இரண்டாம் உலக போருக்குப் பின் ‘பெருமளவிலான வேலையளித்தல்” (மக்கள் நல அரசு) என்ற கொள்கையை பெரும்பாலான உலக நாடுகள் மேற்கொண்டனர். ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளும் இக்கருத்தைச் செயற்படுத்தின.
இக்கொள்கையை மேற்கொள்வதற்கான மூல காரணம் யுத்தத்திற்கு முன் பிரித்தானிய மக்கள் பெற்ற கசப்பான அனுபவத்தினல் இனி மேல் ஒரு போதும் பெருமளவிலான வேலையின்மையை அனுமதிக்கவோ சகிக்கவோ மாட்டார்கள் என்பதனலாகும். இக்கொள்கை அரசியல் நோக்கில் அமைக்கப்பட்டதாகும். எனினும், பெருமளவில் வேலையளித்தல் முதலாளித்துவ நோக்கமாக இருக்காது என்பது சாதாரண உண்மை யாகும். முதலாளித்துவம் தனியார் இலாபத்தை உருவாக்குதலும், ஆகக் கூடியளவு பெறுதலும், என்ற அதனது பிரதான நோக்கை அடையத் திறம்படத் தொழிற்பட வேண்டுமாயின், தேவையானபோது பெறவும் பின்னர் அப்புறப்படுத்தவும் கூடிய, மார்க்ஸ் அழைத்த ‘தயார் நிலயில்வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் குழாம்’ ஒன்று தேவைப்படும். பெருமளவிளான வேலையளிப்புக் கொள்கை முதலாளித்துவ நிலைகளில் முறையாக மேற்கொள்ளப்படின் இத்தொழிலாளர்குழாமை வெறுமையாக்கச் செய்வ தோடு அதன் விளைவாக அம்முறையின் தொழிற்பாட்டையே பேரிடருக் குள்ளாக்கத் தக்கதாகவும் கேடாகவும் பாதிக்கும்.
சமுதாய ரீதியாகப் பார்க்கும்போது, இத்தெழிலாளர் குழாம் இல்லாதிருப்பின் அல்லது அது வலுவாகக் குறைக்கப்படின் வேதனத் தொழிலாளர் முதலாளியிலும் பார்க்க சாதகமான நிலயில் அமர்த்தப் படுவர் என்பது தெளிவாகக் காணக் கூடியதாகவிருக்கும். வேதனத் தொழி லாளர் தங்களது நிலமையை உணர்ந்து அந்நிலமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதும், முதலாளித்துவ தனியார் இலாபத்தின் அளவையும் வீதத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு வேதனத்திற்கென அதிகரிக்கப்பட்ட செலவைத் தனது பொருளே நுகர்வோர் மீது சுமத்திவிடுவதன் மூலமே இந்நிலமை சமாளிப்பார். பணவீககத்தின் இந்த நிலமை குறுக் கிட்டுத் தடுக்கப்படாவிடின், அது மிகைப் பணவீக்கக் கட்டத்தை அடையும். இந்த வளர்ச்சி முறையும் நாணயம் நில குலையாமல் கால வரையறை யின்றித் தொடர்ந்து செல்ல முடியாது. இந்த வளர்ச்சி முறை நின்றதும் அல்லது அதன் வேகத்தைக் குறைத்ததும், அல்லது பளுவைத் தாங்க முடியாது நாணய, நிதி முறை முறிவுகண்டதும் இலாபம் பெறுதலும் இலாப உற்பத்தியும் பெற முடியாத காரியமாவதோடு முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வேகம் குறைந்து மந்த நிலமை அடையும். தேக்கப் பண வீக்கம் எற்படும்.
இதனின்றும் தப்பி வெளியேறுவதற்கு முதலாளித்துவ முறைக்கு ஒரு வழி மட்டுமேயுள்ளது. முதலாளித்துவ முறை தேவ்ையான தயார்நிலத் தொழிலாளர் குழாமை மீள உருவாக்குதல் வேண்டும். அதாவது பெரு மளவில் வேலையின்மையை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தல் இன்று பல் பொருள் கொண்டதாக விருப்பதால், ஆகக்கூடிய ஆதிக்கம்பெற்ற வகுப்பினர் தன்னும் முதலாளித்துவ பொருளாதாரத் தேவையின் அடிப்படையில் செயற்படத் துணியார். அது தணிப்பு நடவடிக்கைகள், எய்ப்பு நடவடிக்கைகள், இணக்க நடவடிக்கைகள் ஆகிய வற்றைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவையாவும் நெருக்கடி நிலயை மோசமாக்குவதோடு, அரசியல் எதிர்ப்பு நிலயை உருவாக்கும். முற்போக்கு முவலாளித்துவ நாடுகள் அதிகாரம் பெறுவதன் நோக்குடன் அரசியல் போராட்டம் எதுவுமின்றி உடன்பட்டு வருவார்கள் என்பது எற்றுக்கொள்ள முடியாததாகும். இன்றைய நிலயில் இந்த நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்றே காணப்படலாம். அதிகாரத்திலுள்ள தொழிலர்ளர் வகுப்பு, முதலாளித்துவத்தை அழித்து பொது உடமையை அமைக்க முயற்சித்தல் வேண்டும். அதிகாரத்திலுள்ள முதலாளித்துவ வகுப்பினர் தங்களை நோக்கியுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பாசிசத் தைத்தான் நாடவுெண்டும். அதனைத் தான்அவர்களும் நாடுவர்.