அண்மையில் வினவு தளம் அமைப்பை விட்டு வெளியேறிய தலைமை குழுவோடு தானும் முடங்கி போனதோடு இவை கற்றுக் கொடுத்த எல்லா பாடங்களையும் தலைகீழாக கவிழ்த்துப் போட்டதோடில்லாமல் அமைப்பை ஒரு விதத்தில் முடக்கும் வேலையை செவ்வனே செய்து முடித்தது இன்று தனது பணியை தொடங்கியுள்ளது ஆகவே புரட்சியை நேசிக்கும் என்னை போன்ற அதன் தாசனின் கேள்வி மார்க்சியம் கற்று தந்த விமர்சனம் சுய விமர்சனம் அடிப்படையில் தங்களின் அமைப்பு பிரச்சினையை தீர்த்து பதில் அளிப்பார்காள? தனது அமைப்புக்குள் நடந்த நட்ந்துக் கொண்டிருக்கும் போக்குகளை உண்மையோடு பேசுவார்காளா? உண்மையில் புரட்சியை நேசிக்கும் ஒவ்வொருவரும் உங்களின் பதில் எதிர் நோக்குகிறார்கள் தோழமைகளே… சிபி.
“தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்).
கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!
(கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் இருந்து)….
“ஓர் புரட்சிவாதி-ஒரு கம்யூனிஸ்ட்-கஷ்டங்களைக் கண்டு மனம் தளர மாட்டான், புரட்சியைத் தனது இலட்சியமாகக்கொண்டுள்ளவன்,புரட்சிவாதிகள் அவசியம் என்று நம்புபவன்.”
என்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தோழர் ஹோ சிமின் கூறியுள்ளார்.
சரித்திரம் நமக்குக் கற்பிக்கும் பாடங்களைச் சரியாகக் கணக்கிடக்கூடிய, பழைய சமுதாய அமைப்பை மாற்றி, புரட்சிகரமான புதிய சமுதாயத்தை நிர்ணயிப்பதையே தமது இலட்சியமாகக்கொண்ட தோழர்கள், தமது பணி, புரட்சிப்பணி என்பதை உணர வேண்டும். சிந்தனையிலும், செயலிலும் ஓர் புரட்சிவாதியாகத் திகழ வேண்டும். தேச பக்தியுள்ளவனுக, தனது நாட்டு மக்களுக்காக நேர்மையுடனும், அக்கறையுடனும் செயலாற்றவேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, விடா முயற்சி, தொழில் விருப்பம், ‘விமர்சனம்-கய விமர்சனம்’’ ஆகிய குணும்சங்களைப் புரட்சிக்கரத் தலைவர்கள் பேணிக்கொள்ளுதல் வேண்டும். கட்சியின் தலைவர்கள், ஊழியர்கள் சகலரும், மற்றவர்கட்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். ஓர் இயக்கத்தை அணிதிரட்டுவதிலோ, மக்களின் சக்திகளைப் பலப்படுத்துவதிலோ, இவர்கள் முன்னின்று செயலாற்றவேண்டும்.
தலைமைக்கு இன்னுமொரு முக்கியமான கடமையாதெனில், தனது தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா வென்று எப்பொழுதும் எடைபோட்டுப் பார்த்தல்.
“விமர்சனம், சுய விமர்சனம்” என்ற பிரச்சினையைப் பற்றிச் சற்று சிந்திப்போம், புதிய தலைவர்களைச் சிருஷ்டிப்பதற்கும், உள்ளவர்களிடமிருந்து கூடிய சேவையைப்பெறுவதற்கும், கம்யூனிஸ்டுகளாகிய எங்களிடமுள்ள புனிதமான கருவி ‘விமர்சனம் சுய விமர்சனம்’’ ஆகும். இந்த முறை கம்யூனிஸ் இயக்கத்துடனேயே தோன்றியது. சோ. க. க. (போல்ஷ்விக்)யினுடைய மாஸ்கோ ஸ்தாபனத்தில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: “எமக்குத் தண்ணிரும், காற்றும் எவ்வளவு அவசியமோ, அதேபோல் விமர்சனமும்-சுய விமர்சனமும் அவ்வளவு அவசியம். ’’ இது இல்லாமல், எமது கட்சி முன்னேற முடியாது; எமது தவறுகளைப்புரிந்துகொள்ள முடியாது. குறைபாடுகளைத் திருத்திக்கொள்ளமுடியாது. எம்மிடம் குறைபாடுகள் ஏராளம். இதை நாம் ஒழிவு மறைவின்றியும், நேர்மையாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில தோழர்கள், ‘எமது எதிரிகள் குறைபாடுகளைப் பயன்படுத்திவிடுவர்’ என அஞ்சுகின்றனர். இதைக்கண்டு நாம் அஞ்சக்கூடாது. நமது தவறுகளையும், குறைபாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள அஞ்சக்கூடாது. **விமர்சனம்-சுய விமர்சனம்” மூலம்தான் குறைகளை நீக்கி, நமது செயல்முறைகளைத் திருத்தி, நாம் நமது கட்சியின் வேலை களைச் சீர்திருத்த முடியும். ‘விமர்சனம்-சுயவிமர்சனம், தலைவர் களுக்கும், மக்களுக்கிடையேயும் உள்ள உறவுகளை ஸ்திரப்படுத்த உதவும்.
ஒர் இலட்சியத்திற்காக அர்ப்பணித்த சேவையின் காரணமாக தலைவர்களின் கெளரவம் உயர்வதும், அதன் காரணமாக இவர்களுக்கும், மக்களுக்குமிடையே உள்ள தொடர்புகளில் மாற்றம் ஏற்பட்டு, மக்களிலிருந்து தலைவர்கள் அப்பாற்படவும் எமது கட்சியின் பழைய தலைமையில் இந்தநிலை உருவான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன. தொழிலாளி வர்க்கத் தோழர்கள் கட்சியின் முக்கிய பதவிகள் ஏற்றதும், தாம் தோன்றிய வர்க்கத்தையே மறந்து, அவர்கள் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, தான்தோன்றித்தனமும், தனித் தம்பிரான் போக்கும் அவர்கள் மத்தியில் உருவெடுத்தன. இந்த நிலையில் இவர்கள் தொழிலாளி வர்க்கத்தினின்றும் பிரிந்து நிற்கின்றனர்.
இதன் காரணமாக எமது கட்சியின் தலைவர்கள், தம்மைப் பிரபல்யம் மிக்கவர்கள் என்றும், தவறேசெய்ய முடியாத அறிவாளிகளென்றும் கருதத் தொடங்கினர். இது கட்சியின் நாசத்திற்கே வழி வகுத்தது.
புற நிலை உண்மை என்று கூறுகிறோமே, அதற்க்கு ஒத்துப் போகிறதா?
விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று குழுக்களாக நீடிக்கிறது.
ஹிட்லர் என்ற பாசிச சர்வாதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து இந்த உலகத்தை தனது வீரத்தாலும், தியாகத்தாலும் மீட்டது சோசலிச சோவியத் ரஷ்யா. தோழர் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், ரசிய மக்களும் பெரும் தியாகங்களை ஈந்து இந்த உலகை பாசிச அபாயத்திலிருந்து மீட்டனர். இன்று இந்தியா உள்ளிட்டு உலகம் முழுவதும் வலதுசாரி பாசிச அரசுகள் உருவாகிவரும் இந்தச் சூழலில் பாசிசத்தை வீழ்த்தவல்லதாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டுமெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை தோழர் லெனின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் எனும் தனது நூலில் வரையறுத்துள்ளார்.
இந்தத் தொடர் வெளியிடும் வினவு தளத்திடம் எனது மேல் உள்ள கேள்விக்கு பதில் கிடைக்குமா என்பதே? சிபி.
