மா-லெ இயக்கத்தின் மீதான விமர்சனம்

எண்ணற்ற தன்னலமற்ற ஊழியர்களின், மக்களின் அற்பணிப்பும், தியாகமும், பயனற்று போய் மா-லெ இயக்கங்கள் உயிரோட்டமான சமூக இயக்கத்தோடு ஒட்டாமலும் உறவாடாமலும் சாரம்சத்தில் நடைமுறை என்ற விசியத்தில் அனுபவ வாதிகளாக திகழ்கின்றனர். தலைவர் ஒருவரின் சொந்த அனுபவ்த்திலிருந்து படிப்பினை பெறுவது என்பது லெனின் செயல் தந்திர கொள்கைக்கு எதிரானது.மா-லெ இயக்கத்தின் வரலாற்றை பரிசீலனை செய்து, தற்போதுள்ள பின்னடைந்த நிலைமையை மாற்றுவதற்க்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளவில்லை, 70 ஆம் திட்டமும் அதை அமுல்படுத்தியவிதமும் பற்றியும் பேசவே …..கால கட்டத்தில் தோழர் லெனின் வார்த்தை சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்,”… நமது ஒன்றுபட்ட நடவடிக்கைகளின் எல்லைக்கு அப்பாலும் நாம் பாதகமானது என்று நினைக்கின்ற அனைத்து நடவடிக்கைகள், முடிவுகள் மற்றும் போக்குகளை பரந்துபட்ட அளவில் சுதந்திரமாக விவாதிக்க கட்டாய முயல்வேண்டும். இத்தகைய விவாதங்கள், தீர்மானங்கள் மற்றும் இவற்றுக்கான் எதிர்ப்புகள் என்பதன் வழியாகத் தான் நமது கட்சியைப் பற்றிய உண்மையான வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்க முடியும். இந்த நிபதனையின் அடிப்ப்டையில் தான் நாம் தங்கு தடையில்லாமல் கருத்துகளை வெளியிடும் உண்மையான கட்சியாக முடியும், அடுத்த மாநாட்டின் மூலம் தனது கருத்துகளை முடிவுகளாக மாற்றும் சரியான வழிமுறைகளை கண்டறிய முடியும்”.(லெனின் தொகுப்பு நூல்கள் vol 10 page 281)