லூசுன் பற்றி
லூசுன் பற்றி

லூசுன் பற்றி

புகழ் பெற்ற இச் சீனப் புரட்சி எழுத்தாளரைப் பற்றி மாவோ குறிப்பிட்டார்:

“சீனத்தின் பண்பாட்டுப்புரட்சியின் தலமைத் தளபதியான லூ சுன் ஒரு மாபெரும் இலக்கியவாதியாக மட்டுமல்ல, ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் புரட்சியாளராகவும் திகழ்ந்தார். அவர் விட்டுக்கொடுக்காத நேர்மை கொண்டவராக இருந்தார். அண்டிப்பிழைப்பதும், அடிமை மனப்பாங்கும் அவரிடம் சிறிதும் இருக்கவில்லை. பகைவரின் கோட்டையில் விரிசலை உண்டாக்கி சூறாவலி போல் பண்பாட்டு துறையில் தாக்கினார். நம் வரலாற்றில் ஈடினையற்ற வீரர்கத் திகழ்ந்தவர். அவர் மேற்கொண்ட பாதை, சீனத்தின் புதிய தேசியப் பண்பாட்டின் பாதையாகும்.”

அவரது தாயின் பெயர் லூ. தாயின் பெயரானலுவிலிருந்தே லூ சுன் என்ற புனை பெயர் பிறந்தது, இளம்பருவத்திலேயே அசாதாரணமான அறிவுக் கூர்மையை வெளிப்படுத்திய லூ சுன், சீனச் செம்மை இலக்கியங்கள்:வரலாறு ஆகியவற்றை ஆழ்ந்து கற்றதுடன், கிராமிய கலைகள், ஓவியங்கள், நாடோடிப் பாடல்கள் முதலியவற்றிலும் அளவற்ற ஆர்வம் காட்டினர். அவரே சித்திரங்களையும் வரைவதுண்டு. இளம் வயதில் அவருக்கு வாய்த்த நண்பர்கள் பேரும்பாலும் எளிய நேர்மையான உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இத் தகைய நட்பும்தொடர்புமே லூ சுன் தன் வாழ்நாள் முழுதும் பேணிப் பாதுகாத்த உழைப்பாளி மக்களுடன் உயிருள்ள தொடர்பு என்றின்றும் அமைந்தன. உலக இலக்கியங்கள் பலவற்றிையும் விஞ்ஞான நூல்களையும் படிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது. 1901 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற இவருக்கு ஜப்பானில் படிப்பதற்கு அரசு உதவித் தொகை கிடைத்தது. அடுத்த ஆண்டு அவர் ஜப்பானுக்குப் புறப்பட்டார். ஜப்பானில் உள்ள சென்டாயில் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க நேர்ந்த போதுதான் அவர் பைரன், ஷெல்லி, ஹெய்ன், புஷ்கின், லெர்மென்டோவ், மீக் கீவிஸ், பெடோஃபி ஆகிய புரட்சிக் கவிஞர்களின் படைப்புகளைப் படித்தார். அங்கு ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொண்டார் , நலிவடைந்த தாயகத்துக்குத் தன் மருத்துவக் கல்வி உதவி புரியும் என்று எண்ணிய லூ சுன்னை எழுத்தாளனக மாற்றச் செய்தது ஒரு நிகழ்ச்சி. 1906ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்நிகழ்ச்சியை, லூ சுன் தனது முதல் சிறுகதைத் தொகுபடிக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். மருத்துவக் கல்லூரியில் பர்க்கும் போது சீனர்கள் சம்பந்திப்ப்ட்ட படம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு லூசுன்னுக்குக்கிட்டியது.

அதில் ஒரு சீனன் கயிற்றினுல் கட்டப் படிருக்க வேறு பலர் அவனைச் சுற்றி நின்று கொன்டிருக்கின்றர்.அவர்களெல்லாம் நல்ல பலசாலிகள், ஆனால் உண்ர்ச்சியற்றவர்களாய்த் காணப்பட்டனர். கைகள் கட்டப்பட்டுள்ள பேர்வழி ரஷ்யர்களுக்கு உதவிய ஒற்றன் எனவும் அவனை கொல்வதை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை

அவர்கள் வேடிக்கைப் பொருள்களாக நிலவவும் அல்லது இத்தகைய உதவாக்கரைக் காட்சியைப் பார்த்து நிற்பவர்களாகவுமே உள்ள இவர்களுக்கு சேவை செய்யவா?: நோயினல் அவர்களில் எத்தனைபேர் மாண்டாலும் அது வருத்தத்துக்குரியதாக இருக்கத் தேவை இல்லை. ஆகவே எல்லாவற்றையும்விட முக்கியமானது அவர்களது மனப் பாங்கை மாற்றுவதே. அதுமுதல், இலக்கியமே அதற்கேற்ற சாதனம் என உணர்ந்தேன். இலக்கிய இயக்கத்தை வளர்க்க முடிவு செய்தேன்.

1909 இல் தாயகம் திரும்பிய லூ சுன், பள்ளியாசிரிய ராகப் பணியாற்றினர். 1911 ஆம் ஆண்டுப் புரட்சியை மனமார வரவேற்ற லூ சுன், புரட்சியில் பங்கேற்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார். 1912 ஆம் ஆண்டு எனக் குடியரசின் தற்காலிக அரசில் அவர் கல்வி அமைச்சில் ஓர் உறுப்பினராக்கப்பட்டார்.

ஆனல் சன் யாட்சன் தலைமையில் நடந்த 1911 ஆம் ஆண்டுப் புரட்சி மிகவிரைவில் தோல்வியடைந்தது. சீன முதலாளி வர்க்கத்தாலும் குட்டி முதலாளி வர்க்கத்தாலும் தலைமை தாங்கப்பட்ட இப்புரட்சி, சிங் வமிச ஆட்சியைத் தூக்கியெறிந்து 2000 ஆண்டுகளாக நிலவிய நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு முடிவு கட்டியது. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கத்தை உயர்த்திப்பிடித்த இப் புரட்சி விரைவில் தோல்வியில் முடிவடைந்தது. ஏனெனில் இப்புரட்சிக்குத் தகலமை தாங்கியவர்கள் சீன மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலோரான பரந்துபட்ட விவசாய மக்களைத் சார்ந்திருக்கவில்ல. உறுதியான திருத்தத்துக்கான திட்டம் இவரிகளிடம் இல்லை. ஏகாதிபதிதியச் சக்திகளை முற்றிலுமாகத் துடைத்தெறியும் வலிமைவும் இவர்களிடம் இல்லை. எனவே ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பணிபுரிந்த பல்வேறு புத்தப் பிரபுக்கள், அரசியல்வாதிகள் அவர்களின் கைக்கு அதிகாரம் சென்றடைந்தது. நில பிரபுக்கள் தனித்தனி குட்டி அரசுகள் உருவாக்கிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் போரிட்டனர். தமது செல்வாக்குப் பகுதிகளை விரிவுபடுத்திக் கொள்வதில் ஏகாதிபத்தியவாதிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர். இத்துடன் அரைக் காலனிய அரை நிலபிரப்புதுவ ஒடுக்குமுறைகள் பெருகின. பண்பாட்டுத் துறையில் கடந்த காலத்தை உயர்த்திப் பிடிக்கும் கெட்டக்கருத்துக்கள் பரவலாயின.

இச்சூழல் லூ சுன்னைக் கடுமையாக வாட்டியது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் அவர் மனதில் கொந்தளிப்புகள் நிறைந்திருந்தன. இதனல்தான் இலக்கியம் வகிக்கின்ற பங்கையே மறுதலிக்கக்கூடிய அளவுக்கு லூ சுன் சென்றார். 1917 ஆம் ஆண்டில் ராணுவக் கல்வி நிலயம் ஒன்றில் அவர் ஆற்றிய உரை ஒன்றில் கூறினர்: “நான் சலிப்புற்றிருக் கிறேன். இருந்தும் துப்பாக்கியை ஏந்தும் நீங்கள், இலக்கியம் பற்றி அறிய அவாக் கொண்டுள்ளீர்கள். ஆனல் நானே துப்பாக்கி வேட்டுகளின் சத்தத்தையே கேட்க ஆர்வங் கொண்டுள்ளேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுகளின் சத்தம் இலக்கியத்தைவிட கேட்பதற்கு நன்றாக இருக்கும்.”

1919 ஆம் ஆண்டு மே 4-ஆம் நாள் இயக்கம் தொடங்கி, நாடுமுழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பேரலைகள் சுழன்றடித்த போதுதான், லூ சுன் தனக்கு வகுக்கப்பட்ட பாதையைத் தெளிவாகப் பார்க்கத் தொடங்கினர். ஏற்கனவே அவர்மீது 1917 ஆம் ஆண்டு மாபெரும் இரஷ்யப்புரட்சியின் தாக்கம் ஏற்பட்டிருந்தது.

1918 ஏப்ரவில்தான் அவர் தனது முதல் சிறுகதையான “பைத்தியக்காரனின் குறிப்புகள்” எழுதினர். இக்கதை “புதிய இளைஞர்’ என்ற ஏட்டில் வெளிவந்தது. சீனத்தில் மார்க்சியக் கருத்துகளே முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஏடு இதுதான். நவீன சீன இலக்கியத்தின் துவக்கமே இச் சிறுகதைதான் என்று கூறலாம். எண்ணற்ற சிறுகதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும், நினைவுக்குறிப்புகளும் எழுதிய லூ சுன், ஏராளமான பிறநாட்டு இலக்கியப் படைப்புகளை சீனத்தில் மொழிபெயர்த்தார். இலக்கியத்தின் வரலாற்றை எழுதினார். நுண்கலைகளை ஊக்குவித்தார். ஒவியங்களை மூலமும் செய்திகளை பரவலாக்க நேரடியான முயற்சிகள் மேற்கொண்டார். சீனச் செம்மை இலக்கியங்களில் அவர் பெற்றிருந்த புலமை,உலக இலக்கியங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த ஈடுபாடு, உழைக்கும் மக்களுடன் அவருக்கிருந்த நெருக்கமான பிணைப்பு, புரட்சிகரக் கருத்துகளின் தாக்கம் ஆகியவை லூ சுன்னை ஈடினையற்ற கலைஞராக்கின.

1928 இல் அவர் ஓர் இலக்கிய ஏட்டை நிறுவி, மார்க்சிய லெனினியத்தைக் கற்கத் தொடங்கினர். மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய நூல்களை (பிளக்கனேவ், லூனசார்ஸ்கி ஆகியோர் எழுதியவை) யும் கார்க்கி, ஃபத யேல், ஃபர்மனேவ், கோகல், க்ளாட்கோவ், ஷோலக்கோவ் போன்ற இரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழி பெயர்த்தார்.

லூ சுன்னின் சாதனைகள் இலக்கியத்துடன் நின்று விட வில்லை. பொதுவுடமைக் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு லூ சுன், கட்சியால் துவக்கப்பட்ட மக்கள்திரள் இயக்கங்களில் பெரும் பங்காற்றினர். இடதுசாரி எழுத் தாளர் கழகத்தையும், சீனசுதந்திர கழகத்தையும் நிறுவுவதில் முதன்மைப் பங்கு வகித்த லூ சுன், சன் யாட்-சென்னின் மனைவியார் தலைமையேற்றிருந்த சீனமக்கள் உரிமைக் கழகத் திலும் முன்னணியில் பங்கு வகித்தார்.

பொதுவுடைமைக் கட்சியாளருக்கும் முற்போக்காளர் களுக்கும் எதிராக சியாங்கே ஷேக் அவிழ்த்துவிட்ட “வெள்ளைப் பயங்கரம்.தலைவிரித்தாடிய நாட்களில் மறைந்து வாழவேண்டிய “கட்டாயத்துக்குள்ளான லூ சுன் ஒருபோதும் உறுதியிழவில்லை. புரட்சிகரப் புண்பாட்டு அய்க்கிய முன்னணியை காத்து நின்ற அவர், பிற்போக்குக் புரட்டு எழுத்தாளர்களின் குரலை ஒடுக்கச்செப்த் முயற்சிகளை முறியடித்தார்.

ஜப்பானுக்கு எதிராக தேசிய அளவில் ஏற்பட்ட ஐக்கிய முன்னணியைச் சீர்குலைக்க ட்ராட்ஸ்கியவாதிகள் ழேற் கொண்ட சதிகளே அம்பலப்படுத்தி, சீனப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கைகளே முன்னெடுத்துச் சென்றார். காச நோயால் அவதியுற்று 1936 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் காலமான லூ சுன் தனது ஆற்றல்கள் அனைத்தையும், விடுதலையும் மாண்பும் பெற்ற ஒரு புத்துலகை உருவாக்குவ திலேயே செலவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *