மா-லெ அமைப்புகளுடன் ஒரு விவாதம்-3
மா-லெ அமைப்புகளுடன் ஒரு விவாதம்-3

மா-லெ அமைப்புகளுடன் ஒரு விவாதம்-3

புரட்சியை  நேசிக்கும் தோழர்களே பதிலளியுங்கள்- 2 –சிபி

——————————————————————————————————-

தோழர்களே எனது நேற்றைய பதிவினை பொருட்டாக எடுத்துக் கொள்ளாத  மா லெ அமைப்பு தோழர்களே உங்கள் அமைப்பு நட்பு முரண் பகை முரண் கூட அறியாமல் தனது தோழர்களை கையாளும் விதம் எங்கிருந்து வந்தது?

மா லெ அமைப்புகளில் உள்ள மாபெரும் நோய் பற்றிய தோழர்கள் விளக்குவார்கள் என்று பார்தேன் ஆனால் இல்லை. சில தொழர்கள் தங்களின் பங்களிப்பை நல்கியும் அமைப்பு சார்ந்த தோழர்களின் மௌனம் அவர்களின் புரட்சியின் பால் உள்ள நிலையை கேள்விக் கூறியாக்குகிறது? எனது மொழி நடை புருவில்லையோ என்னவோ ஆகவே ஒரு பழைய தோழரின் கருத்தை கடன் வாங்கி இங்கே பகிர்கிறேன், அதன் மீதான தங்களின் கருத்தை அவசியம் புரட்சியை நேசிக்கும் தோழர்கள் பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

“தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்).

இங்குள்ள ஒவ்வொரு குழுவும் தம்மை தாமே ஒரே சரியான புரட்சிகரமான கம்யூனிஸ்ட கட்சியாக கருதிக் கொள்ளும் மனப்பான்மை கொண்டவை. சுவர்களில் காணும், “நானே உயிரும் ஆன்மாவும், வழியுமாக இருக்கிறேன்”, என்கிற வாசகத்துக்கும், மேலே கண்ட மனபான்மைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? புற நிலை உண்மை என்று கூறுகிறோமே, அதற்க்கு ஒத்துப் போகிறதா?
விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று பல குழுக்களாக நீடிக்கிறது

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களில் நக்சல்பாரி இயக்கம்தான் பல்லாயிர்க் கணக்கிலான ஊழியர்களின் இன்னுயிர்களை மக்களின் மற்றும் புரட்சியின் நலங்களுக்காக இழ்ந்தது. இத்தகைய அர்ப்பணிப்பை எந்த ஒரு அரசியல் இயக்கமும் கடந்த காலத்திலும் சரி, இனி வரும் காலத்திலும் சரி, காணப் போவதில்லை. இத்தகைய அர்ப்பணிப்பை கொண்டிருந்தாலும் 70 ல் தொடங்கப் பட்ட கட்சி சிறிது காலமே நீடித்தது பிறகு துண்டு துண்டானது இன்றளவும் அவை நீடிக்கவே செய்கிறது. முதல் மாநாடு கூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனப் பின்னும் அனைத்து புரட்சிகர் (மா-லெ) குழுக்களையும் இணைத்து “ஒற்றுமை மாநாடு” எந்த ஒரு தத்துவத் தலைமையும் முயலவில்லை. சில குழுக்கள் இணைந்து மையக் குழுவை அமைத்துக் கொள்வதன் மூலமாக தாங்கள் மட்டுமே உண்மையான புரட்சிக்கான கட்சி என்று கூறிக் கொண்டு ஒடுக்கப் பட்ட உழைக்கும் மக்களை அமைப்பாக்கமல் பிரச்சாரம் இன்றி குழுக்கள் உள்ளே முடங்கி கிடக்கும் நிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *