பெண் விடுதலை பற்றி
பெண் விடுதலை பற்றி

பெண் விடுதலை பற்றி

தவருன கருத்தியல்களில் அழுந்தியிருக்கும் சமுதாயம் விடிவுபெற இன்றைய கருத்து முதல் வாதம் சார்ந்த அக் கருத்தியல்கள் யாவும் உடைத்தெறியப்பட வேண்டும். அதற்குக் கலை, இலக்கியங்கள் பயன் பட வேண்டும். இன்றைய அரசு யந்திரத்தோடு ஒன்றிப் போகும் நிலையான கலை, இலக்கியங்கள் அரசின் சொத்துடைமையைப் பேணும் கருத்தியலாகவே அமையும்.

உண்மையும் அழகுணர்வும் பகைமையுள்ள எதிர்மறைப் பொருட் களாக முதலாளித்துவத்தில் இருப்பதைக் காணலாம். ஏனெனில் இன்றைய கலைஞர்கள் பொய்மையையே கலை, இலக்கியங்கள் மூலம் அழகுபடுத்த முயல்கின்றனர்.

ஒரு புறத்தில் பசி, பட்டினி, அடக்குமுறை ஆகிய துன்பங்கள்; உழைப்பவரின் உபரியை அபகரித்து அடக்கி ஒடுக்கும் கொடுமை. இவர்கள் பெரும்பான்மையினர்.

மறுபுறத்தில் உடல் உழைப்பிலேயே ஈடுபடாது சொகுசாக

வாழும் சிறுபான்மையினர்; மனித உழைப்பின் பெரும் பகுதியை

தமது இன்ப வாழ்விற்காகவும் பாதுகாப்பிற்காக பொலிஸ், ராணு வம், யுத்த தளபாடம் முதலிய வீண் விரயங்கள்.

மனிதகுல வளர்ச்சியின் மூன்று முக்கிய கட்டங்களுடன் பொதுவாகவும் மொத்தமாகவும் பொருந்துகின்ற மூன்று முக்கிய மண வடிவங்கள் உள்ளன,

காட்டுமிராண்டி நிலை -குழுமணம்
அநாகரிகநிலை -இணைமணம்,
நாகரிக நிலை -ஒருதார மணம்,

சட்டரீதியிலும் சமுதாய ரீதியிலும் பெண்களுக்கு கொடிய விளைவுகளை ஏற்படுத்த கூடிய அதே குற்றம் ஆண்களுக்கு பொருத்தமட்டில் கௌரமாக கருதப்படுகிறது,

அதிகமாக போனால் அவனுடைய ஒழுக்கத்திற்க்கு அது அற்பமான கறை அதை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான்.

செல்வம் பெருகிய போது அது ஒரு பக்கத்தில் குடும்பத்தில் பெண்ணை விட ஆணுக்கு முக்கிய அந்தஸ்தை கொடுத்தது, ஆகவே தாயுரிமை தூக்கி எறிய வேண்டியதாயிற்று,

ஒருதார மணமுறையில் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்துகிறது,

முதல் வர்க்க ஒடுக்குமுறை ஆண்பால் பெண்பாலை ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது.

ஒரு தார மணமுறை வரலாற்று ரீதியில் ஒரு மகத்தான முன்னேற்றமாகும்,

அதேசமயம் அது அடிமைமுறையுடனும் தனிச்சொத்துடனும் சேர்ந்தார் போலவே இன்றளவும் நீடிக்கிற ஒரு யுகத்தை துவக்கியது,

அதில் ஒரு குழுவின் துன்பத்தையும் ஒடுக்கபடுதலையும் ஆதாரமாக கொண்டு மற்றொரு குழு நல்வாழ்க்கையும் வளச்சியும் அடைகிறது, அது நாகரிக சமுதாயத்தின் உயிரணு வடிவமாகும்.

பொதுச்சொத்தை காட்டிலும் தனிச்சொத்து மேலோங்கிய பொழுது வாரிசுரிமையில் அக்கறை ஏற்பட்டதுடன் தந்தையுரிமையும் ஒரு தார மணமும் மேல் நிலைக்கு வந்துவிட்டன,

எனவே பெண்ணினம் அடிமைமுறையிலிருந்து
விடுதலை பெற பெண்ணினம் முழுவதையும் சமுக உற்பத்தியில் மீண்டும் புகுத்துவதுதான் பெண் விடுதலைக்குறிய முதல் நிபந்தனையாகும்

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக்கின்ற அழிவுக்கு பிறகு பால் உறவுகளை ஒழுங்குபடுத்துவதை பற்றி நாம் ஊகமாக சொல்ல கூடியது,

உற்பத்தி சாதனங்களை பொதுவுடமையாக்கும் பொழுது கூலியுழைப்பும் பாட்டாளி வர்க்கமும் மறைந்து விடுகின்றன,
பெண்கள் பணத்திற்காக தம்மை விற்க வேண்டிய அவசியமும் மறைந்து விடுகிறது, விபச்சாரமும் மறைத்து விடுகிறது. ஒருதாரமணம் நலிந்துபோவதற்க்கு பதிலாக முடிவில் ஆணுக்கும் சேர்த்து எதார்த்தமாகிறது,

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலிருந்து எங்கெல்ஸ்

“கம்யூனிசத்தின் மூலமாக மட்டுமே பெண்கள் மெய்யான விடுதலை பெறமுடியும் என்பது இந்த விரிவுரைகளில் நன்கு வலியுறுத்தப்பட வேண்டும் . மானுடர்கள் என்ற முறையிலும் சமுதாய உறுப்பினர்கள் என்ற முறையிலும் பெண்களுக்கு உள்ள நிலைக்கும் உற்பத்தி சாதனங்களில் தனியார் உடமைக்கும் நிலவும் துண்டிக்க முடியாத இணைப்பு பற்றிய பிரச்சினையை நீங்கள் தீர்க்கமாய் பகுத்து ஆராய வேண்டும் . பெண் விடுதலைக்கான முதலாளித்துவ இயக்கத்திலிருந்து நம்மைப் பிரித்திடும் தக்கதோர் எல்லைக்கோட்டை இது அளித்திடும் , மற்றும் இதன் மூலம் நாம் பெண்கள் பிரச்சினையை சமுதாய , தொழிலாளி வர்க்கப் பிரச்சினையின் ஒரு பகுதியாக கொண்டு பரிசீலிப்பதற்கான அடிப்படையையும் நிறுவிக்கொள்ளலாம். இப்பிரச்சனை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டதுடனும் புரட்சியுடனும் உறுதியாக இணைத்து பிணைக்கப் படுவதை இவ்வாறு இது சாத்தியமாகி விடும். பெண்களது கம்யூனிஸ்ட் இயக்கம் பொதுவான வெகுஜன இயக்கத்தின் ஒரு பகுதியாய் அமைந்த வெகுஜன இயக்கமாக நடந்தேற வேண்டும் . பாட்டாளி வர்க்கத்தாரின் இயக்கம் மட்டும் அல்லாது சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருவோர் அனைவரது , முதலாளித்துவத்துக்கு பலியானோர் எல்லோரது இயக்கத்தின் ஒரு பகுதியான வெகுஜன இயக்கமாய் இது இருத்தல் வேண்டும் . பாட்டாளி வர்க்கத்தினது வர்க்கப் போராட்டத்திலும் கம்யூனிச சமுதாயத்தை சமைப்பது என்னும் அதன் வரலாற்றுச் சிறப்புக்குரிய ஆக்கப் பணியிலும் பெண்களது இயக்கத்துக்கு உள்ள முக்கியத்துவம் இதில்தான் அடங்கியுள்ளது. புரட்சிகர பெண் குலத்து மாணிக்கங்கள் நமது கட்சியினுள் , கம்யூனிஸ்ட் அகிலத்தினுள் இருக்கிறார்கள் என பெருமிதம் கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு . ஆனால் இது மட்டும் போதாது, நகரையும் கிராமப்புறத்தையும் சேர்ந்த கோடானு கோடியான உழைப்பாளி பெண்களை நாம் நமது போராட்டத்திலும் இன்னும் முக்கியமாய் சமுதாயத்தின் கம்யூனிசப் புணரமைப்பிலும் அணிதிரள செய்தாக வேண்டும் .பெண்கள் இன்றி மெய்யான எந்த வெகுஜன இயக்கமும் இருக்க முடியாது.”

-லெனின் கிளாரா ஜெட்கினிடம், என் நினைவுகளில் லெனின் நூலிலிருந்து….

மார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது. வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோஷலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.

இன்று உலகமயமாதல் என்பதன் ஊடாக ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது. இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைகளை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அவற்றுக்கு எதிரான அமைப்பு ரீதியாகப் பெண்களை அணி திரட்டுவது கடினமான ஒரு பணியாகவே இருந்து வருகின்றது. பழமைவாதக் கருத்தியல் அமுக்கத்திலிருந்து பெண்களை விடுவிப்பது மிகப் பிரதானமான கடமையாகின்றது. அடுத்து இன்றுள்ள சமூகச் சூழலின் பன்முகத் தாக்கங்களிலிருந்தும் பெண்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை வாயிலாகவும் விடுபட வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *