இன்றைய சமூகத்தில் உண்மையான முகம் காண்பது அரிதே என்று நினைக்கிறேன். ஏனெனில் பல புரட்சி பேசுவோரும் உள்ளொன்றும் புறம் ஒன்றுமாக இருக்கும் பொழுது சாதரண மக்களை பேசவே வேண்டாம்.
சரி இதனை நான் எழுதுவதன் நோக்கம் அன்றாடும் நான் சந்திக்கும் பல புரட்சி பேசும் முற்போக்குவாதிகள் நடத்தையை கருத்தில் கொண்டே இதனை எழுதுகிறேன். இவரகளை காணும் பொழுது நான் என் அப்பாவிடம் கேட்க்கும் கேள்வியோடு இணைத்துப் பார்ப்பேன், என் அப்பா மீது என் குடும்பத்தினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எனது விடுமுறை நாட்களில் விவாதிப்பேன் அப்பொழுது அவரின் பதில் தெளிவாக அவரின் வர்க்கத்திற்க்கே உரிய தோரணையோடு இருக்கும்.
சொல்வார், எனக்கு எதற்க்காக பொய் சொல்ல வேண்டும், நீங்கள் உள்ள போது மறைத்து பேச ஒன்றுமே இல்லை ஆகவே நடந்தவை இவைதான் இதில் நீ என்ன குற்றம் காண்பாயோ கண்டுக் கொள் என்று தைரியமாக பேசுவார்.
நான் என் அப்பாவிடம் பள்ளி நாட்களில் பல்வேறு இல்லை என்ற அவரின் வார்த்தைக்காக வெறுப்பேன் ஆனால் நான் பணியில் சேர்ந்து அனுபவ ரீதியாக என் தந்தையின் கடினங்களை உணர்ந்து அவரின் இயலாமை என்ன என்பதனை அறிந்து அவருடன் நான் பேசும் நட்பால் ஒரு நண்பனை போல் பல மணி நேரம் பேசுவார், என்னிடம் அப்பொழுது கேட்க்க நேரமில்லாமல் இருந்தது அதனை அவரின் இறுதி நாட்களில் அவருடன் இருந்து என் கடமையை செய்ததோடு ஒரு தோழனாக இருந்து காட்டினேன் ஏனெனில் அவரின் உண்மையான பேச்சு எதையும் ஒளிவு மறைவு இன்றி பேசும் மன திடம் இவை அவர் எனக்களித்த கொடை….
நான் எப்பொழுதெல்லாம் தடுமாறுவோனோ அப்பொழுது என் அப்பாவை நினைத்துக் கொள்வேன்.
இன்றைய மா-லெ அமைப்பில் உள்ள இரட்டை தன்மை முகமூடி அணிந்து வாழ்வோரை என்னவென்று சொல்வது தோழர்களே.