மா-லெ அமைப்புகளுடன் ஒரு விவாதம்
மா-லெ அமைப்புகளுடன் ஒரு விவாதம்

மா-லெ அமைப்புகளுடன் ஒரு விவாதம்

எனது நேற்றைய பதிவின் நோக்கம் இன்றை மா லெ அமைப்புகளில் உள்ள மாபெரும் நோய் பற்றிய தேடுதலே இதனை ஏதாவது தோழர்கள் விளக்குவார்கள் என்று பார்தேன் ஆனால் இல்லை. அதனால் இந்தப் பதிவு அவசியம் புரட்சியை நேசிக்கும் தோழர்கள் தங்களின் கருத்தை பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இன்று 100 ஆண்டை கொண்டாடும் CPI,CPM திருத்தல்வாதிகளாகட்டும் நகசல்பாரி இயக்கம் என்னும் மா-லெ அமைப்பகட்டும் இன்றைய நிலையில் ஒற்றுமையின்றி சிதைந்து கிடப்பது ஏன் எனபதே எனது தேடுதல்.

புரட்சியை கைவிட்டு திருத்தல்வாதத்தை கையில் எடுத்த CPI CPM பற்றி வேறொரு நேரத்தில் பார்க்கலாம் முதற்கண்.

பல்லாயிரக் கணக்கில் தன் இயக்கத்தினரின் இன்னுயிரை புரட்சியின் வேள்வியில் நாட்டின் விடுதலைக்காக ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக புரட்சி தீயில் அர்பணித்த நக்சல்பாரி என்னும் மா-லெ அமைப்பு பற்றி மட்டுமே இங்கே சில தேடுதல்கள்.

இந்தியாவில் புரட்சியை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன்  இயங்கிய இயக்கம் இன்று மக்களுக்கான புரட்சிக்கு முன் மார்க்சிய லெனின்ய இயக்கத்தினுள் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கடந்த 50 ஆண்டுகள் வரலாற்றில் மா-லெ இயக்கத்தின் சிதைவும் சீர்குலைவும் அந்த நோய் நாடி இதற்க்கான மருந்தையும் கண்டடையாமல் இந்த வெற்று கோசங்கள் புரட்சிக்கு வித்திடாது என்பதே என் கருத்து.

பாட்டாளி வர்க்க இயக்கமாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் இந்த இயக்கங்கள் – கட்சிகள் இன்று சிதறுண்டு பல குழுக்கலாக போய் கொண்டிருப்பதற்க்கு என்ன காரணம்?.

இங்குள்ள பிரச்சினையை முன் வைத்து பேசுவோம்.

ஒவ்வொரு குழுவும் தாம்தான் கட்சி தாம்தான் புரட்சிகரமானவர், தாமதான் புரட்சிக்கு வித்திட்டவர் என்று பறைசாற்றி கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. இவை சரிதான என்று அறிந்து கொள்ள ஒரு நிகழ்ச்சியை கற்பனை செய்து கொள்வோம். பல்வேறு குழுக்களை ஒரே பகுதியில் தொழிலாளி விவசாயிகளிடையே தனித்தனியாக தங்களின் கருத்துகளை ஒரு மாதம் பரப்ப செய்தால் மாத இறுதியில் அந்த தொழிலாளி விவசாயிகளிடம் கருத்துக் கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள். எல்லோரும் தொழிலாளி விவசாயி வர்க்க ஒற்றுமை தேவையை உணர்த்தினீர்கள். ஏகாதிபத்தியம்- அதிகார வர்க்கம், தரகு முதலாளித்துவம், நிலபிரப்புத்துவம் ஆகிய எதிரிகளை தூக்கி எறியப் பட வேண்டும் என்று சுட்டிக் காட்டினீர். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உற்பத்தி உறவுகளை மாற்ற வேண்டும், உற்பத்தி சக்திகளை விடிவிக்க வேண்டும் என்றெல்லாம்  பேசினீர்கள். ஆனால் எல்லோரும் ஒரெ கருத்தை முன் வைக்கும் பொழுது இத்தனை குழுக்கள் தேவை எதற்க்கு ஒன்று பட்ட சக்தியாக புரட்சிகர அமைப்புகள் செயல் படாமல் தனித்தனி குழுக்களாக இயங்குவது எதற்க்காக? கூட்டு நடவடிக்கையின்றி இந்த பலம் பொருந்திய அரசமைப்பை தனித்தனியாக எதிர்கொள்வது சரியாகுமா?

நக்சல்பாரி எழுச்சிக்கு பின் தமிழகத்தில் தோன்றி மூன்று பிரிவு இன்று முப்பதிற்க்கும் மேலான குழுக்கலானவை ஏன்?

எஸ்.ஒ.சி- டி.என்.ஒ.சி நடந்த மோதல்கள் நட்ப்பு முரணாக இன்றி பகை முரணாக அல்லவா கடந்த காலம் பதிவு செய்துள்ளது. இன்று மக்கள் அதிகாரம் மற்றும் ம.ஜ.இ.க இன்று அடைந்துள்ள பிளவுக்கு காரணம் தத்துவ பிரச்சினையா? மேலும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல குழுக்கள் தங்களை மா-லெ கட்சி என்று சொல்லிக் கொண்டு ஒற்றை இலக்க எண்ணிகை கொண்டோரே கட்சி என்றால் மக்களை புரட்சியிலிருந்து மீது நம்பிக்கை ஏற்படுத்தவா? அல்லது புரட்சியை காட்டிக் கொடுக்கவா?

“தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்).

இங்குள்ள ஒவ்வொரு குழுவும் தம்மை தாமே ஒரே சரியான புரட்சிகரமான கம்யூனிஸ்ட கட்சியாக கருதிக் கொள்ளும் மனப்பான்மை கொண்டவை. சுவர்களில் காணும், “நானே உயிரும் ஆன்மாவும், வழியுமாக இருக்கிறேன்”, என்கிற வாசகத்துக்கும், மேலே கண்ட மனபான்மைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? புற நிலை உண்மை என்று கூறுகிறோமே, அதற்க்கு ஒத்துப் போகிறதா?
விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று குழுக்களாக நீடிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *