இன்று ஊதிய உயர்வு போரட்டம் மட்டுமே கணக்கில் கொள்ளும் பலர் புரிந்துக் கொள்ள.
பெரும்பாலான வரிகள் மக்களின் நலனுக்காக அறவிக்கப்பட்டது போல் கூறும் அரசு, முதலாளிகள் செலுத்தவேண்டும் எனக் கூறப்படும் வரிகளையும் அவர்சுள் மக்கள் தலையிலேயே சுமத்தி விடுகின்றனர்.பொருட்களின் விலைகள் ஏறுகின்றன; தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருக்கின்றன.இந்த ஏற்ற விகிதத்திற்கிணைய பாட்டாளிகளின் கூலிகள் உயர்வதில்லை; மக்களின் வாங்கும் திறன் கூடுவதில்லை ஆனால் முதலாளிகளின் இலாபங்கள் மட்டும் உயர்கின்றன எப்படி இவை சிந்தத்துண்டா? .மக்களை முதலாளித்துவம் முற்றாக அழித்துவிடுவதில்லை. அவர்களே முற்றாக அழித்தால் தானும் அழிய நேரும் என்பதை அவர்கள் அறிவர். ஆனால் உயிர் வாழத் தக்க நிலையில் வாழ்வதற்கு மட்டும் கூலி கொடுத்து, உழைப்பதற்காக மட்டும் வாழத்தக்க சக்தியோடு வாழவைக்கிறது. பட்டினியால் ஆங்காங்கே சிலர் இறக்கநேரினும் அவர்கள் கவலைப்படார். எதிர்மாறாக மகிழ்ச்சியே அடைவர். ஏனெனில், தமது தொழிலாளர்களுக்கும், அப்பட்டி பட்டினிச் சாவைக்காட்டி, “நீ கூலிஅதிகம் கேட்டு வேலையை விட்டுப் போக நேரின் நீயும் சாகநேரும், சங்கத்தை விட்டு கிடைத்த கூலி யோடு வேலை செய்” என்று கூறலாமல்லவா?நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பினும் அவர்கள் மகிழ்வடைவர். “நீ அதிகம் கூலிகேட்டால் உன்னை நீக்கிவிட்டு மேலும் குறைந்த கூலியில் ஆட் களே அமர்த்த முடியும்? என்று முதலாளி கூறுவான்,மக்களுக்கான அரசு சில நல திட்டங்களை செயல்படுத்துவது போல தொழிலாளர்களுக்கு சில சலுகை அறிவிக்கும் அதனை செயல்படுத்துவது போல் நடிக்கும் சிறிது கூலியை உயர்த்தும் இதனை கருத்தில் கொண்டு வரிகளை் உயர்த்துகிறது ஆளும் வர்க்கம். தொழிலாளர் தலையில் சுமத்துவதோடு மக்களை பெரும் சுமையை சுமக்கும் கட்டாயத்திற்க்கு தள்ளிவிடுகிறது. இது ஒரு சக்கரம். இதனால் ஏமாற்றப்படுபவர், பாதிக்கப்படுபவர், சுரண்டப்படுடவர் பாட்டாளிகளே ஆம் பெரும்பான்மையான மக்களே.இன்றைய வரி குறைப்பு வரி ஏய்ப்பு யார் செய்கின்றனர் ஆனால் ஏழை எளிய மக்கள் தன் வாழ் நிலையை உயர்த்தி கொள்ள் அல்ல நடத்தி செல்லவே திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது உதவாத அரசு முதலாளிகள் கொழுக்க பலவகையான வரி சலுகை.ஆகவே உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் கைப்பற்றி தமது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை பாட்டாளிக்கு விமோசனமே கிடையாது. இந்த முழு உண்மையை உழைக்கும் ஏழை எளிய மக்கள் முதன்மையாகக் கொள்ளல் வேண்டும்.தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கூலித் தொழிலாளி முதல் எல்லா உழைப்பு சக்திகளும் தன் உழைப்புச் சக்தியை நிலம், கைத்தொழில், உழைப்பை ஆள்பவனுக்கு விற்கிறன், ஆம் அவை பெரும் பகுதி வரியின் பெயரில் அரசே அபகரித்துக் கொள்கிறது. இந்தச் சுரண்டலை ஒழிக்க இந்த அமைப்பு முறையில் தீர்வு இல்லை என்பதனை கவ்னத்தில் கொளல் அவசியம்.
1Jeeva1 CommentLikeComment