“விமர்சனம், சுய விமர்சனம்”
“விமர்சனம், சுய விமர்சனம்”

“விமர்சனம், சுய விமர்சனம்”

“விமர்சனம், சுய விமர்சனம்” என்ற பிரச்சினையைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.

புதிய தலைவர்களை உருவாக்குவதற்கும், கம்யூனிஸ்டுகளாகிய எங்களிடமுள்ள புனிதமான கருவி ‘விமர்சனம் சுய விமர்சனம்’’ ஆகும்.

இந்த முறை கம்யூனிஸ் இயக்கத்துடனேயே தோன்றியது. சோ. க. க. (போல்ஷ்விக்)யினுடைய மாஸ்கோ ஸ்தாபனத்தில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: “எமக்குத் தண்ணிரும், காற்றும் எவ்வளவு அவசியமோ, அதேபோல் விமர்சனமும்-சுய விமர்சனமும் அவ்வளவு அவசியம். ’’ இது இல்லாமல், எமது கட்சி முன்னேற முடியாது; எமது தவறுகளைப்புரிந்துகொள்ள முடியாது. குறைபாடுகளைத் திருத்திக்கொள்ளமுடியாது. எம்மிடம் குறைபாடுகள் ஏராளம். இதை நாம் ஒழிவு மறைவின்றியும், நேர்மையாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில தோழர்கள், ‘எமது எதிரிகள் குறைபாடுகளைப் பயன்படுத்திவிடுவர்’ என அஞ்சுகின்றனர். இதைக்கண்டு நாம் அஞ்சக்கூடாது. நமது தவறுகளையும், குறைபாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள அஞ்சக்கூடாது”. “விமர்சனம்-சுய விமர்சனம்” மூலம்தான் குறைகளை நீக்கி, நமது செயல்முறைகளைத் திருத்தி, நாம் நமது கட்சியின் வேலை களைச் சீர்திருத்த முடியும். ‘விமர்சனம்-சுயவிமர்சனம், தலைவர் களுக்கும், மக்களுக்கிடையேயும் உள்ள உறவுகளை ஸ்திரப்படுத்த உதவும்.
ஒர் இலட்சியத்திற்காக அர்ப்பணித்த சேவையின் காரணமாக தலைவர்களின் கெளரவம் உயர்வதும், அதன் காரணமாக இவர்களுக்கும், மக்களுக்குமிடையே உள்ள தொடர்புகளில் மாற்றம் ஏற்பட்டு, மக்களிலிருந்து தலைவர்கள் அப்பாற்படவும் எமது கட்சியின் பழைய தலைமையில் இந்தநிலை உருவான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன.
தொழிலாளி வர்க்கத் தோழர்கள் கட்சியின் முக்கிய பதவிகள் ஏற்றதும், தாம் தோன்றிய வர்க்கத்தையே மறந்து, அவர்கள் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, தான்தோன்றித்தனமும், தனித் தம்பிரான் போக்கும் அவர்கள் மத்தியில் உருவெடுத்தன. இந்த நிலையில் இவர்கள் தொழிலாளி வர்க்கத்தினின்றும் பிரிந்து நிற்கின்றனர்.
இதன் காரணமாக எமது கட்சியின் தலைவர்கள், தம்மைப் பிரபல்யம் மிக்கவர்கள் என்றும், தவறே செய்ய முடியாத அறிவாளிகளென்றும் கருதத் தொடங்கினர். இது கட்சியின் நாசத்திற்கே வழி வகுத்தது.

எமது குறைபாடுகளை எடுத்துச்சொல்ல ” சில வேளைகளில் தொழிலாளர்கள் தயங்குவர். அவர்களின் விமர்சனம் 100 க்கு 100 சரியானதல்லாமல் இருக்கக்கூடும். அவரகள் சொலவதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லக்கூடும். அவர்கள் சொல்வதில் 5 சதவிகிதம் சரியாக இருக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்திலும், அமைதியுடன் அவைகளுக்குச் செவிசாய்த்து, இருக்கும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். இந்த வகையால் தான், தலைவர்கள் தலைமைதாங்க முடியும். ‘விமர்சனம்-சுய விமர்சனம்” மூலம் தொழிலாளி வர்க்கத்தின் அக்கறையை ஸ்திரப்படுத்த முடியும். அத்துடன் தன்னம்பிக்கையையும், கலாசாரப் பண்பையும் வளர்த்து, தொழிலாளி வர்க்கத்தை நமது நாட்டின் தலைவர்களாகவும்,சிருஷ்டி கர்த்தாக்களாகவும் ஆக்க உதவும்.
குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் விமர்சனம பாதகமான தாயும் இருக்கும். நேர்மையற்றவர்கள், தவறான நோக்கங்களுக்காக விமர்சிக்கும்போது, பாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இப்பேர்ப்பட்ட விமர்சனங்களை நாம் எதிர்க்க வேண்டும். இத்தகைய தவறுகளை நிவர்த்தி செய்யாதுவிடுதல் இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.
திரிபுவாதத்தைத் தோற்கடித்து, தனது இறுதி இலட்சியத்தை நிறைவேற்ற, கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை தனது மார்க்சிய-லெனினிய அறிவை மேலும் வளர்க்க வேண்டும். கட்சியின் கொள்கைகளைத் தெளிவாகக் கற்றறிய வேண்டும். புத்த புழுவாக இருக்கும் போக்கையும், பிரச்சினைகளை அக்கறையின்றி, கண்மூடித்தனமாக அணுகுவதையும் தவிர்க்க வேண்டும், சுக போகங்களில் விருப்பங்கொள்ளாது, இலஞ்ச ஊழல்களை எதிர்த்துப் போராட் வேண்டும்.
இவை தோழர் ஸ்டாலினால் வைக்கப் பட்ட விமர்சனம் சுய விமர்சனம் தோழர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *