ஸ்டாலின் மீதான அவதூறுகள்
ஸ்டாலின் மீதான அவதூறுகள்

ஸ்டாலின் மீதான அவதூறுகள்

குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான்

முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை தூற்றியவ அதே குருசேவ் தான், 1937 இல் “நமது கட்சி, துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிச்சடைகள் அனைத்தையும் துடைத்தெறியும்.. இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்க முடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும். நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்” என்று பிரகடனம் செய்தான், ஆனால் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றினான். அனைத்தையும் ஸ்டாலின் மேல் சுமத்தினான். டிராட்ஸ்கிகள் குருச்சேவை ஆதரித்தனர். ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி குறிப்பிடும் போது “உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார். அது தான் நடந்தது. உள்ளிருந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், முதலாளித்துவ மீட்சியை உள்ளிருந்து நடத்தியது.

இந்த முதலாளித்துவ மீட்சியைப் பற்றி யூகோஸ்லாவிய முதலாளித்துவ மீட்சியாளன் டிட்டோ 1956 இல் கூறும் போது “இப்போது உள்ள பிரச்சனை இந்த பாதை வெல்லுமா அல்லது மீண்டும் ஸ்டாலின் பாதை வெல்லுமா என்பது தான்” என்று அங்கலாய்த்தான். பாட்டாளி வர்க்கமா அல்லது முதலாளித்துவ வர்க்கமா எது நீடிக்கும்? என்ற கேள்வியை முன்வைத்து தமது நிலையை தெளிவாக்கினர். இதை டிராட்ஸ்கிகள் ஆதரித்தனர். குருசேவ் வர்க்க விசுவாசத்துடன் டிட்டோவை வர்க்கச் சகோதாரன் என்று கூறியதுடன் “முன்னனிற்கும் நோக்கங்களின் ஒற்றுமையில் கட்டுண்ட சகோதாரர்னும் உற்ற துணைவனும்” என்றான். அவர் மேலும் யூக்கோஸ்லேவியா பற்றி குறிப்பிடும் போது “நமது கருத்து ஒன்றே, நம்மை வழிநடத்துகின்ற கோட்பாடு ஒன்றே” என பிரகடனம் செய்தான்.

மார்க்சிய லெனினியம் கைவிடப்பட்டது. பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அழிக்கப்பட்டு முதாலளித்துவ சர்வாதிகார‌ம் அவ்விடத்தில் மாற்றி வைக்கப்பட்டது. இதன் மூலம் சோவியத் ஒரு சமூக எகாதிபத்தியமாகியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்ட குருசேவின் நிலையை ஏகாதிபத்தியங்கள் வாழ்த்தி வரவேற்று தொடர்ச்சியாக கொண்டாடின. அமெரிக்காவின் அரசு செயலாளர் குருச்சேவின் பணியைப் பாராட்டி “… நல்ல சாப்பாடு, இரண்டாவது கால்சராய் இத்தகைய விசயங்கள் இன்று ரசியாவில் எந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளவையாகி விட்டனவோ அந்த அளவுக்கு மிதவாதம் செல்வாக்கைச் செலுத்தும் நிலமை எற்பட்டுள்ளது எனக் கருதுகின்றேன்” என்று போற்றினர்

ஸ்டாலின் காலத்தை வெறுத்த எகாதிபத்தியங்கள், குருச்சேவ் காலத்தை போற்றின. ஏகாதிபத்திய பத்திரிகையான நீயூஸ்வீக், “ஸ்டாலின் காலத்து அய்க்கியப்பட்ட முகாமை நிகிதா குருச்சேவ் மீட்க முடியாதவாறு அழித்துவிட்டார். இது கம்யூனிசத்திற்கு அல்ல, மேற்கத்திய உலகத்துக்கு குருச்சேவ் செய்த மாபெரும் சேவையாகும்” என்று எழுதியது. ஆனால் டிராட்ஸ்சிகள் அங்கு சோசலிசம் முன்னேறுவதாகவும், ஸ்டாலினின் அதிகாரம் நொறுக்கப் படுவதாகவும் விளக்கம் அளித்து ஆதரித்தன. அமெரிக்க செய்தித்துறை எஜென்சியின் இயக்குனர் ஸ்டாலினுக்கு எதிரான குருச்சேவின் அவதுறை குறிப்பிட்டு “நம்முடைய நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று” என்று 1956 இல் அறிவித்தார். ஸ்டாலின் தூற்றப்பட்டு மார்க்சியத்தை கழுவில் எற்றி கொன்ற போது, சுற்றி நின்று தத்தம் தூப்பாக்கிகளால் வானை நோக்கி சுட்டு தத்தமது மகிழ்ச்சிகளை ஏகாதிபத்தியங்கள் தெரிவித்தன. இதற்கு டிராட்ஸ்கிகள் ‘ஆகா என்ன மகிழ்ச்சி’ என்று குதுகலித்தபடி, தர்பாரைச் சுற்றி நின்று ஜோராக கைதட்டினர். அதை இன்று ஒரு மகழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக கொண்டாடத் தயங்கவில்லை. ஸ்டாலினையும் மார்க்சியத்தையும் கழுவில் எற்றிய குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக காட்டிக் கொண்டது.

வர்க்க மோதலற்ற உலகத்தையும், சமாதான சக வாழ்வையும் கொண்ட கட்சியை கட்டும் என்றான். “ஸ்டாலின் சொந்த நாட்டில் இருந்து உலகம் வரை வர்க்கம் என்ற கோடாரியைக் கொண்டு உலகை பிளந்து வைத்திருந்த ஒரு கொடுங்கோலன்” என்றான். குருச்சேவ் வர்க்கம் என்ற அடிப்படையைத் தகர்க்க “நாம் (ரசியாவும், அமெரிக்காவும்) உலகிலேயே மிக வலிமை வாய்ந்த நாடுகள். நாம் சமாதனத்திற்காக இணைந்தால் எந்த யுத்தமும் நடக்காது. பின் எந்தப் பைத்தியக்காரனாவது போரை விரும்பினால் அவனை எச்சரிப்பதற்காக நாம் விரல்களை அசைத்தால் போதும்” என்றான். உலகை நாங்கள் இருவரும் பங்கிட்டு கொண்ட அடக்கியாள முடியும் என்றான். உலக சமாதானம் என்பது, சுரண்டலை வலிமையாக நடத்துவதும் அடக்கியாள்வது தான் என்றான். நாம் இதில் இணைந்து விட்டால் எதையும் யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்றான். இதை மறுத்த ஸ்டாலின் தூற்றப்பட்டார். “உலக சமாதனத்துக்கு தடைக் கல்லாக இருந்த ஒரு முட்டாளின் ஆட்சி” என்றான். “இரண்டு சமுதாய அமைப்புகளுக்கு இடையிலான தவிர்க்க இயலாத போராட்டம் முற்றிலும் கருத்துப் போராட்டம் என்ற வடிவத்தை மட்டும் மேற்கொள்ளச் செய்ய வேண்டும்..” என்று கூறி வர்க்க சமரசத்தை, எதார்த்தத்தில் பேணும் வழி வகையைப்பற்றி தத்துவ விளக்கம் வழங்கினான். கருத்து போராட்டம் மட்டும் போதுமானது என்று, மார்க்சியத்தை பிரமுகர்தனத்தின் எல்லைக்குள் சிறைமைப்படுத்தி சிறைவைத்தான். ஸ்டாலின் இதற்கு எதிராக இருந்தார்.

ஆயுதங்கள் அற்ற, ஆயுதப்படைகள் அற்ற போர்கள் அற்ற உலகை நாம் படைக்க முடியும் என்று டிட்டோவும், குருச்சேவும் கூறத் தவறவில்லை. முனைப்பான சமாதான சகவாழ்வுதான் யூகோஸ்லாவியா வெளிவுறக் கொள்கை என்று பிரகடனம் செய்ய, குருச்சேவ் சமதான சகவாழ்வே அயல்துறைப் பொது வழி என்ற கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் மறுத்தான். இதை மறுப்பதாயின் ஸ்டாலின் மறுக்கப்பட வேண்டும். ஆகவே இருவருமே ஸ்டாலினை மறுத்தனர். ஸ்டாலினைத் தூற்றினர். மார்க்சியத்தை அதன் அடிப்படையில் இருந்தே மறுத்தனர். ஆனால் ஸ்டாலின் என்ன கூறினார் “ஏகாதிபத்தியத்தின் எமாற்றுத்தனமான அமைதிக் கோட்பாடு உழைக்கும் வர்க்கத்தினுள் ஊடுருவுவதற்கான பிரதான ஏஜெண்ட சமூக ஜனநாயகமே. மேலும் யுத்தங்கள் மற்றும் ஊடுருவலுக்கான தயாரிப்பில் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் உள்ள முக்கிய சக்தி இதுவே” என்றார். அமைதிக் கோட்பாடு, சமாதன சக வாழ்வு என அனைத்தும் எகாதிபத்தியத்தின் மிக மோசமான எமாற்றுடன் கூடிய சரக்கையே குருச்சேவ் – டிட்டோ கும்பல் விற்பனைக்கு விட்டது. அதையே ஆகா ஒகோ என்று கூறி, தம் கொள்கைகள் என்பதால் டிராட்ஸ்கியம் இலவச விளம்பரம் செய்தது.

ஆனால் குருச்சேவ், டிராட்ஸ்கிய வாதிகள் அங்கு சோசலிசம் முன்னேறுவதாகவும், அதுபற்றி அங்கு வம்பளப்பதில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தையே அரசியலில் இருந்து கழுவேற்றினர். அதுவே ஸ்டாலின் தூற்றுப்பட்டு மார்க்சியத்தை கழுவில் எற்றுவதில் இவர்களை ஒன்றுபடுத்தியது.

வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ளமறுப்பது, அதைத்திரிப்பது, மார்க்சியத்தை மறுப்பதில் போய்முடிகின்றது.

மார்க்சியம் மீதான அவதூறுகள், சேறடிப்புகளை சமுதாயத்தின் மாற்றாககாட்டமுற்படுகின்றனர்.

உலகமயமாதலை எதிர்த்து, உலகத்தை மாற்றி அமைக்ககோரும் ஒரேயொரு போராட்ட மார்க்கமான மார்க்சியத்தை எதிர்த்துநிற்கின்றனர். மார்க்சியத்தைகோணல்படுத்தி, தம்மை ஒரு “முற்போக்கு” அணியாககாட்ட முனைகின்றனர். இதன்மூலம் உலகமயமாக்கல் விரிவாக்கும் போக்குகளை உயர்த்திப்பாதுகாக்கின்றனர்.


மார்க்சிய உண்மைகள் மீது அவதூறு செய்வதே இவர்களின் அரசியல் அடிப்படையாகும். மார்க்சியம் மீதான அவதூற்றை, பெரும்பாலும் ஸ்டாலின் மீதான அவதூறில் இருந்து தொடங்குகின்றனர். ஸ்டாலின் 1936-37 களில் நடத்திய உள்நாட்டு களையெடுப்பை அடிப்படையாகவும், தனிமனித உரிமை என்ற உள்ளடகத்தை அடிப்படையாகவும் கொண்டு, அனைத்தையும் மறுக்கின்றனர். ஸ்டாலின் காலத்தில் என்ன நடந்தது என்ற அடிப்படை ஆய்வு எதுவுமின்றி, ஏகாதிபத்தியம் எதை எல்லாம் அவதூறாக கட்டமைத்ததோ, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுவது ஒரு அரசியல் வடிவமாக தொடருகின்றது.

இதை நுட்பமாக பார்த்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கியெறிய முயன்று தோற்றுப் போனவர்களைச் சார்ந்து நிற்கின்றனர். இவர்கள் யார் என்றால், சோவியத்தின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கவிழ்க்கும் சதிகளில் தோற்றுப்போன நிலையில் தண்டனைக்குள்ளனவர்கள். இந்த சதியாளர்கள் அக்காலத்தில் என்னசெய்தார்கள்?, எப்படி ஆட்சியை கவிழ்க்க முனைந்தார்கள்?, மார்க்சியத்ததை தூற்றுவதே அவர்களின் மையக் குறிக்கோளாக உள்ளது.

அன்று சோவியத் மக்கள் எப்படி வாழ்ந்தனர். அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், உடை போன்ற விடையங்கள் மீதான அரசின்கொள்கை என்ன? எதுவும் இவர்களுக்கு அவசியமற்றதாகவே உள்ளது. ஸ்டாலினை மறுத்து முதலாளித்துவமீட்சி நடந்தபின்பு, அங்கு இருந்த சமூகவடிவங்களை அழித்து முதலாளித்துவ அமைப்பு உருவானபின்பு, அந்த மக்களின் வாழ்வுக்கு என்னநடந்தது என்ற அடிப்படை விடையத்தைக்கூடக் கண்டுகொள்வதில்லை. தூற்றுவதற்கு மட்டும் இவர்கள் புலம்பவதும், அதைக்கொண்டு பிழைப்பதும் தொடர்கின்றது. ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் என்பதைவிடவும், சிலரின் நலன்களில் தொங்குபவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

ஆத்திரமூட்டும் அவதூறை வெவ்வேறு நபர்களுடன் தொடர்படுத்தி, வன்முறை ஒன்றை புனையவும், அதில் குளிர்காயும் முயற்சிகளையும் செய்கின்றனர். அவதூறுகளுக்கு கைகால் பொருத்தி, வாயில் வந்தமாதிரி புனைகின்றனர். நீ தாக்கப்படுவாய் என்ற மிரட்டல்கள் சொல்லியனுப்பபடுகின்றது. ஜனநாயகவிரோத செயல்கள் மீதான எமது விமர்சனங்கள் கூர்மையாக அம்பலப்படுத்தும்போது, இந்த அவதூறுகள் அவர்களின் அரசியலாகி விடுகின்றது.

சோசலிச அரசுகள் உருவான போது பழைய சமுதாயத்தின் எதிர்ப்பு மிகக் கடுமையானதாக மாறிவிடுகின்றது. மீண்டும் பழைய சமுதாயத்தை நோக்கிச் செல்ல, அந்த சமுதாயத்தில் நிலவிய உயர்ந்த வாய்ப்பையும் வசதியையும் பெற்ற பிரிவு தொடர்ந்து போராடத் தொடங்குகின்றது. இது சோசலிச சமூகத்தில் மட்டுமல்ல, எல்லாப் புரட்சிகளிலும் இது பொருந்தும். இது சோசலிச சமுகத்தில் மிககடுமையானதாக மாறிவிடுகின்றது. மற்றைய எல்லா சமூக முரண்பாடுகளையும்விட, பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் முரண்பாடு கூர்மையான வடிவில் வெடிக்கின்றது. இதை கையாள்வதில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அதன் மேல் கையாளுகின்றது. எந்த சமுதாயத்தையும் விட, பரந்துபட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பதில் உயர்ந்தபட்ச நிலையைப் பேணுகின்றது. இதை யாரும் நிராகாரித்துவிட முடியாது. இதன்போது தவறுகள் முன் அனுபவமின்மையில் எற்படுவது நிகழ்கின்றது. லெனின் கூறியது போல் “விசயத்தின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டோமானால், ஒரு புதிய உற்பத்திமுறை, தொடர்ந்து பின்னடைவுகளையும், தவறுகளையும், தோல்விகளையும் சந்திக்காமல் உடனே வேர்பிடித்து நிலைபெற்றதாக வரலாறு உண்டா?” என்றார். நாம் புதிய அனுபவமற்ற விடையங்களில் முன்னேறும்போது, அதில் தவறுகளை இனம் காணும்போது, அதை களைந்து முன்னேறுவதே பாட்டாளிவர்க்கத்தின் இயங்கியலாகும்.

ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாககொண்டு எழுப்பும் அவதூறுகளும், கடந்த கால புள்ளிவிபரங்கள் அனைத்தும் தவறனவை என்பதை இக்கட்டுரை ஆதாரபூர்வமாக தகர்க்கின்றது. இன்று ஏகாதிபத்தியங்களின் பொய்யும் புரட்டுடன் கூடிய, புதியதொரு புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளனர். இக்கட்டுரையில் அது முழுமையாக உள்ளடங்கியுள்ளது. இது முன்னைய புள்ளிவிபரங்களின் கற்பனையான கண்டுபிடிப்புகளையும், இதன் அத்திவாரத்துடன் தகர்த்து விடுகின்றது. ஸ்டாலினால் கொல்லப்பட்டவர்கள் என்று முன்னைய அவதூறுகளின் எண்ணிக்கையை விட, இன்று 100 மடங்கு குறைவாகவே அண்மையில் ஏகாதிபத்தியங்கள் தொகுத்து வெளியிட்டதை இக்கட்டுரை மூலம் அம்பலத்துக்கு கொண்டுவர முனைகின்றேன். இன்றைய ஏகாதிபத்திய புள்ளிவிபரங்கள் 1920 முதல் 1950 வரையிலான காலத்தை முழுமையாக கொண்டு வெளிவந்துள்ளது. உளவாளிகள், சமூகவிரோதிகள், பாசிட்டுகள், கொலைகாரர்கள் எனமொத்தமாக 1921 முதல் 1953 முடிய 7,99,473 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஏகாதிபத்திய புள்ளிவிபரம் இன்று அறிவிக்கின்றது.

கடந்தகால பொய்கள் புரட்டுகள்கூட இன்று அம்பலமாகிவரும் நிலையில், மார்க்சியத்தின் சரியான ஆய்வுரைகளை ஆதாரபூர்வமாக தர முனைகின்றது. அத்துடன் இதை ஆளமாகவும், விரிவாகவும் புரிந்து கொள்ள மாபெரும் விவாதம், இரு முக்கியமுடிவுகள், மாபெரும்சதி, மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை, இயங்கியல்பிரச்சனைபற்றி, லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் போன்ற நூல்களை படித்தால் நலன் பயக்கும்.

ரஷ்ய‌ ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது,  65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன்,  அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.  5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ள‌வர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

மறுபுறம் லெனின், ஸ்டாலின் பற்றிய சரியான மதிப்பீடுகள், உலகளவில் உருவாகின்றது. மார்க்சியமே உலகை மாற்றும் ஒரே தத்துவமாக, தலைநிமிர்ந்து வருகின்றது. இதை தகர்க்க ஸ்டாலின் மரணமடைந்து  50 வது ஆண்டில் உலகெங்கும் மீண்டும் பெரியளவில் அரசியலற்ற வெற்று அவதூறுகள் மீளவும் உயிர்ப்பிக்கப்பட்டன. ஸ்டாலின் மீதான அரசியல் ரீதியான மதிப்பும், மக்களிடையே செயல்பூர்வமாக நடைமுறை ரீதியாக அதிகாரித்து வரும் பாட்டாளிவர்க்க செல்வாக்கையும் கொச்சைப் படுத்துவதே, மூலதனத்தக்கு அவதூறு நிபந்தனையாகி விட்டது. பாட்டாளி வர்க்கதின் வர்க்க கண்ணோட்டத்தைக் கொச்சைப்படுத்தவே, ஸ்டாலின் மீதான அவதூறுகளை முன்வைக்கின்றன. மூலதனத்தின் நெம்புகோலாக செயற்படும் வலது இடது சுதந்திர செய்தி அமைப்புகள்,  பலபக்க அவதூறுகளை 2003 ல் வெளியிட்டன. ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதாரவுடன், கடந்தகால ஆவணங்களை எல்லாம் தூசிதட்டி எடுத்ததனர். ஆய்வுகள் என்ற பெயரில், அரசியலற்ற அவதூறுகளை நூலாக்கி டாக்டர் பட்டம் பெறுகின்றனர். இந்த நூல்களை மேயும் ட்ராட்ஸ்க்சியம் முதல் ஏகாதிபத்தியம் வரை, புல்லரிக்கும் மர்மக் கதைகளை உருவாக்கி உலாவ விடுகின்றனர்.  அதேநேரம் கடந்த 80 வருடமாக ஸ்டாலின் மீது இவர்கள் கட்டியமைத்த பொய்களும், அதை மெருகூட்டிய ஆதாரங்களும் உண்மையற்று போகின்றது. இதை செய்தியாக்கி, ஆய்வாக்கிய எவரும் நேர்மையாக சுயவிமர்சனம் செய்வதில்லை. அன்று அப்பட்டமாக ஆதாரம் என்ற பெயரில் கட்டமைத்த தரவுகள் அனைத்தும், விதிவிலக்கின்றி இன்று பொய்யாகியுள்ளது. இப்படி ஆய்வுகள் என்ற பெயரில் எழுதியவர்கள் பலர், ஏகாதிபத்திய உளவாளிகளாகவும், அவர்களிடம் கையூட்டுப் பெற்று இருந்ததும் கூட இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்படி தகவல்களை வழங்கியவர்களுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான தொடர்புகள்கூட இன்று ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ளது.

இதை ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்திய ட்ராட்ஸ்க்கியத்தின் 80 வருட அரசியல் கந்தலாகி நிர்வணமாகின்ற நிலையிலும், எந்த சுயவிமர்சனத்தையும் செய்யவில்லை. மாறாக அரசியலற்ற அவதுறை அரசியலாக கொண்டே, இன்றும் பிழைக்கின்றனர். வர்க்க எதிரிகளை ஸ்டாலின் முன்நிறுத்தி, அவர்களை சாதுவான பசுவாககாட்டியே வந்தனர். அரசியல் ரீதியான விவாதம், விமர்சனம் எதுவுமற்ற வகையில், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை சிதைக்க நெம்புகோல்களை நிமிர்த்த முனைகின்றனர்.

ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கும் ஒவ்வொருவனின் அரசியல் என்ன? சமகால நிகழ்வுகளில் அவர்களின் அரசியல் நிலை என்ன? அதில் அவர்களின் பாத்திரம் என்ன? என்று நெருங்கி ஆராயும் அனைவருக்கும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் கபடங்கள் இருப்பது அப்பட்டமாக தெரியவரும்.

ட்ராட்ஸ்கியத்தின் அவதூறுகள் அரசியலற்ற செப்புபிடு வித்தையாக அரங்கேறுகின்றது. கடந்தகாலத்தில் அவதூறுகள் மறுக்கும் எந்த விவாதத்துக்கும் சரி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் மீதான விவாத்துக்கும் சரி, அவர்கள் பதில் அளிப்பதில்லை. தம்மையும் தமது சந்தர்ப்பவாத நிலைப்பட்டையும் மூடிமறைத்த படி, ஒருதலைப்பட்சமாக அவதுறை மட்டும் பொறுக்கி எடுத்து பக்கங்களை நிரப்புகின்றனர். இந்த வகையில் ட்ராட்ஸ்க்கியவாதிகளின் இந்த நிலைப்பாடு, அப்பட்டமாகவே ஏகாதிபத்தியத்துக்கு நேரடியாக சேவை செய்கின்றது. விவாதத்தை மறுத்தும், அவதூற்றை ஆதாரமாக கொள்கின்ற போக்கை லெனின் அம்பலப்படுத்தும்போது, கொள்கைரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒருவாதத்திற்கும் பதில் சொல்லாமல் அவன்மீது  இரக்கம் காட்டுவதாகச் சொல்வது விவாதிப்பதாகப் பொருளாகாது. மாறாக அவதூறு செய்யமுயல்வது ஆகும். இப்படி உண்மை நிர்வாணமாகி விடும்போது, கடந்தகால சொந்த நிலைப்பாடுகள்கூட கேள்விக்குள்ளாகின்றது. இதை மூடிமறைக்க விவாதம் மற்றும் எதிர்வாதத்தை முன்வைப்பது அவசியமற்றதாக்கின்றது. முன்பைவிட அவதூற்றுக்கு புதுமெருகூட்டி, வானத்தையே வில்லாக வளைக்க முனைகின்றர். “அவதூறின் அரசியல் முக்கியத்துவம்” என்ற கட்டுரையில் லெனின் “அரசியல் அவதூறு பலசமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், வெறித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது” என்றார். தொழிலாளர் வர்க்கத்தின் பெயரில் வர்க்கப் போராட்டத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பின்பாக தொடரும் வர்க்கப் போராட்டத்தையும் மறுக்கும் ட்ராட்ஸ்க்கியத்தின் மூடிமறைத்த அவதூற்றை நாம் இனம் காண வேண்டியுள்ளது.

மார்க்சியத்தின் பல்வேறு அடிப்படைகளை தகர்க்க நினைக்கும் ஏகாதிபத்திய நோக்கத்துக்கு முண்டு கொடுக்கும் கருத்துகள் பல வெளியாகின்றன. அதில் ஒரு பகுதியாக ஸ்டாலினை தூற்றும் தனிமனித வசைபாடல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதைப்போன்று ட்ராட்ஸ்கியத்தின் நான்காம் அகில சர்வதேச இணைய தளத்தில் வசைபாடலை வெளியிடுகின்றன. இந்த அவதூறுக்கான மூலநூல்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றது என்பது விதிவிலக்கல்ல. இவர்களுக்கு மட்டுமல்ல ஸ்டாலின் தூற்றும் வகையில், மேற்கத்திய வலது இடது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளியிட்ட பலபக்கச் செய்திகள் சார்ந்த அவதூறுகளுக்குமான மூலநூல்களும், ஒன்றாக இருப்பது தற்செயலானவை அல்ல. கடந்த பத்து வருடமாக முன்னைய சோவியத் ஆவணங்களை எல்லாம் புரட்டிப் பார்த்து பல தொடாச்சியான அவாதூறு கட்டுரைகள் எழுதப்பட்டன,  எழுதப்படுகின்றன. இவற்றில் இருந்தே, இன்று அவதூற்றை தொகுத்து தூற்றுகின்றனர். அண்மைக் காலத்தில், முன்பு போல் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை பற்றிய கற்பனைத் தரவுகளை முன்வைக்க முடிவதில்லை. முன்னைய கற்பனையான புள்ளிவிபரங்கள் முன்வைத்து செய்த அவதூற்றையும்,  அரசியல் பிழைப்பையும், முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் அமுக்குவது போல் அழுக்கிவிட முயலுகின்றனர். ட்ராட்ஸ்கிய பத்திரிகைகள் முதல் ஏகாதிபத்தியம் வரை முன்னர் தாம் கூறிய புள்ளிவிபரக் கற்பனைகளைப் பற்றி, வாய் திறப்பதில்லை. ஏகாதிபத்தியம் எதைஎதையெல்லாம் சொன்னதோ, அதை அப்படியே மீள வாந்தியெடுத்த ஸ்டாலின் எதிர்ப்புவாதிகள், ஏகாதிபத்திய தத்துவார்த்த கோட்பாட்டுக்கு இவைசவாக இருந்ததையும், இருப்பதையும் நாம் காண முடிகின்றது.

புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் நடத்தப்படுவதை எதிர்க்கும் டிராஸ்கிஸ்டுகள், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதையே எற்றுக் கொள்வதில்லை. லெனின் கூறகின்றார் “முன்னொக்கிச் செல்வது, அதாவது கம்யூனிசத்தை நோக்கிச் செல்வது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வழியேதான் முடியும், அதைத்தவிர வேறு வழியில்லை” என்றார்.  ஆனால் டிராட்ஸ்கிகள் ஜனநாயகத்தை அதன் முரணற்றவகையில் பகுத்து ஆராயத்தவறி, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுகின்றனர். “ஜனநாயகத்தை கொச்சை வடிவில் திரித்து தூற்றும்போது சோசலிசப் புரட்சிக்கு முன்நிபந்தனையான அரசியல், பொருளாதார அடிப்படைகளும் ஜனநாயக உணர்வுகளும் மனிதச் சிந்தனைப் பரப்புக்களும் விரிவடைந்திராத மூர்க்கத்தனமான விவசாயச முகக்குணங்களில் தான் ஸ்டாலினிசம் உதித்தெழுந்தது. ஜனநாயகப் புரட்சியைக் கண்டறியாத தேசமாய் ரஷ்யா இருந்தது” என்று ட்ராட்ஸ்கியம் வாசைபாடும் போது, ஜனநாயகம் பற்றி முதலாளித்துவ சிந்தனை எல்லைக்குள் நின்றே கூச்சலிடுபவர்களாக இருக்கின்றனர். சோவியத்தில் ஜனநாயக புரட்சி நடைபெறவில்லை என்று, லெனினையே மறுத்துத் திரிக்கின்றனர். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில் சோசலிச புரட்சி நடைபெற முடியாது என்று கூறுவதன் மூலம், எதைத்தான் எமக்கு போதிக்க முனைகின்றனர். வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள் என்பதை தவிர‌, வேறு ஒன்றையும் அல்ல. ஆழ்ந்து நோக்கினால் ஸ்டாரலின் பற்றிய அவதூறுகள், வர்க்கப் போராட்டம் முதல் ஜனநாயகம் பற்றிய அரசியலில், ஏகாதிபத்தியத்துக்கும் ட்ராட்ஸ்கியத்துக்கும் எந்த வேறுபாடு அடிப்படைக் கோட்பாட்டின் மேல் இருப்பதில்லை. அப்படி ஒரு வேறுபாடு இருப்பதாக விளக்க முடியாதவர்களாகவே ட்ராட்ஸ்கிய அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றன. ட்ராட்ஸ்கிய அவதூறுகள் எந்தளவுக்கு உள்ளதோ, அந்தளவுக்கு குருச்சேவ் அன்று ஸ்டாலினை தூற்றினான். குருச்சேவ் ஸ்டாலினை ஏன் மறுத்தான் என்பதும், எந்த அரசியலை கைவிட்டான் என்பதை நாம் ஆராய்வதன் மூலமே, ட்ராட்ஸ்கியத்துடன் அக்கபக்கமாகவே குருச்சேவ் செயல்பட்டான் என்பதை எதார்த்ததில் துல்லியமாக காணமுடியும்.

1956 இல் டிராட்ஸ்கியவாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் குருச்சேவ்வின் அவதூறுக்கு கொள்கை ரீதியாக நன்றி தெரிவித்தனர். மேல் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீட்ட இந்தச் சதியை (என்ன சதி என்பதை ஆதாரமாக கீழே பார்ப்போம்)  நியாப்படுத்தி “இதற்காக நாம் 25 வருடங்களாக காத்திருந்தோம். எனவே, நாம் இப்போது உள்ளே புகுந்திட வேண்டும். மிகுந்த ஆற்றலுடன் செயல்பட வேண்டும்” என்றனர். குருச்சேவ் எதைச் செய்தரோ அதைச் செய்ய  25 வருடமாக முயன்று தோற்றதை ஒப்புக்கொண்டது டிராட்ஸ்கியம். ஒரு முதலாளித்துவ மீட்சியை வரவேற்றதுடன் அதில் பங்கு கொள்ளவும் முயன்றனர்.  1956 இல் 20 வது காங்கிரசில் குருச்சேவ் ஸ்டாலினுக்கு எதிராக கட்டமைத்து அவதூறுகளை, இரகசிய சுற்று அறிக்கையாக வெளியிட்டு தூற்றியபோது, டிராட்ஸ்கியவாதிகள் இப்படிப் போற்றினர். ஸ்டாலினின் அடிப்படையான வர்க்க கண்ணோட்டம் சார்ந்த மிச்சசொச்ச வர்க்க அடிப்படைகளையும் துடைத்தெறிய, உள்ளே புகுந்து ஆற்றலுடன் அழித்துவிட அறைகூவல் விடுத்தனர். வர்க்க அடிப்படைகளை அழித்தொழிப்பை நியாப்படுத்தி 1961 இல் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் “குருச்சேவின் நடவடிக்கைகளில், பழைமைவாதிகளுக்கு எதிரான ஸ்டாலினிய அழிப்புப் போராட்டத்துக்கு நாம் விமர்சனத்துடனான ஆதரவை வழங்கவேண்டும்” என்றனர். இப்படி கொள்கை வகுத்து குருச்சேவை தாங்கிபிடித்து உதவியதன் மூலம், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை குழி தோண்டி புதைக்க உதவினர். இதைத்தான் டிராட்ஸ்கியவாதிகள் அன்றுமுதல் இன்றுவரை செய்தனர், செய்து வருகின்றனர்.

1963 இல் ட்ராட்ஸ்கிய வாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் “ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது காங்கிரசிலும், 22 வது காங்கிரஸ்சிலும் உருவாகியுள்ள நிலமை, தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகளிலே கூட நமது இயக்கம் மறுமலர்ச்சி அடைவதற்கு மிகவும் சாதகமானதாகும்” என்று கூறி பாட்டாளி வர்க்கத்தின்அ டிப்படையான கோட்பாடுகளை சிதைப்பதில் கரம் குவித்தனர். இவர்கள் குருச்சேவ்வின் மார்க்சிய விரோத நிலைகளை ஆதாரித்துடன், அதற்கு துணையாக செயல்படவும் அறைகூவல் விடுத்தனர்.  1961 இல் 22 வது காங்கிரஸ் முடிவை வரவேற்ற ட்ராட்ஸ்கிஸ்டுகளின் நான்காம் அகிலம்,  புதிய மத்திய குழுவுக்கு ஒரு கடித்தை எழுதியது. அதில் 1937 இல் ஸ்டாலினால் கொல்லபட்டவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பபடும் என்று 1937 இல் ட்ராட்ஸ்கி கூறியதை சுட்டிக் காட்டியதுடன் “இன்று இந்த தீர்க்கதரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்” என்று கூறியதுடன்,  நினைவுச் சின்னத்தின் மீது ட்ராட்ஸ்கியின் பெயர் “பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்” என சுட்டிக்காட்டினர். அத்துடன் குருச்சேவைப் பாரட்டியதுடன் “ட்ராட்ஸ்கியிசத்துக்கு கதவு திறந்துவிட்டுள்ளது” என்று கூறினர்.  அத்துடன் “ட்ராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காம் அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கும் மாபெரும் உதவியைச் செய்திருக்கிறது” என்று பிரகடனம் செய்தனர். ஸ்டாலின் மரணத்தின்பின் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சியை ட்ராட்ஸ்கிகள் ஆதாரித்து வரவேற்றதை நாம் இங்கு காண்கின்றோம். குருச்வேவின் நோக்கமும், ட்ராட்ஸ்கியின் நோக்கமும் அக்கபக்கமாக இணைந்து வந்ததையும், ஒரே புள்ளியில் சந்தித்தையே இவை காட்டுகின்றன. ஸ்டாலினிய மார்க்சிய அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்த பலரை, குருச்சேவ் தலைமையிலான முதலாளித்துவ மீட்சியாளர்கள் உலகஅளவில் படுகொலை செய்தும்,  ஆயிரக்கணக்கில் சிறையில் அடைத்த நிலையில் தான், ஸ்டாலின் மீதான தாக்குதலை நடத்தமுடிந்தது. மார்க்சியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட எதிர்புரட்சியாளர்களை சிறைகளில் இருந்து விடுவித்தும், புனர்வாழ்வும் கொடுக்கப்பட்டது. புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட எதிர்புரட்சியாளர்கள் அரசின் முன்னணி அதிகாரத்துக்கும், கட்சியின் தலைமைக்கு கொண்டு வரப்பட்டனர். ஸ்டாலினின் மீதான தாக்குதல் தனிநபர் ரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் விரிந்த அளவில் தொடுக்கப்பட்டது.

குருச்சேவ் ஸ்டாலினை தனிநபர் ரீதியாக அவதூற்றைப் பொழிந்த போது எல்லையற்ற வகையில் விரிந்து காணப்பட்டது. குருச்சேவ் ஸ்டாலினை “சூதாடி”, “முட்டாள்”, ”கொலைகாரன்”, “மடையன்”, “பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்”, “ஒருகுற்றவாளி”, “கொள்ளைக்காரன்” என்று பலவாக தாக்கினான். “ரசிய வரலாற்றிலேயே மிகப் பெரிய சாவாதிகாரி” என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்டாலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்தியபோது “குரோதமனோபாவம் கொண்டவன்” என்றான். “இரக்கமின்றிஆணவமாகச் செயல்பட்டவர்” என்றான். “அடக்குமுறைபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர் என்றான்” “தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்” என்றான்.  “ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டார்”  என்றான் “ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறி விட்டது”  என்றான். குருச்சேவ் இதுபோன்ற அவதூறுகளை தொடாச்சியாக பொழிந்தான். டிராட்ஸ்கியம் இது போன்றவற்றையே தன் வராலற்றில் தொடாச்சியாக இடைவிடமால் செய்துவந்தது. அண்ணன் தம்பியாக இதில் ஒன்றுபட்டு நின்று, தனிமனித தாக்குதலை நடத்திய நிலையில், கொள்கைரீதியாக இவர்கள் தமக்கு இடையில் உடன்பட்டனர்.

இதை இன்றும் ஆதாரித்து நிற்பதுடன், டிராட்ஸ்கியத்தின் தலைசிறந்த வாரிசாக குருச்சேவை போற்றவும் தயங்கவில்லை. டிராட்ஸ்கிஸ்ட்டுகள் கூறுகின்றனர் “1954 இல் குருசேவின் வேண்டுகோளின்படி அமைக்கப்பட்ட விசாரணைக்குழு கம்யூனிஸ்டுகள் மற்றும் குற்றச் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது” என்பதை எடுத்துக்காட்டி, ஸ்டாலினின் மீதான குற்றம் நிரூபனமாக இருப்பதாக தம்பட்டமடிக்கின்றனர். குருச்சேவ் திட்டமிட்டு மார்க்சிய நிலைப்பாட்டைக் கொண்டோரை படுகொலை செய்த நிகழ்வும், மார்க்சியத்தின் எதிரிகளை விடுவித்ததும் கம்யூனிசத்தின் வெற்றி என்கின்றனர். இதை நியாப்படுத்தும் வகையில் “1956 ல் ஸ்டாலின் கால அநீதிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு போலி ஆவணங்கள் அடிப்படையில் அரசியல் பழிவாங்கலாக விசராணை மற்றும் வழக்குகள் நடைபெற்றதாய் அறிக்கை சமர்ப்பித்தது” என்று கூறியதை எடுத்துக்காட்டி, ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கின்றனர். போலி ஆவணம் மூலம் விசாரணை என்பதும், அதை முதன்மை படுத்திக்காட்டி டிராட்ஸ்கியம் பிழைக்க முனைகின்றது. இந்த பிழைப்புவாத கூத்தடிப்பு ஒருபுறம் நிகழ, அன்று ஒரு சதி கட்டமைக்கப்பட்டதை ட்ராட்ஸ்கியம் சொந்த முரண்பாட்டுடன் பெருமையாக முன்வைக்கின்றது. அதையும் கட்டுரையின் தொடர்ச்சியில் விரிவாக ஆராய்வோம்.

குருச்சேவ் அரசியல் என்ன என்ற அடிப்படை உள்ளடகத்தில் இருந்து, இதை பகுத்தாய்வதை மறுப்பதே டிராட்ஸ்கியமாக உள்ளது. கோட்பாட்டு ரீதியாக என்ன அரசியலை முதலாளித்துவ மீட்பின் போது, குருச்சேவ் கையாண்டான் என்பதையும் கட்டுரை தொடர்ச்சியில் விரிவாக பார்ப்போம். அரசியல் ரீதியாக மார்க்சியத்தை மறுத்த குருச்சேவ் முதலாளித்துவத்தை நிலை நாட்ட களையெடுப்புகளை நடத்தினான். இவற்றை வானுயரப் போற்றும் டிராட்ஸ்கிகள் “ஸ்டாலினின் நிழலான பெரிஜா 23.12.1953 இல் சோவியத் உயர் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு 5 மார்ச் 1954 இல் சுட்டுக்கொல்லப்பட்டான். பல ஆயிரம் நேர்மையான கம்யூனிஸ்டுகளை கொன்றமை, பிரிட்டிஸ் உளவுத்துறைக்கு வேலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டக்களின்படி ‘சோவியத் மக்களின் எதிரி’ என்று பிரகடனப் படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் நேர்மையான கம்யூனிஸ்ட்டுகளை தொடர்ந்து குருச்சேவ் பாதுகாத்தான் என்கின்றனர். மேலும் ஸ்டாலினை தூற்றவும் மார்க்சியத்தை வேரோடு பிடுங்கவும் “…பல்கேரிய, செக்கோஸ்லாவாக்கிய, ஹ‌ங்கேரி களையெடுப்புகளில் பங்கு கொண்ட ஸ்டானிச கொலையாளிகளான அபகுமெவ், லீசற்சோவ், மக்காரோவ், பெஜல்கின் ஆகியோரும் கைதாகி விசாரணையின் பின்பு சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டாலினிசத்தை சோசலிசம் என்று நம்ப விரும்புகிறவர்கள் இவர்களையே பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்கள் என்றுநம்பலாம்” இப்படிக் கூறுவதன் மூலம், உண்மையில் டிராட்ஸ்கிகள் சவால் விடுகின்றனர். குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை அப்பட்டமாகவே மறுக்கின்றனர். குருச்சேவின் வாலை பிடித்து தொங்கி ஊளையிடவும் கூடத் தயங்கவில்லை. ‘கம்யூனிஸ்டான’ குருச்சேவ் தான், பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை கொன்றதாக இன்றும் கூறுகின்றனர். இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, இங்கு இவர்கள் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், தமது வாக்கநலன் சார்ந்து முதலாளித்துவ மீட்சிக்கானவன் முறையை எதிர்க்கவில்லை. ‘மனிதாபிமானம்,  ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம்’ என்பதெல்லாம் ஸ்டாலினை எதிர்ப்பதற்கான டிராட்ஸ்கியத்தின் வெற்று ஆயுதங்கள் என்பதை, இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஸ்டாலின் போன்றவர்கள் அன்றே கொல்லப்பட்டு டிராட்ஸ்கி போன்ற ‘கம்யூனிஸ்ட்டுகள்’ ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என்பதே இதன் சராம்சமாகும். “குருசேவ்வின் வருகையின் பின்பான ஸ்டாலினிச அதிகார வாழ்வின் தளர்வு தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை வெளிப்படையாக உருவாக்கின” என்று டிராட்ஸ்கியம் கூறி குருச்சேவை ஆதாரிக்கும் போது, அரசியல் ரீதியாகவும் ஒன்றபட்டே அன்றும் சரி இன்றும் சரி நிற்கின்றனர்.  இவற்றை நாம் விரிவாகப் பார்ப்போம்.

யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளைத்தபோது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதாரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அவதூற்றிலும், ஸ்டாலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.

இதைப் பற்றி டிராட்ஸ்கிகள் எப்படி அன்று பகுத்தாய்ந்தனர் எனப் பார்ப்போம். “இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் சோவியத் யூனியன் யூகோஸ்லாவியாவையும் தன் மேற்பார்வையுள் கொண்டுவர முயன்றது. ஆனால், டிட்டோ ஸ்டாலினிசத்தை தொடர்ந்து கண்டித்து வந்தார். ஸ்டாலினை சோசலிச உலகின் மன்னராக முடி சூடிவிட விரும்பவில்லை. சோவியத் யூனியனின் சோசலிச நாடுகள் மற்றும் கம்யூனிசக் கட்சிகளுடனான உறவு சோசலிசப் பண்புகள் அற்றது என்று கருதியதோடு தென் ஸ்லாவிய மக்களின் குடியரசு என்ற இலட்சியத்தையும் டிட்டோ கொண்டிருந்தார்” இப்படித் தான் டிராட்ஸ்கியம் யூகோஸ்லாவிய முதலாளித்துவ பாதையை ஆதாரித்தது. அத்துடன் யூகோஸ்லாவியாவை கம்யூனிச நாடு என்று வரையறுத்துக் காட்டினர். குருச்சேவ் சொந்த நாட்டிலும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திலும் முதலாளித்துவத்தை மீட்ட நிலையில், மீண்டும் இரு முதலாளித்துவ மீட்சியாளர்களும் ஒன்றிணைந்து கைகளை உயர்த்திய போது, அதை டிராட்ஸ்கியம் வானளவு தலையில் தூக்கிப் பாதுகாத்தபடி தங்கள் கைகளை அவர்களுடன் இறுகப் பற்றிக் கொண்டனர்.

இதை அவர்கள் தமது சொந்த வர்க்கக் கோட்பாட்டால் விளக்கும் போது  “குருசேவ் வருகையின் பின்பு யூகோஸ்லாவியாவுடனான சோவியத் யூனியனின் உறவுகளில் நெருக்கம் எற்பட்டது. இராணுவ பாசிச சர்வாதிகாரி என்று ஸ்டாலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்று எற்கப்பட்டது. பிராவ்தா பத்திரிகை யூகோஸ்லாவியா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்ற 10 வருட நினைவு தினத்தை நினைவு கூர்ந்ததோடு யூகோஸ்லாவியா சோவியத் மக்கள் இருவரும் ஸ்லாவிய இனத்தைச் சேர்ந்த இரத்த உறவு கொண்ட மக்கள் என்று ஸ்லாவியப் பெருமை பேசியது. சோசலிச இயக்கங்களை தத்துவரீதியில் சிதைத்த, பயங்கரவாதப்படுத்திய பெருமை ஸ்டாலினிசத்துக்கே உரியது” இப்படி டிராட்ஸ்க்கிய அரசியல் ஸ்டாலின் அவதூறுகளில் பூத்துக் குலுங்கிய போது, யூகோஸ்லாவியா மார்க்சியத்தை பாதுகாத்ததா? அல்லது முதலாளித்துவத்தை மீட்டதா? என்பதை துல்லியமாக ஆராய்யும் போது, டிராட்ஸ்கியின் அரசியல் நிர்வாணமாவது தவிர்க்க முடியாது அல்லவா!?

டிராட்ஸ்கியம் பேசுவது மார்க்சியமா!? என்பதையும், ஸ்டாலின் மார்க்சியத்தை பின்பற்றினரா என்பதையும்  யூகோஸ்லாவியா பற்றிய அடிப்படையான நிலைப்பாட்டில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும். யூகோஸ்லாவியா முதலாளித்துவ மீட்பை அடிப்படையாக கொண்டே, சோவியத் யூனியனுடனும் சர்வதேச கம்யூனிச இயக்கத்துடனும் முரண்பட்டது. டிராட்ஸ்கியம் இதை மறுத்த போதும், அன்றைய எதார்த்தம் எதைக் காட்டுகிறது?.

கிரேக்க நாட்டில் நடந்த கம்யூனிச புரட்சியின் போது 10.07.1949 டிட்டோ யூகோஸ்லாவியா – கிரேக்க எல்லையை மூடினார். அத்துடன் கிரேக்க கொரில்லாக்கள் யூகோஸ்லாவியாவில் நுழைவதைத் தடுத்தார். கொரிலாக்களை பின்னால் இருந்து தாக்கி அழிக்க, கிரேக்க பாசிட்டுகள் உள்ளடங்கிய அமெரிக்கா பிரிட்டிஸ் ஏகாதிபத்திய படைகளை யூகோஸ்லாவியாவின் உடாக அனுப்பிதுடன், பின் பக்கமாக தாக்கி அழிக்க உதவினான். சர்வதேசியத்தை கைவிட்டு, ஏகாதிபத்தியத்துடன் கூடிக் கூலாவி மார்க்சியத்தை துறந்து அப்பட்டமாக இதை நிலைநாட்டினான்.  இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் அந்த நாட்டை சோசலிச நாடு என்று எப்படிக் கூறமுடியும். யூகோஸ்லாவியா ஸ்டாலின் அதிகாரத்தை எற்க மறுத்து, சோவியத்தை எதிர்த்தாக டிராட்ஸ்கியம் ஏன் பசப்புகின்றது. ஏகாதிபத்தியங்களுடன் கைகோர்த்த படி யூகோஸ்லாவியா சர்வதேச பாட்டாளி வர்க்கத்தையே விலை கூவிவிற்றது. ஆனால் டிராட்ஸ்கிகள் பிதற்றும் போது “1944 இல் போர்த்துக்கல், கீறிஸ் (கிரேக்கம்), ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுக்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் செய்த தியாகங்களும் நடத்திய போராட்டத்தின் பெறுபேறுகளும் ஏகாதிபத்தியத்திற்கு இலகுவாக விட்டுக் கொடுக்கப்பட்டன” என்கின்றனர். என்ன அப்பட்டமான ஒரு சேறடிப்பை, ஸ்டாலின் மீதும் சர்வதேச கம்யூனிச இயக்கம் மீதும் செய்கின்றனர். டிராட்ஸ்கிகள் உண்மைக்கு மாறக பிதற்றி தூற்றும் போது “1947 இல் அமெரிக்கா, கீறீஸ் துருக்கி போன்ற நாடுகட்கு ஆயுதங்களை வழங்கியது. இந்த நாடுகளில் ஸ்டாலினால் கைவிடப்பட்ட முதலாளித்துவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் ஒழித்துக் கட்டப்பட்டனர்” என்கின்றனர். பிரான்ஸ், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சி எப்படி விட்டுக் கொடுக்கப்பட்டது என்பதை மட்டும் சொல்ல வக்கற்றவர்கள், இப்படி அவாதூறுகளை கட்டமைக்கின்றனர். பிரான்ஸ், கிரேக்கம் போன்ற நாட்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவ சோவியத்யூனியன் படை அனுப்பியிருக்க வேண்டுமா! அப்பட்டமான ஆக்கிரமிப்புகளை செய்யக் கோருபவர்கள் மார்க்சிஸ்ட்டுகளா? ஒவ்வொரு புரட்சியும் ஒரு எல்லைக்குள் நடக்கின்ற போது, அவை சொந்த பலம் சார்ந்து நடத்தப்படாத வரை அவை ஆக்கிரமிப்பாகவே இருக்கும். இக்காலத்தில் டிராட்ஸ்கிகள் யாரைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறி காட்டிக் கொடுத்தாக ஸ்டாலின் மீது அவதுறைப் பொழிகின்றனரோ, அவர்களை எதிர்த்தே டிராட்ஸ்கிகள் அன்று அணிவகுத்து நின்றனர். அன்று யாரைத் தூற்றி அரசியல் செய்தார்களோ, அவர்களை இன்று கம்யூனிஸ்ட்டுகள் என்று பச்சையாக கூறி அவர்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இது போன்றே யூகோஸ்லாவிய முதலாளித்துவ மீட்பை முடிமறைத்து, ஏகாதிபத்தியத்துடன் கூடிக் குலாவியதை பூசிமொழுகுகின்றனர்.

சோசலிச நாடான அல்பேனியாவுக்கு எதிராக யூகோஸ்லாவியா, 1948 முதல் 1958 வரை அதன் எல்லையில் 470 முறை ஆயுதம் எந்திய தாக்குதல் மூலம் ஆத்திர மூட்டியது. 1944, 1948, 1956, 1960 என நான்கு முறை பெரிய அளவிலான தேசதுரோக முயற்சியில் ஈடுபட்டது. 1960 இல் கிரேக்க பாசிட்டுகளுடனும், அமெரிக்காவின் 7 வது கப்பற் படையுடனும் சேர்ந்து அல்பேனியாவை தாக்கி அழிக்க யூகோஸ்லாவியா முனைந்தது. இதற்கு முன்னமே அமெரிக்காவுடன் பல தொடர்ச்சியான ஒப்பந்தங்களை, யூகோஸ்லாவியா கம்யூனிச உலகுக்கு எதிராக செய்தது. 1951 இல் அமெரிக்காவுடன் யூக்கோலாவியா கையெழுத்தான இராணுவ உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் “சுதந்திர உலகின் பாதுகாப்பு வலிமையை வளர்க்கவும் நிலைநிறுத்தவும் முழு அளவிவில் பங்கு செலுத்த வேண்டும்” என்று அறிவித்ததுடன், ஜக்கிய நாட்டுப் படைக்கு துருப்புகளை வழங்கவும் இது வழி செய்தது. அமெரிக்க துருப்புகள் யூகோஸ்லாவியா இராணுவ பயிற்சியை மேற்பார்வையிடவும், ஒப்பந்தம் கோரியது. 1951 இல் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் யூகோஸ்லாவியா செய்தது. இதில் அமெரிக்கா இராணுவப் பொருட்கள் யூக்கோஸ்லாவியாவுக்கு வந்து சேர்வதையும், அங்கே விநியோகமாவதையும் கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் ‘தங்கு தடையற்ற சுதந்திரம்’  வழங்கப்பட்டது. அத்துடன் “போக்குவரத்து மற்றும் தகவல் அமைப்புகளைப் பார்வையிட முழு சுதந்திரம்” அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. 1952 இல் யூகோஸ்லாவியாவும் அமெரிக்கவும் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. அதில் அமெரிக்கா உதவியை பயன்படுத்தி “அடிப்படையான தனிமனித உரிமைகளையும், சுதந்திரங்களையும், ஜனநாயக நிறுவனங்களையும் வளர்க்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தது. இது போன்று 1954க்கு பின் பல உடன்படிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுடன் செய்தது. 1957 – 1958 க்கும் இடையில் அமெரிகாவுடன் 50 மேற்பட்ட ஒப்பந்தங்களைச் யூகோஸ்லாவியா செய்தது. விரிந்த அளவில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் கம்யூனிச சர்வதேசியத்துக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துடன் சதி திட்டங்கள் பலவற்றில் கையெழுத்திட்டன. இதில் அமெரிக்கா அல்லாத மற்றைய மேற்கு ஏகாதிபத்தியதுடன், கம்யூனிசத்துக்கு எதிராக ஒரு வலைப் பின்னலை அமைத்து, கம்யூனிசத்தை வேரறுக்க சபதம் எற்றது.

சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியையும், சர்வதேச அளவில் கம்யூனிசத்தை எதிர்த்து யூகோஸ்லாவியா நடத்திய முதலாளித்து தாக்குதலுக்கு கையூட்டை எகாதிபத்தியம் தாரளமாக வழங்கியது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் 1963 வரையிலான காலத்தில் ஏகாதிபத்தியங்கள் யூகோஸ்லாவியாவுக்கு கொடுத்த மொத்த உதவி 546 கோடி டாலராகும். இதில் அமெரிக்கா கொடுத்தது மட்டும் 360 கோடி டாலராகும். இதில் பெரும் பகுதி 1950 பின் கொடுக்கப்பட்டது. உத்தியோக பூர்வமான புள்ளிவிபரப்படி 1961 இல் யூகோஸ்லாவியா பன்னாட்டு நிதி அமைப்புகளில் இருந்து பெற்ற தொகை 34.6 கோடி டாலராகும். இது யூகோஸ்லாவியாவின் மொத்த வரவு செலவில் 47.4 சதவீதமாகும். மற்றயை எகாதிபத்தியத்திடம் கையேந்தி பெற்றது உட்பட மொத்தம்  49.3 கோடி டாலராகும். இது மொத்த வரவு செலவில் 67.6 சதவீதமாகும்.

ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி அரசாக, தேசத்தையும் மக்களையும் எகாதிபத்தியத்திடம் விற்ற யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை டிராட்ஸ்கிகள் எதிர்க்கவில்லை. மாறாக அதை ஆதாரித்ததுடன், அதையே கம்யூனிசம் என்று விளக்கம் கொடுத்தனர். டிராட்ஸ்கிகள் அதை பெருமையாக அறிவித்தனர். ஆனால் ஸ்டாலின் இதை எதிர்த்து நின்றார். கம்யூனிசத்தின் சர்வதேசியத்தின் உன்னதமான வர்க்கப் போராட்டத்தை நடத்தினர். யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை அம்பலப்படுத்தி உறுதியான ஒரு கம்யூனிஸ்டாக போராடினர். முதலாளித்துவ மீட்சியை யூகோஸ்லாவியாவின் தலைவர் டிட்டோ ஒரே நாளில் அறிவிக்கவில்லை. மாறாக இதற்காக கம்யூனிஸ்ட்டுகளை தொடாச்சியாக சொந்த நாட்டில் வேட்டையாடினர்.

யூகோஸ்லாவியாவில் டிட்டோ தலைமையிலான கட்சி மார்க்சியத்தை கைவிட்டு செல்லும் போக்கிற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கட்சிக்குள் எழுந்தது. கம்யூனிசத்தை கைவிடவும் முதலாளித்துவத்தை மீட்டெடுக்கவும் 1948-1952 வரையிலான காலத்தில் பாரிய களையெடுப்பை கட்சியில் நடத்தினர். மார்க்சிய லெனிசத்தை அடிப்படையான கோட்பாடாக கொண்ட வர்க்க சக்திகளை ஒடுக்கியதுடன், இரண்டு லட்சம் கம்யூனிஸ்ட்டுகளை கட்சியில் இருந்து அகற்றினர். இது மொத்த கட்சி உறுப்பினர்களில் அரைவாசியாகும். மிகத் தீவிரமாக முதலாளித்துவ மீட்சியை எதிர்த்த 30000 கம்யூனிஸ்ட்டுகளை சிறையில் அடைத்ததுடன், பலத்த சித்திரவதையும் செய்ததுடன், அதில் பலரை கொன்றனர். இந்த கம்யூனிச அழித்தொழிப்பை நடத்தி முடிந்த கையுடன், 1952 இல் “கட்சி என்ற பெயர் இப்போது பொருத்தமில்லை” என்று பிரகடனம் செய்தனர். யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கழகம் என பெயர் மாற்றியதுடன், தன்னை ஒரு முதலாளித்துவ சர்வாதிகார பாசிச அரசாக மாற்றியது. கம்யூனிஸ்சத்தை எதிர்த்து போராடிய எதிர் புரட்சி முதலாளித்துவ கும்பலுக்கு மன்னிப்பு வழங்கியது. சிறையில் கம்யூனிஸ்ட்டுகள் அடைக்கப்பட, முதலாளித்துவவாதிகள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் ஆட்சிகளில் பதவி வழங்கினர். 1951 இல் டிட்டோ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் 11000 அரசியல் கைதிக்கு மன்னிப்பு வழங்கியதை உறுதி செய்தார். கம்யூனிஸ்ட்டுகளை சிறையில் தள்ளியபடி எதிர்புரட்சி கும்பல்களுக்கும், பாசிட்டுகளுக்கும் மன்னிப்பு வழங்கினர். 1962 இல் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்து நாட்டை விட்டே ஒடிய பாசிட்டுகள் உள்ளடங்கிய 1.50 லட்சம் பேருக்கு மன்னிப்பு அளித்து, முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்தினர். ஆனால் டிராட்ஸ்கிகள் இதை கம்யூனிஸ்சத்தின் உன்னதமான பண்பாகவும், ஸ்டாலினை எதிர்த்த போராட்டத்தில் ஒரு தீரமிக்க பாத்திரமாகவும் காட்டத் தயங்கவில்லை.

ஆனால் யூகோஸ்லாவியாவும் அதன் தலைவர் டிட்டோவும் சர்வதேசியத்துக்கு எதிராக அமெரிக்கா ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து, அன்றைய முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் கை கோர்த்து நின்றதே எதார்த்தமாகும். 1950 இல் கொரிய போரின் போது கம்யூனிஸ்சத்தை எதிர்த்த டிட்டோ கும்பல் அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு ஆதாரவாக செயல்பட்டது. கொரியா மக்களின் வீரமிக்க போராட்டத்தை கூட்டாக  ஒருமித்த குரலில் தூற்றினர். டிசம்பா 1ம் திகதி ஐ.நா பாதுகாப்புச் சபையில் பேசிய யூகோஸ்லாவியாப் பிரதிநிதி அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு எதிராக “கொரியப் போரில் முனைப்புடன் குறுக்கிட்டமைக்காக” சீனாவுக்கு எதிராக பேசியதுடன், சீனாவுக்கு எதிரான பொருளாதார தடைக்கு ஆதாரவாக வாக்களித்தனர். இதை சர்வதேச கம்யூனிஸ்ச சமூகமும், ஸ்டாலினும் எப்படி மௌனமாக அங்கிகாரிக்க முடியும்? அமெரிக்காவுடன் அப்பட்டமாகவே சோரம் போய், கம்யூனிச உலகக்கு எதிராக செயல்பட்ட யூகோஸ்லாவியாவை டிராட்ஸ்கியம் ஆதரிக்கலாமே ஒழிய, கம்யூனிஸ்ட்டுகளால் ஒருக்காலும் முடியாது.

1954 இல் வியட்னாம் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக ஜெனிவாவில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. இந்த போராட்டத்தை அமெரிக்கா எகாதிபத்திய நலனுக்கு இசைவாக இணைந்து தூற்ற டிட்டோ தவறவில்லை. அவன் இதை சோவியத் சீனாவின் ‘கெடுபிடி போர்க் கொள்கையின் ஒரு பகடையாக’ வியட்னாமிய மக்களை பயன்படுத்துகின்றனர் என்ற அவதூறு புரிந்தான். டிராட்ஸ்கிகள் கூறும் சோசலிச யூகோஸ்லாவியா இப்படித் தான் தூற்றியது. வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை ‘நல்லெண்ண சமிக்ஞை அல்ல’ என்று கூறி பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு இசைவாக மூலதனத்தின் சூறையாடக்கு பச்சைக் கொடி காட்டினான்.

இது போன்று 1956 இல் கங்கேரியில் எதிர்புரட்சி கலகத்தில் நேரடியாகவே யூகோஸ்லாவியா தலையிட்டது. முதலாளித்தவ மீட்சியை நடத்த முயன்ற துரோகி நேக்கியின் எதிர்புரட்சி கலகத்தை ஆதாரித்து, ஒரு கடித்ததை டிட்டோ வெளியிட்டார். எதிர்புரட்சி தோல்வி பெற்ற போது, துரோகி நேக்கிக்கு கங்கேரிய துரோகத்தில் அடைகலம் கொடுத்தான். நவம்பர் 11ம் திகதி டிட்டோ ஆற்றிய உரையில் முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியை டிராட்ஸ்கிகள் போல் ‘முற்போக்காளர்களின்’ போராட்டம் என்றதுடன், வெல்லப் போவது “யூகோஸ்லாவியாவின் பாதையா அல்லது ஸ்டாலினியத்தின் பாதையா” என்று பிரகடனம் செய்து எதிர் புரட்சியை ஆதாரித்து நின்றான். அமெரிக்காவுடன் கூடிக் கூலாவிய படி எதிர் புரட்சிகளுக்கு உற்ற நன்பனாக யூகோஸ்லாவியா செயல்பட்டது.

1958 இல் லெபனானை ஆக்கிரமிக்க அமெரிக்காவும், ஜோர்டனை ஆக்கிரமிக்க பிரிட்டனும் படைகள் அனுப்பியது. இதை அடுத்த இதற்கு எதிராக உலகளவிய போராட்டங்கள் நடந்தன. படைகளை வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கோரப்பட்டு உலகாளவிய கிளர்ச்சியை அடுத்து, ஐ.நாவில் அவசரக் கூட்டம் நடந்தது. யூகோஸ்லாவியாவின் ஐ.நா பிரதிநிதி அங்கு பேசிய போது “அமெரிக்காவும் மகா பிரிட்டனும் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டிக்கின்றோமா அல்லது அங்கீகரிக்க வற்புறத்துகிறோமா என்பதல்ல பிரச்சனை” என்று பிரகடனம் செய்து ஆக்கிரமிப்புக்கு அப்பட்டமாகவே செங்கம்பளம் விரித்தனர். அத்துடன் இதில் ஐ.நா தலையிடக் கூடாது என்றனர்.

1958 இல் தைவானின் துணையுடன் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக செய்த சதிகளை அம்பலப்படுத்தி சீனா போராடிய போது, யூகோஸ்லாவியா ‘உலகத்துக்கே ஆபத்து’ என்றும் ‘சமாதானத்துக்குக் கேடு’ என்றும் கூறியபடி அமெரிக்க எகாதிபத்தியத்தில் வால்களில் கெட்டியாக தொங்கியது. 1959 இல் சீனா இந்தியா எல்லை மோதலின் போது டிட்டோ கும்பல் அமெரிக்கா கைக்கூலியாக செயல்பட்டு எல்லை மோதலை உருவாக்கிய இந்தியாவுக்கு ஆதாரவாக நின்ற யூகோஸ்லாவியா, சீனாவைத் தூற்றியது. கியூபா பிரச்சனையின் போது கியுபாவுக்கு எதிராக பல அவதூறுகளை தொடர்ச்சியாக செய்தது. “கியுபா புரட்சி அமெரிக்கா நியமங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்த போதே தொல்லைகள் ஆரம்பமாயின”  என்ற புரட்சியைத் தூற்றினான். கியூபப் புரட்சி “புரட்சிப் பாதைக்கு முன்மாதிரியாய் அமைவதைக் காட்டிலும், விதி விலக்காகவே அமைகின்றது” என்று யூகோஸ்லாவியா அவதூறு பொழிந்தது. “புரட்சியில் மட்டும் நம்பிக்கை வைப்பதாக” கம்யூனிஸ்ட்டுகளை குற்றம்சாட்டி ஆயுதப் புரட்சியைத் தூற்றத் தயங்கவில்லை.

லாவோஸ்சி மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக 1961 இல் அமெரிக்கா நேரடியாக தனது இராணுவத் தாக்குதலைத் தீவிரப் படுத்திய போது, யூகோஸ்லாவியா தனது அறிக்கையில் அமெரிக்கா “உண்மையிலேயே லாவொஸின் அமைதி குறித்தும், அந் நாட்டை நடுநிலையாக்குவது குறித்தம் கவலை கொண்டுள்ளது” என்று ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினர். லாவோஸ்சில் பாரிய படுகொலைகளை அமெரிக்கா நடத்தி அம்பலமான போது ‘பழி முழுவதையும் அமெரிக்கா மீது சுமத்தியமைக்காக’ சர்வதேச சமூகத்தையும், போராடிய மக்களை இழிவுபடுத்தியது. அமெரிக்கா படுகொலைக்கு லாவோஸ்சிய மக்களின் போராட்டம் தான் காரணம் என்று பாசிச விளக்கமளித்தது.

1961 இல் அமெரிக்கா ‘முன்னெற்றத்தின் நேசக் கூட்டுத் திட்டம்’ என்ற பெயரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளை இராணுவ பாசிச பலத்தின் மூலம் பலாத்காரமாக இணைத்த போது, லத்தீன் அமெரிக்கா மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். ஆனால் அமெரிக்கா கைக் கூலியாக சீராழிந்த முதலாளித்துவ மீட்சி சொந்த நாட்டில் நடைமுறைப்படுத்திய டிட்டோ “அமெரிக்கா லத்தின் அமெரிக்கா நடுகளின் தேவைகளைப் பெரிய அளவில் நிறைவு செய்ததாக” கூறி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினான். அமெரிக்கா பாசிச வழிகளின் உலகத்தைச் சூறையாட பாலக்காரமாக இணைத்த கூட்டை நியாயப்படுத்தி, சர்வதேச சமூகத்தின் போராட்டங்களை கொச்சைப்படுத்தினான்.

முதலாளித்துவத்தை மீட்ட பின்பாக ஸ்டாலின் காலத்தில் தொடங்கி குருச்சேவ் காலம் வரையிலான பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில், யூகோஸ்லாவியா தனது நிலைபாட்டை மாற்றிவிடவில்லை. ஆனால ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் காலத்தில் சோவியத்யூனியன் தனது நிலைப்பாட்டை யூகோஸ்லாவியா நிலைக்கு கீழ் இறக்கியது. குருச்சேவ் யூகோஸ்லாவியா தலைவர் டிட்டோ போல் ஸ்டாலினைத் தூற்றி, முதலாளித்துவத்தை மீட்ட போதே, இருவரிடையே ஒருமித்த கருத்துகள் உள் நாட்டில் இருந்து சர்வதேச நிலைவரை பொருந்திப் போனது. இதையே டிராட்ஸ்கிகள் குருசேவ் வருகையின் பின்பு யூகோஸ்லாவியாவுடனான சோவியத் யூனியனின் உறவுகளில் நெருக்கம் எற்பட்டது. இராணுவ பாசிச சர்வாதிகாரி என்று ஸ்டாலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து, யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்ற எற்கப்பட்டது. பிராவ்தா பத்திரிகை யூகோஸ்லாவியா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்ற 10 வருட நினைவு தினத்தை நினைவு கூர்ந்ததோடு யூகோஸ்லாவியா சோவியத் மக்கள் இருவரும் ஸ்லாவிய இனத்தைச் சோந்த இரத்த உறவு கொண்ட மக்கள் என்று ஸ்லாவியப் பெருமை பேசியது. சோசலிச இயக்கங்களை தத்துவரீதியில் சிதைத்த பயங்கரவாதப்படுத்திய பெருமை ஸ்டாலினிசத்துக்கேயுரியது என்று கூறி குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை பராட்டினர். கம்யூனிஸ்சத்துக்கு எதிரான டிட்டோ, குருச்சேவ் நிலையுடன் டிராட்ஸ்கிகள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டனர். ஸ்டாலினை தூற்றுவதில் மூவரும் முரண்பாடு இன்றி ஒன்றுபட்டு நின்றனர். ஸ்டாலின் இது வரை கையாண்ட சர்வதேச நிலையை மறுப்பதிலும், அதைக் கொச்சைப்படுத்துவதிலும் முரண்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த போக்கில் ஏகாதிபத்திய நிலையுடன் முரண்பாடற்ற நிலையை இவர்கள் ஐக்கியத்துடன் பின்பற்றினர். இதை குருச்சேவ் மிக அழகாக கூறத் தவறவில்லை. சர்வதேச பிரச்சனையில் யூகோஸ்லாவியாவுக்கும் எமக்கும் இடையில் ‘முழுக் கருத்தொற்றுமையும், இணக்கமும்’  நிலவுவதாக அறிவித்தான். ஆனால் 1960 இல் அமெரிக்கா விமானம் சோவியத்யூனியனில் ஊடுருவி வேவு பார்த்த விவகரத்தில் அமெரிக்காவையே யூகோஸ்லாவியா ஆதாரித்தது. ஜப்பானில் அமெரிக்கா படைகளுக்கு எதிராக மக்கள் போராடிய போது, இதை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று, யூகோஸ்லாவியா 1960 இல் பிரகடனம் செய்தது. இந்தோசீனா கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்ட அனைத்து வகையிலும் யூகோஸ்லாவியா உதவியது. 1960 இல் ஐ.நா கொடியுடன் சட்டவிரோதமாக கங்கோ நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, ஐ.நாவில் அமெரிக்காவுக்கு ஆதாரவாக வாக்களித்ததுடன், கங்கோ மக்கள் மேல் குண்டு போட தனது விமானப் படையை அனுப்பியது.

இப்படி யூகோஸ்லாவியா உலகளவில் எதிர்புரட்சிகர பாத்திரத்தை அமெரிக்கா தலைமையிலான எகாதிபத்தியத்துக்கு துணையாக நின்று அடிபணிந்து செயல்பட்டது. மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய மூலதனம் உலகை அடக்கியாண்ட போது, டிட்டோவின் ஒத்துழைப்புக்கு குருசேவ்வும் ஆதாரவளித்து நின்றான். இருவரும் முதலாளித்துவ மீட்சியை விரைவுபடுத்தவும், பரஸ்பரம் கோட்பாட்டு ஆதாரவை பரிமாரிக் கொண்டனர். இதை விரிவாக கட்டுரையின் தொடர்ச்சியில் பார்ப்போம். இருவரும் ஸ்டாலின் கால கம்யூனிச இயக்கத்தின் வர்க்க குணம்சத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் அதன் வெற்றிகளையும் சிதைப்பதில் ஒன்றுபட்டனர். ஸ்டாலினைத் தூற்றிப் பிழைப்பதில் யார் தலை சிறந்தவர்கள் என்பதில் போட்டியிட்டனர். இதனுடன் டிராட்ஸ்கியவாதிகளும் களம் இறங்கினர். இந்த மூன்று கும்பலுடன் ஏகாதிபத்தியம் முரணற்ற நிலையையில் களம் இறங்கி, அவதூற்றை சாரமாக கொண்டு வர்க்க அரசியலை கழுவேற்றினர்.

யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப்பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக சிதைக்கப்பட்டது. அதற்குமுன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்ககட்சி என்பது மறுக்கப்பட்டது. “பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்ற கருவி, அதாவது சோசலிச அரசமைப்பு மேலும் மேலும் அவசியமற்றதாகிவிட்டது” என்று அறிவித்ததுடன் புதிய அரசியல் சட்டத்தை அழுல்படுத்தினர்.  மாறாக அனைத்து மக்களின் கட்சி என்ற பெயரில், ஜனநாயகம் என்ற சுரண்டும் உள்ளடகத்தை கம்யூனிச கழகமாக உட்புகுத்தியதன் மூலம், முதலாளித்துவ கட்சிக்கான வர்க்க முகத்தை மறைத்தனர்.

1950 இல் ‘அரசுக்கு சொந்தமான எல்லாத் தொழிற்சாலைகளையும், சுரங்கங்களையும் தகவல்துறை,  போக்குவரத்து, காடுகள், வேளாண்மை பொதுஜன பயன்சார்ந்த அனைத்தையும் ‘தொழிலாளர்சுயநிர்வாகத்திடம்’ கொடுத்தது. (இந்த அரசியல் உள்ளடக்கம் டிராட்ஸ்கி 1920 களில் லெனுக்கு எதிராக கோஷ்டி அமைத்து பிளவு நடவடிக்கையில் ஈடுபட்டபோது வைக்கபட்டதாகும்) இதன்மூலம் தனியார் உற்பத்தி, தரகு முதலாளித்துவமாக மாறியது. ‘தொழிலாளர்கூட்டுக்கள்’ என்ற பெயரில் சுயட்சையாக இயங்கவும், வாங்கவும் விற்கவும், விலையை சொந்தமாக தீர்மானிக்கவும், கூலியை தீர்மானிக்கவும் லாபத்தை பகிரவும் அனுமதிக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தியது. இதை ‘உயர் வடிவிலான சோசலிச உடமை’ என்றனர். பாட்டாளி வர்க்க புரட்சியில் உற்பத்தியை அரசுடமையாக்குவதை இது மறுக்கின்றது. அதாவது உற்பத்தியை சமூகத்தின் சொத்தாக பேனுவதை அழித்து ஒழித்து, முதலாளித்துவ மீட்சிக்கான பாதையை செப்பனிட்டனர். ‘டூரிங்குக்கு மறுப்பு’ என்ற நூலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் “பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்திச் சாதனங்களை அரசுடமையாக மாற்றுகிறது” என்பதை டிட்டோ அப்பட்டமாக மறுத்தான். இதன்மூலம் இதைவலியுத்திய சர்வதேச கம்யூனிச நிலைப்பாட்டை ஒட்டிய ஸ்டாலின் நிலைப்பாட்டை மறுத்தான். இதையே டிராட்ஸ்கியம் “ஸ்டாலினை சோசலிச உலகின் மன்னராக முடிசூடிவிட விரும்பவில்லை” என்று கூறி நியாப்படுத்தினர். சோவியத் யூனியனில் ஆலைகளை உற்பத்தியாளர்களிடம் ஒப்படைத்து ‘உற்பத்தியை ஒழுங்கமைக்க’ கோரிய போது, லெனின் கடுமையாக விமர்சனம் செய்தார். அராஜாகவாத்தின் அடிப்படைக் கோட்பாடான இது, முதலாளித்துவ மீட்சிக்கு இது ஒரு வழிப்பாதையாகும். லெனின் இது தொடர்பாக விமர்சிக்கும் போது  “நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனித்தனி தொழிற்சாலைகள் அல்லது தனித்தனித் தொழில்முறைகளைச் சொந்த தொழிலாளர்கள் தமது உற்பத்தியைத் தமக்கே உடைமையாக்கிக் கொள்வதையும் அரசதிகாரத்தின் ஆணைகளைப் பலவீனப்படுத்தவும், அல்லது தடைப்படுத்தும் உரிமையையும் சட்டபூர்வமாக்குவதும் சோவியத் அதிகாரத்தின் ஆதாரக்கோட்பாடுகளைப் படுமோசமாகத்திரிப்பதும், சோசலிசத்தை அடியொடு கைகழுவி விடுவதுமாகும்” என்றார். ஸ்டாலினை மறுத்தன் உள்ளடக்கம் இங்குதான், இப்படித்தான் முதலாளித்துவ மீட்சியாக இருந்தது. ஸ்டாலினை மறுத்து அவதூற்றைப் பொழிந்தது என்பது, முதலாளித்துவ மீட்சியை நடைமுறை ரீதியாக இலகுபடுத்தவே. ஸ்டாலின் உயர்த்தி பிடித்த லெனினிய கோட்பாட்டை மறுக்க, ஸ்டாலினை அவதூறு செய்ய வேண்டியிருந்தது.

‘இரண்டாம் உலகயுத்தத்ததைத் தொடர்ந்து யூகோஸ்லாவியாவில் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு, உழைப்பு கூட்டுறவு உருவாக்கப்பட்டது. ஆனால் பணக்கார விவசாய பொருளாதாரத்தின் மேல் கைவைக்கவில்லை’  ஸ்டாலினினும் சர்வதேச கம்யூனிச இயக்கமும் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட்டுகளும் மார்க்சிய நிலையை அமுல்படுத்தக் கோரினர். பணக்கார விவசாயிகளின் நிலத்தை கூட்டுமையாக்க கோரினர். ஆனால் டிட்டோ கும்பல் இதை மறுத்து முதலாளித்துவ மீட்சியை முன்னெடுத்த போதே, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நிலையை மறுத்து அவதூறு புரிய வேண்டியிருந்தது. இப்படி அவதூறு செய்தபடி 1950 ல் யூகோஸ்லாவியா அந்நிய வர்த்தகம் மீதான அரசின் எகபோகத்தைக் கைவிட்டதுடன், அதை தனியாருக்கு தரை வார்த்தனர். 1953 ல் டிட்டோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “குடிமக்கள் குழுக்களுக்கு தொழில் நிறுவனங்களை நிறுவவும் உழைப்பாளரைக் கூலிக்கமர்த்தவும் உரிமையுண்டு…. அரசுப் பொருளாதார நிறுவனங்களிடமிருந்து அசையாச் சொத்துகளை வாங்க தனியாருக்கு உரிமையுண்டு” என்று பிரகடனம் செய்தான்.  ‘1951 ல் விவசாயக் கூட்டுமையை கைவிடுவதாக அறிவித்’ததுடன், விவசாயிகளின் கூட்டுமையை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்து, அதை கலைக்கத் தொடங்கியது. 1950 ல் 6900க்கும் அதிகமாக இருந்தகூட்டுறவு அமைப்புகள், 1953 ல் 1200 ஆக குறைந்து. இது 1960 இல் 147 ஆகிப் போனது. முற்றாகவே அவை தனியார் மயமாகியது. கூட்டுடமை கைவிடப்பட்டு முதலாளித்துவ மீட்சி அரங்கேறிய போது ஸ்டாலின் மீதான தூற்றல் உயர்ந்த மட்டத்துக்கு தாவியது. இந்த மீட்சியை சோசலிசத்தின் முன்னேற்றம் என்றனர். டிராட்ஸ்கிகள் ஸ்டாலினிடம் இருந்து பாட்டாளி வர்க்க அதிகாரத்தை களைந்த, ‘ஜனநாயகபூர்வமான சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றம்’ என்று வர்ணித்தனர். இவருடன் குருச்சேவ் இணைந்ததுடன், முதலாளித்துவ மீட்சியை சோவியத் யூனியனிலும் தொடங்கினர்.

டிட்டோ, குருச்சேவ், டிராட்ஸ்கிய கும்பல் இணைந்து நடத்திய கச்சேரியில், ஸ்டாலின் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை ஒழித்துக்கட்டி நிறுவிய ‘முதலாளித்துவ மீட்சியை’ சோசலிசமாக காட்டினர். முதலாளித்துவ மீட்சி என்பதையே கோட்பாட்டு ரீதியாக மறுத்தனர். இவர்கள் மறுக்கும் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக வருணித்து 1955 ல் டிட்டோ கூறும்போது, “யூகோஸ்லாவியாவில் சிறுபண்ணைகள் ஏதெனுமொரு விதத்தில் ஒன்றிணையும் நாள்வரும் என்ற எண்ணத்தை நாம் கைவிட்டு விடவில்லை. அமெரிக்காவில் இதை எற்கனவே செய்து விட்டனர். நாம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும்” இப்படி அமெரிக்காவின் தனியார் மூலதனக் குவிப்பையே கூட்டுடமையாக்கல் என பிரகடனம் செய்தான். எழை விவசாயிகளின் நிலத்தை சூறையாடிக் குவித்ததையே, சோசலிச கூட்டுடமையாக்கல் என டிட்டோ அறிவித்தான். இக்காலத்தில் தான் குருச்சேவ் டிட்டோவை ஆதாரித்து சொந்தநாட்டில் முதலாளித்துவ மீட்சியை தொடங்கி வைத்தான். டிராட்ஸ்கிகள் இதற்கு ஆரத்தி எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

யூகோஸ்லாவியாவில் முதலாளித்துவ மீட்சியை ‘அமெரிக்க வகை’ கூட்டுடமையாக்கல் என்று கூறி, டிட்டோ அதை அப்பட்டமாக அமலுக்கு கொண்டு வந்தான். இதை டிட்டோ கொள்கை ரீதியாக விளக்கும்போது, “கூட்டடமையாக்கமும் உடமைப்பறிப்பும் ஒன்றே” என்றும் “இது கிராமப்புற பண்ணையடிமை முறையை பாதுகாத்து வறுமையை நீடிக்க வைக்கின்றது” என்றும் “பொருளாதார சக்திக்கிடையில் தடையில்லாத போட்டி வறுமையை ஒழிக்கும்” என்றும் பிரகடனம்செய்தான். முதலாளித்துவம் வறுமையை ஒளிக்கும் என்றான்.  இதை குருச்சேவ், டிராட்ஸ்கிய கும்பல் ஆதாரித்து நின்றனர். ஸ்டாலினிய பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகாரத்தை ஒழிப்பதன் மூலம் இதை நிறுவமுடியும் என்று ஒரேவிதமாக கச்சேரி வைத்தனர். இதன் அடிப்படையில் 1953 ல் உருவாக்கிய அரசு ஆணையில் “நிலம் வாங்கவும், நிலம் விற்கவும், கூலிக்கு ஆட்களை அமர்த்தவும், உற்பத்தியின் கொள்முதலை தனியாரிடம் வழங்கவும், குத்தகைக்கு நிலத்தைவிடவும்” அனுமதிக்கும் வகையில் சட்டத்தையே திருத்தினர். நிலம் அமெரிக்கவகை நிலக் குவிப்புக்கு இசைவாக சட்டம் தன்னை தகவமைத்துக் கொண்டது. தடையில்லாத வகையில் சொத்துக் குவிப்புக்கு, ஸ்டாலின் களப்பலியானர். இதன்மூலம் யூகோஸ்லாவியாவில் பணக்காரனுக்கும் எழைக்கும் உள்ள இடைவெளி அதிகாரித்துச் சென்றது. இதை விவசாயத் துறைக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியே 1959 ல் ஒப்புக்கொண்டர். அவர் தனது அறிக்கையில் “மொத்த தனியார் விவசாயிகளில் 5 ஹெக்டேருக்கு குறைந்தவர்கள் 70 சதவீதமாக இருந்தபோது, அவர்களிடம் மொத்த விவசாய நிலத்தில் 43 சதவீதமே சொந்தமாக இருந்தது. 10 ஹெக்டேருக்கு அதிகமாக வைத்திருந்த பணக்கார விவசாயிகள் 13 சதவீதமாகும். ஆனால் இவர்கள் 33 சதவீத நிலத்தை சொந்தமாக வைத்திருந்தனர். 10 சதவீதமான விவசாய குடும்பங்கள் நிலத்தை ஆண்டுதோறும் விற்கின்றனர் அல்லது வாங்குகின்றனர்” அமெரிக்கவகை சோசலிச கூட்டுடமையாக்கல் இப்படி விரைவுபட்டது. 1958 யூகோஸ்லாவிய போலி கம்யூனிச இதழ் ஒன்றில் வெளியான தகவல் ஒன்றில் “எட்டு ஹெக்டேருக்கு அதிகமாக நிலம் வைத்திருந்த குடும்பங்கள், 50 சதவீதமான விவசாய குடும்பங்களை 1956 ல் கூலிக்கு அமர்த்தியதை” வெளியிட்டு, அமெரிக்கவகை கூட்டுடமையாக்கல் விரைவுபடுவதை ஏற்றுக்கொண்டது. 1962 இல் ‘இரண்டு ஹெக்டேருக்கு குறைவான விவசாயக் குடும்பங்களின் வருமானத்தில் 70 சதவீதம் சொந்த உழைப்பை பணக்கார விவசாயிகளுக்கு விற்று கிடைக்கும்’ வருமானத்தில்தான், தம் வாழ்க்கையை ஒட்டினர். அமெரிக்கவகை கூட்டுடமையாக்கல் மேலும் விரைவுபடுத்தியதை இது நிறுவியது. 1963 ல் யூகோஸ்லாவியாவில் “நிலஉச்சவரம்பு 10 ஹெக்டேராக இருந்த போதும், அதைவிட அதிகமான நிலத்தை சொந்தமாக கொண்ட 1000க்கும் மேற்பட்ட பணக்கார விவசாயிகள் இருந்ததுடன், 30 ஹெட்டருக்கு அதிகமாக நிலத்தை கொண்டிருந்தனர்” அரசு புள்ளி விபரங்களே இப்படி இருந்தபோது இதை சோசலிசம் என்றனர். இதை குருச்சேவ்வும், டிராட்ஸ்கிகளும் வானளவு புகழ்ந்து அங்கீகரித்தனர்.

முதலாளித்துவ மீட்சி நிலத்துக்கு வெளியில் பல்துறைகளில் பல்கிப் பெருகியது. 1953ல் உருவாகிய சட்டம் ஒன்று அன்னிய ஏகபோக நிறுவனங்களுடன் தொழில் நிறுவனங்கள் உடன்பாடுகளை செய்ய வசதியளித்தது. 1956 ல் உள்ளாச்சி அமைப்புகள் வரிகளை வசூலித்து தனியார் முதலீட்டை உருவாக்க ஊக்குவித்தது. யூகோஸ்லாவியாவின் முதலீட்டு வங்கி தனது அறிக்கை ஒன்றில் 1952 க்கும் 1956 க்கும் இடையில் மொத்த மூதலீட்டில் 32.5 சதவீதம் வெளிநாட்டு பணம் என்பதை தெரிவித்தது. அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் தீன்ரஸ்க், யூகோஸ்லாவிய மூலதனம் பெரும்பாலும் மேற்கத்தைய நாடுகளில் இருந்ததான் கிடைக்கிறது என்றார். ஸ்டாலின் ஏன் தூற்றப்பட்டார் என்பதும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகாரத்தை என் வெறுக்கின்றனர் என்பதற்கான எதார்த்த உள்நாட்டு கொள்கை நிர்வாணமாக்கி விடுகின்றது.  ஆனால் டிராட்ஸ்கிகள் “ஸ்டாலினிச அதிகாரம் ஜார் ஆட்சியிலிருந்து சீதனமாய் பெறப்பட்ட பின்தங்கிய பொருளாதாரநிலை, அதிகார இயந்திரம், சர்வாதிகார கருத்தியல் தொடர்ச்சி இவைகளில் இருந்து தொடங்கியது” என்கின்றனர். ஸ்டாலினை இப்படித்தான் தூற்றினர். தூற்றியபடிதான் டிட்டோ நாட்டை ஏகாதிபத்திய மூலதனத்துக்கு விற்றான். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, அதன் அதிகாரத்தை ஜார் ஆட்சியின் சீதனம் என்றனர். பின்தங்கிய பொரளாதாரத்தை சார்ந்து ஸ்டாலின் அதிகாரம் நிலவியதாக கூறி, நவீன உற்பத்திக்கும் அதன்வகை ஆட்சி அமைப்புக்கும் கதவை திறக்ககோரினர்.  டிராட்ஸ்கிகள் “புரட்சியை சூழவுள்ள நிலைமைகளை எதிரிடும் தத்துவப் பலமும் மனிதக் குணங்களும் ஸ்டாலினிடம் இருக்கவில்லை என்பதோடு புரட்சியை உருக்குலைக்கும் நடைமுறைகளும் தொடர்ந்து வளர்ந்தன” என்று கூறினர். நாட்டையும் பாட்டாளி வர்க்க சர்வாதிரத்தையும் சூழவுள்ள நிலைமைக்கு இசைவாக மாற்றவேண்டும் என்றனர். இதைச் செய்த குருச்சேவ், டிட்டோ கும்பலின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக வருணித்து அதை ஆதாரிக்கும் இவர்கள், பாட்டாளி வாக்கத்தின் எதிரியாக தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர். இதை உருவாக்கும் தத்துவப்பலத்தை ஸ்டாலின் கொண்டிருக்கவில்லை என்பதே, டிராட்ஸ்க்சியத்தின் பலமான குற்றச்சாட்டு. இதை மூர்க்கமாக எதிர்த்த ஸ்டாலின் குணத்தை மனிதகுணமற்ற செயலாக டிராட்ஸ்கியம் வர்ணிக்கின்றது. குருச்சேவ்,  டிட்டோ வகைப்பட்ட மனிதகுண முதலாளித்துவ ஜனநாயகத்தைப் போற்றி,  இதற்கு எதிரான ஸ்டாலின் நிலையை  உருக்குலைக்கும் நடைமுறை என்று அவதூறை பொழிந்தனர். தொடர்ச்சியாக டிராட்ஸ்கியம் தன்னைத்தான் அம்பலப்படுத்தியபோது, தமது முந்தியநிலைக்கு சாயம் அடிப்பது அவசியமாகியது. ஸ்டாலினிசத்துடன் ஏற்பட்ட மோதல் டிட்டோவை பிற்காலத்தில் சோவியத் அணியும் அல்லாத முதலாளிய அணியும் அல்லாத அணிசேரா நாடுகளின் அணி என்ற கருத்துக்கு துரத்திவிட்டது. டிட்டோவின் சோசலிசப் போக்கை ஸ்டாலினிச அதிகாரத்தின் போக்குக்கு எதிரான சோசலிசப் பிரயத்தனமாகவே காணவேண்டும் என்றனர்.

இப்படித்தான் டிராட்ஸ்கிய கோட்பாடுகள் அலைபாய்ந்தன. சோசலிசமும் அல்லாத முதலாளித்துவமும் அல்லாத வர்க்கமற்ற நிலைக்கு பிற்காலத்தில் யூகோஸ்லாவியா சென்றதாக டிராட்ஸ்கியம் பிதற்றுகின்றது. மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுக்கின்றது. சோசலிசமும் அல்லாத முதலாளித்துவமும் அல்லாத சமுதாயம் கம்யூனிச சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம். அப்படியானல் யூகோஸ்லாவியா கம்யூனிச சமூகமாக மாறிவிட்டதா!? இதை டிராட்ஸ்கிய கோட்பாட்டின் உள்ளடகத்துக்கு விட்டுவிடுவோம். ஸ்டாலின் அவதூறுகளில் பிறக்கும் கள்ளக்குழந்தைகள், இப்படி அப்பன் பெயர் தெரியாத அனாதைக் குழந்தையாக பிறப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் டிராட்ஸ்கியம் ஸ்டாலினுக்கு எதிரான டிட்டோவின் முதலாளித்துவ மீட்சியை  ‘சோசலிசப் பிரயத்தனமாகவே காணவேண்டும் என்று கூறத் தவறவில்லை. அதேநேரம் ஒன்றுக்கொன்று முரணாக இதை சோசலிசநாடு என்று சொன்னதை மேலே பார்த்தோம். பாட்டாளி வர்க்க ‘ஸ்டாலினிச அதிகாரத்தின் போக்குக்கு’ எதிரான சோசலிச முயற்சியாக இதை டிராட்ஸ்கிய கோட்பாடுகள் வரையறுத்தன. நான்காம் அகிலம் தன் விபச்சாரத்தை மூடிமறைக்க பிற்காலத்தில் நடந்தது என்று பூச்சூட்டி விடுகின்றனர். குருச்சேவ்வின் ஆட்சி இருந்த காலத்தை டிராட்ஸ்கியம் ‘தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகள்’ என்றே கூறுகின்றனர். மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறுக்கும் இவர்கள், அதன்மேல் தமது பொம்மை ஆட்சியை நிறுவவே விரும்பினர். முதலாளித்துவ மீட்சியை விரைவு படுத்தவே விரும்பினர். இதனால் அதை தொழிலாளர் அரசு நடக்கும் ஆட்சி என்கின்றனரே ஒழிய, பாட்டாளி வர்க்க ஆட்சி பற்றி இவர்கள் பேசுவதில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வர்க்கப் போராட்டம் பற்றி விரிவான எல்லைக்குள் எதையும் மூச்சுவிடுவதில்லை.

குருச்சேவ்வுக்கு சாமரம் வீசியபடி, டிட்டோவின் முயற்சியை சோசலிச முனைப்பாகவும் முதலாளித்துவமற்ற போக்காகவும் காட்டியபடி டிராட்ஸ்கிய கோட்பாடுகள் வளர்ச்சி பெற்றன. அதை மெய்பிக்கும் வகையில் டிட்டோ அரசு செயல்பட்டது. தொழிலாளர் அரசாக, தொழிலாளார் மேற்பார்வையில் தனியார்மயமாக்கிய நிறுவனங்களில் நிலைமையை ஒட்டி 1958 களில் எழுதிய உள்சுற்று கடிதம் ஒன்றில் “சுயநிர்வாக தொழில்துறையில் தொழிலாருக்கும் உயர்அதிகாரிக்கும் இடையில் சம்பளவிகிதம் 40 மடங்கு அதிகமாக இருப்பதையும், சில தொழல்நிறுவனத்தலைவர்களின் போனஸ் உற்பத்தி மையத்தில் மொத்த தொழிலாளர்கள் பெறும் மொத்த கூலிக்குசமமாககூட இருந்தது” சோசலிச முனைப்பாக முதலாளித்துவம் அல்லாத தொழிலாளர் அரசு என்று கூறியபடி, முதலாளித்துவ மீட்சியை கொள்வதை காணவிடாது ஸ்டாலின் அவாதூறுகளால் தங்கள் கண்ணையே தோண்டியெடுத்தனர்.

ஆனால் முதலாளித்துவ மீட்சி நாலுகால் பாய்ச்சலில் முன்னெடுக்கப்பட்டது .1961 ல் “அந்நியச் செலாவாணியை வாங்கிட தனியாருக்கு உரிமையுண்டு” என்று டிட்டோ அறிவித்தான். 1963 ல் தனியார் மூலதனத்தை வளர்க்கும் கொள்கையை ஊக்கவிக்கப்பட்டது. 1963 இல் யூகோஸ்லாவியாவில் 1.15 லட்சத்துக்கு மேற்பட்ட தனியார் மூலதனங்கள் காணப்பட்டது. இது தொடர்ந்து பெருகிச் சென்றது. இது சட்டபடி 5  பேரை கூலிக்கு அமர்த்த அனுமதித்த போதும், 10 மடங்கு முதல் 500 க்கும் மேற்பட்டவரைக் கூட தனியார் உற்பத்தி கொண்டிருந்தது. அத்துடன் சில தனியார் விற்பனை 10 கோடி தினாராகவும் இருந்தது.  டிராட்ஸ்கியம் வரையறுத்த முதலாளித்துவமும் அல்லாத சோசலிச முனைப்பில் மூலதனம் குதுகலத்தால் கலகலத்தது. ஸ்டாலின் அவாதூறுகள் மூலம் ஸ்டாலினிய கால சோசலிச உள்ளடங்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.  1961 ல் யூகோஸ்லாவியாவில் வெளியான செய்தி ஒன்றின்படி “சிலரது வருமானம் ஒரு மாதத்துக்கு 10 லட்சம் தினாராக               இருந்தது. ஒரு முதலாளித்துவ நாட்டின் நிலைக்கு முதலாளித்துவ சர்வாதிகார அடக்கு முறைமூலம் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டனர். சொத்துடைய வர்க்கத்தின் சுரண்டும் ஆட்சி யூகோஸ்லாவிய மக்களின் மேல் நிறுவப்பட்டது. யூகோஸ்லாவியாவில் “தனியார் வாணிபமும், தனியார் சேவை நிறுவனங்கள்,  தனியார் வீட்டுவசதி அமைப்பு, தனியார் போக்குவரத்து, தனியார் வங்கி”  என்று 1960 களில் பெரும் எண்ணிக்கையில் தனியார்துறை பெருகிவந்தது.  1961 ல் பெல்கிரெட்டில் வெளியான ஒரு பத்திரிகையில் “1960 இல் 116 தொழில்நிறுவன உரிமையாளர்கள் ஒவ்வெருவரும்  ஒருகோடி தினாருக்கு அதிகமான வருமானத்தை பெற்றனர். சிலர் 7 கோடி தினாரை பெற்றதாக செய்தி வெளியிட்டது. யூகோஸ்லாவியாவின் ஆட்சி மூலதனத்தின் ஆட்சியே ஒழிய வேறு ஒன்றும் அல்ல. ஸ்டாலின் சரியாக கூறியது போல், டிட்டோவால் நிறுவப்பட்ட சர்வாதிகாரம் முதலாளித்துவ சர்வாதிகாரமேயாகும்.

யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்டாலின் தூற்றப்பட்டார். ஸ்டாலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கபட்ட  சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்டாலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிச இயக்கமும் படிப்படியாக யூகோஸ்லாவியா நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது. உலகம் எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்கூலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதேநேரம் தமது முதலாளித்துவ மீட்சிக்கான தங்கள் நோக்கத்தில், தமக்குள் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில், குருச்சேவ் டிட்டோவின் சீடனானான். டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில், மக்களின் புரட்சிகர போராட்டங்ககளிலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளிலும், அமெரிக்காவின் சார்பாக அப்பட்டமாக செயல்பட்டது. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சாமரம் வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.

1951 இல் ஸ்டாலினை மறுத்த யூகோஸ்லாவிய கட்சி, வெறும் கழகமாக மாறியதை அடுத்து, யூகோஸ்லாவிய கழகப் பத்திரிகை ஒன்று 1954 இல் எழுதியது “ஒட்டு மொத்தமாக சோசலிசத்துக்குள் குதித்து உலகமே சோசலிசமாக மாறிவிட்டது” என்று. யூகோஸ்லாவியா அரசு வெளியிட்ட நூல் ஒன்று “சோசலிசமா முதலாளித்துவமா என்ற பிரச்சனை ஏற்கனவே உலக அளவில் தீர்க்கப்பட்டு விட்டது” என்று எழுதியது.  இப்படி கூறியபடி நடந்த முதலாளித்துவ மீட்சியை, டிராட்ஸ்சிகள் ஆதாரித்தனர். டிராட்ஸ்கிய அரசியல் கோட்பாடுகள் இதை தழுவி நின்றன. டிராட்ஸ்கிகள் முதலாளித்துவமல்லாத சோசலிச முனைப்பாக, ஸ்டாலின் மறுப்பாக  இதை காட்டியே முதலாளித்துவ மீட்சியை மறுத்தனர். ஒட்டு மொத்தத்தில் ஏகாதிபத்தியங்களின் ‘உலக த்தை’யே, சோசலிசமாக மாறிவிட்டது என பெருமையாக பேசி போற்றினர். சோசலிசமா, முதலாளித்துவமா என்பது தீர்க்கப்பட்டு விட்டது என்ற வரையறையால், கம்யூனிச இயக்கமே நஞ்சூட்டப்பட்டது. ஸ்டாலின் பாட்டாளி வர்க்க நிலை இப்படி உயிருடன் கொல்லப்பட்ட போது, ஏகாதிபத்தியங்கள் குதுகலித்தன.

உலகளவில் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்துவதை கொச்சைப்படுத்தினர். பலாத்காரம் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதையும் தூற்றினர். “பலாத்காரப் புரட்சி மூலம் சமுதாய முரண்பாடுகளை தீர்க்கும் வழி தேவையற்ற ஒன்றாக ஆகிவருகின்றது” என்று யூகோஸ்லாவியா அறிவித்து, உழைக்கும் மக்களின் முதுகில் குத்தினர். உழைக்கும் மக்களை ஆதாரிப்பதாக, அவர்களின் நலனுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட டிராட்ஸ்கிகள், யூகோஸ்லாவியாவின் இந்த நிலைப்பாட்டை ஆதாரித்து நின்றனர். முதலாளித்துவ மீட்சி அல்ல. இது ஸ்டாலின் மீதான அதிகாரத்துவ மறுப்பு என்றனர். முதலாளித்துவ மீட்பு அல்லாத சோசலிச முனைப்பு என்றனர். ஏன் இதை ‘சோசலிசம்’ என்று கூடச் சொன்னார்கள்.

டிட்டோ ‘அமைதி வழிப் போட்டியின்’ மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியை கைபற்ற முடியும் என்று அறிவித்தான். முதலாளித்துவ உலகில் நிலவும் சூறையாடும் ஜனநாயகத்தின் நெம்புகோலை தாங்கி நிற்பதன் மூலம், தொழிலாளி வர்க்கம் தனது நலனை அடைய முடியும் என்றான். இதை ஸ்டாலின் மறுத்தால், ஸ்டாலினை ஒரு கொடுங்கோலன் என்றனர். உலகில் ‘அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை’ உருவாக்குவதே பாட்டாளிவர்க்கத்தின் கடமை என்று டிட்டோ அறிவித்தான். இதற்கு மாறாக ஸ்டாலின் வர்க்க முரண்பாட்டைத் தூண்டி, அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை உலகளவில் தகர்த்த ஒரு அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரி என்றான். ஸ்டாலினும், ஸ்டாலின் வழிப்பட்ட அரசியலும் துடைதெறியப்பட வேண்டும் என்றான். இதையே குருசேவ் ‘அமைதி வழிப் பொருளாதார போட்டியின்’ ஒற்றுமையை, ஒத்துழைப்பை முதலாளி வர்க்கத்துடன் நல்க பட்டாளி வர்க்கத்தைக் கோரினான். இதை எதிர்த்த ஸ்டாலின் நிலைப்பாட்டைக் கொண்ட மார்க்சிய வாதிகள் ஈவிரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட்டனர். டிராட்ஸ்கிகள் குருச்சேவின் இந்த நிலைப்பாட்டை ஆதாரித்தனர். முதலாளித்துவ மீட்பை மறுத்த இவர்கள், குருச்சேவின் அரசியலுக்கு பாய்விரித்தனர். டிட்டோ அரசியல் தந்தையாக;  டிராட்ஸ்கிகள் தாயாக மாறி, கள்ளக் குழந்தையாக குருச்சேவை பெற்றுப் போட்டனர். ஸ்டாலினை தூற்றுவதில், ஸ்டாலின் அரசியலை புதைப்பதில் குடும்பமாகவே ஒன்றுபட்டு புதைகுழியை வெட்டினர்.

குருசேவ் – டிட்டோ இருவரும் மார்க்சியத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டுயெடுத்து முன்வைத்த கோட்பாடுகளை பரஸ்பரம் “ஆக்கபூர்வமான வளாச்சி” என்ற கூறிக் கொண்டனர். இதை எதிர்த்தவர்களை வரட்டுவாதிகள் என முத்திரை குத்தினர். இதை எதிர்ப்பவார்கள் ஸ்டாலினிய அதிகாரத்துவ கொடுங்கோலர்களின் சர்வாதிகாரப் போக்குக்கு இசைவானவர்கள் என்றனர். ஸ்டாலினுக்கு மாற்றான தமது பாதையே சோசலிசப் பாதை என்றனர்.  இதை டிட்டோ கூறிய போது “உலகம் மனிதகுலம் தடுத்து நிறுத்த முடியாதபடி பல்வேறு வழிகளில் சோசலிச சகாப்தத்தினுள் பெரிய அளவில் நுழைந்து கொண்டிருக்கின்றது” என்று  முதலாளித்துவ மீட்சியை கூறினான். குருச்சேவோ புரட்சிகளை “நாடாளுமன்ற பாதையில்” நடத்த முடியும் என்றான். நாடாளுமன்ற பாதை அல்லாத வழிகளில் புரட்சியை நடத்தவும், நடத்த துண்டிய ஸ்டாலினின் மார்க்சிய வழியை, கொடுங்கோலர்களின் வழி என்றனர். “சமரச‌ற்ற வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற ஸ்டாலின் வழியை நிராகரித்து, அமைதி வழியில் சோசலிசத்தை கட்ட வேண்டும் என்பதே எமது வழி” என்று குருச்சேவ் – டிட்டோ கும்பல் உலகுக்கு அறிவித்தது. இந்த பாதையில் தடுத்த நிறுத்த முடியாத வகையில் பல்வேறு வழியில் சோசலிச சகாப்தத்துக்குள் உலகம் செல்வாதாக கூறி, முதலாளித்துவ மீட்சியை நடத்தினர். டிராட்ஸ்கிகள் புல்லரிக்க, ‘தமது கடந்தகால அரசியல் வழி சோவியத்யூனியனில் நனவாகிவிட்டது’ என்று கூறி, தமது குதுகலத்தை பிரகடனங்கள் மூலம் ஆதாரித்தனர். ஸ்டாலினை கழுவேற்றிய அந்தக் கணமே குருச்சேவ்  “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ரசியாவில் இனிமேலும் அவசியமில்லை” என்று கூறியதுடன் “மக்கள் அனைவரினதும் அரசை” பிரகடனம் செய்து முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாக செய்தான். ஆனால் லெனின், “ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிந்துள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்துக்கும் வர்க்கமற்ற சமுதாயத்துக்கும் அதாவது கம்யூனிசத்துக்கும் இடையிலுள்ள வரலாற்றுக் காலகட்டம் முழுவதுக்கும் அவசியம்” என்றார்.

குருச்சேவ் – டிட்டோ கும்பல் முதலாளித்துவ மீட்சியில் மேலும் முன்னேறி “அனைத்து மக்களின் அரசு” என்று கூறி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை “அனைத்து மக்களுக்குமான ஜனநாயகத்தை மறுக்கும் ஸ்டாலின் வகைப்பட்ட கொடுங்கோலர்களின் தத்துவம்” என்றனர். அனைத்து மக்களுக்கும் ஜனநாயகம், இதுவே சோசலிசத்தின் லட்சியம் என்றனர். மார்க்ஸ் முதல் லெனின் ஸ்டாலின் ஈறாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கொடூரமான மார்க்சிய சிந்தனை மூலம், அனைத்து மக்கள் ஜனநாயகத்தை வழங்க மறுத்தாக கூறி, அதை கம்யூனிச இயகத்தில் புகுத்தி கட்சிகளின் வர்க்க குணம்சத்தை மாற்றினர். குருச்சேவ் “அனைத்து மக்கள் கட்சி” என்ற பெயரில் கட்சியின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுத்தான். இதை டிராட்ஸ்கிகள் தாளம் போட்டு இசைமீட்டினர். உலக கம்யூனிச இயக்கமே முதலாளித்துவ கட்சியாக மாறியது.

“வட்டார அளவிலான போரே உலப் போரேன்னும் பெருந் தீயை மூட்டிவிடக் கூடும்” என்று கூறி, குறுகிய அளவிலான போராட்டங்களை கூட, உலகளவில் பிற்போக்கானவை என்றனர். வட்டார அளவிலான வர்க்கப் போராட்டங்கள் ஸ்டாலின் வகைப்பட்ட மார்க்சியம் என்றனர். அதாவது உலகளாவில் மனித போராட்டங்கள் அனைத்தும் பிற்போக்கானவை என்றனர். அவற்றுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு அதன் ஒடுக்குமுறைக்கும் பாட்டாளி வர்க்கம் தலை வணங்கவேண்டும் என்றனர். இதை மறுத்த ஸ்டாலினையும், அவரின் பாட்டாளி வர்க்க நிலையை கொடுங்கோலர்களின் அரசியல் நிலை என்றனர். இதை நாம் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து ஒடுக்கவேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதே, ஸ்டாலின் என்ற கொடுங்கோலனின் முடிவை நிதார்சனமாக்கும் என்றனர். உலகத்தில் கொடுங்கோலன் ஸ்டாலின் என்று தூற்றியபடி, டிட்டோ அமெரிக்கா எகாதிபத்தியத்தின் தலைவiரான அய்சனோவரை “விடாப்பிடியான சமாதானக் காவலர்” என்று போற்றினான். 1961 இல் கெனடியை “சர்வதேச உறவுகளை மேம்படுத்தவும், நெருங்கிப் பிடிக்கும் உலகப் பிரச்சினைகளை அமைதி வழியில் தீர்க்கவும் உதவிகரமாய் இருக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயக மனிதர்” என்றான். குருச்சேவ் அய்சனோவரை “சமாதானத்தை மனப்பூர்வமாய் விரும்புகிறவர்” என்றும், கெனடியை “சமாதானத்தைப் பாதுகாக்கும் பேராவலைக் காணமுடிகின்றது” என்றும் புகழாரம் செய்தான். பாட்டாளி வர்க்கம் சமாதானத்தை கடைபிடிக்க, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை கைவிட வேண்டும் என்பதே இதன் சராம்சமாகும். முதலாளித்துவ மீட்சியை சோசலிசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சியாக  காட்டியபடி, உலக மக்களுக்கு எதிராக தங்கள் கரங்களை உயர்த்தினர்.

சமாதனம், அமைதி என்ற போர்வையில் வர்க்கப் போராட்டங்களை கொச்சைப்படுத்தினர். ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் கூடிக்கூலாவி சமரசமாடவும், சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியை துரிதப்படுத்தவும் அணு ஆயுதத்தை மிகைப்படுத்தி, மக்களையும் மக்களின் போராட்டத்தையும் சிறுமைப்படுத்தினர். டிட்டோ அணுப் போர் மூண்டால் “மனித இனம் அழிந்து போகும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தை மறுத்து, அதை அழிவு யுத்தமாக  கொச்சைப்படுத்தினான். குருச்சேவ் தன் குருவை மிஞ்சும் வகையில் “நமது கிரகம் நோவாவின் தோணி, அணுகுண்டால் பூவுலகம் அழிந்து போகும்” என்று கூறி உலகளாவிய வர்க்கப் போராட்டத்தையே கைவிடக் கோரினான்.  அமெரிக்காவின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிந்து உலகமே அமெரிக்க காலனியாக வேண்டும் என்றான்.  சர்வாதிகார கொடுங்கோலான் ஸ்டாலின் அணுகுண்டுக்கு அடிபணியாது, உலகத்தை அழிவுக்கு இட்டுச் சென்றாதாக தூற்றினான். அமெரிக்காவினதும் எகாதிபத்தியங்களினதும் காலனித்துவகளையும், புதிய காலனித்துவ முயற்சிகளை எதிர்த்து உலகளாவில் வர்க்கப் போராட்டங்களை உற்சாகப்படுத்தி ஆதரவு வழங்கியதை, ஸ்டாலின் உலக சமாதனத்துக்கு எதிராக இருந்தாக கூறித் தூற்றினான். வர்க்க சமரசம் மூலம் உலக சமாதானத்துக்கு கைகளை உயர்த்தியவர்களை கம்யூனிஸ்ட்டுகள் என்றனர். கடந்த காலத்தில் வர்க்க விரோதிகளை ஸ்டாலின் ஒடுக்கிய போக்குகளில் இருந்து, அவர்கள் அனைவரை விடுவித்ததன் மூலம் முதலாளித்துவ மீட்சியை நடத்தினான்.

ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க போக்குகளை ஒளித்துக் கட்டிய பின், குருச்சேவ்  குரு டிட்டோ வழியில் கம்யூனிஸ்ட் கட்சியை  1961ல் “அனைத்து மக்களின் கட்சியாகி விட்டது” என்று அறிவித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே முடிவுக்கு கொண்டு வந்தான். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதை  டிட்டோ தனது கொள்கையாக கொண்டிருந்த போதே, ஸ்டாலினும் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் அதற்கு எதிராக போராடியது.

யூகோஸ்லாவியா எதை தனது அரசியல் வழியாக கடைப்பிடித்தது என்பதைப் பார்த்தோம். அரசியல் ரீதியாக ஸ்டாலினை மறுத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை டிட்டோ வழியில் தொடங்கியதை மேலும் விரிவாக ஆராயு முன்பு, ஸ்டாலின் அவதூறின் அரசியல் போக்கை புரிந்து கொள்ள முனைவது அவசியம். இந்த முதலாளித்துவ மீட்சியை டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். அனைத்துக்கும் ஸ்டாலின் அவதூறை அடிப்படையாக கொண்டே முதலாளித்துவ மீட்சியை அழகுபடுத்தினர்.

டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டிய‌மைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று வேட்டுகளின், எதிர்புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகிறது. இங்கு தனிதனிச் சம்பவங்களை அல்ல என்ற கூறிய போதும், தனி தனி சம்பவங்களையே அவதூறின் தொகுப்பாக முன்வைக்கிறார்கள். அதிகாரம் என்றால் என்ன என்ற அடிப்படை அரசியலைக் கூட விவாதிக்க வக்கற்றவர்கள், அவதூறுகளின் தொகுப்பே மார்க்சியம் என்கின்றனர். எந்தவிதமான அரசியல் அடிப்படையுமற்ற பட்டியலைக் கொண்டு ஏகாதிபத்தியம் எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே டிராட்ஸ்கிகளும் காவடி எடுக்கின்றனர். இதைத் தான் நாம் மேலே டிட்டோவின் முதலாளித்துவ மீட்சி சார்ந்த போக்குக்கு எதிரான ஸ்டாலின் நிலையையும், முதலாளித்துவ மீட்சிக்கு சார்பான டிராட்ஸ்கிகள் நிலையையும் ஓப்பிட்டு ஆராய்ந்தோம். “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ளவேண்டுமே தவிர” என்று கூறி, தனிச் தனி சம்பவகளால் தொகுக்கப்பட்டு, அவை அவதூற்றல் நிரப்பபட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கா  நியாயப்படுத்த எதை எல்லாம் செய்ததோ, அதுபோன்றே டிராட்ஸ்கிகள் சமகாலம் வரை  செய்கின்றனர்.

ஸ்டாலினை அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதன் மூலம் அடிப்படை, மார்க்சியம் மறுக்கப்படுகிறது. அராஜகவாத கோட்பாட்டு அடிப்படையில் நின்று, டிராட்ஸ்கிகளால் ஸ்டாலின் தூற்றப்படுகின்றார். பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கப் புரட்சியில் அரசை கைப்பற்றம் போது எதைச் சாதிக்கின்றது?  முதலில் அதிகாரத்தை பெறுகின்றது. முதலாளித்துவ வர்க்க அதிகாரத்துக்கு பதில், பாட்டாளி வர்க்க அதிகாரத்தை பெறுகின்றது. ஆனால் டிராட்ஸ்கிகள் அதிகாரத்தையே கொச்சைப்படுத்தி அதற்கு எதிராக இருக்கும் போதே, அவர்களின் இறுதி இலட்சியம் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை மறுப்பதை ஆதாரமாக கொள்கின்றது. ஏகாதிபத்தியம் போல் ஸ்டாலினை விமர்சிப்பவர்கள், மார்க்சியத்தின் அடிப்படையை ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் பற்றி வாய் திறப்பதில்லை. மாறாக தனிமனித உரிமை பற்றியும், ஜனநாயகம் பற்றியும் மட்டுமே ஒருதலைபட்சமாக விளக்கும் அவர்கள், இதில் மட்டும் சிறிய இடைவெளிகளில் தமக்கிடையில் வேறுபடுகின்றனர். இதனால் முரண்பாடு உள்ளது போல் தம்மைத் தாம் வேறுபடுத்துகின்றனர். மார்க்சியம் இவற்றில் நேர் எதிர்த் தன்மையை கொண்டே செயல்படுகின்றது.

மார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கிறது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பு பின்புமாக தொடரும். இது ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும், வன்முறை சார்ந்தும் நீடிக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகும். இங்கு ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு. இது எந்த தனிமனிதனுக்கு விதிவிலக்கல்லாதது. சமூக எல்லைக்குள் வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. சமூகத்துக்குத் தான் ஜனநாயகம். இதைத் தாண்டி இங்கு தனிமனிதனுக்கு இருப்பதாக கூறுவது, சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து வேறு விளக்கம் பெறாது. புரட்சியின் எற்ற இறக்கத்துக்கு இணங்க, இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வாக்கப் போராட்டத்தை பலப்படுத்தவும், பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது. ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இவை மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடகமாகும். இதை ஏகாதிபத்தியம் எற்றுக் கொள்வதில்லை. அதே போல் டிராட்ஸ்கிய வாதிகளும், அனைத்து வகை பினாமிகளும் கூட எற்றுக் கொள்வதில்லை. இதில் இவர்கள் அனைவரும் கோட்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே, ஸ்டாலின் அவதூறுகள் கட்டப்படுகின்றன. அவதூறுகள் தேடப்பட்டு, அவை  முன்வைக்கப்படுகின்றன. ஸ்டாலின் பற்றிய பிரச்சனையில், இதைப் பற்றி பேச மறுத்து மார்க்சியத்தை புதைகுழிக்குள் திட்மிட்டே தள்ளி மூடுகின்றனர்.

ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கங்கள் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துகும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக, ஒன்றுக்கு மறுக்கப்படுகின்ற வரை தான் அது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. இது வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநயாகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்ததை ஏகாதிபத்தியம் மூடிமறைக்கின்றது. அதே போல் டிராட்ஸ்கிய ஏகாதிபத்திய கோட்பாட்டு எடுபிடிகள் கூட திட்டமிட்டே அதைப் பூசிமொழுகுகின்றனர். இதையே  டிட்டோ – குருச்சேவ் கும்பல் தனது முதலாளித்துவ மீட்சிக்கான செங்கம்பளமாக பயன்படுத்த டிராட்ஸ்கிகள் அதை விரித்தனர்.

ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே, எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கிலும்; துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க சமுதாயத்தில், சுரண்டல் வர்க்கத்துக்கு சுரண்டும் ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. இதுபோல் முதலாளித்துவமும், அதில் இருந்து உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்தின் ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் அதன் பண்பியல் கூறுகளை எதார்த்தத்தில் இலகுவாக புரிந்து கொள்ளவைக்கின்றது. வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து, சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை கொண்டிராத எல்லா நிலையிலும், சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம் எப்போதும் நிர்வாணமாக இருப்பதில்லை. அது தன்னை மூடிமறைத்து கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக மற்றைய வர்க்கத்துக்கு சலுகை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை அழகு படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாதபடி, அதை மூடிமறைக்கின்றது. சமுதாயத்தில் இந்த போலித்தனத்தை யார் யாரெலாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை தொடர்வதற்காக பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை நிர்வாணப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.

மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, இந்த ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை, புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர்தரப்புக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வெவ்வேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.

ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்தும் வர்க்க எல்லைக்கு அப்பால் நீடிக்க முடியாது. இதை எற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகம் உருவாக்கியுள்ள மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது, பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம், தனிமனித உரிமை எதையும் முதலாளித்துவ ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இதுபோல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. இந்த எதிர்தெதிரான வர்க்கப் போராட்டத்தின் நீடித்த நிகழ்ச்சி நிரலை நிராகரித்தபடி தான், ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் கட்டப்படுகின்றன. ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கும் போது, அரசியல் உள்ளடக்கம் குறித்த‌ கருத்தை முன்வைக்கவோ விமர்சிக்கவோ மறுக்கின்றனர். கூர்மையாக நிதானமாக அவதானிக்கும் யாரும், ஸ்டாலின் அவாதூறுகளில் இந்த அடிப்படையில் நின்று விவதிப்பதில்லை என்பதைக் கண்டு கொள்ள முடியும். மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதில் மார்க்சியவாதிகளாகிய நாங்கள் அவற்றை என்றும் புறம் தள்ளியது கிடையாது.

அதேநேரம் நாம் அதிகாரத்தை கைப்பற்றவும், அதை உயிரிலும் மேலானதாக பாதுகாக்கவும் போராடுவோம். இதை மார்க்சிய எதிரிகள் அதை “ஸ்டாலினிசம்” என்றால் அதற்காகவும் நாம் போராடுவோம். சுரண்டு வர்க்கத்தின் மேல் அதிகாரத்தை கையாள மறுக்கின்ற, முதலாளித்துவ எடுபிடிகளின் எல்லா சொற்புனைவுகளுக்கும் நாம் நேரடியான எதிரிகள் ஆவோம். “ஸ்டாலினிசம்” என்று யார் இதைச் சொல்லுகின்றார்கள். கூர்மையாக அவதானிக்கும் யாரும் ஏகாதிபத்திய மதிப்பீடுகளிலும் சரி, டிராட்ஸ்கிய மதிப்பீடுகளில சரி, இது போன்று குலைக்கின்ற பலரும் ஒரே விதமாக மதிப்பிடவும், ஒன்றுபட்டு நிற்பதை அவதானிக்க முடியும். இதை கூர்மையாக வேறுபடுத்த முயலும் யாரும், கோட்பாட்டு ரீதியாக வேறுபாடு இருப்பதில்லை என்ற உண்மையைக் நிதர்சனமாக காணமுடியும். இவர்கள் அனைவரும் தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்ற நெம்புகோலை பிடித்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் ஒரே விதமாக குரைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் பட்டியலை ஏகாதிபத்தியம் எப்படி வெளியிட்டதோ அதை அப்படியே வாந்தி எடுத்தவர்கள், அவை இன்று பொய்யாகும் போது மௌனமாக அதை காலால் புதைத்தபடி தான் புதிதாக அவதூறுகளை அப்புகின்றனர். புதிய அவதூறுகளை ஏகாதிபத்திய வாந்திகளை  மெண்டு மீளக் கக்குவதை கடந்து எதுவும் நகரவில்லை. கூர்மையாக இரண்டையும் அவதானிக்கும் யாராலும், இதை துல்லியமாக இனம் காணமுடியும்.

ஏகாதிபத்திய எலும்புகளை வாயில் கவ்வியபடி குலைக்கும் இவர்கள், கட்சி பற்றிய அடிப்படையான உள்ளடகத்தையே கொச்சையாக மாறுக்கின்றனர். கட்சியின் வர்க்க உள்ளடகத்தை மறுத்து தனிமனிதர்கள் சார்ந்த அவதூறுகளை கட்டமைக்கும் போது, இயங்கியல் அடிப்படை விதியையே மறுப்பது அவசியமாகிவிடுகின்றது.

1. ஒருவன் கட்சியில் சேர்ந்தால் ஆயுள் பூராவும் அவனை கம்யூனிஸ்டாகவே இருப்பான் என்ற இயங்கியல் மறுப்பை முன்னெடுத்து அவதுறை மேலும் மெருகுட்டுகின்றனர்.

2. கட்சியில் உள்ள கருத்துச் சுதந்திரம் என்பது கோட்பாடு கடந்த முதலாளித்துவ உரிமைவரை உள்ளதாக காட்டி, அதை பாட்டாளி வர்க்கம் மறுப்பது ஜனநாயக விரோதம் என்ற காட்டுகின்றனர். இதை வன்முறை சார்ந்த, சாராத இரு நிலைலும் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை வரை நீட்டி, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை கைப்பற்றும் முதலாளித்துவ உரிமை வரை கட்சி கண்ணோட்த்தைச் சிதைத்து பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக அவதூறுகளை கட்டமைக்கின்றனர்.

3. கட்சியின் ஜனநாயக மத்தியத்துவம் என்பது இரகசிய சதிக் குழுக்களை கட்டவும், கட்சிக்குள் கட்சியை கட்டும் உரிமையை உள்ளடக்கியது என்ற எல்லை வரை காட்டி அவதூறுகளை கட்டமைக்கின்றனர்.

இப்படி பல.  உதாரணமாக டிராட்ஸ்கியம் இதை எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம். 1950 களின் பின் “… கட்சியுள் சியோனிசக் குழுக்களை தேடுதல் என்ற தந்திரம், ஸ்டாலின் யூதர்களை கட்சியில் இருந்து துடைக்கும் நடவடிக்கையாகும். யூத அடியைச் சேர்ந்த தோழர்கள் என்ற கௌவுரவப் பெயர்களில் யூதக் கம்யூனிஸ்டுகள் கண்காணிக்கப்பட்ட கேவலங்கள் நடந்தன. யூதர்களின் அமைப்பான வவ்வன் மீதும் தாக்குதல் நடந்தது” என்று தூற்றும் போது, கட்சியில் யூத அடையளங்களுடன், யூத அமைப்பின் பெயரிலும் இருப்பதை அங்கிகாரிப்பதே சர்வதேசியம் என்கின்றனர் டிராட்ஸ்கியவாதிகள். யூதம் ஒரு படுபிற்போக்கான பார்ப்பனியம் போன்ற அடிப்படைவாத மதவாதமாகும். இதற்கு வெளியில் யூத கோட்பாடுகள் கிடையாது. வேறு விளக்கம் இதற்கு வெளியில் கிடையாது. பார்ப்பனியம் எப்படி தனக்கொரு மொழியையும், தனக்கொரு மதத்தையும் கொண்டு மக்களை அடக்கி செயல்படுகின்றதோ, அப்படித்தான் யூதமும். 1948 இல் பலஸ்தீனப் பிரதேசத்தில் பிரிட்டிஸ் மற்றும் அமெரிக்கா ஏகாதிபத்தியத் துணையுடன், மத்திய கிழக்கில் ஒரு பேட்டி ரவுடியாக இஸ்ரேல் என்ற நாட்டை பலாத்காரமாக யூத முதலாளிகளும் எகாதிபத்தியமும் சேர்ந்து உருவாக்கிய போது அதை சோவியத்யூனியன் எதிர்த்தது. இதன் போது யூத மத அடையாளங்களுடன் சோவியத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும், கட்சியில் இருக்கும் யூதர் அடையாளத்துடன் இஸ்ரேலை ஆதாரிப்பதையும் கட்சி ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

ஒட்டுமொத்தத்தில் பாட்டாளி வர்க்கம் கைகட்டி மௌனமாக தனிமனித உரிமையின் பெயரிலும், தனிமனித ஜனநாயகத்தின் பெயரிலும் இவற்றை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். இது இல்லாத வரை, இவற்றை மனித விரோதக் குற்றமாக காட்டுகின்றனர். இதை மறுத்த ஸ்டாலின் தூற்றப்பட்டார். பாட்டாளி வர்க்கம் ஸ்டாலின் பெயரால் இழிவாடப்படுகின்றது. உருக்கு போன்ற பாட்டாளி வர்க்க கட்சி உள்ளடக்கத்தை கோட்பாட்டு ரீதியாக சிதைப்பதில் இருந்தே, தமது முதலாளித்துவ சொந்த வர்க்க அவதூறுகளை பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக முன்வைத்து நியாயப்படுத்த முடிகிறது.

நுணுக்கமாக தொடரும் அவதூறுகளை அவதானித்தால், ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை எப்படி கொச்சைப்படுத்துகின்றதோ, அப்படியே இவர்களும் கொச்சைப்படுத்துகின்றனர். இதில் வேறுபாடுகள் இருப்பதில்லை. ஏகாதிபத்தியம் எப்படி எதை எதையெல்லாம் ஸ்டாலினுக்கு எதிராக ஏற்ற இறக்கத்துடன் அவதூறூக கட்டமைக்கின்றதோ, அதையே இந்த டிராட்ஸ்கிய கனவான்களும் மீள வாந்தி எடுக்கின்றனர். மற்றவர்களும் தான். ஸ்டாலினை தூற்றும் இவர்கள் அதற்கு பிந்திய குருச்சேவ், பிரஸ்னேவ் முதல் கொப்பச்சேவ் வரையான காலத்தை தூற்றுவதில்லை. சிற்சில முரண்பாட்டுடன் ஆதாரிப்பதும், கண்டும் காணமல் விடுவதுமே, இவர்களின் சிறப்பான ஒற்றுமையாக உள்ளது. ஸ்டாலின் கால கட்டமே, உலக மூலதனத்தின் மிக நெருக்கடியான காலகட்டமாகும். இதில் இருந்து ஏகாதிபத்தியத்தை மீட்ட குருச்சேவ், ஸ்டாலினை தூற்றினான். மார்க்சியத்தின் அடிப்படை உள்ளடகத்தையே மறுத்து, மார்க்சியத்தை சிதைத்து முதலாளித்துவ மீட்சியை நடத்தினான்.

நன்றி -பி.இரயாகரன் மற்றும் அதற்க்கான இணையம் கீழே

https://www.tamilcircle.info/index.php?option=com_content&view=article&id=8755:-6&catid=359:2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *