந்து வருவதை கண்டு முதலாளித்துவ வர்க்கத்தினரும் தொழிலாளர் அமைப்புகளில் இருக்கும் அவர்களது கை ஆட்களும் சுரண்டலாலர்களின் ஆதிக்கத்தை தாங்கி ஆதரிப்பதற்கான சித்தாந்த மற்றும் அரசியல் விவாதங்களை இடதுசாரி இயக்கங்களுகுள் மூர்க்கமான முயற்சிகள் செய்து வருகின்றனர்.

பொதுவான ஜனநாயகத்தை ஆதரிப்பதும் பொதுவாக சர்வாதிகாரத்தை பற்றி பேசுவதும் வர்க்க சார்பில்லாத வர்க்கத்துக்கு மேலானதாக சோசலிசத்தின் ஆதாரத் தத்துவத்தை கேலி வர்ணனை செய்வதும் இவர்களின் போக்காக உள்ளது.

முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறிச் செல்வதும் முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளிவர்க்கம் விடுதலையடைவதும் மெதுவாக ஏற்படும் மாறுதல்கள் மூலமாக – சீர்திருத்தங்கள் மூலமாக சாத்தியமில்லை

அதற்கு மாறாக முதலாளித்துவ முறையில் குணாம்ச ரீதியான மாறுதலை உண்டாக்குவதன் வழியாகத்தான், புரட்சியின் வழியாகத்தான் அவை சாத்தியமாகும். கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் புரட்சியாளனாக இருந்து தீரவேண்டும், சிர்திருத்தவாதியாக அல்ல. மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதும், முதலாளித்துவத்தின் சொத்துக்களை சமூக சொத்தாக மாற்றுவதும், சமாதான முறைகளினால் சாதிக்க முடியாது. பாட்டாளிவர்க்க புரட்சியின் மூலம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதனால் மட்டும்தான் இவற்றை சாதிக்க முடியும்.

முதலாளித்துவ தத்துவம், அல்லது சோசலிச தத்துவம் இவ்விரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இவ்விரண்டிற்கு நடுவே வேறு வழி கிடையாது. ஆகவே எந்த விதத்திலாவது சோசலிச தத்துவத்தை குறைத்து மதிப்பிட்டாலும், அதிலிருந்து ஒரு மாத்திரை அளவு விலகி சென்றாலும் முதலாளித்துவ தத்துவத்தை பலப்படுத்துவது என்றே அர்த்தம்.

தொழிலாளி வர்க்கம் அரைகுறை அற்பசொற்ப கோரிக்கைகளுக்காக போராடவில்லை, சீர்த்திருத்தங்களுக்காக போராடவில்லை, ஜார் ஆட்சியில் இருந்து சகல ஜனங்களையும் விடுதலை செய்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறது என்று போல்ஷ்விக்குகளால் நடத்தப்பட்ட புரட்சிகரமான வேலை நிறுத்த இயக்கமும், ஆர்பாட்டங்களும் காட்டின. ஒரு புதிய புரட்சியை நோக்கி தேசம் முன்னேறிக் கொண்டிருந்தது.

ஆனால் இரண்டாம் அகிலத் தலைவர்கள் உள்நாட்டில் தொழிலாளருக்கும், முதலாளிகளுக்கு மிடையே வர்க்கப் போராட்டத்திற்கு பதில் ‘வர்க்க சமாதானம்’ நிலவ வேண்டுமென்றும் வெளிநாட்டில், மற்ற தேசங்களுடன் யுத்தம் நடக்க வேண்டும் என்றும் இந்த பேர்வழிகள் பிரச்சாரம் செய்தனர். உண்மையான பொறுப்பாளி யார் என்பதை மறைத்தனர், மக்களை ஏமாற்றுவதற்கு இரண்டாவது அகிலத்தை சேர்ந்த சந்தர்ப்பவாதிகள் முதலாளிகளுக்கு உதவிபுரிந்தனர்.

(லெனின் தேர்வு நூல்கள் 9 பக்கம் 11 முதல் 51 இதன் சாரம்தான் இவை).

உலக மக்களின் விரோதிகளாக உள்ள  உலக முதலாளிகள் என்ற உண்மையை எடுத்துகாட்டி வலியுறுத்தி ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றி, ஒவ்வொருவரும் தத்தம் ஆயுதங்களை தத்தம் முதலாளிகளுக்கு எதிராக முதலாளிகளின் மார்பில் திருப்பவேண்டும். இதன் மூலம்தான் யுத்தத்தை முடிக்க முடியும் என்று விளக்கி கூறினர் போல்ஷ்விக்குகள்.யுத்தத்தை எதிர்த்து போல்ஷ்விக்கட்சியின் மத்திய குழு அறிக்கை வெளியிட்டது,  

இன்னும் பிறகு தோழர்களே

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *