விவசாயம் காப்போம்-5

தோழர்களே விவசாயம் குறித்து எழுத வோண்டியதன் நோக்கம் இந்த குரோனா பாதிப்புக்கு காரணமாக பல தேடுதலை அளித்தது ஆகவே இந்தப் பதிவை தொடர்ந்து எழுதுவது தேவையாகி உள்ளது தோழர்கள் அவசியம் கருத்து தெரிவிக்கவும்…..
புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் சுயேச்சையான பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்துள்ளதோடு இதைப் பன்னாட்டு மூலதனத்தோடு நேரடியாக பிணைத்துள்ளது. தற்போது உலகளவில் முதலாளித்துவம் ஒரு கட்டமைப்பு நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொண்டு நிற்கிறது. தற்போது ஆலைத் தொழில்துறையில் 2004-2007 காலகட்டத்தில் இருந்த 14 சதவீத கார்ப்பரேட் முதலீடு தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறது வளர்ச்சி, இணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான முதலாளிகள் சங்கம் (P.H.D Chambers). தொழில்துறை வளர்ச்சி என்பது அனேகமாக பூஜ்ஜியத்தை அடைந்து விட்டது என்று கண்ணீர் வடிக்கிறது அச்சங்கம்.
சேவைத் துறையில் பெரும் பங்காற்றும் ஐ.டி துறையோ தற்போது அமெரிக்காவின் தள்ளாட்டத்திற்கு தக்கவாறு ஆடிக் கொண்டிருக்கிறது.
தொழில்துறையின் வளர்ச்சியும் தேக்கமடைந்து விட்டது. இச்சூழலில் விவசாயத்தின் அழிவும் அதைத் தொடர்ந்து கிராமப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஊரகப் பகுதிகளில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களில் அத்துக் கூலிகளாய்க் குவிந்துள்ள மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மீண்டும் கிராமத்துக்கே சென்று விவசாயத்தை மீளவும் துவங்குவது சாத்தியமற்றதாகி விட்ட நிலையில், நகர்ப்புறங்களின் சேரிகளிலும் நடைபாதைகளிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயத்தின் அழிவு தேசத்தை உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறையையும் அதைத் தொடர்ந்த பஞ்சத்தையும் நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது. விவசாயத்திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோகமிழைத்து நாட்டை மீண்டும் அடிமையாக்கத் துடிக்கும் அரசமைப்பு. இவர்களின் மக்கள் விரோத கொள்கையின் காரணமாக ஒரு பெரும் அழிவை நாடு சந்திக்க இருக்கிறது, இதிலிருந்து மீண்டெழ வரலாற்று பூர்வமாக அறிவியல் தொழில் நுட்ப்ப கண்ணோட்டத்தில் அணுக முயலுவோமா?
எனது முயற்ச்சி தொடரும் உங்கள் கருத்துகளை பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன் தோழமைகளே .

இணையத்தில் தமிழரசன் எழுத்துக்களின் அடிப்படையில் சேகரித்த கருத்துகள்…

தொடரும் தோழர்களே…


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *