திரைப்படம்சீரழிவுக் கலாச்சாரம்
திரைப்படம்சீரழிவுக் கலாச்சாரம்

திரைப்படம்சீரழிவுக் கலாச்சாரம்

தமிழக மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியல் அறிவு வளர்வதை சிதைக்கும் நோக்கிலே தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படம் ஏன் ஊடகம் சமூகத்தின் சகல துறைகளிலும் ஆக்கிரமிப்புச் செய்து சீரழிவுக் கலாச்சார வலையினுள் மக்ககளைச் சிக்க வைத்தும் வருகிறது. தவறியும் மக்கள் தங்களின் நிலைக்கு காரணமானவர்களை தேடாமல் இருக்க மாயையில் அழுத்தி வைக்கிறது என்றால் மிகையாகாது.

இதனை ஒளிபரப்புபவர்கள் மக்களின் விருப்பத்திற்க்காகவே நடத்துகிறோம் எனக் கூறி மக்களைச் சீர் கெடுக்கும் இதனை அவர்க ளிடம் திணித்து வருவதன் நோக்கம்; இக்கலாச்சார மேலாதிக்கத்தை அவர்கள் மத்தியில் வெற்றிகரமாக நுளைத்தால் தாம் பொருளாதார இலாபம் அடையலாம் என்பதே யாகும்.

ஆனால் இதனால் மக்கள் அடையும்பலன் என்ன வென்றால் அவர் கள் கையில் இருக்கும் பணம் பறிக்கப்பட்டு மீண்டும், மீண்டும் அவர்களுடைய புரட்சிகர சமூக உறவுகள் சிதைக்கப்பட்டு முதலாளித்துவ சிந்தனைகளை நோக்கி தள்ளி அவர்களை சுரண்டுவது மட்டுமே இந்த ஒலி ஒளிப் பரப்புபவர்கள் மற்றும் ஊடகத்தின் மக்கள் மீதான் தாக்குதல் ஆகும்.

கதாநாயகர்கள் பாத்திரமென்பது; பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி தன்னிகரற்ற கதாநாயகனே என மக்களை நினைக்க வைப்பதால் இன்றைய மனிதனின் நடைமுறையில்- சமூகயதார்த்தத்தில் கதாநாயகர்களாக வரும் தனிநபர்களே (?) பிரச்சனைகளைத் தீர்த்துவிடுவர் என போலிப்பிரமை கொள்ளவைப்பதுடன் பார்வையாளர் நிலைக்கும் தள்ளுகிறது. தனிநபர்கள் ஒவ்வொருவரும் தாமும் கதாநாயகர்கள் போல் சஞ்சரித்து தானும் அவ்வாறாக இருப்பதாகக் கருதி மாரீச மான்களையும், கானல் நீரையும் தேடி அலையும் இழிந்த நிலையில் தள்ளப்படுகின்றன். அதுமட்டுமல்லாமல் இயல்பிலேயே வன்முறை கொண்ட சமூகம் அமைப்பு ரீதியான, ஸ்தாபன வடிவிலான – வன்முறையைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக தனிநபர் வன்முறையைத் தோற்றுவிக்க இக்கதாநாயகன் பாத்திரம் துணைநின்று முதன்மைப்படுத்தி வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

திரை அரங்கில் வரும் ஒவ்வொரு பாடல்களிலும் பத்துப் பதினைந்து ஆடைகளின் தரங்கள், மாடமாளிகைகளின் தோற்றங்கள் போன்ற காட்சிகள் ஏழை ஜனங்களின் மனங்களில் நிழல் சுகத்தைக் காணவைக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களது கல்வியில் பாதிப்பு, குடும்பங்களில் வீண் பொருளாதார விரயம், மக்கள் மனதில் உண்மைக்குப் புறம்பான சிந்தனை, மக்கள் புரட்சிகர சூழ்நிலையை உணர விடாது தடுத்தல், என்பவற்றைத் தூண்டிவரும் ‘மினி தொடர்’ ‘தொலைக்காட்சி மற்றும் வானலை ஒளிபரப்பு’ ‘திரைப்படங்கள்’ ஆகிய காட்சிகளை வெளியிடும் உரிமையாளர்களே! இத்தீய செயலை உணர்ந்தே ஒளிபரப்பு செய்கின்றனர்.

விஞ்ஞான பூர்வ உணர்வுகளை அறிந்து கொள்வதும், நிலைநிறுத்திக் கொள்வதுமே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *