மாவோ எதிரியை பற்றி

மாவோ தன் நாட்டில் நடத்தி முடித்த புரட்சியின் ஊடாக நமக்கு தடம் பதித்து சென்றுள்ளார் அந்த பாதையில் பயணிக்க நினைக்கும் புரட்சியை நேசிப்போர் புற அகச் சூழலை கணக்கில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே நமது இலக்கை அடைவது சாத்தியம் அதனை விடுத்து வெற்று கோட்பாட்டு வாதிகளாக இருந்தால் நாம் செய்பவை ஒன்றுமேயில்லை வெற்று கோசங்களாக மட்டுமே அவை இருக்கும்

1945, ஜூன் 17-ம்தேதி, சீனப் புரட்சியில் தியாகிகளானவர்களை நினைவுகூறும், கூட்டமொன்றில் உரையாற்றுகையிற் தோழர் மா சே-துங், “பிற்போக்காளர்கள் எவ்வளவு அதிகம் பிற்போக்காக இருக்கின்றனரோ அவ்வளவுக்கு அவர்கள் தங்கள் அழிவை நெருங்கியுமிருக்கின்றனர் எனப் பிரகடனம் செய்தார்: எல்லாப் பிற்போக்காளர்களும் தங்கள் படுகொலைகள் எவ்வளவு அதிகரிகின்றன்ரோ அவ்வளவுக்குப் புரட்சி பலவீனமடையுமென நினைத்துக்கொண்டு, பெரும் படுகொலைகள் நடத்துவதன் மூலம் புரட்சியை அழித்து விட முயல்கின்றனர். ஆனால், இந்தப் பிற்போக்கு மனப் பால் குடித்தலுக்கு நேர் முரணாக, உண்மை என்னவெனிற் பிற்போக்காளர்கள் எவ்வளவுக்கு அதிகமாகப் படுகொலையை நாடுகின்றனரோ அவ்வளவுக்குப் புரட்சியின் பலமும் அதிகமாகிறது, பிற்போக்காளர்களும் தம் அழிவை நெருங்குகின்றனர். இது ஒருபோதும் தவறாத ஒரு நியதி.

1957, நவம்பர் 6-ம் தேதி, அக்டோபர் புரட்சி யின் 40-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய சோ. சோ. கு. யூ. னின் சுப்ரீம் சோவியத் கூட்டத்தில் தோழர் மா சே-துங் கூறினார்:

“சோசலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை அகற்றி அதன் இடத்தை எடுக்கும். இது மனித விருப்பிற் தங்கியில்லாத புறநிலையான ஒரு நியதி. பிற்போக்காளர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்துப் பிடிக்க எவ்வளவுதான் முயன்றாலும், இன்றோ நாளையோ புரட்சி நிகழவே செய்யும், சந்தேகமின்றி வெற்றியீட்டவே செய்யும். ”பாறையைத் தூக்கித் தன் காலிலேயே போட்டுக் கொள்வது” என்ற சீன முதுமொழி சில முட்டாள்களின் நடத்தையை வர்ணிக்கிறது. எல்லா நாடுகளிலும் உள்ள பிற்போக்காளர்கள் இந்த வகையான முட்டாள்களாவர். புரட்சிகர மக்களை அவர்கள் கொடுமைப்படுத்துவதெல்லாம் தவிர்க்க முடியாதபடி மக்களை மேலும் பரந்த, மேலும் உக்கிரமான புரட்சிக்குத் தூண்டுவதிற்தான் போய் முடியும். ருஷ்ய ஜாராலும் சியாங் கே- ஷேக்காலும் புரட்சிகர மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைப்படுத்தல்கள் மகத்தான ருஷ்யப் புரட்சியையும் மகத்தான சீனப் புரட்சியையும் தூண்டிவிட மட்டுமே பயன்படவில்லையா?