நேற்று என் நட்பு தோழர் ஒருவர் ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சினையில் தனது கருத்தை எழுதியிருந்தார்.
ஆனால் அதற்க்கு பதிலளிக்க கடைமைப் பட்ட தோழர் பதிலளிக்கவில்லை. கருத்திட்ட தோழர் நாம் சரியான நேரத்திற்க்கு பதிலளிக்க வேண்டும் என்றொரு உற்ச்சாகம், எனக்கு போன் செய்து ஏதாவது கருதிட்டுள்ளாரா என்றார்.
தோழர் முகநூலுக்கு புதிது ஆகவே நேர்மையாக எதிர்பார்க்கிறார், ஆனால் இங்குள்ள அமைப்பு சார்ந்த தோழர்களோ தங்களின் கருத்திற்க்கு எதிராக எழுதிவிட்டால் நட்ப்பை துண்டித்துக் கொள்வதும் அல்லது நட்ப்பிலிருந்து விலக்கி விடுவதும் சாதரணம்.
என்னை அண்மை காலமாக சிலர் முகநூல் நட்ப்பை துண்டித்துக் கொள்வதுடன் தங்களின் போனிலும் பிளாக் லிஸ்டில் போட்டு விட்டார்களோ என்றென்னம்! ஏனெனில் போன் போவதேயில்லை!
ஆகவே தோழர்களே,
எனது அரசியல் தவறு எனில் அவசியம் சுட்டிக் காட்டவும் எனது தவறுகளை திருத்திக் கொள்ளவும் சுய விமர்சனம் செய்துக் கொள்ளவும் தயார் அவை சரியாக இருக்கும் பட்சத்தில்.
முரண்பாடுகள் இன்றி இயக்கம் இல்லை, இயற்க்கையிலும், மனித சமுதாயத்திலும் எங்கும் முரண்பாடுகள் இருக்கின்றது. இம்முரண்பாடுகளே இவற்றின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உள்ளது.
முரண் என்றால் ஒன்றுக்கொன்று எதிரான என்று பொருள்.
சமுதாயத்தில் வர்க்க முரண்பாடுகளே வரலாற்றின் உந்து சக்தியாக இருந்து வருகிறது.
ஆண்டான்- அடிமை
நிலபிரபு-கூலி விவசாயி
முதலாளி- தொழிலாளி
ஏகாதிபத்தியம்-காலனி நாடுகள்
என்று சமுதாயத்தின் வளர்ச்சி போக்கில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வந்தன- வருகின்றன.
சமுதாய் வளர்ச்சியில் பழைய அமைப்பிலிருந்து புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன; வளர்கின்றன; பழைய அமைப்பை தகர்க்கின்றன; மீண்டும் இப்புதிய வர்க்கம் பழாயாகின்றன, அழிகின்றன. இப்படியே வரலாறு போகிறது.
மார்க்க்சியம் சமூக வளர்ச்சியை இப்படி விளக்கும் பொழுது இங்குள்ள சில குறுங்குழுவாதிகள் தங்களின் சுய நலனுக்காக மார்க்சியத்தை கேடாக பயன்படுத்துவதை பொருத்துக் கொள்ள முடிவதில்லை அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதும் ஒரு சரியான மார்க்சிய பாதைக்கான வழியை தேடுவதுமே எனது பதிவுகளின் நோக்கம்.
உங்களின் மேலான பதில் எதிர்பார்க்கிறேன் தோழர்களே.