மாவோவிடம் கற்ப்போம்

சோஷலிச சமுதாயம் என்பது ஆகாயத்திலிருந்து விழுவதில்லே பழைய சமுதாயத்தின் கல்லறையிலிருந்தே வெளிவருகிறது; ஆயிரமாயிரம் ஆண்டுகால வர்க்க சமுதாயத்தில் உருவான தனிச் சொத்துடமை, அதைச் சார்ந்த கருத்தியல்கள், கலாச்சாரங்களை வேரறப்பது என்பது எளிதானதல்ல என்றார் லெனின்.

“தனியார் சொத்துடைமை இடையிட்டு வந்ததே. ஆயினும் பல நூற்றாண்டு கால தனிச் சொத்துடைமைச் சமூக உணர்வுகளை முற்றாக அழிப்பதும் சிரமமே

தவறுகள் ஏற்படலாம். அனுபவம், நடைமுறை மூலம் அவை திருத்தப்படுகின்றன.
'மத்தியதுவம், ஜனநாயகம் ஆகிய இரண்டும் முரண்பாடான இரண்டு அம்சங்கள்: மத்தியதுவ தீர்மானங்கள் அடிமட்டம்வரை பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

“அது மீளவும் மத்தியதுவத்தால் பரிசீலிக்கப்படும். ஜனநாயக மத்தியதுவம் என்றும் காப்பாற்றப்பட வேண்டும்

நாட்டில் புரட்சிகர அரசியலை கைவிட்டு திரிபு வாத தலைமைத்துவத்திைதை வளர்த்ததே.வேதனேயானது

முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கான மாற்றம் என்பதன் சாராம்சம் ஒன்றே - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.

தாராள ஜனநாயகம், பூர்ஷ்வா ஜனநாயகம் என்பவை முதலாளித்துவ சர்வாதிகாரமே

ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள் மார்க்சிச – லெனினியத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும் விளங்கினார். சீனாவில் ஒரு சக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன் தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப் படையை உருவாக்கி, பல்வேறு கருத்துக்களையும், கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது எதிர்க்கெதிராக ஒருபரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டித் ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பரிய சாதனையாகும்.
ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும், தத்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில் நகரங்களை கைப்பற்றி முழுத் தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்தியது மற்றுமொரு சாதனையாகும்.

சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோஷலிச நாடாக்க நடவடிக்கை எடுத்தமை, சோவியத் யூனியன் தலைமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவெடுத்த நவீன திரிபு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன் எடுத்தமை என்பன மூலம் மாக்சியம் லெனினியத்தையும், புரட்சிகர இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக மாவோ விளங்கினார்.