“விமர்சனத்துக்கோ, சுயவிமர்சனத்துக்கோ அஞ்சக்கூடாது-மாவோ

“விமர்சனத்துக்கோ, சுயவிமர்சனத்துக்கோ அஞ்சக்கூடாது:அறை அடிக்கடி ஒழுங்காக கூட்டப்பட வேண்டும். ஒரு அறை ஒழுங்காக கூட்டப்படாவிட்டால், அங்கு தூசு படிந்துவிடும்; முகம் அடிக்கடி ஒழுங்காக கழுவப்பட வேண்டும்; கழுவாவிட்டால், அழுக்கு படிந்துவிடும் என்று நாம் கூறுவதுண்டு. நமது தோழர்களின் உள்ளங்களிலும் நமது கட்சியின் வேலையிலும்கூட தூசு பிடிக்கலாம்; அவையும் கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். “ஓடும் நீர் பாசி பிடிக்காது, கதவின் கீல் துருப்பிடிக்காது” என்ற பழமொழியின் அர்த்தம் இடைவிடாத இயக்கம் கிருமிகளும் சேதனப் பொருட்களும் உட்புகுவதைத் தடுக்கும் என்பதாகும். நமது வேலையை அடிக்கடி ஒழுங்காக பரிசோதிப்பது, அதன் போக்கில் ஜனநாயக வேலைநடை ஒன்றை அபிவிருத்தி செய்வது, விமர்சனத்துக்கோ, சுயவிமர்சனத்துக்கோ அஞ்சாமல் இருப்பது, “அறிந்தவை எல்லாவற்றையும் பேசுவது, ஒளிவுமறைவின்றி பேசுவது”, “பேச்சாளனைக் குறை கூறாதே, பதிலுக்கு அவர் வார்த்தையிலிருந்து எச்சரிக்கை பெற்றுக்கொள்”, “தவறுகள் இழைத்தால் அவற்றைத் திருத்து, இழைக்காவிட்டால் அவற்றுக்கெதிராக எச்சரிக்கையாக இரு” என்பவை போன்ற சிறந்த பிரபலமான முதுமொழிகளைப் பிரயோகிப்பது – நமது தோழர்களின் சிந்தனைகளும், நமது கட்சியின் உடலும் அரசியல் தூசிகள், கிருமிகள் எவற்றாலும் பாதிக்கப்படாமல் தடுக்கும் பயனுள்ள ஒரேயொரு வழி இதுவேயாகும்.” – மாவோ.