மாவோவிடமிருந்து கற்ப்போம்….
மாவோவிடமிருந்து கற்ப்போம்….

மாவோவிடமிருந்து கற்ப்போம்….

எனெது தேடுதல் இன்றைய கம்யூனிச இயக்கங்களின் பின்னடைவுக்கு காரணம் தேடுவதுடன் எதிர் புரட்சியாளர்களை அடையாளம் கண்டு கொள்ள ஏதுவாக இருக்கும்….

குருச்சேவின் திருத்தல்வாதத்திற்கு பிறகு உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் திருத்தல்வாத கட்சிகளாக மாறின.அரசு பற்றிய மார்க்சிய வரையரை மீது பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தேர்தல் பங்கேற்பு போர்தந்திரமாக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் சீரழிந்து திருத்தல் வாத கட்சியாக மாறி புரட்சிக்கு துரோகமிழைத்தது, மார்க்சிய,லெனினியத்தை கைவிட்டு திருத்தல் வாதத்தை ஏற்றது, சமாதானம் சுக வாழ்வு என்று வர்க்க போராட்டத்தை கைவிட்டு எதிரியிடம் சரண் அடைந்தது.
, ” அமெரிக்க ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனினியத்தை குழப்புகிறது என்றால் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனினியத்தை திரிக்கிறது” அதற்காக புரட்சிக்கு மக்களை திரட்டுவதற்கு எதிரான மார்க்சியத்தை மார்க்சியத்தின் பெயரில் சிதைக்கும் சில வேலைகளை ஏகாதிபத்தியம் புகுத்தியது அவை மக்களை எதிர் புரட்சியாளர்களஆக்க பயன்படுத்தி கொண்டது, அதில் சில, பின்நவீனத்துவ, புதியஇடது கருத்துக்கள் ஏகாதிபத்திய கை கூலிகள் மூலமாக மார்க்சியத்தை திரித்து எது மார்க்சியம்?எது மார்க்சியமல்ல என்ற எல்லை கோடு மறைந்தது…..
இன்று ஏகாதிபத்திய பின்னணி யில் பல மா-லெ குழுக்கள் சீரழிக்கப்பட்டன.பலர் ஏகாதிபத்திய கைக் கூலிகளின் துரோக வலையில் வீழ்ந்தனர், இன்றோ மா-லெ அமைப்பு தங்களின் சுய முரண்பாடுகளில் முடங்கிக் கிடக்கிறது நமது மார்க்சிய ஆசான்களின் வழி நடக்காமல் , இவையும் ஏகாதிபத்திய சேவையே, நமது ஆசான்களுக்கு நாம் செய்யும் துரோகம்…

இங்கே நினைவில் கொள்ள
மாவோவிடமிருந்து கற்ப்போம்….

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும். மேலும் இதைச் செய்வதற்காக நாம் அகவய கற்பனையையோ, அப்போதைய ஆர்வத்தையோ அல்லது சாரமற்ற புத்தகங்களையோ சார்ந்திருக்கக் கூடாது, புறவயமாக நிலவுகின்ற சூழல்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உரிய வகையில் தகவல்களைச் சேகரித்து, மார்க்சிய-லெனினிய பொதுக்கொள்கை நெறிகளினை சரியாகப் பின்பற்றி அதிலிருந்து முடிவுகளை வகுக்க வேண்டும். இத்தகைய முடிவுகள் வெறும் அ, ஆ, இ, ஈ வரிசையாலான நிகழ்ச்சிப்போக்குகள் நிறைந்த பட்டியல்களோ, பயனற்ற கூற்றுகள் நிரம்பிய எழுத்துக்களோ அல்ல, அவை அறிவியல் பூர்வமான முடிவுகள் ஆகும். இத்தகைய உளப்பாங்கு என்பது மெய் நிகழ்வுகளிலிருந்து பேருண்மையை தேடுவது, வெற்று பசப் புரையிலிருந்து அணுகூலமானதைப் பெறுவது அல்ல. இதுதான் மார்க்செ வழியில் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதாகும், உயிரோட்டமான கட்சியின் வெளிப்பாடு இதுவே. எந்தவொரு கட்சி உறுப்பினரும் இந்த அணுகுமுறையை மிக குறைந்த அளவிலேனும் கைக் கொண்டிருக்கவேண்டும்.

பயிலும் முறை சீர்திருத்தம், மாவோ ஆற்றிய பகுதி …..
மக்கள் திரள் விழித்துக்கொள்ளும் முன்பே நாம் தாக்குதலில் இறங்கிட முயல்வோமென்றால் அது சாகசவாதமாகிவிடும். மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவதற்கு அவர்களுக்கு உத்தரவிடுவோமென்றால் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியும். மக்கள் முன்னேற்றத்தை எதிர்நோக்கும்போது நாம் அதற்கு முயலாமலிருந்தால் அது வலதுசாரி சந்தர்ப்பவாதமாகிவிடும்.
– சான்ஷி-சுயான் நாளிதழ் ஆசிரியர்குழுவோடான உரையாடல் 1948 ஏப்ரல் 2 ……
சிலர் தாங்கள் மார்க்சியத்தை நம்புவதாக எண்ணுகின்றனர். ஆனால் அகநிலைவாதச் செய்தியை கேட்கும் பொழுதோ வாசிக்கும்பொழுதோ அதற்கு எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தாமலோ யோசிக்காமலோ இருந்து பொருள்முதல்வாதத்தை அவ்விடத்தில் பிரச்சாரம் செய்வதற்கு முயற்சி எதையும் மேற்கொள்வதில்லை. இது ஒரு கம்யூனிஸ்டின் எண்ணப் போக்கல்ல. அது நமது பல தோழர்கள் அகநிலைவாதக் கருத்துகளால் நஞ்சூட்டப்படுவதற்கு அனுமதிக்கிறது. அது அவர்களின் உணர்வு நுட்பத்தை மரத்துப் போகச் செய்கிறது. ஆகவே நாம் கட்சிக்குள் நமது தோழர்களின் உள்ளங்களை அகநிலைவாதம்மற்றும் வறட்டுக் கோட்பாட்டியம் என்ற மூடுபனியிலிருந்து விடுவிப்பதற்கு கற்பித்தல் இயக்கத்தை மேற்கொண்டு அகநிலைவாதம், குறுங்குழுவாதம், செக்குமாட்டுத்தனமான கட்சி எழுத்துக்கள் ஆகியவற்றைப் புறக்கணிப்பதற்கு அவர்களுக்கு அறைகூவல் விட வேண்டும்.
– கட்சி வேலைப்பணியில் சீர்திருத்தம் …மாவோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *