மார்க்ஸ்-ம் ஜென்னியும்
மார்க்ஸ்-ம் ஜென்னியும்

மார்க்ஸ்-ம் ஜென்னியும்

உலகின் மிகச் சிறந்த வாடாமலர்..!”அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது”…. மார்க்ஸ் திருமணமாகி 13 வருடங்கள் கழித்து ஜென்னிக்கு எழுதும் கடிதத்தில் இப்படி எழுதுகிறார்…. மார்க்ஸ்-ம் ஜென்னியும் ஒருவரை ஒருவர் நேசித்தனர், அதை விட ஒருவரை ஒருவர் உயர்வாக மதித்தனர்.”உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக”… இவ்வளவு அழகான கவிதை ஒரு பூவிற்கு எழுதியதுதான்… ஆம்! ஜென்னி என்ற மலருக்குத்தான் மார்க்ஸ் எழுதியது…வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து தன்னுடைய குழந்தைகளை இழந்து, ஓடி, ஓடி உழைத்த வாழ்க்கையில் ஓய்வை மறந்து உயிர் பிரியும் வரை உயிருக்கு உயிரான கணவனையும், காதலையும், அடுத்தவருக்காக வாழ்வதை மட்டுமே லட்சியாமாய் கொண்டு உடல் மட்டும் மண்ணோடு உறங்க, உயிர் இன்னும் காற்றாய் மாறி நம்மை சுவாசிக்க வைத்துக் கொண்டிருக்கும் தேவதை ஜென்னி மட்டுமே…தேவதைகள் இத்தனை அழகும் எளிமையும் கொண்டவையா என்பதை நான் அறியேன்.. ஆனால் என் ஜென்னி எனும் தேவதை மட்டுமே எளிமையின் அழகு…ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள்.ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.அரசியல், சமூகச் சிந்தனைகள், தத்துவம், இலக்கியம் போன்ற பல விஷயங்களை வெஸ்ட்பாலன் மார்க்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் நிறைய விவாதிப்பார்கள்.ஜென்னிக்கு கவிதைகள் மீது தீராத ஆர்வம்.மார்க்ஸின் விவாதம் மீது தீராத காதல்.. ஜென்னிக்கு மார்க்ஸைப் பிடிக்க அவருடைய அறிவும் மக்களுக்கான சிந்தனைகளும்தான் காரணம்.ஜென்னியும் மார்க்ஸும் விரும்பி காதலித்தாலும் காதல் தான் அவர்களை விரும்பி காதலித்தது. தன்னைப் போலவே மார்க்ஸும் வழக்கறிஞராகவேண்டும் என்று அவர் அப்பா நினைத்தார். பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார்.ஜென்னிக்கும் மார்க்ஸுக்கும் பிரிவு துயரத்தை அளித்தாலும் இருவரும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டனர். மார்க்ஸ் தொடர்ந்து ஜென்னிக்குக் கடிதம் எழுதி அனுப்பினார். அந்தக் கடிதம் முழுவதும் காதல் கவிதைகளால் நிரம்பி வழியும். ஜென்னியும் இலக்கிய ரசம் மிகுந்த, காதல் கடிதங்களை வீட்டுக்குத் தெரியாமல் எழுதுவார்.ஜென்னி – மார்க்ஸ் காதல் மார்க்ஸின் அப்பாவுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அவர் பயந்து போனார். தன் குடும்பம் மிகவும் சாதாரணமானது. ஜென்னியின் குடும்பம் செல்வாக்கு மிக்க பணக்காரக் குடும்பம். இவர்களின் காதலால் அருமையான நண்பர் வெஸ்ட்பாலனின் நட்பு உடைந்துவிடுமோ என்று நினைத்தார்.ஜென்னியிடம் மார்க்ஸைத் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றார். மார்க்ஸிடம் காதலைத் துறந்துவிடும்படி கடிதம் எழுதினார். அப்போது ஜென்னி துயரத்துடன் இருப்பதை அறிந்த மார்க்ஸ், ”இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி:ஜென்னி என்றால் காதல்” என்று எழுதினார்.இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சுமார் 7 ஆண்டுகள் ஜென்னி மார்க்ஸ் காதலுக்காய் காத்திருந்தார். ***ஜென்னி மார்க்ஸை மட்டும் காதலிக்கவில்லை.. வறுமையையும் காதலித்தார். வறுமை ஜென்னி மீது கொண்ட தீரா காதலால் அவரை விட்டு விலக மறுத்தது.தத்துவத்தின் மீது மிகவும் ஈடுபாடுகொண்டார் மார்க்ஸ். புரட்சிகரச் சிந்தனையாளர்களின் இளம் ஹெகேலியர் இயக்கத்தில் இணைந்தார்.23 வயதில் டாக்டர் பட்டம் பெற்று ட்ரியர் திரும்பினார் மார்க்ஸ். அப்போது மார்க்ஸின் அப்பாவும் ஜென்னியின் அப்பாவும் மறைந்திருந்தார்கள். ஜென்னியின் அம்மாவுக்கு இவர்களின் திருமணத்தில் விருப்பமில்லை. திருமணம் தள்ளிப்போனது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 29 வயதில் ஜென்னி தன் அன்புக்குரிய மார்க்ஸை மணந்துகொண்டார்…ஜென்னி மார்க்ஸ் நினைவுநாள் : டிசம்பர் 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *