லெனின் வாழ்க்கை வரலாறு
லெனின் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்ற ஒப்பந்த முழக்கத்தை கொடுத்தவர் புரட்சியாளர்களின் இதய நாயகன் கார்ல் மார்க்ஸ். அவரின் கம்யூனிச – பொது உடமை பாதையில் நடந்து உலகில் “முதல் பொது உடமை”.
சமுதாயத்தை உருவாக்கிய புரட்சித் தலைவர் – உலகம் என்றென்றும் போற்றும் உன்னத தலைவர் லெனின் என்ற உலக மக்களால் உச்சரிக்கப் படுகின்ற விளாதிமிர் இல் யீச் உல்யானவ்.
ஏழை எளிய மக்களின் உழைப்பை சுரண்டி, அவர்களை அடிமைகளாக்கி உல்லாச வாழ்வு வாழும் பெரும் பணக்காரர்களின் அநியாயத்தை கண்டு மனம் குமுறி இவ்வுலகில் ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையை ஒழிக்கபாடுபட தன்னையே அர்ப்பணித்த மரபு மனிதர் லெனின்.
இன்று உலகமே கம்யூனிசம், மார்க்சிசம் என்று உச்சரிக்கிறதென்றால் அதற்கு மூலக்காரணமாய் இருந்தவர் லெனின். அவரின் வரலாறு புரட்சி வரலாறு, புரட்சிக்கு இலக்கணம் வகுத்த வரலாறு.
லெனின் முன்னோர்கள் – lenin history in tamil
ரஸ்யாவில் அஸ்த்ராகான் என்றொரு சிற்றூர்.அந்த ஊரில் நிகோலாய் உல்யானவ் என்பவர் தன் குடும்பத்தோடு வசித்து வந்தார் . அவர் ஒரு அடிமையாக பண்ணையில் இருந்தார்.
அவர் தையல் தொழிலை செய்து குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். இவருக்கு பேசில், இல்யா உல்யானவ் என இரு பிள்ளைகள். மூத்தவர் பேசில் உயர்நிலைப்பள்ளி மாணவர்.
இல்யா ஆரம்ப பள்ளி மாணவர். இந்த நிலையில் திடீரென குடும்பத் தலைவர் நிகோலாய் இறக்க… குடும்பம் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டது. பள்ளி மாணவர் பேசில் வேலைக்கு போனால் தான் உணவு இல்லை எனில் பட்டினிதான்.
குடும்பச் சுமையை தாங்க பள்ளிப் படிப்பை கைவிட்டு ஒரு சிறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் அவர். தான் விரும்பிய உயர்கல்வியை தனது தம்பி பெற வேண்டும் என்று பேசில் கடுமையாய் உழைத்து படிக்க வைத்தார்.
அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்ற இல்யா நன்கு படித்தார். உயர்நிலைப் படிப்பில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்றார். பல்கலைக் கழகத்தில் கல்வி கற்க வறுமை தடை ரஷ்ய அரசுக்கு பேசில் விண்ணப்பம் அனுப்பினார்.
முதலில் மறுத்த அரசு பிறகு கசான் பல்கலைக் கழகத்தில் படிக்க இடமளித்தது. குடும்ப நிலை அறிந்த இல்யா.. ஓய்வு நேரங்களில் டியூஷன் நடத்தி வருமானம் தேடிக் கொண்டார்.
1855-ம் ஆண்டு பெளதிகத்திலும், கணிதத்திலும் நன்கு தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றார்.
வழக்கம் போல பட்டம் பெற்ற பிறகு வேலை தேடினார். சில மாதங்களுக்கு பிறகு பணக்கார பிள்ளைகள் பயிலும் ‘பென்ஸா நகர பள்ளி’ ஒன்றில் பௌதிக ஆசிரியர் ஆனார்.
ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாத ‘ஜார் அரசை’ நினைத்து வேதனைப்பட்டார். கசான் மாகாணத்தில் ‘கொக் கூஷ்கினா’ என்ற ஊரில் அலெக்சாந்தர் டிமிட்டிரிவிச் பிளாங் என்ற மருத்துவர் இருந்தார்.
தாயற்ற மகளான மரீயா அலெக்சாந்திரவ்னா பிளாங்கை அன்புடன் வளர்த்து வந்தார். வீட்டிலேயே அவளுக்கு கல்வி கற்பித்தார். ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, தாய்மொழி ரஷ்யன் ஆகியவை கற்பித்தார்.
மகளை சிறந்த கல்வியாளராக உயர்த்தினார். இல்யா ஒரு முறை மரீயாவை சந்தித்தார். அவளின் அடக்ககுணம், விசாலமான அறிவை கண்டு மணக்க விரும்பினார்.
1863-ம் ஆண்டு இல்யா, மரீயாவை மணந்தார். அப்போது இல்யாவுக்கு வயது 32, மரியாவுக்கு 28. தம்பதிகள் ஒருவரை ஒருவரை நேசித்து இல்வாழ்க்கையை யை இனிமையுடன் நடத்தினர்.
லெனின் வாழ்க்கை வரலாறு lenin history in tamil லெனினின் ஆயுதப்போராட்டம் லெனினின் மரணம் லெனினின் தமிழ் நூல்கள் லெனினின் தத்துவங்கள்
சிவப்புச் சூரியன் உதித்தது!
lenin history in tamil பென்ஸா நகரில் குடும்பம் நடத்திய அத்தம்பதிகளுக்கு 1864-ம் ஆண்டு, ஆன்னா என்ற பெண் குழந்தை பிறந்தது. அவ்வூரில் பணியை விட்ட இல்யாவுக்கு ‘நிஷ்னிநோவ்கரத் நகர உயர்நிலை பள்ளியில் வேலை கிடைத்தது.
அங்கு 1866-ல் அலெக்சாந்தர் பிறந்தான். (லெனின் அண்ணன் மற்றும் வழிகாட்டி) நேர்மையும், உண்மையும், சகமனிதர்களை மதிக்கும் குணமும் நல்இயல்களாக கொண்ட இல்யாவின் கல்வி கற்பிக்கும் திறனைக் கண்ட அரசு அவரை ‘சிம்பர்சக் மாகாண அரசு பள்ளி’ ஆய்வாளராக நியமித்தது.
சமூகத்தை உயர்த்தும் என்பதை உணர்ந்த அவர் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் நற்கல்வி பயில அந்த ஊரில் 450 புதிய பள்ளிகளை துவக்கினார். வோல்கா நதியோரம் ஒரு வீட்டையும் விலைக்கு வாங்கினார்.
அத்தம்பதிகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதி 1870-ம் ஆண்டு புரட்சிகரமான, ஆண் மகன் பிறந்தான் என்பதை விட (உலகை புரட்டி போடும் வல்லமைக் கொண்ட மாமனிதர் பிறந்தார் என்றே சொல்ல வேண்டும்.
ஆம்! சிவப்புச் சூரியன் உதித்தது.) மூன்றாம் பிள்ளைக்கு விளாதிமிர் என்று பெயர் வைத்தனர். விளாதிமிரோடு இல்யீச் உல்யானவ் சேர்ந்து விளாதிமிர் இல்யீச் உல்யானவ் என நீண்டது பெயர். (பிற்காலத்தில் விளாதிமிர் லெனின் ஆனார்.)
இம்மூன்று பிள்ளைகளுக்கு பிறகு ஓல்கா என்ற பெண்ணும், திமீத்ரி என்ற ஆணும் கடைசியாக மரியா என்ற பெண்ணுமாக அக்குடும்பத்தில் மொத்தம் ஆறு பிள்ளைகள், மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் ஆவர்.
லெனினின் பள்ளிக்கல்வி
மரீயா… தம் பிள்ளைகளுக்கு தானே கல்வி அறிவை ஊட்டினாள். தாய் மொழிக்கல்வி மற்றும் ரஷ்யா இலக்கியங்களை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தார்.
விளாதிமிர், தாய் சொல்லிக் கொடுப்பதை கூர்மையாக கேட்டு நன்கு பாடங்களை கற்றான். குறிப்பாக உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அக்கா ஆன்னா, அண்ணன் அலெக்சாந்தர் இருவரிடம் நிறைய கற்றார். இருக்கும் அண்ணனோடு ஒட்டிக் கொண்டார்.
எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருக்கும் அண்ணனோடு ஒட்டிக் கொண்டார். கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில்களை பெற்றார். தன் பெற்றோர்… உடன் பிறப்புகள், தன்னோடு பாசமாக இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தான் விளாதிமிர்.
தன் பெற்றோர் இருவரும் வெற்று ஆடம்பரமின்றி, ஒருவருக்கொருவர் அன்போடும், அடுத்தவர்களுக்கு உதவுகின்ற குணங்களை பெற்றிருப்பதை அறிந்து பெருமிதம் கொண்டார்.
தாயிடம் பியானோ வாசிக்கவும் கற்றார். வீட்டிலேயே கணிதம், தாய் மொழி கல்வியை கற்ற மகனை உள்ளூர் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர் தம்பதிகள்.
அப்போது விளாதிமிருக்கு வயது 9. ஆகஸ்டு மாதம், 1879-ம் வருடம். ஒரு நாள்….. சிம்பர்க் நகரில் வோல்கா நதிக்கரையில் அமைந்திருந்த உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பள்ளியில் நன்கு படித்தார். பள்ளிப் பாடங்களோடு தாயிடமிருந்து கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை கற்றார். இதே பள்ளியில்தான் அக்காள் ஆன்னா, அண்ணன் அலெக்சாந்தரும் படித்தனர்.
விளாதிமிருக்கு அண்ணன் மீது அளவு கடந்த பாசம். விளாதிமிர் பள்ளிப் பாடங்களை தவிர்த்து வேறுபல நூலாசிரியர்களின் நூல்களையும் ஆய்ந்து படித்தார்.
பள்ளி நூல்களிலிருந்து வேறுபட்ட உலகங்களை அந்த நூல்கள் காட்டின. ஒரு நாள் அண்ணன் அலெக்சாந்தர், கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ என்ற நூலை கொண்டு வந்தான்.
அதைப் படித்த விளாதிமிர் புதிய உலகத்தை தெள்ளத் தெளிவாக காண்பித்த இப்புத்தகத்தின் விஷயங்களை கண்டு பிரம்பித்தான். ‘முதலாளி – தொழிலாளி’ என்ற இருவேறு உலகங்களை இந்த நூலில் கண்டார்.
தந்தையின் மரணமும், தூக்குகயிற்றில் அண்ணனும்
ஒரு நாள் அண்ணனிடம் ரஷ்யாவின் நிலைமை பற்றி கேட்டார் விளாதிமிர். ரஷ்யாவின் சரித்திரம், இப்போது ரஷ்யாவை ஆளும் ஜார் பற்றியும், இவர்கள் ரஷ்ய மக்களை அடிமைப்படுத்தி, கொடுங்கோல் நடத்துவதைப் பற்றியும்,
தொழிலாளர்கள் முதலாளிகளின் தொழிற் சாலைகளில் கசக்கி பிழிவதைப் பற்றியும் விரிவாக தம்பிக்கு எடுத்துக் கூறினார் அலெக்சாந்தர்.
“நாம் ஜார் மன்னரின் அடிமைகளா?”
“மக்களை அப்படித்தான் எண்ணி ஆள்கிறார்கள் ஜார் மன்னர்கள்” என்றார் அலெக்சாந்தர்.
விளாதிமிர் புதிய பாதையில் சிந்திக்க ஆரம்பித்தான்.
1886-ம் ஆண்டு, ஜனவரி மாதம், 12-ம் தேதி. குடும்பத்தின் மீதும் பாசமும், சக மனிதர்களின் துன்பங்களுக்கு உதவிகரமாக இருந்த அவரின் தந்தை இலியா உல்யானவ் திடீன்ெறு இறக்க, குடும்பம் கதிகலங்கியது.
தந்தை திடீர் மறைவு விளாதிமிரை உலுக்கி எடுத்தது. குடும்பமே துயரத்தில் ஆழ்ந்து கிடக்க… அன்னை மரீயா.. பிள்ளைகளை தேற்றி, அவர்களை படிப்பில் கவனத்தை திரும்ப வைத்தார்.
விளாதிமிரின் சிந்தனை ரஷ்யா பற்றி சிந்தித்தது. ஜார் மன்னர்கள் என்பவர்கள் ‘ரோமனவ்’ என்ற வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மக்களை அடிமைப்படுத்தி, பாதிரியார்கள், நிலப்பிரபுக்கள் ஆகியோர்களோடு கூட்டு சேர்ந்துக் கொண்டு மக்களை சுரண்டினர்.
1888 மார்ச் 8-ம் தேதி. நிதீமன்றம் கூடியது. அரசரை கொல்ல திட்டம் தீட்டிய குற்றத்திற்காக தூக்கில் இட நீதிபதி பணித்தார். போதிய சாட்சியம் இல்லாததால் ஆன்னா விடுதலை ஆனாள்.
அண்ணன் தூக்கலிடப்பட்டார் என்பதை அறிந்த விளாதிமிர் துடிதுடித்தான். கணவரை இழந்த மரீயா, கணவர் இறந்த இரண்டே ஆண்டுகளில் அன்பான மகனையும் இழந்து விட்ட துயரத்தில் தடுமாறினாள் மரீயா. குடும்பமே நிலைக்குலைந்தது.
அருமை அண்ணன் – தனது வழிகாட்டியாய் வாழ்ந்த பாசத் தோழன். அநியாயமாய் கொல்லப்பட்டாரே என்று விளாதிமிர் துயரத்தில் இருந்தார். ‘என் அண்ணன் தூக்கிலிட்ட ஜார் அரசை தூக்கி எறிவதே தன் பணி’ என்ற உறுதி பூண்டார் விளாதிமிர்.
இந்த நாட்டை காக்க, பெரும் போரட்டம் வேண்டும் என விளாதிமிர் நினைத்த போது அவருக்கு வயது 17. தந்தையையும், தயைனையும் இழந்திருக்கும் இக்குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.
நன்கு கற்று தேற வேண்டும் என்று உறுதி எடுத்த விளாதிமிர் இரவும், பகலும் படித்துக் கொண்டே இருந்தார். இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற இவருக்கு தங்க கோப்பையை பள்ளி கொடுக்க வேண்டும்.
ஆனால் கொடுக்கவில்லை. காரணம் ஜார் மன்னரை கொல்ல திட்டம் தீட்டிய கொலைகாரனின் தம்பி. எனவே அவருக்கு கோப்பை கொடுக்க இயலாது என நிர்வாகம் மறுத்தது. விளாதிமிர் அதைப் பற்றிக் கவலைப்பட வில்லை.
கல்லூரியில் விளாதிமிர்
கணவனையும், மகனை இழந்த மரீயா தன் சொந்த கிராமமான ‘கொக்கூஷ்கினா’க்கு பிள்ளைகளோடு சென்றார். சிம்பர்ஸ்க் நகரத்தையும், வோல்கா நதிக் கரையையும் மறக்க முடியவில்லை விளாதிமிருக்கு.
மகனை படிக்க வைக்க ‘கஸான்’ நகருக்கு குடிப் பெயர்ந்தார் மரீயா குடும்பத்துடன். கஸான் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் மாணவராக சேர்ந்தார் விளாதிமிர்.
அப்போது கல்லூரியில் ஜார் மன்னருக்கு எதிராக மாணவர்கள் போராடக் கூடாது என்பதற்காக கடும் சட்டம் இயற்றப் பட்டிருந்தது. மாணவர்கள் கூடிகூடி பேசக் கூடாது.
ஆசிரியர்களை எதிர்த்து பேசினால் தண்டனை. மன்னருக்கு எதிரான வாசகங்கள் கொண்ட நோட்டீஸ்கள். பத்திரிகைகள் வைத்திருக்கக்கூடாது என பல கட்டுப்பாடுகள்…..
ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியால் நாடே சிக்கி சீரழிந்துக் கொண்டிருந்தது. மாஸ்கோ பல்கலை மாணவர்கள் ஜார் மன்னரை எதிர்த்து, போரிட கல்லூரியை விட்டு வெளியே வந்தனர்.
இது 1887, டிசம்பர் 7-ம் தேதி நடந்தது. மாஸ்கோ மாணவர்களுக்கு ஆதரவாக கஸான் பல்கலை மாணவர்களும், ஜார் மன்னருக்கு எதிராக கல்லூரியில் கோஷமிட்டனர்.
அப்போராட்டக் குழுவில் விளாதிமிரும் இருந்தார். போராடிய மாணவர்களை கைது செய்தது. அரசு. விளாதிமிர் தைரியமாய் சிறை சென்றார். முதல் சிறை வாழ்க்கை. சக மாணவர்கள் விளாதிமிரிடம், ”இனி என்ன செய்யப் போகிறோம்” என்று கேட்டனர்.
“எனது அண்ணன் வழியில் ஜார் மன்னருக்கு எதிராக போராடப்போகிறோம்” என்றார் விளாதிமிர். சிறையில் ஒருவருக்கொருவர் பேசுவதை விரும்பாத காவல்துறை விளாதிமிரை கொக்உஷ்தினே கிராம வீட்டில் தனியே காவல் வைத்தனர்.
அங்கு அவர் நிறைய நூல்களை படித்துக் கொண்டே இருந்தார். ஓராண்டு காவலுக்கு பின் விடுவிக்கப்பட்டார் விளாதிமிர். கஸான் பல்கலைக் கழகம் அவர் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை.
அயல்நாடு சென்று படிக்கவும் அனுமதி இல்லை. மகனை படிக்க அனுமதிக்கும் படியாக தாய் அனுப்பிய கருணை மனுவையும் தள்ளுபடி செய்தது அரசு.
விளாதிமிர் வீட்டிலிருந்தே சட்டக் கல்வியை பயின்றார். நான்காண்டு காலம் கற்க வேண்டிய கல்வியை ஒன்றரை ஆண்டுகளில் முடித்தார். 1892-ம் ஆண்டு வழக்கறிஞரானார். இரண்டு ஆண்டுகள் இத்தொழிலில் ஈடுபட, அவருக்கு தொடர்ந்து செய்ய மனமில்லை.
ரஷ்யா அடிமைத் தனத்திலிருக்கும் போது தான் சொகுசு வாழ்க்கை வாழ்வது தேச துரோகம் எண்ணினார். தேச விடுதலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
1893-ல் ‘குடியானவர் வாழ்க்கையில் புதிய பொருளாதார வளர்ச்சி’ என்ற தலைப்பில் முதல் கட்டுரை எழுதினார். அதே ஆண்டில் மார்க்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்தார்.
முதல் உலக போரும், ஜாரின் தோல்வியும்
1914-ல் திடீரென்று முதல் உலகப் தொடங்கியது. ஜெர்மனி மீது ரஷ்யா போர் தொடுத்தது. ‘ முதலாளித்துவ நாடுகளின் பொழுது போக்கு சூதாட்டம் இந்த உலகப்போர்.
ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்களை சாகடிக்கும் அராஜகச் செயல் இந்த போர்’ என்று கடுமையாக தாக்கி எழுதினார் லெனின். ரஷ்யா பாராளுமன்றம் போரில் ரஷ்யா ராணுவம் கலந்துக் கொள்ள அனுமதிக் கிடைத்தது.
ரஷ்யா ராணுவம் தோல்வி மேல் தோல்விக் கண்டது. அரசுக்கு ராணுவ வீரர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்யவில்லை. ராணுவ வீரர்கள் தங்களுக்கு தரமான உணவு இல்லை.
குளிரைத் தாங்கக் கூடிய உடைகள் இல்லை. எதிர்களை தாக்கும் தரமான துப்பாக்கிகள் இல்லை. சண்டை போடு என்றால் எப்படி முடியும். ராணுவத்தினர் எதிரிகளை தாக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் ராணுவத்தினர் பல்லாயிரம் பேர்கள் ஜாருக்கு எதிராக போர்க்களத்தில் கோஷமிட்டனர்.
பசி பட்டினியோடு குளிரின் தாக்குலை சமாளித்துக் கொண்டு சண்டை போட முடியாது என்று வேறு நாடுகளில் அடைக்கலமடைந்தனர். 1914- ம் வருடம், ஜூலை, 25-ம் தேதி லெனின் வாழ்ந்த வீட்டை சோதனையிட்டனர் ஆஸ்திரிய அதிகாரிகள்.
இவர் ஜார் அரசரின் முதல் எதிரி. என்று ஆஸ்திரிய நீதிமன்றம் சிறையில் அடைத்தது. 11 நாட்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்தார் லெனின். லெனின் சுவிசர்லாந்து நாட்டில் பெரீன் நகரில் வசித்தப்படி ரஷ்யா புரட்சிக்கான காரியங்களை ஆற்றிக் கொண்டார்.
அவரும் மனைவியும், அரைகுறை உணவுடன் தங்களின் மகத்தான புரட்சி சேவையை ஆற்றிக் கொண்டிருந்தனர். ரஷ்யாவில் ஜாருக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் திரண்டு எழுவதை கண்டார் லெனின்.
போர் முனையில் ரஷ்யா தோல்வி மேல் தோல்வி கண்டது. போரால் மக்கள் பட்டினியால் துவண்டனர். போல்ஷ்விக் கட்சி ஆட்கள் மக்கள் முன், “ஜார் அரசை ஒழித்தால் அல்லாமல் நமக்கு விடிவு காலமில்லை. தலைவர் லெனின் வழியை பின்பற்றுவோம்’ என்று கிராமம் கிராமமாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஜார் மன்னர் தூக்கி எறியப்பட்டார்
கொடுங்கோலன் ஜார் அரசை எதிர்க்க மக்கள் முடிவு செய்தனர். லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியினர் ரஷ்யா முழுக்க போராட்டங்களை நடத்த காலநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
லெனின் ரஷ்யாவில் இல்லை என்றாலும் அயல் நாடுகளிலிருந்தே ஓய்வின்றி மக்கள் புரட்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருந்தார். 1917-ம் ஆண்டு, ஜனவரி மாதம். மாஸ்கோ, பெட்ரோ கிராட், பாகு, பீட்டர்ஸ்பர்க் போன்ற ரஷ்யா முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை துவக்கினர்.
விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், ஏழை மக்கள் யாவரும் ஒன்று திரண்டனர். சில ராணுவத்தில் பணிபுரிபவர்களும் இணைந்தனர். தலைமை போல்ஷ்விக் கட்சி புரட்சித் தலைவர்கள்.
”300 ஆண்டுகளாக மக்களை வாழ விடாத ஜார் மன்னர் ஆட்சி ஒழிக!” என்று கூச்சலிட்டனர். தங்கள் பரம்பரையில் எந்தக் காலத்திலும் கொந்தளிக்காத மக்கள் கொந்தளித்ததை எண்ணி மன்னர் இரண்டாம் நிக்கோலாய் கடும் கோபத்திற்கு ஆளானார். ராணுவத்தை அழைத்தார்.
“போராட்டக்காரர்களை கொன்று குவியுங்கள். அரசுக்கு எதிராக கூச்சலிடும் எந்த நாயையும் உயிரோடு விடாதீர்கள்.” மார்ச் 11-ம் தேதி. ஆயுதங்களை மக்கள் ஏந்தினர். ராணுவத்தினர்….. ஆயுத தாங்கி மக்களை பார்த்தனர்.
“கலைந்து செல்லுங்கள்.” ராணுவம் மிரட்டியது. ஜார் ஒழிக! “அடிப்போம்” என்று சிலரை தாக்கினார். கூட்டம் அசையவில்லை. ஜார் ஒழிக… ஜார் ஒழிக… மக்களை அடிமைகளாய் நடத்தும் ஜார் ஒழிக! துப்பாகி சூடு நடத்தினர் ராணுவத்தினர்.
மக்கள் கலையவில்லை. ராணுவத்தினர் அடிப்பட்டு, காயம்பட்டு கிடக்கும் மக்களை பார்த்தனர். ஜாரால் எவருக்கும் பயனில்லை. இவர்களை சுடுவதால் யாருக்கும் லாபம்? அரசுக்கு பணியாற்றி ஒரு சுகத்தையும் அனுபவிக்க என்று நினைத்த ராணுவத்தினர் மக்களோடு சேர்ந்து கொண்டனர்.
ரஷ்யாவே கிளர்ந்தது. ஜார் மன்னன் எரிமலையானான். மக்களை தனக்கு எதிராக போராடிய தூண்டி விட்டவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டார் ஜார். லெனின் ரஷ்யாவில் இல்லை.
அவருக்கு உதவும் முக்கிய போல்ஷ்விக் ரஷ்யா பாதுகாப்பு தலைவர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். மன்னர் இரண்டாம் நிக்கோலாய் தனது பதவியை இளவரசர் லிவோவிடம் ஒப்படைத்து விட்டு நகர்ந்தார்.
ஆனால் ஆட்சியில் மன்னர் பரம்பரை ரத்தம் ஓடுவதால் இவரும் மக்களை அடிமைகளாகவே பார்த்தனர். புதிய மன்னர் குருமார்கள், தொழிலதிபர்கள் சொன்னதையே செய்தார்.
புதிய மன்னருக்கு எதிராகவும் மக்கள் போராடினர். ‘எங்களுக்கு மன்னர் ஆட்சித் தேவையில்ல. மக்களாட்சிதான் வேணடும. எங்கள் முனனோர்கள் அடிமைகளாக வாழ்ந்ததை போல எங்களால் வாழ முடியாது.
எங்கள் அடிமைச் சங்கிலிகளை தகர்த்தெறிவோம். நாட்டிற்கு சமத்துவம், சகோரத்துவம், பொது உடமையே வேண்டும்’ என்று லெனின் எழுதினார்.
‘இனி அயல்நாடுகளில் மறைந்து வாழ்ந்தது போதும். மக்கள் எழுச்சி பெற்று விட்டார்கள். தாய்நாடு செல்வோம்’ என்று நினைத்தார்.
லெனினின் ‘பொது உடமை ஆட்சி’
1917-ல் ஏப்ரல், 3-ம் தேதி லெனின் தன் மனைவி குருப்ஸ்காயாவுடன் ரஷ்யாவின் முக்கிய நகரமான பெட்ரோ கிராட்க்கு வந்த போது, அந்த புரட்சி தலைவருக்கு மக்கள் மாபெரும் வரவேற்பு வழங்கினர்.
தோழர் லெனின் வாழ்க! புரட்சி வாழ்க! ஜார் ஒழிக! போர் ஒழிக! என்று மக்கள் புரட்சிக்குரல் எழுப்பினர். அப்போது அவர் எப்படி இருந்தார்?! ஒரு சிறு துணிப்பை. நைந்த மேலுடை.
அழுக்கேறிய தொப்பி. அவரின் அருகில் அன்பு காதல் மனைவி. அவர் உடையும் அழுக்கேறி இருந்தது. அவர் கையிலும் அழுக்கான பைகள். மக்களுக்காக பாடுபட்ட இவர்கள் தங்களின் சுகத்தை சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.
தங்கள் மக்களை போலவே ஏழ்மையுடனே வாழ்ந்தார்கள். “புதிய அரசு எப்படி அமையும்?” என்று மக்கள் கேட்டனர். மக்களுக்கு மன்னர் ஆட்சி அழியும். மக்கள் ஆட்சி மலரும் என்பதை உணர்ந்த லெனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டனர்.
”நமது ஒன்றிணைந்த ரஷ்யாவை ‘சோவியத் ‘ என்று அழைப்போம் என்றார்.
- நிலங்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படும்.
- விவசாய – கூட்டுறவு பண்ணைகள் உருவாகும்.
- தொழிற்சாலைகள் யாவும் அரசுக்கு சொந்தமாகும்.
- வங்கிகளும் அரசுக்கு சொந்தம்.
- பண்ணையடிமை கப்படும்.
- ஏழ்மை என்ற வார்த்தை சோவியத் யூனியனி லிருந்து அகற்றம்.
இவையாவும் நடக்கும். மக்களான ஒத்துழைப்பு வேண்டும்” என்றார் லெனின். 1917, அக்டோபர் 10-ம்தேதி. போல்ஷ்விக் கட்சி கூட்டம்.
லெனினின் ஆயுதப்போராட்டம்
ஆயுதப்போராட்டம் நடத்தி ஜாரை நாட்டை விட்டு துரத்தி, மக்களாட்சியை நடத்துவோம். நமது ராணுவப்படை செஞ்சேனைப் படையாகும். தாக்குதலை தொடர்வோம்.
தொடங்குவோம்” என்றார் லெனின். காலத்தாமதம் வேண்டாம். நமது தாக்குதலை 24-ம் தேதி செஞ்சேனை படை 26-ம் தேதி பெட்ரோகிராட் ரயில்வே நிலையம், தந்தி நிலையம் அரசு வங்கிகள், தொலைபேசி நிலையம் கைப்பற்றினர்.
செஞ்சேனைப் படையின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் ஜாரின் அரசு படை அலறி அடித்துக் கொண்டு அரண்மனைக்குள் தஞ்சமடைந்தனர். செஞ்சேனைப்படை அரண்மனையை சுற்றி வளைத்தது.
ஒரு பிரிவு படை உள்ளே நுழைந்து அரச வம்சத்தினர் அனைவரையும் கைது செய்தனர். “மன்னராட்சி ஒழிந்தது” என்று செஞ்சேனைப் படையினர் முழங்கினர். இரவு 11 மணிக்கு மக்கள் தலைவர் புரட்சி நாயகர் லெனின் ஸ்மோல்னி மாளிகைக்குள் நுழைந்தார்.
லெனின் வாழ்க! புரட்சி வாழ்க! மக்கள் வாழ்த்தொலி விண்ணை முட்டியது. மக்கள் அரண்மனை முன் கூடினர். லெனின் மற்றும் தலைவர்கள்… மக்களாட்சியான பொது உடமை ஆட்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்தனர்.
“உதயசூரியன் மலர்ந்தான்”.
மக்கள் தலைவன் லெனின் அரண்மனை வாசல் முன் மகிழ்ச்சியோடு வந்து நின்றார். ஆனால் அதே அழுக்கு உடை… கலைந்த தலைமுடி. தலைவரை பார்த்ததும் மக்கள் ‘லெனின் வாழ்க – புரட்சி வாழ்க’ என ஆரவாரித்தனர்.
“300 ஆண்டு கால ஜார் ஆட்சி நேற்று இரவே ஒழிந்து விட்ட டது. இது மக்கள் ஆட்சி… உங்கள் ஆட்சி. உங்கள் தலைவன் அல்ல. சேவகன் இனி நம்மை நாமே ஆள்வோம். நிம்மதியாக இருங்கள்.
அக்டோபர் 26-ம் தேதி, புதிய சுதந்திர சோவியத் ஆட்சியில் அமர்ந்தது. தலைவர் லெனின் தேசிய வளர்ச்சி தலைவர் ஸ்டாலின் – உள்நாட்டு அமைச்சர் – ரிக்கோவ், விவசாய துறை – மில்யூதின், தொழிலாளர் துறை – ஷல்யாப் நிக்கோவ்.
இராணுவம் உள்பட தொழில் துறை – நோகின். கல்வித் துறை லூரனார்ஸ்கி பொருளாதாரத் துறை – ஸ்தெப்பனாவ், வெளிவிவகாரம் – டிராஸ்கி… என பல துறைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.
லெனின் தன் இருக்கையில் அமர்ந்தார். காவல் துறை அதிகாரி வந்தார். “தோழரே! ஜார் மன்னரின் ஆட்சியில் அட்டூழியங்கள் புரிந்தவர்களை சுட்டுக் கொல்லலாமா!” “தோழரே அவர்களை கொல்லாதீர்கள்.
இனி யாரும் சோவியத்தில் ஒரு துளி ரத்தம் சிந்தக் கூடாது. நாம் நமது ரத்தத்தை வியர்வையாக்கி, கடுமையாய் உழைத்து சோவியத்தில் வாழும் எல்லா மக்களுக்கும் நல்வாழ்வை வழங்குவோம். அதுதான் நமது முதல் பணி” என்றார் லெனின்.
மக்கள் நலனுக்காக அல்லும் பகலும் ஓய்வின்றி உழைத்த லெனின் வலது காலும், வலது கையும் 1920 -ம் ஆண்டு, டிசம்பர், 23-ம் தேதி செயலிழந்தன.
மருத்துவர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் மக்களுக்காக உழைத்தப்படி இருந்தார். தன் காதல் கணவரின் நிலையை எண்ணி எண்ணி கண்ணீர் விடுவார் நதேஷ்தா குருப்ஸ்காயா.
1921, ஜனவரி, 21-ம் தேதி தனது அறைக்குள் சென்றார் புரட்சித் தலைவர் லெனின். தனது மனைவியிடம் கதை ஒன்றை சொல்லும்படி கேட்டார். அவர் கதையை சொல்ல மாபெரும் தலைவர் கதையை கேட்டப்படி மறைந்தார். பொது உடமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த அவர் என்றென்றும் வாழ்வார் உண்மை இது!.
லெனினின் தமிழ் நூல்கள்
லெனின் 100 – கம்யூனிஸத்தின் செயல் தந்தை – பசுமைக்குமார்
மருதன் லெனினுக்கு மரணமில்லை – மரியா பிரிலெழாயெவா
லெனின் – ஸ்டாலின்
அரசும் புரட்சியும் – ரா.கிருஷ்ணய்யா
முதல் காம்ரேட் லெனின் – மருதன்
லெனினின் தத்துவங்கள்
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு
மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்
அனைவரையும் நேசி, சிலரை மட்டும் நம்பு, ஒருவரை மட்டும் பின்பற்று, ஆனால் ஒவ்வொருவரிடமிருந்து கற்றுக்கொள்.
பிறரிடம் நீ எந்த குணத்தை வெறுக்கிறாயோ அந்த குணத்தை உன்னிடம் வைத்துக்கொள்ளாதே!.
நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே, நீ விரும்பியதை செய்ய இந்த உலகமே எதிர்த்தாலும் செய்து முடி.
எல்லாரையும் திருப்தி படவைக்க நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியாது.
தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான வலிமையும் தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட. இலட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து. உலகம் உன்னைப் போற்றும்.
உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்..!
அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது
மத ஒழுக்கநெறி என்ற சொற்தொடர் தான் மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு ஏமாளிகளாக வைத்திருக்கிறது.
Comment