மா-லெ அமைப்புகளின் உடைவும் சிதைவும்.
மா-லெ அமைப்புகளின் உடைவும் சிதைவும்.

மா-லெ அமைப்புகளின் உடைவும் சிதைவும்.

இன்றைய மா-லெ அமைப்பு தலைவர்கள் குறிப்பாக தமிழகத்தில் அன்மையில் தலைத்தூக்கியுள்ள பிளவுகளை ஆராயும் பொழுது கிடைத்த தகவலின் அடிப்படையில் என் கருத்தை முன் வைக்கிறேன் மாற்று கருத்தையும் உங்கள் விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன் தோழர்களே.

இன்று அமைப்புக்குள் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முடியாத தலைமை பற்றியதே இந்தப் பதிவு.

தலைமை எப்படி அதிகாரத்துவப் போக்குள்ள தலைவர்களாக மாறினார்கள் என்று ஆராய்ந்து பார்ப்போமானால் இவர்கள் சாதாரண அணிகளாக இருந்த காலத்திலும் சரி, தலைவர்களாக மாறிய காலத்திலும் சரி கட்சிக்குள் கட்சித் கருத்து முரண்பாடுகளை மறுக்கும் இயக்க மறுப்பியல் சிந்தனைப் போக்கை பயிற்றுவிக்கப்பட்டு, அந்த சிந்தனை முறையிலேயே வளர்ந்த கட்சி ஊழியர்களாகவும், பிறகு தலைவர்களாகவும் மாறி வந்திருப்பதே காரணமாகும்.

கட்சியானது ஆரம்பம் முதலே தனது அணிகளுக்கு மாறுபட்ட கருத்தைக் கொண்ட தோழர்களை வெறுப்புடன் பார்த்து புறக்கணிக்கப் போக்கையும், தோழமையற்ற அரசியலற்ற தனிநபர் தாக்குதல் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டும், நடைமுறையில் அவ்வாறே பின்பற்றியும் வளர்ந்து வந்துள்ளதே கரணம் ஆகும். எந்த ஒரு இயக்கப் போக்கிலும், அதே போன்று தனிநபர் வளர்ச்சிப் போக்கிலும், அளவு மாற்றமானது குறிப்பிட்ட எல்லையைத் தொட்டவுடன் அது தொடர்ந்து அளவு மாற்றமா

க்கப் போகிறோம் அதேபோன்று தனிநபர் வளர்ச்சி போக்கிலும் அளவு மாற்றமானது குறிப்பிட்ட எல்லையை தொட்டவுடன் அது தொடர்ந்து அளவு மாற்றம் இல்லாமல் காய்ச்சலில் பண்பு மாற்றுமாறு மாறுகிறது அதே விதத்தில் தான் சாதாரண அணியாக உள்ள ஒரு தோழரின் கூட அவர் தொடர்ந்து கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளை தீர்ப்பதில் கடைப்பிடித்து வரும் இயக்க மரபியல் சிந்தனைப் போக்கு அவரை அதிக ரத்தப்போக்கு கொண்ட நபராக மாற்றுகிறது இந்த அதிகாரத்துவ போக்கு என்பது மேலிருந்து கீழ் வரைக்கும் கட் கட்சிக்குள் ஆழம் கடந்துவிட்ட ஒரு போக்காக மாறிவிடுகிறது இத்தகைய தன்மை கொண்ட அமைப்புகள் ஆகவே என்றும் மாை அமைப்புகள் அனைத்தும் உள்ளன

கட்டமைப்பு நெருக்கடியும் புதிய செயல்தந்திரமும்

முன்னுரை:-

SOC யின் “ கட்டமைப்பு நெருக்கடியும் புதிய செயல்தந்திரமும்” பற்றிய விமர்சனத்துற்க்கு முன் ஒரு சிறிய அறிமுகம் SOC பற்றி.

நக்சல்பாரி இயக்கத்துக்கு தற்போது வயது 50. இந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்திய அரசியலில் பாரதூரமான மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அவற்றின்தாக்கத்தில் இருந்து மார்க்சிய லெனினிய இயகங்கள் தப்பிக்க இயலவில்லைSOC, TNML ஆகிய இரு அமைப்பும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள். 1970களில் கோட்டயம் வேணு முன்வைத்த MASS LINEஐ ஏற்றுக் கொண்டு செயல்பட்டவை இவை இரண்டுக்கும் நக்சல்பாரிப் பாரம்பரியம் என்னும் ஆயுதப் போராட்டப்பாதையை ஏற்காதவர்கள். எனவே இன்று இவர்களின் பல்வேறு நிலைபாடுகளோடு தேர்தல் பங்கேற்பு அல்லது அவர்களை தூக்கி நிறுத்தும் செயல் என்பது சமாதான சகவாழ்வை நோக்கி இவர்கள் விரைவது இயற்கை.

கடந்த சில ஆண்டுகளாகவே புதிய ஜனநாயகம் இதழ், வினவு இணையதளம் ஆகியவற்றின் வாயிலாக மாநில அமைப்புக் கமிட்டியானது திமுகவுக்கு நெருக்கமாக இருந்து வந்தது. கடந்த 2016 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கும்
மனநிலையை வாக்காளரிடம் ஏற்படுத்தும் நோக்கில், ரயில் பயணத்தில் ஒரு உரையாடல் என்ற வடிவிலான, அநேகமாக தோழர் மருதையன் எழுதிய ஒரு கட்டுரை பு.ஜ.வில் வெளியானது. தொடர்ந்து பழ கருப்பையா போன்ற திமுக தலைவர்கள் மாநில அமைப்புக் கமிட்டியின் மக்கள் திரள் அமைப்புகளின் மேடைகளில் பெரும் கெளரவத்தைப் பெற்றார்கள்.

மேற்கூறிய நிகழ்வுகளின் தர்க்கரீதியான முடிவாக அமைந்து, திமுகவுடனான நெருக்கத்தை அதிகாரபூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளது. இதன் மூலம் திமுகவை நேசசக்தியாக அங்கீகரிப்பதும், ரசிக மனநிலையுடன் கலைஞரை மகத்தான ஆளுமையாகப் போற்றுவதுமான நிலைபாட்டுக்கு ஒரு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கி உள்ளது மாநில அமைப்புக் கமிட்டி. திமுக ஒரு “போனபார்ட்டிஸ்ட்” கட்சி (Bonapartist party) என்ற மாநில அமைப்புக் கமிட்டியின் கடந்த கால வரையறை நம் நினைவுக்கு வருகிறது. அத்துடன்
ஒப்பிடும்போது இன்றைய நிலைபாடானது ஒரு மாபெரும் வழிவிலகல் ஆகும்.

தனது முந்திய நிலைபாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்ளும் உரிமை மாநில அமைப்புக் கமிட்டிக்கு உண்டு. முந்திய நிலைபாட்டில் இருந்து மாறிய, தற்போதைய நிலைபாடு இதுதான் என்று அவர்கள் அறிவித்தது போலவே தங்களின் நிலைபாட்டு மாற்றத்திற்கான தர்க்க நியாயங்களை  தமிழ்ச் சமூகத்திற்கு அறிவிக்க மாநில அமைப்புக் கமிட்டியினர் கடமைப் பட்டுள்ளனர். போனபார்ட்டிஸ்ட் கட்சி எவ்வாறு புரட்சிகரக் கட்சியாக பரிணாமம் அடைந்தது என்று அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்.
புருதோனும் ஒரு சோஷலிஸ்ட் தானே என்று மார்க்ஸ் அவருடன் ஐக்கியம் பேணவில்லை. மாறாக ஈவு இரக்கமின்றி அவரின் கற்பனாவாத குட்டி முதலாளிய
சோஷலிசத்தை தாக்கித் தகர்த்தார். அதே போல,இந்திய மார்க்சிஸ்டுகள் இந்திய புருதோன்களை தாக்கித் தகர்த்து வீசி எறியாமல் இங்கே மார்க்சியத்திற்கு
வாழ்வில்லை. இந்த ஒளிவீசும் உண்மையை உணர்ந்து புரட்சிகர நடைமுறையை மேற்கொள்ளவில்லை என்பதே SOC யின் மீதான விமர்சனம்.

SOC யின் “ கட்டமைப்பு நெருக்கடியும் புதிய செயல்தந்திரமும்” பற்றிய விமர்சனம் இனி தொடரும்.

மக்கள் அதிகாரம் என்பது எந்த மக்களுக்கானது?

மார்க்ஸ் “மக்கள்” என்ற சொல்லை பயன்படுத்தும் பொழுது அதன் வழியாக வர்க்க வேறுபாடுகளை மெருகிட்டு மறைக்காமல் புரட்சியை முடித்து கொடுக்கும் திறன் உள்ள திட்டவட்டமான பகுதியை ஒன்றுபடுத்தினார் என்று எடுத்துக்காட்டுகிறார் லெனின் (லெனின் தேர்வு நூல்1, பக்கம் 272).

வர்க்கங்களை மூடிமறைத்து “மக்கள்” என்று பேசுவதை ஏட்டுப்புலமை என்று விமர்சித்துள்ளார் லெனின்.

போராட்டமும் சூழலும்:

ஒரு இயக்கத்தின் போராட்ட வழிமுறைகளில் முழக்கங்களின் வடிவங்கள்

பொதுவாக ஒரு போரட்டம் என்றால் அதன் நோக்கம் எவ்வளவு முக்கியமானதோ, அதெ போல அது நடத்தப் படும் காலமும் நேரமும் “காலத்தே பயிர் செய்” என்பது போலன்றி அவர்களின் தன்னியல்பான போராட்ட வழிமுறைகளின் மீது விமர்சனம் வைக்க வேண்டியுள்ளது.

போராட்ட வடிவங்களும் முழக்கங்களும்:

ஒரு இயக்கத்தின் போராட்ட வழிமுறைகளில் முழக்கங்களின் வடிவங்கள் என்பவை அதி முக்கியமானவை. அந்தப் போராட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்கு பெரும் பங்காற்றக் கூடியவை. பு.ஜ வுக்கு முழக்கங்களை குழப்பிக் கொள்வது என்பது ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே பல போராட்டங்களில் இத்தகு குழப்பம் அதற்கு இருக்கவே செய்தது. இறால் பண்ணை அழிப்பு போராட்டமும் சரி , கருவறை நுழைவுப் போராட்டமும் சரி இத்தகு முழக்க வடிவத் தடுமாற்றத்தால்தான் அவை பெற்றிருக்க வேண்டிய பிரம்மாண்ட வரவேற்பைப் பெற முடியாமலே போய்விட்டது. உண்மையில் மக்கள் அதிகாரத்தால் முன்வைக்கப்பட்ட டாஸ்மாக் மூடுவோம் எனும் முழக்கம் எத்தகு விளைவுகளை ஏற்படுத்தும்? ஒரு முழக்கத்தின் வடிவங்களைத் தீர்மானிக்க நான்கு வகையான கட்டங்களை மார்ஸிய ஆசான்கள் குறிப்பிடுகிறார்கள்.

1. propaganda slogan (பிரச்சார முழக்கம்)
2. agitation slogan(கிளர்ச்சி முழக்கம்(
3. action slogan (நடவடிக்கை முழக்கம்)
4. directive (ஆணை(

மேலேகண்ட முழக்கத்தின் நான்கு வடிவங்களில் , சூழல் அறிந்து , மக்களின் மனநிலை அறிந்து, கட்சியின் பலம் அறிந்து குறிப்பிட்ட முழக்கத்தின் வடிவத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

“முழக்கங்களை ஆணைகளுடன் சேர்த்து குழப்புவது அல்லது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை ஒரு நடவடிக்கை முழக்கத்துடன் இணைத்துக் குழப்புவது என்பது காலம் கனிவதற்கு முன்பு அல்லது காலம் கடந்தபிறகு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைபோல அபாய கரமானது, ஏற்படுத்தும் அழிவு சில சமயங்களில் தன்னையே அழித்துவிடும்.

போராட்டங்களை முன்னெடுப்பது நமது அகநிலை விருப்பம் சார்ந்தது அல்ல. பெரும் போராட்டங்களை முன்னெடுப்பதில் அமைப்பு வலிமை ஒரு முக்கியமான காரணி. எல்லா மா லெ அமைப்புகளுக்கும் உள்ள அமைப்பு வலிமை பெரும்

போராட்டங்களை  சொந்த முயற்சியில் முன்னெடுப்பதற்குப் போதுமானதல்ல.       

இனி நூலிற்க்கான விமர்சனம்.

“ கட்டமைப்பு நெருக்கடியும் புதிய செயல்தந்திரமும் “(SOC) முன்வைத்துள்ள நிலைபாடுகளில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன.

1.  கட்டமைப்பு நொறுங்கி விழும் நிலையை எட்டிவிட்டது.

2. கட்டமைப்பை வீழ்த்தி மாற்றுக்காக போரடுவது.

3. மக்கள் தயார் நிலையில் இல்லாத போதும் அவர்களை தாயார் செய்வது.

என்று மூன்றம்சங்களை முன் வைக்கிறது.

“புரட்சி எந்தக் குறிபிட்ட தருணத்தில் ஆரம்பிக்கும் என்பதை( மேற்கட்டுமானம் இற்று நொறுங்கிவீழும் என்பது) அதாவது ஒரு அமைப்பின் ஏதாவதொரு வீழ்ச்சி என்றைக்கு தொடங்கித் தீர வேண்டும் என்று எந்த பொறுப்புள்ள அரசியல்வாதியும் என்றைக்கும் சொல்லமாட்டான்”- லெனின் இவை ஒரு சிறுபிள்ளைதன்மான வரையறுப்பு என்றும் மேலும் கூறுகிறார் லெனின்.

கட்டமைப்பு நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை பற்றி பேசும் soc யின் நிலைபாடு இதிலிருந்து புலப்படுவது முங்கூட்டியே தீர்மானிப்பது சிறுபிள்ளைதன்மானது அல்லவா?

தாக்குதலுக்கான புறவய நிலைமை இல்லாதபோது பிரச்சினையை கையாளுவதை பற்றி லெனின் கூறுகிறார்,”உள் நாட்டுப்போர் நடத்துமளவுக்கு வர்க்கப் போரட்டத்தை தீவிரப் படுத்துவத்ற்க்கான புற்வய நிலைமை எதுவும் இல்லை என்றால், உள் நாட்டு போரை பற்றி ஏன் பேச வேண்டும்”. மேலும் புரட்சிகரச் சூழல் இல்லாத போது, மக்கள் மத்தியில் புரச்சிகரமான மனபான்மை இல்லாமல், இந்த மனபான்மை வளர்வத்ற்க்கு அனுசரணையான நிலைமைகள் இல்லாமல் புரட்சிகரச் செயல் தந்திரத்தை ஒரு நாளும் செயல்படுத்த முடியாது என்றே லெனின் கூறுகிறார்.

கட்டமைப்பு நெருக்கடி என்று பொதுவாக பேசி, புறநிலை பற்றி ஆய்வின்றி (புரட்சிகரமானதாக் மாறிவிட்டது என்று நிறுவவில்லை). புரட்சிகரமான தாக்குதலுக்கு அறைகூவல் விட்டுக் கொண்டே புரட்சிகர சக்திகள் இன்னும் தன்னியல்பில்தான் உள்ளது என்னும் பொழுது எந்த நிலையிலான செயல் தந்திரத்தை கொண்டு செல்வது என்பது குழப்பம் தான் மிஞ்சும். ஆகவேதான்  தாக்குதல் செயல் தந்திரம்  தயாரிப்பு செயல்தந்திரம் இரண்டையும்  சேர்த்தே கொண்டு செல்ல கூறுவது இரண்டு செயல்தந்திரமும் செயல்படாமல் போக செய்வதே.

அதாவது தாக்குதல் செயல் தந்திரத்தையும்  தயாரிப்பு (தற்காப்பு) செயல் தந்திரத்தையும் இரண்டையும் சேர்த்தே கொண்டு செல்வது என்ற SOC யின்  நிலைபாடு  புதிய செயல் தந்திரம் இவை மார்க்சிய லெனினிய வகை பட்ட செயல் தந்திரம் அல்ல.

ஒவ்வொரு துறையும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டதாக கூறும் இவர்கள். 

ஆளும் வர்க்கம் ஆளத் தகுதியிழந்து விட்ட நிலையில், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் திவலாகி தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர் நிலை சக்தியாகளாக் மாறிவிட்ட நிலையில் அவற்றை தாக்கித் தக்ர்த்துவிட்டு அதிகாரம் அனைத்தையும் மக்களே கைபற்றி மாற்று அரசியல் கட்டுமானங்களை கட்டியமைப்போம் மக்கள் அதிகார்த்துக்கான இயகத்தை கட்டியமைப்போம்- என்ற முழக்த்தை வைத்துள்ள மக்கள் அதிகாரம், அதிகாரம் அனைத்தையும் கைபற்றி மாற்று அரசியல் கட்டுமானங்களை மக்கள் தங்களாகவே கட்டிக்கொள்ள வேண்டுமென்பது சுதமான தன்னியல்புதான். வர்க்க தனமையில்லாத வர்க்க அணி சேர்க்கை பற்றி பேசாமல் பொதுவாக மக்கள் என்பதும் எந்த மக்கள் என்ற வரையறையே இல்லாமல் மக்கள் அதிகாரம் என்பது முதலாளித்துவ வாதமே.

ஆளும் வர்க்க அரசுக் கட்டமைப்பைத் தகர்தெரிவது, மாற்று மக்கள் அதிகாரத்தை கட்டி அமைப்பது என்ற புதிய செயல் தந்திரத்தை வைத்த பிறகு, மீண்டும் பழைய செயல் தந்திரதர முழக்கத்தை இணைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

பொதுவான திட்டம் (போர்தந்திரம்) அல்லது குறிப்பான திட்டம் (செயல்தந்திரம்) எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது? மாவோ கூறுகிறார் “ நமது பொதுவான புதிய ஜனநாயக வேலை திட்டம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக் கட்டம் முழுவதற்க்கும், அதாவது பல பத்தாண்டுகள் மாறாமல் இருந்து வரும், ஆனால் இந்தக் கட்டத்தின் போது அவ்வப்போது சூழ்நிலைகள் மாறியுள்ளன அல்லது மாறிகின்றன ஆகவே அவற்றிக்கிணங்க நாம் நமது குறிப்பான வேலை திட்டத்தை மாற்ற வேண்டியது இருக்கிறது” என்பார்.

“ கட்சியின் செயல் தந்திரம் என்பதானது கட்சியின் அரசியல் நடத்தை அல்லது அதனுடைய நடவடிக்கையின் பண்பு, திசை வழி மற்றும் வழிமுறைகள் என்று பொருள்படும்” என்று லெனின் கூறுகிறார்.

எனவே செயல் தந்திரம் என்பது ஒரு குறிப்பான காலகட்டத்தில் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கேற்ப எந்தெந்த வர்கங்களை தனிமை படுத்தி எந்தெந்த வர்கங்களை அணிசேர்பது என்பதனைத் தீர்மானிப்பதாகும்.

பழைய செயல் தந்திர முழக்கத்தை பொதுவான போர்தந்திர முழக்கமான மக்கள் அதிகாரம் எனும் புதிய செயல் தந்திர முழக்கத்தோடு இணைக்க முடியாது அவ்வாறு இணைப்பது ஒரு கதப்பவாதமே. ஒரே நேரத்தில் இரண்டு செயல்தந்திரம் என்பது மார்க்சியமற்ற போக்கே.

புதிய ஜனநாயக புரட்சியை என்ற முழக்கத்தை கைவிட்டு “மக்கள் அதிகாரம், மக்கள் புரட்சி” என்று பேசுவது புரட்சியை கைவிட்டு முதளாளித்துவ முழக்கங்களை தூக்கி நிறுத்தும் நிலைக்கு தாழ்ந்து போகும் நிலையே, உண்மையில் கட்டமைப்புத் தகர்ப்பு மக்கள் அதிகாரம் என்ற புதிய செயல் தந்திரம் “பேச்சில் புரட்சி என்றாலும் செயலில் வலது நிலைபாடே”

கட்டமைப்பு நெருக்கடியும் அதற்க்கான தீர்வும் –லெனின்

ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றது என்று எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது, எல்லோரும் புரட்சியை அங்கீகரிக்கிறார்கள். எந்த வர்க்கம் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்று வரையறுப்பதே இன்றுள்ள பணி,, இதை வரையறுக்காவிட்டால் புரட்சி கோசம் தற்சமயம் வெற்று சொல்லே, இதை வரையறுக்காவிட்டால் முன்னணி வர்க்கத்தின் முன்னணி ஜனநாயகப் பணிகள் பற்றி பேச்சே இருக்க முடியாது.

புரட்சிகரமான ஜனநாயக சர்வாதிகாரம் எனும் கோசம் புரட்சிகரமான அரசாங்கம் எனும் கோசத்தையும் அங்கீகரிக்க மறுப்பவர்கள் புரட்சியின் பணியைகளைப் புரிந்துக் கொள்வதில் முற்றிலும் தவறுகிறார்கள். இன்றைய புதிய, மேலும் உயர்வான பணிகளை வரையறுக்க முடியாமல் இருக்கிறார்கள், அல்லது மக்களை ஏமாற்றுகிறார்கள் “புரட்சி” எனும் கோசத்தை கேடாகப் பயன்படுத்துகிறார்கள்” என்கிறார் லெனின்.

(லெனின் நூல் தி.1 ப. 264-65)

முடிவுரை..

ப்ரூத்தோனின் செல்வாக்கின் கீழ் இருந்த ஒரே தொழிலாளி வர்க்கமான பெல்ஜிய தொழிலாளி வர்க்கத்தை ஹெகல் சொல்வது போல ‘சூன்யத்திலிருந்து சூன்யத்தின் வழியாக சூன்யத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது’ என்று எள்ளி நகையாடுவார் பிரெடரிக் எங்கெல்ஸ். ப்ரூத்தோனியம் செல்வாக்கு செலுத்தும் இயக்கங்களின் அரசியலும் நடைமுறையும் எதன் வழியே எங்கே போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு கலங்கரை விளக்கமாய் சாட்சி பகர்கிறது மக்கள் அதிகாரம்”.

——————————————————————————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *