வியட்நாம் போர் நிறுத்த உடன்படிக்கை வீர வியட்நாமியரின் வெற்றியே. பத்து ஆண்டுகள் உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்தியத் துடன் வியட்நாம் மக்கள் போரிட்ட வீர வரலாறு உலக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாகும். அது ஒரு தனி நபரல்ல. ஏகாதிபத்தியம் என்பது ஒரு சமூக அமைப்பு. சுரண்டிக் குவித்து உற்பத்திச் சாதனங்களை லாப நோக் கோடு ஒன்று திரட்டும் அமைப்பு. அதற்கு மனிதாபிமான உணர் வுகள் கிடையாது. கொன்று குவிப்பதையும், பிறரது சொத்து, பொருட்களையும் உற்பத்திச் சாதனங்களை அழிப்பதையுமே தொழிலாகக் கொண்டது. வெளிநாட்டில் மார்க்கெட் தேடுவதும் உள் நாட்டு தொழிலாளரின் உழைப்பைச் சுரண்டுவதுமே இந்த ஏகாதிபத்திய அமைப்பின் தொழிலாகும்.
வடவியட்நாமில் குண்டு பொழியச் சென்ற விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதைப் பற்றி ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தவர் கவலைப் பட மாட்டார்கள். புதிய விமானங்களை உற்பத்தி செய்ய உடனே ஆடர் கிடைக்கும் என்று மகிழ்வர். இறக்கும் விமான ஓட்டிகள் கூலிப் படைகளே. இறக்கும் அமெரிக்கர் ஆம் இராணுவத்தினர் கூலிகளே ஒருவன் செத்தால் பலர் வருவான் கூலி உழைப்பிற்க்கு இந்த முதலாளி வளரதானே.
வியட்நாம் யுத்தம் ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையில் நடந்த வர்க்கப் போரே. இப்போரில் வளரும் சக்தியான சோஷலிசத்தின் வெற்றி மனித வரலாற்றின் வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டியது.
வியட்நாம் போர் பல உண்மைகளைக் காட்டி நிற்கிறது:
(1) எப் பெரிய ஏகாதிபத்தியத்தாலும் ஒரு சிறிய நாட்டு மக்களது விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது.
(2) அமெரிக்க ஆளும் வர்க்கம் எத்தனை பலம் வாய்ந்ததாயினும் உள்நாட்டு மக்களது குரலை அடக்கிவிட முடியாது
(3) மக்கள் யுத்தத்தின் முன் எத்தகைய பலம் வாய்ந்த ஆயுதமும் போர்முறையும் நிற்க முடியாது. போர் நிறுத்த உடன்படிக்கையால் ஏகாதிபத்தியம் முற்றாக வீழ்ந்து விட்டது என்று நம்பிவிடப்படாது. அவர்கள் பல்வேறு தந்திரங்களையும் போர்முறை களையும் கையாண்டுகொண்டேயிருப்பர்.
மீண்டும் வியட்நாமிலோ அல்லது மற்றோர் இடத்தில் போர் தொடங்கின் ஆச்சரியப்படுவதற்கில்லை(ஈராக் தொடங்கி ஆப்கான் என்று அமெரிக்க போர்வெறி அடங்காமல் தொடர்ந்துக் கொண்டே உள்ளது).
2வது உலக யுத்தம், கொரியப்போர் வியட்நாம் ...!
வர்க்கப் போராட்டம் கூர்மையடையும்போது யுத்தம் தவிர்க்க முடியாததாகிறது. ஆயினும் இவற்றிடையே ஓர் பெரிய உண்மை மறைந்திருக்கிறது. ஒவ்வொரு யுத்தமும்-வர்க்கப் போரிலும் உலகப் பாட்டாளி வர்க்கம் முன்னேறி வருகின்றன. நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் ஆகிய தளைகள் அறுபட அவன் சோஷலிசத்தை நோக்கி ஏறுநடைபோடுவான்.
Related