கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் விஷயம்பற்றி, ஒரு சில பகுதியினர் மத்தியில் தவறான, குட்டி பூர்ஜுவா வர்க்கக் கருத்துக்களும், மார்க்சிய-லெனி னியத்துக்கு விரோதமான கருத்துகளும் நிலவுகின்றன. இக் கருத்துகள் சே குவேவராவின் பெயருடன் அல்லது வேறு பெயரில் சொன்னல் கியூபா மார்க்கத்துடன் சம்பந்தப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமைதாங்க வேண்டிய அவசியம்பற்றி தோழர் மாசேதுங் அவர்கள் கூறிய மேற்காணும் கருத்துகளை இன்றைய காலப் புரட்சி இயக்கம் நன்றகக் கிரகித்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.
சே குவேவராவின் அல்லது கியூபா மார்க்கத்துடன் சம்பந் தப்படுத்தப்பட்ட இந்தத் தத்துவத்தின் அடிப்படை நோக்கம் நாளிலும் பொழுதிலும் வளர்ந்துவரும் மாசேதுங் சிந்தனையின் செல்வாக்கை எதிர்ப்பதாகும். இந்தத் தத்துவம் ஒரு புரட்சி கரக் கட்சியின் தேவை, (புரட்சி இயக்கத்தில்) மக்களின் பங்கு இரண்டையும் எதிர்க்கின்றது. சில கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிபு வாதக் கட்சிகளாய் மாறிய உண்மையைக் காரணமாகக் கொண்டு, தொழிலாளர் வர்க்கத்துக்கு வழிகாட்ட புரட்சிகரக் கட்சி ஒன்று தேவை என்ற லெனினிய தத்துவத்தை நிராகரிப்பதற்கு எடுக் கும் முயற்சி இது, குழந்தையைக் குளிப்பாட்டிய அழுக்கு நீரை வீசும்போது, ஒருவர் குழந்தையையும் வீசியெறிவாரா? ஒருபோ தும் எறிய மாட்டார். அதுபோல, குறிப்பிட்ட சில கம்யூனிஸ்ட்
கட்சிகள் தீயவையாக அல்லது திரிபுவாதக் கட்சிகளாக மாறிய ஒரேகாரணத்துக்காக, கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தை யாரும் நிராகரிக்க மாட்டார். எந்த ஒரு நாட்டிலாயினும் ஒரு கம்யூ னிஸ்ட் கட்சி திரிபுவாதக் கட்சியாய் மாறிவிட்டால், அந்த நாட்டுப் புரட்சிவாதிகளின் கடமை உண்மையான, புரட்சிகர மான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க வேண்டுமே யன்றி, கட்சியின் தேவையை நிராகரிப்பது அல்ல.
இந்த தவறான தத்துவம் குறிப்பாக ஒரு புதுமைவாத, குட்டி பூர்ஜாவா வர்க்க சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் சிறப்பியல்பு யாதெனில் பொதுமக்கள் மீது நம்பிக்கை இன்மையாகும். இது மிகப் பயங்கரமான நிலைமை களிலும் பெரும் சாதனைகளை செய்வர் என்று ஒரு கூட்டம் தான்தோன்றித்தனமான வீரசிகாமணிகள் மீது பிரதானமாக நம்பிக்கை வைக்கின்றது.
ஒரு நாட்டில் புரட்சிக்கான சூழ்நிலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அச்சூழ்நிலை பக்குவப்பட் டிருந்தாலும் சரி, பக்குவப்படாதிருந்தாலும் சரி, அதாவது, ஒரு நாட்டு மக்கள் புரட்சிக்கு தயாராய் இருக்கிறார்களா இல்லையா என்பதை பாராமல், மக்களுக்குத் தலைமை தாங்க ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல், மனோதிடம் கொண்ட ஒரு சில புரட்சிவாதிகளால் அந்த நாட்டு அரசாங்க யந்திரத்தை தூக்கி எறிய முடியும், அதிகாரத்தைக் கைப்பற்றமுடியும், அதன்பின்னர் மக்களைத் தம்பக்கம் வென்றெடுக்க முடியும் என்ற கருத்தை இந்த சே குவேவரா தத்துவம் ஜனரஞ்சமாக்க முயல்கின்றது.
வெகுஜன ஆதரவில்லாமல் ஒரு சில தனிநபர்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை, பாட்டாளி வர்க்க வெகுஜனங்களின் ஆதரவைப் பெருமல் எதிரிக்கு நஷ்டம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளை இத்தத்துவம் ஆதரிக்கின்றது. ‘இதுதான் குட்டி பூர்ஜ”வாக்கள் பிரியப்படக்கூடிய ஒரு ரகப் போராட்டமாகும். இது அவர்களுடைய தனிநபர்வாத இயல்பையும், பாட்டாளி வர்க்கம் போராட்டத்தில் பங்குபற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான கண்ணோட்டங்களையும் பிரதிபலிக்கின்றது.”
இந்தத் தத்துவத்துக்கும், பொதுமக்களைப் பூரணமாகச் சார்ந்திருப்பதை அடிப்படையாகக் கொண்ட மக்கள் யுத்தம் பற்றிய் தோழர் மாசேதுங் அவர்களின் தத்துவத்துக்கும் எவ் வித சம்பந்தமும் கிடையாது. மாசேதுங் அவர்களின் மக்கள் யுத்தம் பற்றிய தத்துவம் வெகுஜனங்கள் மத்தியில், சிறப்பாக விவசாயிகள் மத்தியில் சென்று வேலை செய்யும்படி புரட்சிவாதி களைத் தூண்டுகின்றது. வெகுஜனங்களுடன் ஒன்றிணைந்து, கிராமியத் தளப் பிரதேசங்களை ஸ்தாபித்து, மக்கள் படை ஒன் றைக் கட்டி வளர்த்து, நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்தி, இறுதியில் நாட்டுப் புறங்களைக்கொண்டு நகரங்களைச் சுற்றி வளைத்து, விடுதலை செய்யும்படி புரட்சிவாதிகளைத் தூண்டுகின் றது.
தோழர் மாசேதுங் அவர்கள், ‘புரட்சி யுத்தம் என்பது பொதுமக்களின் யுத்தம். பொதுமக்களைத் தட்டியெழுப்பி, அவர்களைச் சார்ந்திருந்தால்தான் இந்த யுத்தத்தை நடத்தமுடியும்’ என்று தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார். இவ்வாறு, மக்கள் யுத்தம் பற்றிய தத்துவம் ஒரு மார்க்சிய-லெனினியக் கட்சியின் தலைமையில், பொதுமக்களைப் புரட்சிகரமான முறையில் தட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்ட, அதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரு தத்துவமாகும். இத்தத்துவம் மக்களைத் தட்டியெழுப்புவதை விரும்பு கின்றது. அவர்களை ஸ்தாபனப்படுத்தி, அணிதிரட்ட உதவு கின்றது. ஆரம்பத்தில் வெகு பலம்வாய்ந்த எதிரியுடன் துணிந்து போராடவும், அப்போராட்டத்தின் போக்கில் எதிரியை தீர்க்கமாகத் தோற்கடிக்கக் கூடிய பல மேம்பாடு பெறும்வரை தமது படைகளை வளர்க்கவும் போதனை அளிக்கின்றது.
தோழர் மாசேதுங் அவர்களின் இத் தத்துவத்துக்கும், தொழிலாளர் வர்க்கக் கட்சியின் பாத்திரத்தையும் பொது மக்களின் பாத்திரத்தையும் நிராகரித்து, ஒரு சில தனி நபர்கள் மீது அல்லது ஒரு சில தனிநபர்க் கும்பல்கள் மீது நம்பிக்கை வைக்கும் கியூடன் மார்க்கத்துக்கும் சம்பந்தா சம்பந்தமே கிடையாது.
மார்க்சிய-லெனினியவாதிகள் அனைவரும் சித்தாந்த ரீதி யில் சர்வசதா விழிப்போடிருக்க வேண்டும்; உண்மையான கருத்துகளையும் நவீன திரிபுவாதிகள் விற்பனை செய்ய முயலும் போலிச் சரக்குகளையும் வேறுபடுத்திப் பார்க்கக் கூடியவர்களாக, இருக்கவேண்டும்.
தமக்கு முன் லெனின் அவர்கள் செய்ததுபோல, தோழர் மாசேதுங் அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி என்பது நமது சகாப்தத்தின் மிக முன்னேறிய புரட்சிகரத் தத்துவத்தால்மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் என்ற உண்மையை பெரிதும் வலியுறுத்தி யுள்ளார். ஒரு வீட்டுக்கு உறுதியான ஒரு அத்திவாரம் எப்படி அவசியமோ, அப்படி ஒரு புரட்சி இயக்கத்துக்கு – ஒரு கட்சிக் கும் கூட ஒரு உறுதியான சித்தாந்த அடிப்படை அவசியம், இல்லாவிட்டால், அந்த வீடு தகர்ந்துவிடும். ‘புரட்சிகர தத்து வ்ம் இல்லாவிட்டால் புரட்சிகர நடைமுறையே இருக்க முடி யாது’ என்று லெனின் நமக்குப் போதித்துள்ளார்.
தோழர் மாசேதுங் அவர்கள் போதித்ததாவது: ‘நமது நாட்டில் புரட்சியும் நிர்மாணமும் ஈட்டிய வெற்றிகள் மார்க்சிய-லெனினியத்தின் வெற்றிகள் ஆகும். நமது கட்சி இடை விடாது பின்பற்றி வரும் சித்தாந்தக் கோட்பாடு யாதெனில், சீன புரட்சியின் உடன் மார்க்சிய-லெனினிய தத்துவத்தை நெருக்கமாக இணைப்பதாகும்.’ஆகவேதான், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையால் தம்மை ஆயுதபாணிகள் ஆக்கிக்கொள்ள வேண்டும். பல கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிபுவாத கட்சிகளாக சீரழிந்ததற்கு அநேக காரணங்கள் உண்டு. அவற்றில், பிரதான காரணங்களில் ஒன்று என்ன வென்றால், அவற்றின் உறுப்பினர்களுக்கு சரியான சித்தாந்தப் பயிற்சி இன்மையாகும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயர்ப் பலகையைத் தொங்கவிட்டால் மட்டும் போதாது. இதை யாரும் செய்யலாம். முக்கியமானது யாதெனில், ஒவ்வொரு கட்சி உறுப்பினரையும் சரியான மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனை தத்துவத்தால் ஆயுதபாணியாக்கி, அவர்கள் அனைவரையும் உண்மையான புரட்சிவாதிகள் ஆக்கவேண்டும். மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனைப் படிப்பில் நாம் கடைப் பிடிக்கும் மனோபாவம் கட்சியை கட்டி வளர்ப்பதில் முக்கியமான ஒரு அம்சம். இப்படிப்பு யந்திரீக முறையில் செய்யப்படக் கூடாது. எந்த ஒரு குறிப்பிட்ட கட்டத்திலும் நின்றுவிடக் கூடாது. நமது தத்துவம் மனப்பாடம் செய்து, மீண்டும் மீண் டும் உச்சாடனம் செய்யும் சூத்திரம் அல்ல, இது செயலுக்கு ஒரு வழிகாட்டி, மார்க்ஸ் அவர்கள், ‘இன்று வரையில் தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்துள்ளனர், நமது கடமை அதை மாற்றுவதாகும்’ என்று கூறினர்.