யார் இந்த திருமுருகன் காந்தி? மறந்துபோன தோழர்களுக்காக.. “ஜெர்மனியில் இருந்து நாங்கள் திரும்பி வரும்போது, வளர்மதிக்கு சாராயம் வாங்க வேண்டி, வளர்மதியை அழைத்து, ஒவ்வொரு சாராய பாட்டிலையும் படித்துக் காண்பித்து, எதை வாங்க வேண்டும் என்று கேட்டு, வளர்மதி சொன்ன சாராயத்தை வாங்கி வந்தார் திருமுருகன். பிறகு 2013-ல் நாங்கள் டெல்லியில் தங்கி இருந்தபோது, வளர்மதியும் அறையில் தங்கி இருந்தபோது, வளர்மதி குடித்திருந்தார்.” (ஆதாரம்: திரு உமர் எழுதிய 423 பக்க கடிதம்; நான் ஏன் மே 17 இயக்க உறுப்பினர் இல்லை? பக்கம்-18. பத்தி-43) நன்கு கவனிக்கவும்: திரு உமர் குறிப்பிடும் குடிகார வளர்மதி மே 17 இயக்கத்தவர். இவ்வியக்கத்தின் முக்கியப் பெருந்தலைகளான லேனா, மனோஜ் ஆகியோரும் பெருங்குடிகாரர்கள். இவர்கள் வாங்கும் ஒரு FULL பாட்டிலின் விலை குறைந்தது ரூ 20,000.அடிக்கடி விமானப் பயணம். டெல்லியில் ஒரு நாளைக்கு ரூ 10,000/- வாடகை வாங்கும் உயர்ந்த ரக விடுதியில் அறை. வெளிநாட்டு மது பானம். இதுதான் மே 17.2013-ல் ஜெர்மனியில் உள்ள பிரேமனில் ஏற்படுத்தப்பட்ட தீர்ப்பாயத்தில் இந்த மே 17-ன் முக்கிய தலைவர் உமருக்கு பதில் பங்கேற்று ஈழ இனப்படுகொலையில் இந்தியாவும் குற்றவாளியே என்ற உண்மையை முன்வைக்காதவர். ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை சொல்லும் “தமிழர்தீர்மானம்” என்ற ஆவணம் வெளிப்பட்டுவிடாமல் தடுத்தவர். ஐநாவில் காந்தி இந்திய அரசிற்கு சாதகமாக தனது வாதத்தின் 15ம் பக்கத்தில் இந்தியா கொடுத்த கப்பல் விடுதலை புலிகளை அழிக்க பயன்படுத்தவில்லை என்றவர். (ஆனால் ஈழ ஆதரவாளர்கள் அதை கொண்டுதான் விடுதலை புலிகளை அழித்தார்கள் என்கின்றனர்.)அதேபோல 2009-ல் ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் முகம் சர்வதேச அளவில் தோலுரிந்து வந்தபோது “சீனாவின் முற்றுகைக்குள் இந்தியா’ என்னும் மோசடியான நூலை வெளியிட்டு இந்தியாவை காப்பாற்றியவர். பதிலாக மலையாள அதிகார வர்க்கம்தான் ஈழப் பிரச்சனைக்கு காரணம் எனக்கூறி திசை திருப்பியவர்.நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கதின் பிரதிநிதியாக மே 17 இயக்கத்தின் சார்லஸ் அந்தோணியை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்த திருமுருகன், அதே சார்லஸ் அந்தோணி தனது மனைவியான எழுத்தாளர் மீனா கந்தசாமியை அடித்து உதைத்தபோது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது என்று வக்காலத்து வாங்கினார். வெளிநாட்டு கிறிஸ்துவ மத நிறுவங்களிடம் இருந்து பெரும்பணம் பெறும் பொன்முட்டையிடும் வாத்தான சார்லஸ் அந்தோணியை திருமுருகன் எப்படி பகைத்துக் கொள்வார். (உமரின் 400+ பக்க ஆவணம், பக்கம்-247, பத்தி-556,557).”பெரியார்: இந்தப் பெயரை யார் கொடுத்தார்கள் என்று தெரியாது. இவரைப் பற்றிப் பேசும்போது பெண்கள் விடுதலையை முக்கியமாகச் சொல்லுவார்கள். இவருக்கு இரண்டு மனைவி இருந்தபோதும், யாரையும் ஆண்களைப்போல் வேட்டி கட்டச் சொல்லவில்லை. ஆனால், அடுத்த வீட்டுப் பெண்களை அணியச் சொல்லுவார். எதற்கு? வேட்டி விலகினால் தொடையைப் பார்க்கும் ஆசையில்.”தந்தை பெரியார் காமவெறி பிடித்தவர்! அடுத்தவன் பொண்டாட்டியின் தொடையைப் பார்க்க விரும்பியே அவர் பெண்ணுரிமை பேசினார் என்று இப்படி எழுதியவர் மே 17 இயக்கத்தின் ATM கார்டைப் பயன்படுத்தும், அந்த இயக்கத்தின் சம்பள பட்டியலில் பெயருள்ள திருமுருகன் காந்தியின் வலது கரமான ஹரிஹரன். (ஆதாரம் மேற்படி ஆவணம் பக்கம்-285, பத்தி-638)இதே மே 17 இயக்கத்தின் ஹரிஹரன்தான் இந்தியா ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்கு எதிராக போராடியவர்களை மிரட்டியவர்.2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவை எதிர்த்து தேர்தல் பரப்புரை செய்வது என்ற முடிவெடுத்துவிட்டு பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட கன்னியாகுமரி தொகுதி பக்கமே திருமுருகனோ, மே 17 இயக்கத்தினரோ தலைகாட்டவில்லை. முன்பு ப.சிதம்பரம் திருமுருகனை இயக்கியதுபோல் அப்போது இயக்கியவர் பொன்னார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.இருக்கட்டும். 2013 ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியாக மே 17 இயக்கம் KFC-க்கு எதிராக போராட்டம் நடத்தியது. ஏன்? அமெரிக்காவின் KFC நிறுவனத்திற்கு போட்டியாகவுள்ள ஆஸ்திரேலியாவில் உள்ள “COUNTRY FRIED CHICKEN” என்னும் நிறுவனம் பிரபலமானது. ஜாலி பேனர்ஜி என்பவர் 2013இல் ஆஸ்திரேலியா சென்று, கண்ட்ரி ஃபிரைடு சிக்கன் (CFC) நிறுவன அதிபரைச் சந்தித்துப் பேசி, தென்னிந்தியா முழுவதுக்குமான CFC விற்பனை உரிமையைப் பெற்றார். இதை அறிந்து கொண்ட திருமுருகன் ஜாலி பேனர்ஜியை சந்தித்து, CFC சிக்கனுக்கான விளம்பர வேலைகள் மொத்தத்தையும் தென்னிந்தியா முழுமைக்குமாக தானே ஏற்றுக்கொள்வதாக வேண்டினார். ஜாலி பேனர்ஜி திருமுருகனின் கோரிக்கையை ஏற்று, விளம்பரப் பணிகளை திருமுருகனுக்கு வழங்கினார். உரிய ஒப்பந்தம் போடப்பட்டது. லட்சங்கள் கைமாறின.இப்போது ஏன் போராட்டம் நடத்தினார் என்று உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.தன்னுடைய போட்டி நிறுவனத்தை எதிர்த்து, சந்தையில் அதற்கு இருக்கும் மதிப்பைக் குறைக்க வேண்டிய வணிகத் தேவை திருமுருகனுக்கு இருக்கிறது. எனவேதான், போட்டி நிறுவனத்தை அழிக்க, அமெரிக்க கென்டகி சிக்கன் புற்றுநோயை உண்டாக்குகிறது என்று ஒரு கருத்து உருவாக்கம் செய்தார். இதற்காகவே KFC கடைகளை முற்றுகை இடும் போராட்டத்தை நடத்தினார். (பக்கம்-394, பத்தி-865.)ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தில் இருந்தபோதெல்லாம் ஐநா மனித உரிமை கவுன்சில் (UNHRC) கண்டனங்கள் எழுப்பி இலங்கை அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும். அப்போதெல்லாம் ராஜபக்சே ஆதரவு. சிங்கள புத்த பிக்குகள் UNHRC அறிக்கையை தீ வைத்துக் கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார்கள். மறுநாள் அதே போராட்டத்தை (UNHRC அறிக்கை எரிப்பு) திருமுருகன் தமிழ்நாட்டில் நடத்துவார். இது சர்வதேசப் பத்திரிகைகளில் UNHRC அறிக்கைக்கு இந்தியா இலங்கையில் எதிர்ப்பு என்று செய்தியாக வெளிவரும். ஈழ அரசியல் அறிந்தோர் வெளிநாட்டில் வாழும் நெடியவனை அறிவார்கள். மே 17 இயக்கத்திற்கு தேவையான நிதியை வழங்கியது ஆரம்பத்தில் நெடியவனே. லண்டனில் உள்ள TTC மற்றும் BTF அமைப்புகளுடன் நெருங்கிய உறவு கொண்டவர் திருமுருகன். BTF அமைப்பு (BTF = British Tamil Forum) ராஜபக்சேவுடன் சமரசம் செய்து கொண்டதை அடுத்து அதன் மீதான தடையை ராஜபக்சே அரசு நீக்கியது. இந்த அமைப்பு தற்போது சிங்கள இனவெறி ராஜபக்சே/மைத்திரிபால அரசின் அரவணைப்பைப் பெற்ற அமைப்பு.நெடுமாறன், வைகோ, சீமான், கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி திருமுருகன் காந்தி ஆகியோர் காங்கிரஸ் பாஜக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள ராணுவத்துக்கு போர்க்கப்பல்கள் வழங்கியதை என்றாவது கண்டித்தது உண்டா? கிடையாது.மொத்தமாக 400, 500 பேருக்கு மேல் அவருடைய அமைப்பில் கிடையாது. அவரால் அரசை எதிர்த்து (challenging the state) மக்களைத் திரட்டி வலுவான போராட்டங்களை நடத்தி அரசுக்குச் சவாலாக விளங்க முடியாது. அவர் செய்வது என்ஜிஓ அரசியல். உண்மை இப்படியிருக்க திருமுருகனைக் கைது செய்ய வேண்டிய தேவை அரசுக்கு என்ன?இந்திய அரசின் வெளியுறவு நலன்கள் சார்ந்து மேற்கொள்ளப் படும் ராஜதந்திர நடவடிக்கைகளின்தேவைக்காக, ரா (RAW) அமைப்பு மே 17 இயக்கம் போன்ற அமைப்புகளை .உருவாக்கி உள்ளது. குறிப்பாக இந்திய அரசின் ஈழ நிலைபாடு சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்பு மே 17 இயக்கம். அதன் தலைவராக திருமுருகன் செயல்படுகிறார். இதுதான் உண்மை. அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததன் மூலம் அவருக்கு ஒரு போராளி மற்றும் தியாகிஎன்ற பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப் படுகிறது. அவரின் தலைமையின் கீழ் கொஞ்சம் இளைஞர்கள் அணிசேர வசதியாக, அவருக்கு ஒரு போராளி பிம்பம் உண்டாக்கப் படுகிறது.சிறிது காலத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் அணிசேரும் பட்சத்தில், அந்த எதிர்ப்பை அரசுக்குச்சாதகமாக மடைமாற்ற திருமுருகன் போன்றவர்கள் அரசுக்குத் தேவை. இந்தத் தேவையின் பாற்பட்டே திருமுருகனுக்கு ஒரு போராளி பிம்பம் வழங்கப்படுகிறது. இதுதான் திருமுருகன் கைதின் உள்மர்மம்.உளவுத்துறையின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பவர்கள், அரசின் ராஜதந்திர நகர்த்தல்களைப் புரிந்து கொள்பவர்கள் மேற்கூறிய அனைத்தும் உண்மை என்று உணர்ந்து கொள்வார்கள். ஆக மொத்தத்தில், திருமுருகன் கைது உளவு அமைப்பு ராவின் (RAW) திட்டமிட்ட நாடகம்.லாட்டரி அதிபர் மார்ட்டின் என்ற ஊழல் பேர்வழியின் மனைவி பாஜகவில் ஒரு முக்கிய பிரமுகர். திருமுருகன் காந்தியுடன் கைதாகி விடுதலையான டைசன் இந்தத் தம்பதியரின் மகன்தான்.மீண்டும் மீண்டும் அவசியமே இல்லாமல் திருமுருகன் காந்தி மீது கவனத்தைக் குவிப்பது திட்டமிட்டு, அவரை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக என்றே தோன்றுகிறது. பெரிய அதிர்வலைகளைத் தோற்றுவிக்காத மெழுகுவர்த்தி ஏந்திபோராடும் ஓர் எலைட் என்.ஜி.ஓ கம்பெனியை போராளிகள் ரேஞ்சுக்கு உயர்த்திக் காட்டுவது மிக அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால், அந்த விளம்பரங்களை நம்பிக் கொண்டோ, அல்லது திருமுருகன் காந்தி மீது நம்பிக்கை கொண்டோ, அவரைப் போராளி என்று கருதுவது சரியானதில்லை என்பதை அவர்களே இத்தகைய கைது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகிறார்கள். மிக அப்பட்டமாக, அரசு உளவுத் துறையின் நடவடிக்கை இது! ஒரு தேர்ந்த நடிகருக்குரிய பாவனையோடு, ஸ்பான்சர் போராளிகளை உருவாக்குவதும், அவர்கள் பயன் முடிவதற்குள் அடுத்தவர்களைத் தயாரித்துவிடுவதும் உளவுத் துறையின் இயல்பு. செய்ய முடிந்தவற்றை விட்டுவிட்டு, செய்ய முடியாதவற்றைக் காட்டி ஆசையூட்டி, கனவிலேயே வாழ வைப்பதற்கான இத்தகைய முயற்சிகளை அடையாளம் காணும் அளவு தெளிவற்றவர்களாகப் பலர் இருப்பது இயல்பு தான்.மேடைகளில் ஆக்ரோசமாக பேசும் இவர் இந்தியாவிற்கெதிராக பெரியதாக எந்த போராட்டத்தையும் செய்யாதவர். வெறும் அரசு விரும்பும் அடையாளப் போராட்டம்தான் இவர் செய்வது. மே 17 படுமோசமான ஒரு குட்டி முதலாளித்துவ இயக்கம். மக்களிடம் இறங்கி வேலை செய்வதல்ல மாறாக முகநூல், டிவிட்டர், மின்னஞ்சல் ஆகியனவே இவர்கள் களம் என்கிறார் திரு உமர். கட்சி வேண்டாம் இயக்கம் போதும் என்றவர் மதிமுக, தமிழர் விடியல் கட்சியுடன் எப்படி தொடர்ந்து இணைந்து செயல்படுகிறார்? 2010 முதல் 2016 வரை திருமுருகன் தொடர்ச்சியாக கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து நினைவஞ்சலி நடத்தினார்.2017க்கு பிறகுதான் ஜல்லிக்கட்டினால் தமிழர் உணர்வு அதிகமாகிறது. 2017-ல் திருமுருகன் கைது செய்யப்படுகிறார்.ஆபரேஷன் TMG என்பது திருமுருகன் காந்தியை அழிக்க உருவானது அல்ல, வளர்க்க உருவானது. அரசு அனுமதித்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தாமல் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நடத்தி கைதாகி 120 நாள் சிறையில் இருகிக்கிறார். அவர் இருந்த அதே சிறைச்சாலையில்தான் வைகோவும் சில நூறு ரூபாய் அபராதம் செலுத்த மறுத்து தானாக முன் வந்து உள்ளே வருகிறார். திருமுருகன் வெளியே வரும்போது தீவிர தமிழ் தேசியம் பேசுகிறார். இயக்கமே அவ்வாறு மாறுகிறது. காவிரி பிரச்சனை தலைதூக்குகிறது. வேல்முருகன் சுங்கச் சாவடியை நொறுக்குகிறார். திருமுருகன் காந்தி ஐபிஎல் போட்டியில் 1650 டிக்கெட் எடுத்து அந்த போட்டியை முடக்குவோம் எனக்கூறி பிரபலமாகிறார். ஆனால் அப்படி ஒன்றும் இறுதிவரை நடக்கவில்லை. தமிழ்தேசம் பேசுபவர்கள் திராவிடத்திற்கு எதிரி என்ற வைக்கோ திருமுருகனை எபப்டி தமிழகத்தின் சொத்து என்றார்? வைகோ திராவிடத்தை உடைக்கும் உளவுத்துறை ஏஜெண்ட் என்றால், திருமுருகனோ தமிழ்தேசியத்தை உடைக்கும் உளவுத்துறை ஏஜெண்ட் அவ்வளவே.Courtesy: உமர், இளங்கோ மற்றும் பல தோழர்கள்.(For further clarification please my privious post about Raw.)பாவெல் சக்தி.1:26 / 1:261:53 / 2:030:00 / 6:10