விவசாயிகள் போராட்டமும் கம்யூனிஸ்ட்டுகளும்
விவசாயிகள் போராட்டமும் கம்யூனிஸ்ட்டுகளும்

விவசாயிகள் போராட்டமும் கம்யூனிஸ்ட்டுகளும்

தோழர்களே உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டிய பணியினை இந்திய கம்யீனிஸ்ட் கட்சி செய்திருந்தால் இதை நாம் இங்கே விவாதிக்க அவசியமில்லை ஆகவே அங்கிருந்து தேடுதல் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என் அவா.

அன்றைய வீரஞ்செறிந்த விவசாயிகள்இயக்கப்போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில்கம்யூனிசபோராளிகள்செய்ததியாகம், அர்ப்பணிப்பைவர்க்கஉணர்வுகொப்பளிக்கசெறிவாகஅளித்திருப்பதை. விவசாயிகள்இயக்கத்தின்வரலாறை, அதன் வர்க்கப்போராட்ட வீச்சைஇடது, வலதுதிருத்தல்வாதிகள்இன்னும்முழுமையாக, ஆழமாகமக்களிடம்துலக்கமாகஎடுத்துக்காட்டாததன்மர்மம்தான்என்ன?

நேருவின் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்க 60-ஆயிரம் துருப்புக்களைக் குவித்தது. கொடூரமான அடக்கு- முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கடுமையான அடக்குமுறை -களைக் கையாள்வதால் மட்டுமே சாதிக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்த பலருக்கு, முதன்முதலாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வினியோகம் செய்திருந்த கம்யூனிஸ்ட்களின் மக்கள் செல்வாக்கை இந்திய இராணுவத்தின் அனைத்துத் துருப்புக்களாலும், எறிகணை வாகனங்களாலும் துடைத்தெறிய முடியவில்லை. நேருவின் துருப்புகளாலும், எறிகணை வாகனங்களாலும் சாதிக்க இயலாதவற்றை சி.பி.ஐ-யின் தலைமை நிறைவேற்றியது.

  1. தெலுங்கானா போராட்டத்தை விலக்கிக்கொள்வது என ஜுன் – 1951 தொடக்கத்தில் சி.பி.ஐ.யின் மையக்குழு தீர்மானித்தது.
  2. “தெலுங்கானா போர்” நேரு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காகத் தொடங்கப்பட்ட போராட்டமோ அல்லது தொடர்கின்ற போராட்டமோ அல்ல. மாறாக நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஒழிப்பதற்கான போராட்டமாகவே நடைபெற்றது என்று நேரு அரசாங்கத்துக்கு மையக்குழு உறுதியளித்தது. மையக்குழுவின் சார்பாகவும், சி.பி.ஐ. மாநிலக் குழுவின் சார்பாகவும் அக்டோபர்-23,1951-அன்று ஏ.கே.கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவுசெய்வதற்கு முன்பாக கோபாலன் கூறியதாவது:

“கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியதுபோல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசுஅதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *