விலைமாது

படித்ததில் அதிர்ந்து போன கவிதை..!விலைமாது விடுத்த கோரிக்கை..!ராமன் வேசமிட்டிருக்கும்பல ராட்சசனுக்குஎன்னை தெரியும்.பெண் விடுதலைக்காக போராடும்பெரிய மனிதர்கள் கூடதன் விருந்தினர் பங்களாவிலாசத்தை தந்ததுண்டு.என்னிடம்கடன் சொல்லிப் போனகந்து வட்டிக்காரகளும் உண்டு.சாதி சாதி என சாகும்எவரும் என்னிடம்சாதிப் பார்ப்பதில்லை.திருந்தி வாழ நான் நினைத்தபோதும்என்னை தீண்டியவர்கள் யாரும்திரும்பவிட்டதில்லை.பத்திரிக்கையாளர்களே!விபச்சாரிகள் கைது என்றுதானேவிற்பனையாகிறது..விலங்கிடப்பட்ட ஆண்களின்விபரம் வெளியிடாது ஏன்…?பெண்களின் புனிதத்தை விடஆண்களின் புனிதம்அவ்வளவு பெரிதா?காயிந்த வயிற்றுக்குகாட்டில் இரை தேடும்குருவியைப் போல்என்னை யாரும் பரிகசிக்கவில்லை.கட்டில் மேல் கிடக்கும்இன்னொரு கருவியைப் போலத் தான்என்னை கையாளுகிறார்கள்.நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்பகலில் அது பணமாக மாறும்.பின்தான்என் குடும்பத்தின் பசியாறும்.நிர்வாணமே என்நிரந்தர உடையானல்தான்சேலை எதற்கென்றுநினைத்ததுண்டு.சரிகாயங்களை மறைப்பதற்குகட்டுவோம் என்றுகட்டிக்கொண்டு இருக்கிறேன்.என் மேனியில் இருக்கும்தழும்புகளைப் பார்த்தால்வரி குதிரைகள் கூடவருத்தம் தெரிவிக்கும்.எதையும் வாங்க வசதியில்லாதஎனக்குவிற்பதற்க்காவது இந்தஉடம்பு இருக்கிறதே!நாணையமற்றவர் நகங்கள்கீறி கீறி என்நரம்பு வெடிக்கிறதே!வாய்திறக்க முடியாமல்நான் துடித்த இரவுகள் உண்டுஎலும்புகள் உடையும் வரைஎன்னை கொடுமைப் படுத்தியகொள்கையாளர்களும் உண்டு.ஆண்கள்வெளியில் சிந்தும் வேர்வையைஎன்னிடம் ரத்தமாய்எடுத்து கொள்கிறார்கள்.தூறல் சிந்தாத வான் மேகமில்லை.கீறல் படாத வேசி தேகமில்லை.என்னை வேசி என்றுஏசும் எவரைப் பற்றியும்கவலைப் பட்டதே இல்லை..ஏனெனில்விதவை – விபச்சாரிமுதிர்கன்னி – மலடிஓடுகாலி – ஒழுக்கங்கெட்டவள்இதில் ஏதேனும்ஒரு பட்டம்அநேக பெண்களுக்குஅமைந்திருக்கும்.இது இல்லாமல் பெண்கள் இல்லை.எப்போதும்இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.முதுமை என்னைமுத்தமிடுவதற்க்குள்என் மகளை மருத்துவராய்ஆக்கிவிட வேண்டும்.என் மீது படிந்த தூசிகளைஅவளை கொண்டுநீக்கி விட வேண்டும்.இருப்பினும்இந்த சமூகம்இவள்மணிமேகலையை என்பதை மறந்துவிட்டுமாதவியின் மகள் என்பதை மட்டுமேஞாபகம் வைத்திருக்கும்.இறுதியாகஇரு கோரிக்கை.என்னைமென்று தின்ற ஆண்களே!மனைவிடமாவது கொஞ்சம்மென்மையாக இருங்கள்.எங்களுக்கு இருப்பதுஉடம்பு தான்இரும்பல்ல.என் வீதி வரைவிரட்டிவரும் ஆண்களே!தயவு செய்து விட்டுவிடுங்கள்.நான் விபச்சாரி என்பதுஎன் வீட்டுக்கு தெரியாது.கவிஞர்:தமிழ்தாசன்*******************************************www.facebook.com/puradsifm…………………………………www.puradsifm.comwww.isaiyaruvi.comwww.puradsifm.com/news