“சமூகத்தைப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தை விளக்கிக் கூறுகிறபோது, வரலாற்றைப் படிப்பதற்கான ஒரு வழிகாட்டிதான் மார்க்சியமே ஒழிய, வரலாற்றுப் போக்கையே உருவாக்குவதற்கான ஒரு கருவி, மார்க்கம் அல்லஎன்பதை எடுத்த எடுப்பிலேயே கூறிவிட வேண்டும். வரலாற்று ரகசியங்களைப்படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடியமந்திரக்கோல் அல்ல மார்க்சியம். இந்த நாட்டில் அல்லது அந்த நாட்டில், இந்தஅல்லது இன்னொரு கட்டத்தில் நடக்கக் கூடிய வரலாற்றுப் போக்கைக் கணித்துகூறிவிட முடியும் என்று, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கூறிக் கொள்வதுஇல்லை.
சமூகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடிய பொது விதிகளை இதுபடிப்பதுடன், பொதுவாகக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைவழிகாட்டியாக உருவாக்குகிறது. அதை அமுலாக்குவது, பிரிட்டனிலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், முதலாளித்துவ நாடுகளிலும், சோஷலிசநாடுகளிலும், தொழில்மயமான நாடுகளிலும், வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும்நாடுகளிலும், மாறுபடலாம். ஏனெனில், அங்குள்ள குறிப்பிட்ட சூழ்நிலையும், நீண்ட முழுமையான வரலாற்றுப் போக்கும், இந்நாடுகளில், அல்லது ஒருவகையான குழு நாடுகளில் தனித்தனித் தன்மைகளில் வேறுபட்டிருக்கக்கூடும்.
வரலாற்றுப் பார்வையில் பொருள்முதல்வாதத்தின் பொருள் என்னவென்றால், சமூகத்தின் பொருளாதார வாழ்வை அங்கீகரிப்பதாகும், முதலில் பொருளாதாரஉற்பத்தியின் சமூகப் போக்கையும் அதாவது சமூக வாழ்க்கைக்குத் தேவையானஇன்னொரு ஆதார விஷயம் என்றல்லாமல், எல்லா சமூகத் தன்மைகளுக்கும்போக்குகளுக்கும் ஊடு இணைப்பாக உள்ள அடிப்படைப் பொருளாதாரமே என்றும், அதுதான் சமூகத்தின் ஆன்மிகப்பிரிவு உள்ளிட்ட இதர எல்லா சமூகவெளிப்பாடுகளுக்கும் இறுதியில் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறது என்றும்அங்கீகரிப்பதாகும்.”
(வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-வி.கெல்லி, எம்.கவல்ஸோன்- பக்கம்-37-38)
*ஃபிராங்பர்ட் பள்ளி
*கிராம்ஸ்கி
இவர்களின் இந்திய வடிவம் *தலித்திய,
*பெரியாரியம் மற்றும்
*ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகள் போன்ற கருத்துமுதல்வாத தத்துவத்தை முறியடிக்க ஒன்று சேர்வோம்!
தத்துவ போராட்டம் நடத்தாமலே இங்கு கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டது என்பதில் உண்மை உண்டா?
கம்யூனிஸ்ட் கட்சி,புரட்சிகர கட்சி பின்னடைவை சந்திப்பதற்கு காரணம் தத்துவ போராட்டம் நடத்தாததா?
ஆதிசங்கரனின் அத்வைதம் இந்தியப் புரட்சியை வழிநடத்திட தேவையா?
லெனின் ரஷ்யாவில் தத்துவ போராட்டத்தை நடத்தி முடித்துத் தான் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டினாரா?
மாவோ,சீனாவில் தத்துவ போராட்டத்தை
நடத்திய பிறகு தான் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டினாரா?
லெனின்,ஏறக்குறைய 1908-களில் தான் கலைப்புவாதத்தை முறியடிக்க தத்துவ போராட்டத்தை நடத்தினார்.”இயக்கவியல் பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை எழுதினார்.
அதன் பிறகு,
புரட்சிக்கு பிறகு தான் சில கட்டுரைகள் மார்க்சிய தத்துவம் பற்றி எழுதினார்.
மாவோ கூட இப்படித்தான்,லெனினிய வழிகாட்டல் இருந்தது.
சிறு கட்டுரைகள் மட்டுமே தத்துவம் பற்றி எழுதினார்.
இந்தியாவில்….
ஒரு புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு எது தடையாக இருந்தது.
ஆதிசங்கரனின் அத்வைதமா?
இல்லவே இல்லை.
இந்தியாவில்,1932-களுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது?
ஏன்?.
என்ன அது?
காரணம்,முதலாளித்துவத்தால் வறுமையை ஒழிக்க முடியவில்லை.
முதல் உலகப்போரில் ரஷ்யா கம்யூனிச நாடானது.
இரண்டாவது உலகப் போரில் சீன கம்யூனிச நாடானது மட்டுமின்றி,உலகின் மூன்றில் ஒரு பங்கு சோசலிச நாடுகளாக மாறின.
சோசலிச சாதனைகளை கண்டு,நடுங்கினர் ஏகாதிபத்தியங்கள்.
சோசலிசக் கொள்கைகள் ரஷ்யாவில்
(1)வறுமையை ஒழித்தது
(2) வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தது.
(3) பெண்கள் சமத்துவமடைந்தனர்.
(4)விவசாயத்தில் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை விட சாதனை படைத்தது.
(5)தொழில்துறையில் ஏகாதிபத்தியங்கள் ரஷ்ய தொழில்துறை வளர்ச்சியை கண்டு அஞ்சி நடுங்கின.
(6)தேசியஇனங்கள் விடுதலை,சமத்துவம் பெற்றன.
இவற்றை கண்டு ஏகாதிபத்தியங்கள் அஞ்சின.
ஆகவே…..
1920-கம்யூனிச கோட்பாடுகளை முறியடிக்க திட்டம் தீட்டினார்கள் ஏகாதிபத்தியவாதிகள்.நேரிடையாக மோத தைரியம் இல்லை.ஆகவே கோட்பாடு அளவில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர்.
1920-களில் ஃபிராங்பர்ட் பள்ளி தோன்றியது.
அதன் வேலை என்ன?
(1) மார்க்சியத்தின் பெயரில் மார்க்சிய விரோத கருத்துகளை பரப்புதல்.அதன் மூலம் ஏகாதிபத்திய சுரண்டலை நியாயப்படுத்துதல்.
(2) வரலாற்று பொருள்முதல்வாதக் கோட்பாடுகளை திரிப்பது,குழப்புவது.
(3) சாதி,மதம்,பாலினம் போன்ற மேற்கட்டுமானமே சமூகத்தின் தீர்மானகரமான சக்தி என்ற கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
(4) இதையே,கிராம்ஸ்கி historical block என்றார்.ideological hegemony என்றார்.
(5) அம்பேத்கர் சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம் பார்ப்பனியம்,இந்துமதம் என்றார்.மேற்கட்டுமானமே தீர்மானமான சக்தி என்றார்.
பொருளாதார அடித்தளத்தை மறுத்தார் அம்பேத்கர்.
(6) பெரியார் இரண்டு கோட்பாடுகளை ஆதரித்தார்.ஒன்று,ஆரிய-திராவிட இனவாதம்.மற்றொன்று,சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம் பார்ப்பனியம்,இந்துமதம் என்றார்.இதுவும் மேற்கட்டுமானமே தீர்மானகரமான சக்தி என்கிற ஃபிராங்பர்ட் பள்ளி கோட்பாடு தான்.கருத்துமுதல்வாத தத்துவம் தான்.
ஆரிய-திராவிட இனவியல் மற்றும் பார்ப்பனியம்,இந்துமதம் என்கிற கருத்துமுதல்வாத தத்துவத்தை முறியடிக்க வேண்டும்.ஆதிசங்கரரின் அத்வைதம் அல்ல.
7]ஆகவே,நாம் மார்க்சிய தத்துவ போராட்டம் தேவையில்லை என்று கூறவில்லை.தத்துவ போராட்டம் தேவையில்லை.இன்றைய கருத்துமுதல்வாத தத்துவ போக்குகள் எது?
ஃபிராங்பர்ட் பள்ளி
கிராம்ஸ்கி
அம்பேத்கர்
பெரியார்
தெரிதா
ஃபூக்கோ-பின்நவீனத்துவம்
எஸ்விராஜதுரை
அ.மார்க்ஸ்
நவீன திரிபுவாதங்கள்
கலைப்புவாதங்கள்
மக்கள் அதிகாரம்
மக்கள் விடுதலை
தநாமாலெ கட்சி
இவர்களின் கருத்துமுதல்வாத தத்துவத்தை முறியடிக்க புரட்சிகர இயக்கங்கள் முன்வரவேண்டும்.
இதுவே கருத்துமுதல்வாத தத்துவத்தை எதிர்த்த தத்துவ போராட்டம்.
ஆதிசங்கரர் தத்துவம் அல்ல.
அது என்றோ முறியடிக்கப்பட்டது.
ஆகவே….
1980-களில்
#சமரன் இதழ் முன்னெடுத்த
தத்துவ சமர் இன்றும் தொடர்கிறது.
மேற்கண்ட எல்லா வகையிலும்
ஃபிராங்பர்ட் பள்ளி
கிராம்ஸ்கி
அம்பேத்கர்
பெரியார்
தெரிதா,ஃபூக்கோ
எஸ்விராஜதுரை
அ.மார்க்ஸ்
வகையறாக்களை தத்துவ தளத்தில் முறியடித்து…..
கட்சி,சரியான மார்க்சிய கண்ணோட்டத்தில்
கட்டப்பட்டுவருகிறது.
அதற்கான தியாகம் விலைமதிப்பற்றது.
இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். பிறகு அனுதாபி களாக மாறி, இறுதியில் தங்களின் தொடர்புகளை முறித்துக் கொண்டவர்கள். பிரான்சுக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சிந்தனைப் போக்கின் தொடர்ச்சியாக இவர்களைக் காணலாம். பிரான்சுக் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், வர்க்கப் போராட்டம் என்கின்ற கோட்பாடு களைக் கைவிட்ட ஐரோப்பிய பொதுவுடைமைக் கட்சி என்ப தோடு இவர்களின் சிந்தனையை இணைத்துப் பார்க்க வேண்டும்.
இத்தகைய கட்சிகளிலுங் கூட, இவர்கள் தொடர்ந்து இருக்க முடியாமல் தங்களுடைய சிந்தனைகளைக் கட்சிகளுக்கு வெளியில் அமைத்துக் கொண்டவர்கள். அதிலே ஃபூக்கோ, கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராக இருக்கும் பொழுதே கூட தன்னை ஒரு நீட்சேயிச கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண் டவர். நீட்சேயிச கருத்தாக்களால் கவரப்பட்ட பொதுவுடைமை யாளர் என்பது அதன் அர்த்தம், நீட்சேயின் அதிகாரம் பற்றிய கோட்பாடு, அதிகாரம் சமூகத்தில் இருக்க வேண்டிய நியாயம் போன்றவற்றின் தொடர்ச்சியாக ஃபூக்கோவின் சிந்தனைகளைக் காண வேண்டும். ஃபூக்கோ தன்னுடைய விவாதங்களின் மையமாக, “19-ஆம் நூற்றாண்டினுடைய ஐரோப்பாவிற்கும், 20ஆம் நூற்றாண்டினுடைய ஐரோப்பாவிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவை வறுமை வாட்டி வதைத்தது. ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவிற்கு வறுமை ஒரு பிரச்சனை இல்லை. அதிகாரம் தான் பிரச்சனையாக இருக்கிறது’ என்கிறார். இதனால் பகுத்தறிவு என்கின்ற கோட்பாட்டை முழுவதுமாக ஃபூக்கோ மறுக்கிறார்.