இந்தியா விவசாயிகள்-சிபி
தோழருடன் விவாதித்தன் காரணமாக இந்தப் பதிவை எழுதுகிறேன் பல்வேறு தகவல்களை தொகுக்க முடியவில்லை உங்களின் மேலான கருத்துகளை பறிமாறுங்கள் தோழர்களே…இந்தியா ஒரு விவசாய நாடு ஆனால் விவசாயிகளின் நிலையோ ஆதாள பாதாளத்தில் ஏனெனில் விவசாய நாட்டில் விவசாயிகளை ஒர் சட பொருளாக பார்க்கும் அரசை என்னே சொல்ல?விவசாயிகளையோ, தொழிலாளர்களையோ ஆளும் வர்க்கம் எப்படிப் பார்க்கிறது? பெரும்பான்மையான இந்த நாட்டின் விவசாயிகள், வேலை தேடி நாடோடிகளாக அலைந்து மெல்ல மக்கி மடியட்டும் என்பதுதான் ஆட்சியாளர்களது திட்டம்.அதாவதுவிவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை என்பது, அவர்களை சடப்பொருளாக கருதுகிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது.வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி கூறியதன் பொருள்தான் என்ன? தற்போது விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையையும் உற்பத்தித் திறனையும் உயர்த்துவது பற்றி மோடி பேசவில்லை இப்படிதான் விவசாயிகள் மீது ஆட்சியாளர்களின் கருணை இவைதான்….‘‘விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பெரும் பண்ணைகளை உருவாக்கி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் புகுத்த வேண்டும். தோட்டத்தொழில், பால் பண்ணைகள், இறைச்சித் தொழில் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம்தான் விவசாயத்துறையை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்’’ என்கிறது. கார்ப்பரேட்டுகளுக்காக நிலம் கையகப்படுத்துவது, சிறு விவசாயிகள் தமது நிலத்தை கார்ப்பரேட் பண்ணைகளுக்கு குத்தகைக்குவிட வகைசெய்வது என்பன போன்ற தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது.ஆலோசனை..விவசாயத்தை முன்னேற்றுவதற்கு அதி நவீன எந்திரங்களும் முதலீடும் வெளியிலிருந்து வரும் என்று காத்திருப்பதற்கு பதிலாக, அரைகுறை வேலைவாய்ப்புடன் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்களை நீர் மேலாண்மை, பாசனம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தி விவசாயத்துறையை முன்னேற்ற முடியும்.பயனற்றுக் கிடக்கும் மிகப்பெரிய அளவு உழைப்பாளர் சக்தி உண்மையில் அரைகுறை வேலைவாய்ப்பின் காரணமாக மிகப்பெரும் உழைப்பு சக்தி பயனற்று வீணாகிக் கொண்டிருக்கிறது.இந்த உழைப்பு சக்தியை விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில், மேம்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட உழைப்பில் ஈடுபடுத்த முடியும். இவர்களை விவசாயத்திலும், உள்நாட்டு சந்தைத் தேவைக்கு பொருள்களை உற்பத்தி செய்கின்ற கிராமப்புற சிறு தொழில் நிறுவனங்களிலும் ஈடுபடுத்த முடியும். இத்தகைய தொழில்களைத் தொடங்குவதற்கு அந்நிய மூலதனமோ, இறக்குமதி தொழில் நுட்பமோ தேவையில்லை….நாட்டின் 50% உழைப்பாளர்களுக்கு வேலை கொடுக்கின்ற விவசாயம் நமக்கு முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த துறையாகிவிடுகிறது.தோழர்களே நான் விவசாயிகள் தினப் பிரச்சினை பற்றி பேசவில்லை … ஆனால் விவசாயத்தை காப்பது அரசின் மெத்தனம் இரண்டையும் பிரதானமாக பேசியுள்ளேன்…உங்கள் கருத்தறிந்து தொடர்வேன்….