முதலாளித்துவ ஜனநாயகமும் சோஷலிச ஜனநாயகமும்.

முதலாளித்துவ ஜனநாயகமும் சோஷலிச ஜனநாயகமும்.முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பில் வழமையாக வாழும் சிறுபான்மையினர் மட்டும் பெறும் ஜனநாயக உரிமையே முதலாளித்துவ ஜனநாயகமாகும். பரந்துபட்ட பெரும்பான்மை மக்கள் ஒடுக் கு முறைக்கு உள்ளாகி சமத்துவமற்று வாழும் நிலை. சோசலிசத்தில் கிடைக்கும் ஜனநாயகம் பரந்துபட்ட மக்கள் ஆம் பெறும்பான்மையிலான மக்களை ஜனநாயக உரிமை யாகும். அங்கு சமத்துவமும் சமநீதியும் அனைவருக்கும் கிடைக்க வழி வகுக்கப்படும்.லெனின் அரசும் புரட்சியும் என்ற நூலில் இவ்வுண்மையை பின்வருமாறு_விளக்குவார்:முதலாளித்துவ சமுதாயத்தில் கிடைக்கும் ஜனநாயகம் கட்டுப் படுத்தப்பட்ட, கொடுமையான, பொய்மையான, ஜனநாயகமாகும், சிறுபான்மையினரான பணக்காரருக்கே ஜனநாயகம், கம்யூனிசத்திற்கு செல்லும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதல் தடவையாக , பெரும் பான்மையான மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கும் அவ்வேளை, சுரண்டும் சிறுபான்மையினர் ஒடுக்கப் படுவர். கம்யூனிசம் மட்டுமே முழுமையான ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியும்; முழுமையாக அனைவர்க்கும் ஜனநாயகம் கிட்டியதும் அடக்குமுறைகள் தேவையற்று தானே உலர்ந்துவிடும்.லெனின் மேலும் பின்வருமாறு விளக்கிக் கூறினர்:வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் முதலாளித்துவத்தில் ‘அரசு” அதன் முழு அர்த்தத்திலும் நிலவுகிறது. ஒருவர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்க உள்ள சிறப்பான இயந்திரமாக உள்ளது; சிறுபான்மை யினரை அடக்கி ஒடுக்கும் அரசு இயந்திரம். இயல்பாகவே பெரும்பான்மையினரைச் சுரண்டும் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்குவதற்கு வேண் டிய ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டி முறைகள் தேவைப்படுகின்றன. அடிமை, கொத்தடிமை, கூலிஅடிமை நிலைகளை நிலைநாட்ட இரத்த ஆறுதேவைப்படுகிறது.மேலும், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் காலகட்டத்திலும் ஒடுக்குமுறை தேவைப்படுகிறது; ஆனல் இத்தடவைசுரண்டப்பட்ட பெரும்பான்மையினர் சுரண்டிய சிறுபான்மையினர் மேல் காட்டும் அடக்குமுறையாகும்.’அரசு’ என்று கூறும் அடக்குமுறை என்ற சிறப்பான இயந்திரம் இன்னும் தேவைப்படுகிறது. இது இடைப்பட்ட கால அரசு. முதலாளித்துவத்தில் அமையும் ‘அரசு” யந்திரமல்ல. சுரண்டும் சிறு பான்மையினரை அடக்குவதற்கு, பெரும்பான்மையான கூலி அடிமை யாக இருந்தவர்கள் அடக்குமுறையை கையாள்வது முந்திய நிலை யோடு ஒப்பிடும்போது எளிமையானதே. எழுச்சியுற்ற அடிமைக்ளே யும் கொத்தடிமைகளையும் கூலி அடிமைகளையும் அடக்கி ஒடுக்கு வதற்கு கொட்டப்பட்ட இரத்தத்திலும் மிகக் குறைவானதாகவே இது இருக்கும். அதற்கு இணைவாக குடித் தொகையில் பெரும் பான்மையானவர்கட்கு ஜனநாயகம் விரிவாக்கப்படுவதோடு ஒடுக்கு முறையான ‘அரசு” யந்திரமும் காலப்போக்கில் மறைத்து போவதற் கும் வழிவகுக்கும்.