மோடி என்ற இந்துத்துவ பாசிஸ்ட்

இன்று 2017 ஆம் ஆண்டின் இறுதி நாள், இதனை இந்த ஆண்டின் முதல் நாளோடு பார்க்க வேண்டாமா? மோடி என்ற இந்துத்துவ பாசிஸ்ட் மக்களை, மதவாத சாதிவாத அரசியலுடன் , நதியாக ஓடி கொண்டிருந்த ஊழலை ஒழிக்கும் சூத்திரம் என்னிடம் உள்ளது அதனை நான் ஆட்சியேற்ற உடன் தீர்ப்பது மட்டுமில்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் கைப் பற்றபடும் பணத்திலிருந்து 15 லட்சம் உங்கள் வங்கி கண்க்கில் செழுத்துவேன் என்ற வெற்று வேசம் எல்லாம் வேலை செய்தது, ஆனால் மோடியின் வார்த்தை ஜலத்தில் மயங்கிய நடு மற்றும் கீழ் தட்டு மக்கள் இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகி கொண்டு உள்ளனர்.(1). பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல தொழில் முடங்கி வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தங்களின் பணமே தங்களின் தேவைக்கு இல்லாமல் போனதை மக்களுக்கு உணர்த்தியது.(2). GST என்ற அடுத்த தாக்குதல், கூலி செய்தாவது வாழ்ந்து கொண்டிருந்த மக்களையும் இந்த வரி மூலம் சுரண்டும் தந்திரத்தை கொணர்ந்து தன் ஏகாதிபத்திய விசுவாசத்தை நிரூபித்தது மோடி அரசு.(3). நேரடியாக உலக வர்த்தக கழகம் மற்றும் ஏகாதியபத்திய தேவைகள் அறிந்து நாட்டை அந்நியர்கள் இலகுவாக நுழைந்து கொள்ளை கொண்டு போக தகுந்த சட்டதிட்டங்களை வகுத்தமையால், மோடியின் கூட்டாளிகளையே முகம் சுழிக்க வைத்தார்.(4). NEET என்ற பொது நுழைவு தேர்வென்பது கல்வியில் மாநில உரிமையை பறித்து மட்டுமின்றி ஒரு சாராருக்கு படிப்பையையே எட்டாக் கனியாக்கி உள்ளார்.(5). சிறு பான்மை மத மக்கள் மீது துவேசம் பேசியே மக்களின் அறியாமையை மூலதனமாக்கி, மிரட்டல், நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தி,இந்துத்துவ கலாச்சாரம்,சமஸ்கிருத மொழி மற்றும் கருத்தியல் ஆகியவற்றை ஊக்குவித்து மக்களை திசை திருப்பும் வீண் வார்த்தைகளால் அழுத்தப் பட்டு கொண்டுள்ளனர்.(6). மாநில அரசின் எல்லா நடவடிக்கையிலும் தலையிட்டு பொம்மை ஆட்சியை நிறுவி மத்திய அரசின் நேரடி கட்டுபாட்டில், கார்ப்ரேட் மற்றும் ஏகாதிபத்திய நலனுக்காக ஒற்றையாட்சிக்கான முன்னெடுப்பு (பல் தேசிய இனங்களின் சிறை கூடமாக நாட்டை ஆக்கிய பெருமை). அண்மையில் நிறைவேற்றப்பட்ட மருத்துவ மசோதவே சான்று.(7). காவிகளின் மொழியில், எல் .கே. அத்வானி பாபர் மசூதி அழிக்கப்பட்டால் நாட்டின் வேலையின்மையின்மை பிரச்சினை ஒழியும் என்றார், இன்று நாட்டின் நிலை என்ன? (8). நாட்டை மதத்தின் பெயரில் பிரதேசத்தின் பெயரில்….. மக்களை கூறு போட்டு கொண்டிருக்கும் இந்த அரசு மக்களுக்கானதாக இருக்க முடியாது, இவை ஒழித்து கட்டபட வேண்டும்,(9). இன்று சர்வதேச அளவில் ஏகாதியபத்தியம் நிதி நெருக்கடியில் மீள முடிய அளவில் சிக்கியுள்ளது போலவே, கார்ப்ரேட்களின் வளர்ச்சிக்காக வங்கிகளை திறந்து விட்டுள்ள அரசு, மக்களின் வைப்பு நிதியையும் சூறையாட அனுமதித்துள்ளது, நாட்டை திவாலாக்கும் செயல் அல்லவா?இவை மட்டுமா, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சிந்தனையில் விவசாயிகளை புறக்கணித்து விவசாயத்தை அழித்துக் கொண்டும், கடற்கரையை கைப்பற்ற மீனவர்களை அழித்து கொண்டுள்ள இந்த அரசு, கனிம வளங்கள் கார்பரேட் மற்றும் ஏகாதிபத்தியம் சூறையாட பொதுத்துறை நிறுவனங்களையும் முடக்கி போட்டுள்ளது…

4VChinnadurai Durai, Jeeva and 2 others