“மா-லெ இயக்கங்களின் மீது அவதுாறு
“மா-லெ இயக்கங்களின் மீது அவதுாறு

“மா-லெ இயக்கங்களின் மீது அவதுாறு

இந்த முக நூல் பதிவை நான் பதிவிடுவதன் நோக்கம் இதில் ஏதோ உள்ளது ஆகவே இதன் உண்மையை தேடுவோம் காலதால்-சிபி

இந்தப் பதிவு மாவோஸ்ட் அமைப்பு வெளியிடுகிறது தமது அணியின் பாலியியல் குற்றசாட்டில் இருந்து காக்க…

“மா-லெ இயக்கங்களின் மீது அவதுாறு பரப்புவதை திருப்பூர் குணா நிறுத்திக் கொள்ள வேண்டும்! எச்சரிக்கை விடுக்கின்றோம்”உலகம் கொரோனோ கொள்ளை நோயால் அச்சுறுத்தப்பட்டிருக்கும் காலம் இது. மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வேலை இழந்து, வாழ வழியின்றித் தவித்துக் கொண்டிருகின்றனர். நோய் தாக்குதலின் தீவிரம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைத் தொடர்ந்து வரும் மரணங்களும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. நெருக்கடியான இந்த காலகட்டங்களில், மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டங்களில் ஒன்றிணைந்து போராடுவதைத் தடுக்க, ஆளும் வர்க்கம் பல முனைகளிலும் முயன்று வருகிறது. அடிப்படையான பிரச்சனைகளிருந்து மக்களைத் திசை திருப்ப பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் இடதுசாரி சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். கொடிய அடக்கு முறைச் சட்டங்களில் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறைக்குள் அடைக்கப்பட்டும், அரசின் பயங்கரவாத அடக்கு முறைகளை எதிர்கொண்டும் வருகின்றனர். இத்தகைய நெருக்கடியான சூழலில் தான் இடதுசாரி இயக்கங்கள் மீது திருப்பூர் குணா பாலியல் ரீதியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். சமூகத்தில் நடக்கும் பல்வேறு சீர்கேடுகளின் மூலத்தை ஆராயாமல், போகிற போக்கில் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.நம் சமூகத்தில் நடக்கும் மாற்றங்கள், புரட்சி மூலம் நடக்கும் மாற்றங்களல்ல.முதலாளித்துவம் தனது தேவைக்கேற்ப மேலிருந்து செய்யும் மாற்றங்கள் ஆகும்.இதனால், ஏற்கனவே இருக்கும் சாதிய நிலவுடமைச் சிந்தனைகளின் மீது முதலாளித்துவ சிந்தனைகள் அழுத்துகின்றன. முதலாளித்துவ உற்பத்தியின் அராஜக தன்மை, சிந்தனை அராஜகத்தை தோற்றுவிக்கிறது. இந்த சிந்தனை அராஜகவாதம் அரசியல் மற்றும் பண்பாட்டுத் துறைகளிலும் வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இவை சமூகக் குழப்பங்களை உருவாக்குகின்றன. இவை ஆண்,பெண் உறவிலும் எதிரொலிக்கின்றன. ஆண்கள் அனைத்து வரலாற்று கட்டங்களிலும் வரையரையற்றே உறவு கொள்கின்றனர்.சாதிய நிலவுடமை காலகட்டத்திலும் பலதார முறை, தேவதாசி முறை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, ஒடுக்கப்பட்ட பெண்களிடம் வன்புணர்ச்சி என்று பல வடிவங்களில் தொடர்ந்தனர்.இன்றைய கட்டத்தில் பாலியல் சுதந்திரம் என்று கட்டற்ற உறவை, சிந்தனையாகவும் கருத்தாகவும் முன் வைக்கின்றனர்.பெண்கள் ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு பலியாக்கப்படுகிறார்கள். சுதந்திரம் என்ற சொல்லுக்கு பொருளே இல்லை என்பதுதான் உண்மை. இப்பெண்கள் தீவிர பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆண்களால் சக்கையாக்கப்படுகிறார்கள்.அரசாங்க சட்ட அமைப்பு முறை இணைக்குடும்பத்தை(ஒருத்தருக்கு ஒருத்தர்) வலியுறுத்துகிறது. சமூக ஒழுங்கும் இதையே வலியுறுத்துகிறது.ஆனால், குழப்பங்களும் அராஜகங்களும், ஆணாதிக்கமும் உறவுகளுக்குள் முரண்களை ஏற்படுத்துகின்றன. இதுபிரிவு அல்லது திருமணத்தை தாண்டிய உறவுக்கு இட்டுச் செல்கிறது.ஆனால், நாம் ஒரு சனநாயகக் குடும்பத்தை அமைக்கக் கூடிய கட்டத்தில் உள்ளோம். சச்சரவுகளை ஆரோக்யமான உரையாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்வதும்,விட்டு கொடுத்துத் தீர்ப்பதும், தனி விருப்பங்களை அனுமதிப்பதும், மாறுபட்ட கருத்துக்களை (ஏற்க வேண்டிய அவசியமில்லை) அனுமதிக்கும் போக்குகள் மட்டுமே ஒரு சனநாயக குடும்பம் அமைப்பதை நோக்கி நம்மை நகர்த்தும். இது ஒரு சமூகச் சிக்கல். சமூகத்தில் எதிரொளிக்கும் இந்தச் சிக்கல்கள் அமைப்புகளையும் அவ்வப்போது பாதிக்கும். கல்வியின் மூலமும் நடவடிக்கைகள் மூலமும் இவை தீர்க்கப்படுகின்றன.இருந்த போதிலும் மா-லெ இயக்க நடைமுறைகள் பற்றிய புரிதல் இல்லாமல், திருப்பூர் குணா அண்மை காலமாக புரட்சிகர இயக்கங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். பாலியல் சுதந்தரம் மற்றும் கட்டற்ற பாலியல் உறவு நடைமுறைகளை ஆன்லைனில் முன்வைக்கும் WSB பெண்கள் குழுவிற்கும், புரட்சிகர மா-லெ இயக்கங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. புரட்சிகர இயக்கத்தில் இருக்கும் எந்தவொரு நபரும் இந்தக் குழுவில் இல்லை. இந்தக் குழு எவ்வித அரசியல் சித்தாத்தங்களுக்கும் தொடர்பற்றதாக அறிவித்துக் கொள்கிறது. ஆனால் குணா, மா-லெ இயக்கங்களோடு, பின் நவீனத்துவத்தோடு அந்தக் குழுவை வலுக்கட்டாயமாகத் தொடர்புபடுத்துகிறார். இது பல நாடுகளின் கெரில்லா இயக்கங்களை, சிறார் போராளிகள்,போதை மருந்து கடத்தல்காரர்கள் , பாலியல் துய்ப்பாளர்கள் என வல்லாதிக்க உளவுத் துறைகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் போன்ற ஒரு குற்றச்சாட்டை மா-லெ இயக்கங்கள் மீது முன்வைக்கிறார். இது ஒரு சதிச் செயலாகும்.ஆனால் அதேவேளை, தநாமாலெ கட்சியால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட திருப்பூர் குணா இன்று புனிதர் வேடம் தரிக்கிறார். திருப்பூர் குணா குற்றம் சாற்றுகின்ற சீரழிந்த WSB குழுவின் தொடர்பில் இந்த சீரழிவுவாதி திருப்பூர் குணா தான் இருந்திருக்கிறார். அவர்களுடைய காமக்கதைகள் நிறைந்த புத்தகங்களை தன்னுடைய “பொன்னுலகம்” பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்.அந்தக் குழுவின் நிர்வாகியாக இருந்த ஒருவரைத் தான் மணமுடித்து இருக்கிறார். ஓராண்டுக்கு மேலாக அந்தக் குழுவோடு தொடர்பில் இருந்திருக்கிறார். தான் ஈடுபட்ட சல்லாபக் காட்சிகளையும் காணொளியாக அந்தக் குழுவில் பகிர்ந்திருக்கிறார். பிறகு அந்த குழுவிற்குள் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, அவரும் அந்தக் குழுவின் பெண் நிர்வாகியும், வேறு சிலரும் அந்தக் குழுவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். என்ன முரண்பாடு என்று நமக்குத் தெரியாது? ஓராண்டு காலமாக பரவலாக பொதுவெளியில் அறியப்படாமல் இந்தக் குழுச்சண்டை நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. தற்போது மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கொரோனா காலத்தில் , இதைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்து, மிகுந்த சமூக அக்கறையோடு!? இந்தக் குழுச் சண்டையைக் குழாயடிச் சண்டையாக ஆக்கி இருக்கிறார்கள். இதற்கு சம்மந்தமே இல்லாத மா-லெ இயக்கங்களை இணைத்து, குறிப்பாக மாவோயிஸ்டுகளையும், ஆயுதப் போராட்ட இயக்கங்களை நோக்கியும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார். இந்தக் குழுச் சண்டைகளை அறியாத பல தோழர்களையும், பின் நவீனத்துவத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் போல கற்பித்து, அவர்களையும் தன்னுடைய சுயநல குழுச் சண்டை நலன்களுக்கு பலிகடாவாக்க முயல்கிறார். WSB குழுவைப் பற்றியோ, WSB குழுவில் குணாவிற்கு ஏற்பட்ட தொடர்பு பற்றியோ, குழுவிற்குள் நடந்த முரண்பாடுகள் பற்றியோ எதுவும் பொது வெளியில் இருக்கும் தோழர்களுக்கோ, இயக்கங்களுக்கோ தெரியாது. எனவே பொது வெளியில் அவர்களுக்குள் எழுப்பப்பட்டுள்ள பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு, முதலில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர் திருப்பூர் குணாவே. அதில் பெறப்படும் உண்மையின் அடிப்படையில் தான் இந்த பிரச்சனைகள் பற்றிய முழு உண்மைகள் வெளிவரும். மா-லெ அமைப்புகள்மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் திருப்பூர் குணாவினுடைய பார்வைகள் பெரும்பாலும் சதிக்கோட்பாட்டை மையப்படுத்தியே இருக்கிறது.சமூகத்தின் புறத்தேவைகளை ஒட்டியே எந்த ஒரு மக்கள் இயக்கமும் உருவாகும். அது சனநாயக இயக்கமாக இருந்தாலும் சரி, புரட்சிகர இயக்கமாக இருந்தாலும் சரி புறத்தேவைகள் தான் இவைகளைத் தீர்மானிக்கின்றன. சமூக, அரசியல் இயக்கங்களின் எழுச்சியை வெறும் ஆளும் வர்க்கச் சதிகளாக சுருக்கிப் பார்க்கும் குணாவின் பார்வைகள் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் போராட்ட வரலாறுகளையும் கொச்சைபடுத்துவதாகவே உள்ளது.ஒரு சமூகத்தின் நிறைவேறா கோரிக்கைகளே மக்களின் போராட்டங்களாக வெடிக்கின்றன.இப்படித்தான், பிற்படுத்தப்பட்ட வன்னிய உழைக்கும் மக்களின் இட ஒதுக்கீடு போராட்டமும் நடைபெற்றது.வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் NGOக்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது இவரது மாபெரும் கண்டுபிடிப்பு ஆகும்.இதேபோல்தான் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தலித் மக்களின் பல்வேறு போராட்டங்களும் NGOக்களால்தான் நடத்தப்படுகின்றன என்ற மாபெரும் ஆய்வை வெளியிட்டார்.உண்மையில் தலித் மக்களின் போராட்டங்கள் பெரும்பகுதி மூன்று பிரிவினரால் நடத்தப்பட்டது.1. மாலெ அமைப்பால் நடத்தப்பட்டது. குறிப்பாக, மக்கள்யுத்தம் மற்றும் விடுதலை அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டன.2. ஒடுக்கப்பட்டபட்ட அமைப்புகளால் எடுக்கப்பட்டன.3. சில போராட்டங்கள்NGOக்களாலும் எடுக்கப்பட்டன.மா – லெ இயக்கங்கள் மற்றும் மக்கள் யுத்தக் கட்சி, மாவோயிஸ்ட் கட்சி ஏறத்தாழ 50 ஆண்டு கால புரட்சிகர போராட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. பின்நவீனத்துவத்தால் பீடிக்கப்பட்டு சீர்குலைந்துவிட்டதாக, திருப்பூர் குணா தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனால், இது நாள் வரை ஆதாரம் காட்டவில்லை.ஏனெனில், புரட்சிகர இயக்கங்களின் போராட்ட வரலாற்றையும் ஈகங்களையும் மறைப்பதுதான் இவரின் நோக்கமாகும். மாவோயிஸ்ட் தோழர்கள் போலி மோதல் படுகொலைக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம் ஆளும் வர்க்கத்தை கண்டிக்காமல், அந்த நேரங்களில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மீதான விமர்சனத்தை முன்வைத்து, ஆளும் வர்க்கத்தின் அடியாளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். திருப்பூர் குணாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பின்னால் அவரது பொருளாதார , பிழைப்புவாத நலன்கள் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கின்றன. பொருளாதார ஒழுங்கு முறை இல்லாததால், உதவி செய்த பல தோழர்களிடமும் இயக்கங்களிடமும், பெற்றுக் கொண்ட பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் முரண்பாட்டை ஏற்படுத்தி, உறவைத் துண்டித்துக் கொண்டு, பொருளாதார நலன்களுக்காகப் புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்வார்.இயக்கங்களிடமும், தோழர்களிடமும் தன் நலன்களையே மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் திருப்பூர் குணா தன்னை இடதுசாரியாகக் காட்டியே தனது பிழைப்பு வாதத்தை தொடர்கிறார். மா – லெ இயக்கங்கள் மீது திருப்பூர் குணாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரங்களற்ற பொய்மை புரட்டுகளாகும். புரட்சிகர அமைப்புகளின் மீதான திட்டமிட்ட அவதூறாகும். குணா கூறுவது போல் எந்த அமைப்பும் சீரழிவுக்குள்ளாக்கப்படவில்லை. குணா குறிப்பிடும் நபர்களும், இவரைப் போலவே இன்று எந்தவொரு மா-லெ இயக்கத்திலும் இல்லை. எனவே, திருப்பூர் குணா மா-லெ அமைப்புகள் மீதான அவதூறுகளையும் சீர்குலைக்கும் சதிச்செயல்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கிறோம்.1. துரைசிங்கவேல் பொதுமையர் பரப்புரை மன்றம்2. விவேக் மாவோயிஸ்ட் சிறைவாசிகள் விடுதலைக்கான குழு3. பாலன் தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சி (மா – லெ-மா சிந்தனை)4. அரங்க குணசேகரன் தமிழக மக்கள் புரட்சிக் கழகம்5. குசேலர் இ க க மாலெ – ரெட் ஸ்டார்6. மருது பாண்டியன் சோசலிச மையம்(6379687413, 9629667674, 7010084440, 9047521117, 9344272411, 7550256060)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *