முதலாளித்துவ வளர்ச்சி -சிபி
முதலாளித்துவ வளர்ச்சி -சிபி

முதலாளித்துவ வளர்ச்சி -சிபி

மூலதன உடைமையாளர்கள் எவ்வாறு தோன்றினர். உழைப்பு சக்தியை விற்று வாழும் கூலி உழைப்பாளிகள் எவ்வாறு தோன்றினர் என்பதை ஆய்ந்தறிய வேண்டும் .
மூலதனத் திரட்சி எவ்வாறு ஆரம்பமாகிறது  அது எவ்வாறு  வளர்ச்சியடைந்தது அதன் வரலாற்றை அறிவது இன்றைய நிலைமையை புரிந்து கொள்வது அவசியமானதாகும்.
முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலபிரபுத்துவ சமுதாயத்தில் நிலபிரபுக்களின்  பெரும் பண்ணைகளில் விவசாயிகளாகப் பெரும்பாலான மக்கள் உழைத்து வந்தனர். ஒரு சிறு பகுதியினர் கைத்தொழில்களிலும்  வர்த்தகத்திலும் வட்டி வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தனர் .
விவசாயிகள் நிலப்பிரபுக்களின் நிலத்தில் உழைத்து வந்தபோது நிலப்பிரபுக்களின் அளிக்கப்பட்ட சிறிதளவு நிலத்தில் இவர்கள் சொந்தமாக விவசாயம் செய்து கொண்டும் வீடு கட்டியும் வாழ்ந்தனர். சில நாடுகளில் நிலம் அரசுக்கு சொந்தமாக சொத்தாக இருந்தது .அரசுக்கு நில வரி செலுத்தி விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். வேலை அற்றவராக யாரும் இருக்கவில்லை. இந்த நிலபிரபுத்துவ சமூக உறவுமுறையை மாற்றாமல் முதலாளித்துவம் வளர முடியாது .
முதலாளித்துவ சமூகத்தில் நிலம் மற்றவர்கள் ஆகும்.நிலத்தையும் நிலம் சார்ந்த தொழிலையும் இறந்தவர்கள் ஆகும் சமுதாயத்தின் பெரும்பாலான மக்கள் தங்களின் உழைப்பு சாதனங்களில் இருந்து ஏற்கனவே செய்துவந்த உழைப்பிலிருந்து அந்நியப்பட்ட வர்களாகவும் அவர்கள் இப்போது விவசாயத்திலிருந்து பட்டறை உழைப்பிலிருந்து கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு சுதந்திரமான உழைப்பாளிகளாக
13/05/22
முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடித்தளத்தை நிறுவிய புரட்சியின் ஆரம்ப பீடிகையை 15ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியும் பதினாறாம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளும் குறித்தன.  சர் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் ( பதினெட்டாவது நூற்றாண்டில் “அரசியல் பொருளாதாரத்தின் ஆய்வு” என்ற நூலை எழுதியவர் )நன்றாக கூறுவது போல “வீட்டிலும் மாளிகையிலும் எங்கும் பயனின்றி நிரம்பிக் கிடந்த நிலபிரபுத்துவ பரிவார படைகள் கலைக்கப்பட்டதனால் தொழிலாளர் மார்க்கெட்டில் சுதந்திரமான பாட்டாளிகளின் பெருந்திரள் புகுந்தது”.
கைத்தொழில் பட்டறை உற்பத்தியில் ஈடுபட்ட உழைப்பாளிகளை சுரண்டி சில பட்டறை உரிமையாளர் வர்த்தகரும் சேமித்த மூலதனத்தை பெருகுவதற்கு தேவையான பெரும்திரள் பாட்டாளிகளை இவ்வாறு உருவாக்கினர்.
எந்திர தொழில் ஆலைகளின் தோற்றம் உடைமை ஏதும் இல்லாத பெருந்திரளான பாட்டாளிகளின் தோற்றமும் முதலாளித்துவ வளர்ச்சியை வேகப்படுத்தியது. மூலதனம் வேகமாக வளர்ச்சி அடைந்தது மேலும் அதிகமான உழைப்பு சக்தி உழைப்பாளர்கள் தேவைப்பட்டனர் .தங்களுக்குத் தேவையான அளவுக்கு உழைப்பாளிகளை பெற ஈவு இரக்கமற்ற கொடும் செயல்களில் முதலாளி வர்க்கம் ஈடுபட்டது மூலதனத் திரட்சி க்காக எதையும் செய்ய அவர்கள் தயங்கவில்லை.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தல்
15 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் வளரத் தொடங்கியபோது ஐரோப்பிய நாட்டவர் உலகின் இதர பகுதிகளை கண்டறியும் சாகாச செயலில் ஈடுபட்டனர் ஸ்பானிஷ் நாட்டவரான கொலம்பஸ் அந்நாட்டு அரசின் ஆதரவுடன் கிழக்கு திசை நாடுகளை கண்டறிய புறப்பட்டார் ஆனால் அவர் மேற்கில் உள்ள அமெரிக்க கண்டத்தின் தீவுகளில் ஒன்றான பஹாமாவை 1492ல் சென்றடைந்தார். 1498 ல் இந்தியாவின் மேற்குக் கரையோரம் உள்ள கோழி கோட்டுக்கு போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா வந்து சேர்ந்தார் .இக் கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில் அமெரிக்கா இந்தியா போன்ற. பகுதிகளில் பிற்க்காலத்தில் ஆதிக்கம் ஏற்படுவதற்கு சாதகமாக இருந்தன .

அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்ததை தொடர்ந்து ஸ்பானிஷ் பிரிட்டன் போர்ச்சுகல் போன்ற  ஐரோப்பிய நாடுகள் அங்கு படை யெடுத்து சென்றன.  இவர்களை எதிர்த்த அங்கு வாழ்ந்து வந்த செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்ட பூர்வகுடி மக்களை கொன்று குவித்தனர் .மிகச்சிலரே மிஞ்சினர். அன்று அமெரிக்கா பூர்வகுடி மக்களை கொண்ட நாகரீக வளர்ச்சி அடையாத ஒரு பின்தங்கிய நாடாக இருந்தது. பூர்வகுடி மக்களில் பெரும்பாலோர் கொல்லப்பட்டதுதனால் அமெரிக்க மண்ணில் உழைப்பதற்கு போதுமான மனித சக்தி இல்லாத நிலை ஏற்பட்டது. போரில் கொல்லப்பட்டவர்கள்  மீதம் இருந்தவர்கள் அடிமையாக்கப்பட்டனர்.  அமெரிக்க இயற்கை வளம் நிறைந்த கண்டம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் அங்கு ஏற்பட்டது . ஐரோப்பியர்களை பின்னர் அமெரிக்க இனத்தவராக மாறினர் ஸ்பானிஷ்

14/05/22
இந்திய முதலாளிகளின் வளர்ச்சி கட்டத்தை பற்றி சற்று பார்ப்போம்.
1).காலனி ஆட்சியின் பாதிப்பு 1758-1840
2).1850 முதல் முதல் உலகப்போர் வரை.
3).முதல் உலகப் போரில் இருந்து 1947 வரை.
4).1947 பிறகு.
இவை இங்கு பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொண்டு பிரிக்கப்பட்ட வை. மேலும் 1947 என்பது ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆட்சி மறைமுக ஆட்சியாக மாறியதன் ஒரு அடையாளமாக தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சரியான மார்க்சியவாதிகள் கருத்தாக இருக்கும்.
இந்தியப் பெரு முதலாளி வர்க்கம் பற்றி ஆய்வு செய்த சுனிதி குமார் கோஷ் நூலிலிருந்து பல்வேறு விதமான கருத்தாக்கங்களை நான் தேடிக் கொண்டிருந்த போது முக்கியமாக இரு விஷயங்கள் புரிகின்றது.  அவை நேரடியாக ரஷ்ய சார் எழுத்தாளர்களின் பாதிப்பும் திருத்தல் வாத போக்கின் ஒரு தன்மையே என்பது தெளிவாக புரிகின்றது  .
1940களின் பிற்பகுதியில் இந்திய முதலாளி வர்க்கத்தின் தரகு தன்மை குறித்து எழுத்தாளர்கள் எழுதி எழுதினர் எழுத்தாளர்கள் குரு சேவித்து அதற்குமுன் சொன்ன கருத்துகளை கைகழுவி விட்டனர். இவர்களை பின்பற்றிய இந்திய மார்க்சிய ஆய்வாளர்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி தான் தேசிய முதலாளிகள் வளர்ந்தனர் அவர்கள் தரகு முதலாளிகள் இல்லை என்றும் அன்றைய காங்கிரஸ் இயக்கமானது அரசியல் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையில் நின்றதாக  கணிக்கின்றனர்.
அன்றைய இங்குள்ள இடதுசாரி சிந்தனையாளர் ஆராய்ச்சியாளர் என்பவரே முரணான கருத்துக்களால் குழம்பி போயுள்ளனர் .
15/05/22
முதலாளித்துவத்தின் முதன்மையான அம்சம் என்ன?
முதலாளித்துவம் எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது இயங்குகிறது என்பதை மிக ஆழமாக ஆய்வு செய்து மாமேதை எங்கெல்ஸ் இவ்வாறு எழுதியுள்ளார்.
“முதலாளித்துவ உற்பத்தி முறை அதாவது ஒரு புறம் முதலாளிகளும் மறுபுறம் கூலித் தொழிலாளர்களும் இருப்பதை முன்நிபந்தனையாக கொண்டுள்ளது முறையானது முதலாளியின் மூலதனம் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்து கொள்வதுடன் அதே சமயம் தொழிலாளர்களுடைய
ஏழ்மையை மீண்டும்மீண்டும் இடைவிடாது மறு உற்பத்தி செய்கின்றது என்பது இங்கு முதன் முதலாக எடுத்துக் காட்டப்படுகிறது இதனால் வாழ்க்கைக்கு தேவையான சாதனங்கள் மூலப்பொருட்கள் உழைப்புக் கருவிகள் ஆகியவற்றை உடைமையாளர்கள் ஆகியிருக்கும் முதலாளிகள் ஒரு புறத்திலும் ,தாம் வேலை செய்து வாழ்வதற்கும் உழைக்கவல்ல உடல் பலம் படைத்த புதிய தலைமுறை பாட்டாளிகளை வளர்த்து ஆளாக்க மட்டுமே போதும் போதாதென்ற வாழ்க்கை சாதனைகளைப் பெறுவதற்குமான தம் உழைப்பு சக்தியை அம் முதலாளிக்கு விற்கும் படியான கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்களை கொண்டுள்ள பெரும் திரள் மறு பக்கத்திலும் எப்போதும் நிலைத்து வருவது உத்தரவாதம் செய்யப்படுகின்றது” மார்க்சின் மூலதனம் பற்றிய நூலில் இருந்து .
பிரிட்டிஷ் ஆட்சி என்பது முற்போக்குப் பாத்திரம் ஆற்றவில்லை அவை அவர்களின் சுரண்டலுக்கேற்ப நாட்டின் பொருளாதாரம் சமூக அரசியல் தத்துவம் என்ற அனைத்து துறைகளையும் வளர்ச்சியில் இருந்து தடுத்து நிறுத்தினர் உருச் சிதைவிற்கு உள்ளாகினர் .(எல்.ஹெச்.ஜெங்க்ஸ்). முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடை விதித்து நாட்டை காலனி ஆதிக்கத்திற்கு ஏதுவாக நிலஉடமைச் சமூக   வாழ்விற்க்கு  பங்கு வகித்தது.
முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் அது வரலாற்று ரீதியாக முற்போக்கானதாக இருந்தது. ஆனால் இன்று அது மிகக் கொடுமை வாய்ந்த பிற்போக்கு சக்தியாக மாறி விட்டது அதனை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிவது மனித சமுதாயத்தின் வரலாற்றுத் தேவையாகிவிட்டது .
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மூலதனத்தை பெருமளவில் திரட்டிக் கொண்டு சென்றனர் இந்திய மக்களின் உழைப்பின் பலனை இலவசமாக பெற்றுக் கொண்டார்கள் என்பதே இதன் பொருள்.
மார்க்ஸ் அதனை தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்” அபின் தயாரிக்கும் மாவட்டத்திலிருந்து மிகவும் தொலைவிலான இந்தியாவின் ஒரு பகுதிக்கு அரசு பணியை மேற்கொண்டு சென்ற சலிபன் என்பவருக்கு  அவர் புறப்படும் தருணத்தில் அபினுக்கான ஒரு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது  .
சலிவன் தனது காண்ட்ராக்டை பின் என்பவருக்கு 40,000 பவுனுக்கு விற்றார் .அதைப் பின் அதே நாளில் 60 ஆயிரம் பவுனுக்கு விற்றார் இறுதியாக இதை வாங்கிய காண்ட்ராக்டை நிறைவேற்றிய நபர் தமக்கு அமோக லாபம் கிடைத்தாக கூறினார் .கம்பெனியும் அதன் அதிகாரிகளும் 1757க்கும் 1766 க்கும் இடையில் இந்தியர்களிடமிருந்து பரிசுகளாக 600,00,000 பவுன் பெற்றதாக நாடாளும் மன்றத்தில் பிரிட்டிஷ் சமர்பிக்கப்பட்ட பட்டியல் தகவல் தரப்பட்டுள்ளது 1769 -1770 க்கும் இடையில் ஆங்கிலேயர் அரிசி முழுவதையும் வாங்கி வைத்துக்கொண்டு அநியாய விலைக்கன்றி  மற்றபடி விற்பனை செய்ய மறுத்ததன் மூலம் ஒரு பஞ்சத்தை   உற்பத்தி செய்தார்கள்” என்கிறார் காரல் மார்க்ஸ்  .பிரிட்டிஷ் ஆட்சியில் எந்த அளவுக்கு ஊழல் மலிந்து கிடந்தது என்பதை புரிந்து கொள்ளப் பயன்படும்.
முதலாளித்துவத்தின் தோற்றம்
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் வளர்ச்சி  அடைந்த கைத்தொழில்களும் வர்த்தகமும் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்த இந்த வளர்ச்சிப் போக்கில் சில கைத்தொழில் பட்டறை உரிமையாளர்கள் வர்த்தகர்களும் புதிய தொழில் உரிடைமையாளர்கள் ஆனார்கள் .ஒரு புதிய வர்க்கம் முதலாளித்துவ வர்க்கமாக  பிறந்தது .
முதலில் ஐரோப்பிய கண்டத்தில் இந்த வளர்ச்சிப் போக்கு ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஏற்பட்ட சமூக கொந்தளிப்பில் நிலபிரபுத்துவம் வீழ்ச்சியடைந்து முதலாளித்துவம் என்பது அரசியல் அதிகாரத்தின் துணையுடன் முதலாளித்துவம் தனது வெற்றி பயணத்தை துவங்கியது.
முதலாளித்துவ காலம்வரை கையால் இயக்கப்பட்ட எந்திரங்களை கொண்டு உற்பத்தி நடைபெற்றது உற்பத்தி அளவு மிகக்குறைவாக இருந்தது. அதன் பிறகு நீராவியினால்  இயந்திரம் இயக்கப்பட்டது  மூலம் உற்பத்தி மிக வேகமாக அதிகரித்தது .
முதலாளித்துவத்தின் முதன்மையான அம்சம் என்ன?
முதலாளித்துவம் எதன் அடிப்படையில் கொண்டு அமைந்துள்ளது இயங்குகிறது என்பதை மிக ஆழமாக ஆய்வு செய்து மாமேதை எங்கெல்ஸ் இவ்வாறு எழுதியுள்ளார்(மேலே).
மூலதனம் என்பது என்ன?
மார்க்சிய கண்ணோட்டத்தில் மூலதனம் என்றால் என்ன என்பது பற்றி குறிப்பிட வேண்டியுள்ளது.
பொதுவான கருத்தில் ஏதாவது ஒரு வகையான உடைமை உள்ளவர்கள் எல்லாம் முதலாளிகள் அல்லது மூலதன காரர்கள் என்று கருதப்படுகிறார்கள். இதனடிப்படையில் சுயமாக உழைக்கும் சிறுவர்கள் கடைக்காரர்கள் சிறுதொழில் உடையவர்கள் குறிப்பாக கைத்தொழில் பட்டறை உரிமையாளர்கள் எல்லாம் முதலாளி என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்களிடம் சிறிதளவு உடைமை உள்ளது என்பது உண்மைதான் ஆனால் அவர்களும் உழைப்பில் ஈடுபடுகின்றனர் இவர்களின் உடைமை பிரதானமாக பிறரை சுரண்டுவதன் மூலம் பெருகும் மூலதனமாக செயல்படவில்லை  .
அதேபோல் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டுள்ள பணமும் மூலதனம் ஆகாது வட்டி வியாபாரமும் மூலதனமாக அது சாதாரண வட்டி கடைக்காரன் பிரதானமாக அவப்போது ஏற்படும் செலவுக்காக வாங்குவதுதான் இவைகளெல்லாம் உற்பத்தியை பெருக்கும் கூலியுழைப்பும் மூலதனமும் ஆகாது .வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் முதலாளிகளின் மூலதனத்தின் ஒரு பகுதியை பெறுகின்றனர் சுருக்கமாக சொன்னால் மூலதனம் என்பது மனித உழைப்பை சுரண்டுவதில் ஈடுபடுத்தப்படும் பணம் – முதலீடுதான் . இதனை எங்கெல்ஸ் இவ்வாறு விளக்குகிறார்.
“மூலதனத்தின் நிலைமை மற்றும் வேறானது பண்டங்கள் மற்றும் பணத்தின் புழக்கம் மூலதனம் நிலைத்திருப்பதற்கு அவசியமான வரலாற்று சூழ்நிலைகளில் ஒன்று மட்டும்தான்.உற்பத்தி சாதனங்கள் வாழ்க்கை சாதனங்கள் ஆகியவற்றின் சொந்தக்காரன் மார்க்கெட்டில் தனது உழைப்பு சக்தியை விலைக்கு கொடுக்க முன்  வரும் சுதந்திரமான உழைப்பாளியை சந்திக்கும் நிலை ஏற்படும் போது தான் மூலதனம் தோன்ற முடியும். இந்த வரலாற்று நிபந்தனையை வரலாற்று வளர்ச்சியில் பல யுகங்கள் எடுக்கும் .இவ்வாறாக மூலதனம் அதன் தோற்ற காலம் முதல் சமூக உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தை முன்வருவதைக் கூறும் ” (மூலதனம் பற்றி ஏங்கெல்சின் குறிப்புகள்) .
தனது உழைப்பு சக்தியை விலைபேசி விற்கும் சுதந்திரம் உள்ள உழைப்பாளியை சந்திக்கிற போது தான் மூலதனம் தோன்றத் தொடங்கும்.
இந்த சுதந்திர நிலைமை மனித வரலாற்றில் பல யுகாந்திர மாறுதலுக்கு பிறகுதான் தோன்றியது. அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் அத்தகைய சுதந்திர மனிதன் இருக்கவில்லை. அடிமையும் பண்ணையாளும் கூட ஒரு விற்பனைப் பண்டமாக தான் இருந்தனர் . முதலாளித்துவ சமூகத்தில் தான் சுதந்திரமான உழைப்பினால் உழைப்பாளியின் உழைப்பு சக்தி மட்டுமே ஒரு விற்பனைப் பண்டமாக மாறியது .முன் போல இப்போது தொழிலாளி ஒரு விற்பனைப் பண்டம் அல்ல அவன் உடலுக்கும் உயிருக்கும் சுதந்திரம் உள்ள ஒரு மனிதனாக ஆக அவனது உடலின் உழைப்பு சக்தி மட்டும்தான் விற்பனைப் பண்டம் .  இந்த மாறுதல் தற்செயலாக நிலை நிகழ்ந்தவை அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *