மார்க்சியம் குறித்த 30ம் பதிவு.பொருட்கள் எப்படி இடைவிடாமல் மாறிக்கொண்டு இருக்கிறதோ அதுபோல் மனித சமூகமும் மாறிக்கொண்டே இருக்கிறது .ஒரு பொருளில் அடங்கியுள்ள முரண்பாடுகளின் போராட்டம் எவ்வளவு மெதுவாக நடக்கிறதோ அந்த அளவில் அப்பொருள் நீடித்த வாழ்வை பெறுகிறது.முரண்பாடுகளின் போராட்டம் எங்கு மிக வேகமாகவும் அதிக முரண்பாடுகளை கொண்டதாக இருக்கிறதோ அந்த பொருள் விரைவில் அழிகிறது அல்லது வேறு ஒன்றாக மாறுகிறது.இயற்கையில் கிடைக்கும் அணுக்களில் மிக அதிக முரண்களையும் போராட்டங்களையும் கொண்டது யுரேனியம் அணுவே எனவே அது எளிதாக பிளவு படுகிறது .யுரேனியம் அணு தனது முரண்பாடுகளை குறைத்துக்கொண்டு தனது வாழ்வை பாதுகாக்க தொடர்ந்து அனுக்கதிர் வீச்சை வெளியிடுகிறது இப்படி ஆற்றலை வெளியிடுவதால் அது யுரேனியமாக இல்லாமல் பொலோனியமாக அல்லது புளூட்டானியமாக மாறுகிறது.அதுபோல் அதிக முரண்பாடுகளை கொண்ட முதலாளிய சமூகம் தன் லாபத்தை அதிகரிக்க தொடர்ந்து தனது உற்பத்திக்கருவிகளை மேம்படுத்துகிறது இந்த உற்பத்திக்கருவிகளை இயக்க தொழிலாளி வர்க்கத்துக்கு சிறந்த கல்வியை வழங்குகிறது.இதன் மூலம் மனிதனின் பொது அறிவு வளர்ச்சி பெறுகிறது.இந்த கல்வி அறிவு பெரும்பாண்மை மக்கள் முதலாளியத்துக்கும் அரசுக்கும் இருக்கும் நெருக்கத்தை புரிந்து கொள்ளவும் முதலாளியத்தின் கொடூரமான முகத்தை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.நன்கு வளர்ந்த முதலாளிய நாடுகளில் நவீன கருவிகளின் உச்சபட்ச வளர்ச்சி பெரும்பாண்மை உழைக்கும் மக்களை உழைப்பில் இருந்து வெளியேற்றுகிறது இப்படி வெளியேற்றப்படும் மக்கள் வாங்கும் சக்தியை இழக்கிறார்கள் எனவேமுதலாளிய உற்பத்தி பொருட்கள் விற்பனை ஆகாமல் தேங்குகிறது.இந்த தேக்கம் ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்களையும் வேலையை விட்டு வெளியேற்றுகிறது சமூகமே நிற்கதியாக நிற்கிறது.இந்த முரண்பாடுகளை தீர்க்கவே மார்க்சியம், வழிகாட்டுகிறது மார்க்சியம் தனது முழு உருவத்தை அடையும் முன்பே பிரான்சின் தலைநகர் பாரிசில் மக்கள் கம்யூன் அமைப்பை நிறுவி மார்க்சியத்துக்கே வழிகாட்டி விட்டார்கள்.மார்க்சியம் மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் இருந்தே தன்னை உருவாக்கிக்கொண்டது என்பதே அதன் சிறப்பு ..மார்க்சியத்தின் பங்களிப்பு என்னவெனில் மனித சமுக உறவுகளை ஆய்வு செய்து போராட்டங்களின் அனுபவங்களை உட்கிரகித்து அதை ஒழுங்கு படுத்தி பொதுமை படுத்தியதே.மார்க்சியம் முழுமையடையும் முன்பே பொதுவுடமை கொள்கை நடைமுறைக்கு வந்து விட்டது அந்த அனுபவங்களின் சாதக பாதகங்களை ஆய்வு செய்து அறிவியல் சார்ந்த ஒரு பொது கண்ணோட்டத்தை வழங்குவதே மார்க்சின் பணியாக இருந்தது.மார்க்ஸ் எங்கல்சின் 1848ல் வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கம்யூனிசத்தின் தேவை குறித்த தகவல்களே இருக்கும் 1871 பாரிஸ் கம்யூன் எழுச்சிக்கு பின்புதான் அந்த அனுபவத்தில் இருந்துதான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தை மார்க்ஸ் உருவாக்கினார் ஏனெனில் இதை பாரிஸ்கம்யூன் நடைமுறைபடுத்தி இருந்தது முதலாளியத்துக்கு எதிரான ஐரோப்பிய பாட்டாளிவர்க்கத்தின் போராட்டத்துக்கு மார்க்சியம் சிறந்த தத்துவ வழிகாட்டலை வழங்கியது .இந்த கம்யூனிச பேரபாயத்தில் இருந்து மீள ஐரோப்பிய முதலாளிவர்க்கத்துக்கு உதவியது காலனிகள்இந்த சிக்கலில் இருந்து மீள ஐரோப்பிய முதலாளி வர்க்கத்துக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது பின் தங்கிய ஆசிய லத்தின்அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகள்,இந்நாடுகளை கொள்ளையிட்ட ஐரோப்பிய முதலாளியம் அந்த மூலதனத்தைக்கொண்டு தன்னை ஏகபோகமுதலாளியமாக மாற்றிக்கொண்டது.இந்த உலகளாவிய புதிய சந்தைகள் அய்ரோப்பிய உற்பத்தி பொருள்களை கொண்டு குவிப்பதற்கான வழிகளை திறந்து விட்டன ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் உற்பத்தி பெருகியது வேலை இல்லா திண்டாட்டம் ஒழிந்தது.தனது தொழிலாளர்கள் புரட்சியோ போராட்டமோ செய்யவிடாமல் மிக அதிக ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட்டன காலனி நாடுகளை கொள்ளையிட்டு சேர்த்த மூலதனத்தின் ஒரு சிறு பகுதியை தனது தொழிலாளர்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் வழங்கி தனக்கு சாதகமாக அவர்களை மாற்றி அமைத்தது.எனவே ஐரோப்பிய தொழிலாளிவர்க்கம் முதல் மற்றும் இரண்டாம் உலக ஏகாதிபத்திய யுத்தங்களை எதிர்த்து புரட்சியை நடத்தாமல் தந்தையர் நாட்டை காப்போம் என தன் நாட்டின் முதலாளிகளின் பின்னால் அணிவகுத்தது தன் நாடு காலனிகளை பிடித்தால் அந்த லாபத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும் அல்லவா?இன்று கூட சுவிஸ் வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் தனது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மாதம்ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய் இனாமாக வழங்குவதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர யோசிக்கிறது எங்கிருந்து வரும் இவ்வளவு பணம் எல்லாம் ஏழை நாடுகளை கொள்ளை அடிப்பதுதான் இப்படிப்பட்ட நாட்டில் சமூக மாற்றம் சாத்தியமில்லை என்றார் லெனின்.ஆனால் ஏகாதிபத்தியங்களால் கொள்ளையிடப்பட்ட பின் தங்கிய அல்லது காலனி நாடுகளில் புரட்சி சாத்தியம் என்றார் அவரின் கூற்றுப்படி ரசியா சீனா கிழக்கு ஐரோபிய நாடுகள் ஆசிய நாடுகளில் புரட்சி வெடித்தது இதற்கான தத்துவ வரயறையை செய்தவர் மாமேதை லெனின்.தொடரும்