ரசிய புரட்சிக்கு முன் லெனின் எழுதிய நூல்கள்
ரசிய புரட்சிக்கு முன் லெனின் எழுதிய நூல்கள்

ரசிய புரட்சிக்கு முன் லெனின் எழுதிய நூல்கள்

இடதுசாரி கட்சி என்று வாய்கிழிய பேசும் கட்சிகள் லெனின் நூலை வெளியிடவே தயங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன் முன் வெளியீட்டு திட்டத்தில் லெனின் தேர்வு நூல்களை கொண்டு வருவதாக கூறிய சிபிஎம்மின் பாரதிபுத்தகாலயம் நூலையும் வெளியிடவில்லை PK Rajan பணத்தை திருப்பி வாங்கி கொள் என்ற திமிர்தனத்தில் பதிலளித்தார் இன்றுள்ள எவரும் பதிலளிக்க கூட முன் வருவதில்லை. இவர்கள் இடதுசாரி எந்த வகையில் நீங்களே புரிந்து பதிலளியுங்கள்?.

லெனின் தன் நாட்டில் புரட்சிக்கு முன் செய்ய வேண்டியதை மிக துள்ளியமாக நுண் அறிவோடு அணுகி அதற்கான பணியினை செய்தார். அதனை இங்கு பொருட்படுத்தாத இடதுசாரிகள் எப்படி புரட்சி விதிகளை புரிந்துக் கொள்ளாமலே புரட்சியை நடத்துவர்? சரி தொடர்ந்து விவதிப்போம்.. அவரின் நூல்கள் வரிசையாக குறிப்பிட்டுள்ளேன் அவை ரசிய புரட்சிக்கு முன் மற்றும் புரட்சியின் போது எழுதப் பட்டவை (தலைபையாவது வாசித்து பாருங்கள் தோழர்களே).

என்ன செய்ய வேண்டும் நூலிலிருந்து சில பகுதி

மார்க்சியத்தை,விமர்சன வழியில் அணுக வேண்டும் என்று சொல்கிற இவர்களின் கோரிக்க என்ன வென்றால்?

காலம் மாறிப் போச்சு, அதனால், கம்யூனிச கட்சி, புரட்சிரகமானதாக இருப்பதை விடுத்து, சமூகச் சீர்திருத்தங்களுக்கான கட்சியாக மாற வேண்டும். இது தான் இந்தப் புதிய போக்கினரின் அடிப்படை நோக்கம்.

விமர்சனம், சுய விமர்சனம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அனைத்தையும் சுய விமர்சனம் செய்து மேம்படுத்திக் கொள்வது என்பது கம்யூனிஸ்டுகளின் போக்கு. ஆனால் இந்தப் புதிய போக்கினருக்கு விமர்சனம் என்றால் வேறு பொருள். அது என்னவென்றால்.., மார்க்சிய அடிப்படைகளைச் சிதைப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். காலம்மாறி போச்சு, மார்க்சிய அடிப்படைகள் காலாவதியாகிவிட்டது என்பதே இந்தப் புதிய போக்கினர் கருத்து.

புரட்சியைக் கைவிட்டு சீர்திருத்தத்துக்கு மாறுகிற, ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம், கம்யூனிசத்தில், முதலாளித்துவக் கருத்துக்களையும், முதலாளி வர்க்கப் போக்குள்ளவர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம்.

இந்தச் சந்தர்ப்பவாதிகளின் இறுதி நோக்கம் என்னவென்றால், கம்யூனிசத்தில் உள்ள புரட்சிகரத் தன்மையை நீக்கி சீர்திருத்த பாதைக்கு அழைத்துச் செல்வதே ஆகும்.

சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை. புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது.

1895 பிரெடெரிக் எங்கெல்ஸ்

1897 நாம் கைவிடும் மரபு[ரிமை]

1897 பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை [ஆர்.கே.கண்ணன்]

1899 நமது வேலைத் திட்டம்

1901 / 05 எங்கிருந்து தொடங்குவது ?

1901 / 12 பொருளாதாரவாதத்தின் ஆதரவாளர்களுடன் ஒரு உரையாடல்

1901 – 1907 விவசாயப் பிரச்சினையும் மார்க்சின் திறனாய்வாளர்களும்

1902 என்ன செய்ய வேண்டும் ? : நம் இயக்கத்தின் சூடேறியப் பிரச்சினைகள்

1903 / 03 நாட்டுப்புற ஏழை மக்களுக்கு

இந்த நூல் தேர்வுநூல்கள் தொகுதியிலோ, நூல் திரட்டுத் தொகுதியிலோ சேர்க்கப்படவில்லை

1904 ஓரடி முன்னால் ஈரடி பின்னால் : நம் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

1905 / 01 ருஷ்யாவில் புரட்சியின் துவக்கம்

1905 / 07 ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்

1905 / 11 கட்சி நிறுவனமும் கட்சி இலக்கியமும்

1905 / 11 குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்

1906 / 08 மாஸ்கோ புரட்சி எழுச்சியின் படிப்பினைகள்

1908 / 03-04 மார்க்சியமும் திருத்தல்வாதமும்

1909 / 01 கட்சிப் பாதை

1910 / 12 மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில இயல்புகள்

1912 / 05 ஹெர்ட்ஸன் நினைவாக

1913 / 03 மார்க்சியத்தின்  மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்

1913 / 03 வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்

1913 / 10-12 தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்

1913 / 12 ரு ஷ்ய சோஷல் டெமாக்ரடிக் தொழிலாளர் கட்சியின் தேசீயச் செயல்திட்டம்

1914 / 02-05 தேச [இன]ங்களின் சுயநிர்ணய உரிமை

1914 / 05 ஒற்றுமைக்கான கூக்குரல்களின் போர்வையில் ஒற்றுமையை உடைத்தல்

1914 / 07-11 கார்ல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)

1914 / 09 போரும் ருஷ்யன் சமூக-ஜனநாயகமும்

1914 / 12 மாருஷ்யர்களது தேசிய பெருமித உணர்ச்சிக் குறித்து

1915 / 05-06 இரண்டாவது அகிலத்தின் தகர்வு

1915 / 07-08 சோஷலிஸமும் போரும்

1915 / 08 ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வேண்டும் எனும் முழக்கத்தைப் பற்றி

1915 / 8 ரு.ச.ஜ.தொ. கட்சியின் மத்தியக் கமிட்டி வெளியிட்ட போர் மீதான அறிக்கை குறித்து “சொத்ஸியால் டெமக்ராட்” ஆசிரியப் பகுதி விமர்சனக் குறிப்பு

1916 / 01-02 சோஷலிஸப் புரட்சியும் தேச[இன]ங்களின் சுயநிர்ணய உரிமையும் (ஆய்வுரைகள்)

1916 / 01-06 ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்

1916 / 07 சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு

1916 / 08-10 ஏகாதிபத்தியக் கால பொருளாதாரவாதமும் மார்க்சியத்தை இழிவுப்படுத்தும் ஒரு கேலிச் சித்திரமும்

1917 / 03 தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள். முதல் கடிதம். முதல் புரட்சியின் முதல் கட்டம்

1917 / 04 இரட்டை ஆட்சி

1917 / 04 இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள். ஆராய்ச்சியுரைகள்

1917 / 04 நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (பாட்டாளி வர்க்கக் கட்சிக்கான நகல் கொள்கை அறிக்கை)

1917 / 05 ரு.ச.ஜ.தொ.க. (போல்ஷிவிக்)இன் ஏழாவது(ஏப்ரல்) அகில ருஷ்ய மாநாடு [ஏப்ரல் 24-29(மே 7-12) 1917]

1917 / 05 ரு.ச.ஜ.தொ.க. (போல்ஷிவிக்)இன் ஏழாவது(ஏப்ரல்) அகில ருஷ்ய மாநாட்டுத் தீர்மானங்களுக்கான முகவுரை

1917 / 06 தொழிலாளர், படையாளிகள் பிரதிநிதிகளின் சோவியத்களது முதல் அகில ருஷ்ய மாநாடு [ஜுன்3-24 1917] : இடைக்கால அரசாங்கத்தோடான உறவுநிலை பற்றிய உரை ஜுன்4

1917 / 07 “புரொலிட்டார்ஸ்கொயே தியேலொ” ஆசிரியர்களுக்குக் கடிதம்

1917 / 07 அமைச்சரவையிலிருந்து அவர்கள் விலகிய போது காடேட்டுகள் என்ன கருதியிருப்பார்கள்

1917 / 07 அரசியல் நிலைமை (நான்கு ஆய்வுரைகள்)

1917 / 07 ஆட்சி அதிகாரம் எங்கே இருக்கிறது, எதிர்ப்புரட்சி எங்கே இருக்கிறது ?

1917 / 07 கோஷங்கள் பற்றி

1917 / 07 போல்ஷிவிக் தலைவர்கள் நீதிமன்றத்தின் ஆஜராவது பற்றிய பிரச்சினை

1917 / 07 மூன்று நெருக்கடிகள்

1917 / 07 ஜுன் பதினெட்டாம் நாள்

1917 / 08 ரு.ச.ஜ.தொ.கட்சியின் மத்திய கமிட்டிக்கு

1917 / 08-11 அரசும் புரட்சியும் : அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவங்களும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும்

1917 / 09 இன்றைய அரசியல் நிலைமை பற்றிய நகல் தீர்மானம்

1917 / 09 சமரசங்கள் குறித்து

1917 / 09 நெருங்கி வரும் பெரும் விபத்து, அதை எதிர்த்துப் போராடுவது எப்படி

1917 / 09 புரட்சியின் அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்று

1917 / 09 புரட்சியின் படிப்பினைகள்

1917 / 09 மார்க்சியமும் புரட்சி எழுச்சியும்

1917 / 09 ருஷ்யப் புரட்சியும் உள்நாட்டுப் போரும் (உள்நாட்டுப் போரைக் கொண்டு கிலியூட்ட முயல்கிறார்கள்)

1917 / 09-10 போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா ?

1917 / 10 ஒரு பார்வையாளனின் அறிவுரைகள்

1917 / 10 தொழிலாளர்கள், படையாளர்கள் பிரதிநிதிகளது சோவியத்துகளின் இரண்டாவது அகில ருஷ்ய காங்கிரஸ், அக்டோபர் 25-6 1917.

1917 / 10 நெருக்கடி முதிர்ந்து விட்டது

1917 / 10 போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்

1917 / 10 மத்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்

1917 / 10 மத்திய கமிட்டி, மாஸ்கோ பெத்ரோகிராத் கமிட்டிகள் மற்றும் பெத்ரோகிராத் மாஸ்கோ சோவியத்துகளின் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்

1917 / 10 யா.மி. ஸ்வெர்ட்லோவுக்கு எழுதிய கடிதம்

1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.) மத்திய கமிட்டியின் கூட்டம். அக்டோபர் 10, 1917

1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.) மத்திய கமிட்டியின் கூட்டம். அக்டோபர் 16, 1917

1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.)யின் மத்திய கமிட்டிக்கு எழுதிய கடிதம்

1917 / 10 ருஷ்யாவின் குடிமக்களுக்கு!

1917 / 10 வடக்குப் பிராந்திய சோவியத்துகளின் காங்கிரசில் கலந்துகொள்ளும் போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதம்

1917 / 11 தேச மக்களுக்கு

1917 / 11 தொழிலாளருக்கும் உழைக்கும் சுரண்டப்படும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டணி. பிராவ்தாவுக்கு ஒரு கடிதம்

1917 / 11 பொதுவிவகார எழுத்தாளரின் நாள் குறிப்பிலிருந்து: நமது கட்சியின் பிழைகள்

1917 / 11 போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும்

1917 / 11 மத்தியக் கமிட்டிக்கு அகத்தே இருக்கும் எதிர்ப்பணி பற்றிய ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டித் தீர்மானம் நவம்பர் 2, 1917

1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் ம.க.இன் பெரும்பான்மை இடமிருந்து சிறுபான்மைக்குத் தரப்பட்டதான இறுதி எச்சரிக்கை

1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆற்றிய உரைகள், நவம்பர் 1, 1917 குறிப்பேடுகள்

1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டியிலிருந்து. எல்லாக் கட்சி உறுப்பினர்களுக்கும் ருஷ்யாவின் அனைத்து உழைக்கும் வர்க்கங்களுக்கும்

1917 / 11 விவசாயிகள் கேள்விகளுக்குப் பதில்

1917 / 11 விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் விசேஷ அகில ருஷ்யக் காங்கிரஸ், 1917 நவம்பர் 10-15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *