இதன் இன்னொரு பக்க விளைவாக வீறு கொண்டெழுந்த கம்போடிய மக்கள் Kemer rouge என்றழைக்கப்பட்ட கம்போடிய கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் புரட்சிகர அரசை நிறுவினர்.
இந்த அரசானது கம்யூனிசத்தை அமுல் நடத்திய வேகம் சீனப் பெருந் தலைவரால் மிகவும் பாராட்டப்பட்டது.
1976 இல் சீனப்பெருந்தலைவரின் மறைவுக்கு பின்னால் சீனாவிலும் டெங் கும்பலின் தலைமையில் திருத்தல் வாதம் தலையெடுத்தபோது இந்த இளம் கம்போடிய புரட்சிகர அரசை ஆதரிக்க சோசலிச முகாம் என யாரும் இருக்கவில்லை.
ஆனால் கம்போடிய புரட்சிகர அரசு தொடர்ந்தும் திருத்தல்வாத/ ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிட்டவர்களை விமர்சித்தே வந்தனர்.
இதன் காரணமாக சமூக ஏகாதிபத்திய சோவியத் அரசின் பக்க பலத்தோடு வியட்நாமிய இராணுவம் கத்போடியாவுக்குள் ஊடுருவியது.
தோழர் பொல்- பொட் தலைமையிலான அரசை
“கொலைக்களம்” என பிரகடனித்து மண்டையோடுகளை திரட்டி சர்வதேச ஊடகங்களின் உதவியுடன் அரசை காட்டுக்குள் தள்ளினர்.
பின்வாங்கிய Khemer rouge தொடர்ந்தும் 1990 களின் நடுப்பகுதி வரை தாய்லாந்து – கம்போடிய எல்லாப் பகுதிக்குள் மறைந்திருந்து ஒரு தேச பக்த போரை முன்னெடுத்தனர்.
இந்த கம்போடிய எழுச்சியை கொச்சைப்படுத்தவே ஹாலிவூட் தாரகை ஏஞ்சலினா ஜோலி தயாரித்த “முதலில் அவர்கள் என் தந்தையைக் கொன்றனர்”
என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் அடிநாதமாக மார்க்ஸிய லெனினிய மாவோ சிந்தனை வர்க்க வேறுபாட்டை ஒழிக்க எவ்வளவு தீவிரமாக செயற்படும் என்பதனையும் அதனால் மத்தியதரவர்க்க கற்றோர் மற்றும் நகர்ப்புற ஏகாதிபத்திய தாசர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவர் என்பதனையும் மிகைப்படுத்துவதாக இருக்கும்.
மக்கள் சினம் வியட்நாமுக்குள் ஒருபோதும் அத்துமீறி படையெடுத்ததில்லை.
வியட்நாமிய கம்யூனிஸ்டுக் கட்சி 1954 ம் ஆண்டில் மக்களின் தியாகத்தாலும் ஜெனரல் கியாப் போன்ற மக்கள் விடுதலை இராணுவத் தலைவர்களின் மகத்தான வியூகங்களாலும் போரில் வெற்றி பெற்று பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வெளியேற்றினாலும் அவர்களின் கட்டுப்பாட்டில் வடக்கு வியட்நாம் மட்டுமே இருந்தது.
தெற்கு வியட்நாமையும் இணைத்து அங்கிருந்த அமெரிக்க கைக்கூலி விதேசிய அரசை கில்லி எறிந்த போரே வரலாற்றில் வியட்நாம் போர் என்று பெரிதும் பேசப்படுகின்றது.
இப்போரில் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்டதை விடவும் அதிக குண்டுகளை வீசியது.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நீடித்த இந்த (1955-1975 ) தேசபக்த
யுத்தத்தில் வியட் கொங் என்றழைக்கப்பட்ட விடுதலை வீர, வீராங்கனைகள் வியத்தகு சாதனைகள் பல படைத்தனர்.
இவர்களுக்கு பக்கபலமாக மக்கள் சீனமும், சமூக ஏகாதிபத்திய சோவியத் யூனியனும் நின்றன.
உற்று நோக்கின் இந்த யுத்தம்
அமெரிக்காவுக்கும் , சோவியத் யூனியனுக்கும் குருச்சேவ் திருத்தல்வாதம் (1956) சமாதான சகவாழ்வை அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிட்ட பின் நடந்ந ஒரு மிகப்பெரிய பலப்பரீட்சையாகும்.
இந்தோசீனப்பிராந்தியத்திலும் இந்த யுத்தமானது பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
குறிப்பாக அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் yellow agent போன்ற நச்சு இரசாயனக் குண்டுகளை வீசி பல்லாயிரம் மக்களையும் இயற்கை வளங்களையும் தீக்கிரையாக்கினர்.
வியட்நாமின் அண்டை நாடுகளான லாவோஸ், கம்போடியா , தாய்லாந்து போன்ற நாடுகளும் இந்த தாக்குதலுக்கு தப்பவில்லை.
வியட்- கொங் வீர, வீராங்கனைகள் மறைவிடவிடங்களாகவும், வழங்கு பாதைகளாகவும் ( Supply line) இந்த அண்டை நாடுகளைப் பாவிக்கின்றனர் என்பதே உக்கிர குண்டுவீச்சுக்கான அமெரிக்க (அ) நீதியாக இருந்தது.