கலை இலக்கியம் பற்றிய நமது அணுகுமுறை பற்றி தெரிந்து கொள்வோம் முதலில்.
கலைகள் மனிதனால் படைக்கப்படுவதே, மேலும் கலையை நுகர்தல் என்பது தனிப்பட்ட உணர்வு செயலாகும்.
ஒவ்வொரு நபரும் அக்குறிப்பிட்ட கலையைப் பற்றிய அறிவு அனுபவத்தை முன்வைத்து பேசுவது அவரின் ரசனை மட்டம் அளவில் தன்மையும் வேறுபட்டு இருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
திரைப்படத்தை உதாரணமாக எடுத்து கொண்டால் தியேட்டரில் உள்ள ஒவ்வொரு நபரும் ரசிக்கும் தன்மையில் வேறுபட்டு இருப்பர் இதில் சந்தேகமே இல்லை.
சாதாரண மக்கள் விசில் அடித்து தனது விருப்பத்தை தெறிவிப்பதும் அதே இடத்தில் நன்றாக படித்த ஒருவர் தன்னுடைய ரசனை வெளிப்படுத்தும் விதம் வேறுவேறாக இருக்கும்.
சரி விசியத்திற்கு வருவோம்….
ஜெய்பீம் படத்தை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது நாம் அதனை பற்றி பேச வேண்டிய தேவை உள்ளது. அதனால் ஒரு மார்க்சியவாதி படத்தை எப்படி அணுகுக வேண்டும் என்னும் சிறு முயற்ச்சியே இப்பதிவு
விறுப்பான காட்சிகள் மக்கள் தினம் அனுபவிக்கும் இன்னல்களோடு தன் மக்களில் ஒரு பகுதியினர் அனுபவிக்கும் கொடுமைகளை நேராக காட்டும் பொழுது கொப்பளிக்கும் கோவம், கையறு நிலையில் உள்ள மக்கள் இங்கு காலம் காலமாக அவர்களுக்கான ரட்சிக்கும் கதாநாயகர் தேடிக் கொண்டிருக்கும் அதே கலை வடிவம் இறுதியில் இந்த அமைப்புகுள் ஒரு தீர்வு ஆம் அவர்கள் வாழ வழி சொல்லி அந்த கொலைக் காரர்களுக்கு தண்டனை இவைதான் படம்.
ஆனால் படத்திற்க்கு வெளியே நடந்தவையை சற்று சீர் தூக்கி பார்ப்போம்.
ஜெய் பீம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக சொல்கிறது அதாவது கம்மாபுரம்(முதனை)இருளர் சமூகத்தை சேர்ந்த ராசாக்கண்ணு என்ற பழங்குடி ஒருவரை போலிஸ் அடித்து கொன்றதாக ஆனால் கொலையுண்டவர் இருளர் இல்லையாம் குறவராம்.அதாவது இருளர்களாலேயே கேவலமாக கருதப்படும் குறவர்கள் இங்கேயே கதை இடிக்கிறது. மேலும் வழக்கில் கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவிற்காக போராடியவர் கோவிந்தன் என்கின்ற கம்யூனிஸ்ட் .
இவருடைய 26 வயதில் ஆரம்பித்து 39 வயது வரை திருமணம் கூட செயதுகொள்ளாமல் போராடியது இவர்தான்.

இவர் சார்ந்த கட்சியின் வழக்கறிஞராக இருந்ததால் உயர்நீதி மன்றத்தில் HCP ஆட்கொணர்வு நீதிப் பேராணையில் மட்டும் ஆஜராகிவிட்டு, (அதிலும் 5000 ரூபாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த வழக்கறிஞருக்கு பீஸ்-ம் வழங்கப்பட்டது)
அந்த வழக்கறிஞரை ஹீரோவாக சித்தரித்ததே தவறு. படத்தில் காட்டியது போல அந்த வழக்கு முழுவதும் உயர்நீதிமன்றத்தில் HCP ல் நடக்கவில்லை. CRIMINAL PROCEEDINGS ல் பல வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ளார்கள். அத்தனை பேரையும் நியமித்து போராடியது கோவிந்தன் சார்ந்த கட்சியும் கோவிந்தனும்தான் !
கொலை செய்த காவல்துறை அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி , அதை குரு என்று பெயர் மாற்றியது ஏன் ?!
அப்படி என்னும் பொழுது சினிமாவிற்க்காக எடுக்கப் பட்ட உண்மை சம்பவம் என்பது கேள்விகுறியாகும் பொழுது எதை சொல்ல வருகிறது படம் என்பதனை தொடர்ந்து பார்ப்போம்.
அடையாள அரசியலில் சிக்குண்டு கிடக்கும் சமூகத்திற்க்கு கடந்த கால வரலாற்றை சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது தோழர்கள்.
பி.சீனிவாச ராவ் தொடங்கி இன்று வரை இந்திய கம்யூனிச இயக்கத்தில் சாதி ஒடுக்கு முறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்கும் களம் கண்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே என்றால் மிகையாகாது.
இந்த சம்பவமும் அதை சார்ந்த இயக்கத்தையே சாரும் இதில் சாதி சாயங்கள் பூசும் வேலை ஏன் எதற்க்கு என்று ஆழமாக விவாதிக்க தேவையில்லை என்னும் அதே நேரத்தில் படத்தின் பெயரான “ஜெய்பீம்” பற்றி தெரிந்துக் கொள்வோம்.
போராடியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்னும் பொழுது இந்த பெயர் தேவை ஏன்? (ஏல்லாம் மார்கெட்டிங்க் எங்கின்றார்களே அவைதானா?)
சரி ஜெய்பீம் என்ற சொல்லாடல் அம்பேத்கார் பயன்படுத்தினார் என்று இன்று தூக்கிப் பிடிக்கப் படுகிறது, அப்படியெனில் ஜெய்பீம் புரட்சியின் முழக்கமா?
1818 ல் பீமா கொரேகான் கிராமத்தில் கம்பெனி படைகளுக்கும் பேஷ்வாக்களுக்கும் நடந்த யுத்தத்தில் பேஷ்வா படை முறியடிக்கப்பட்டது. அதனை முறியடித்தவர்கள் கம்பெனியின் மகர் படையணியினர் என்பதால் அம்பேத்கர் உள்ளிட்டோர் அதனை பேஷ்வாக்களின் மீதான மகர்களின் வெற்றியாகவே பார்த்தனர்.
ஆனால் மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

பீமா கொரேகான் போரில் பேஷ்வாக்களை தோற்கடித்த மகர் படையணியை அம்பேத்கர் போற்றுகிறார். ஆனால் காரல் மார்க்ஸ் 1857 இல் பேஷ்வாக்களது போராட்டத்தை வரவேற்று பல கட்டுரைகளை வரைகிறார். தனிப்புத்தகமாகவே வந்துள்ளது (இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 என்ற நூல்). ஆனாலும் அந்தப் போரின் சுதேசிப் படைப்பிரிவில் பார்ப்பனர்கள் துவங்கி தலித்துகள் வரை கலந்தே இருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் மார்க்ஸ்.
அம்பேத்கர் மார்க்சோடு முரண்படும் இடம் இது. சமூக விடுதலையா? அரசியல் விடுதலையா?
இங்கேயும் அதுதான் நடைபெற்றது. ஆங்கிலேயர் இராணுவத்தில் எல்லா சாதியினரும் விரவித்தான் இருந்தனர். ஒரு சாதியின் வெற்றி என பீமா கொரேகானை தூக்கி நிறுத்தி இருப்பதும் ஆண்ட பரம்பரை பெருமை பேசும் சாதி வாதிகளுகும் இதற்கும் என்ன வேறுபாடு?.
தோழரளே இன்று நம்பர் 7 சமூகத்தில் கடை நிலையில் இருப்போரும் ஆம் ஒடுகப் பட்ட மக்களும் எல்லோரும் சரிநிகர் சமமாக வாழ முடியும் என்பதனை 1917ல் ரஸ்சிய புரட்சி நடத்தி காட்டியது ஆகவே தோழர்களே இந்த ஒடுக்குமுறைக்கு காரணமான இதே சமூகத்தில் தீர்வு தேடுவதா அல்லது ஒடுக்குமுறையை தகர்தெறிந்து தமக்கான ஒரு சமூகத்தை படைப்பதா?