மார்க்ஸ் முதல் மாவோ வரை
மார்க்ஸ் முதல் மாவோ வரை

மார்க்ஸ் முதல் மாவோ வரை

‘‘ஆண்டாண்டு காலமாக மனித இனம் சேகரித்த அறிவை. நாம் சில வருடங்களில் சில மாதங்களில் இன்று சில மணிநேரத்தில் அதனை அறிந்து கொண்டு எல்லோரையும் விட மேதாவியாகவும் எல்லாம் தெரிந்த புத்திஜீவியாகவும் இவ்வுலகத்திற்கு பறைசாற்ற முற்படும் மாந்தர்களிடையே நாமும் வாழ்கின்றோம். நாம் பெற்ற அறிவிற்கு நாம் சொந்தக் காரர்கள் அல்ல. அறிவு குவியபப் பெற்ற உலகில் வாழ்கின்ற நாம் தொழில் நுட்பத்தின் காரணமாக நம் முன்னோரை விட அறிவு உள்ளவர்களாக நம்மால் நடமாட முடிகின்றது. இதுதான் இன்றைய உலக நிலை.மார்க்சீயம் உச்சரித்தவர்களை எல்லாம் மார்க்சீயவாதிகள் என்று பிரகடனப்படுத்தும் இன்றைய உலகில் இன்னும் எத்தனையோ பேர் வருவார்கள் அதில் நம்மைப் போன்ற குட்டி முதலாளிய சிந்தனைக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க முடியும். ஏனெனில் மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது. உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவை அறிந்து கொள்வது அவசியமானதாகும். பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது.இனக்குழும வாழ்வு முறையில் அமைந்த சமூக உறவின் எச்சங்கள் நிலப்பிரபுத்துவத்தில் தொடர்கின்றது. அதேபோல முதலாளித்துவத்தில் ஏன் ஏகாதிபத்தியத்திலும் நிலப்பிரபுத்துவ சமூக உறவு தொடர்ச்சியாகத் தான் இருக்கின்றது.‘‘

இனக்குழும வாழ்வு முறையில் அமைந்த சமூக உறவின் எச்சங்கள் நிலப்பிரபுத்துவத்தில் தொடர்கின்றது. அதேபோல முதலாளித்துவத்தில் ஏன் ஏகாதிபத்தியத்திலும் நிலப்பிரபுத்துவ சமூக உறவு தொடர்ச்சியாகத் தான் இருக்கின்றது.இப்படி இருக்கும் பொழுது இங்குள்ள சில புரட்சியாளர்கள் தங்களின் தவறான பார்வையை மார்க்சிய ஒளியில் பார்க்க அழைக்கிறேன், பெரும் புரடசியாளர்களா தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் புரட்சியாளர்களே, சற்று நமது ஆசான்கள் பற்றி அறிவோமா?உங்களின் புரட்சி கோசங்கள் யாருக்கானவை மக்களின் விடுதலைக்கான தத்துவம் பேசும் தத்துவ ஆசான்களே நீங்கள் செய்யும் வேலை யாருக்கானது? உங்களின் அராஜகவாதம் பற்றி தோழர் லெனின் “அராஜகவாதம் அவ நம்பிக்கையின் விளை பொருள்” என்பார்.(லெதொநூ 5.327)ஒரு முன்னணிப்படை தான் புரட்சியை வழி நடத்துகிறது மக்களிடமிருந்து தனிமைப்படுவதைத் தவிர்க்கவும். மக்கள் திரள் முழுவதையும் முன்னோக்கி வழி நடத்தவும் உண்மையில் ஆற்றல் பெற்றிருக்கும் போதுதான் முன்னணிப் படையாக கடமை செய்யும்.(லெதொநூ 33.227).1920 ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட மூன்றாம் கம்யூனிச அகிலத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று அகிலத்தோடு சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனநாயக மத்திய துவக் கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்களின் நம்பிக்கை பெற்ற வலுவான அதிகாரம் மிக்க கட்சியாக உள்ள போதே அவர்கள் கடமையை செய்ய முடியும் (.லெதொநூ 31..210). மேலும் இங்கு அறிவியல் வளர்ச்சியில் பல அறிவியலாளர்கள் இருந்தது போலவே தத்துவக் கண்ணோட்டத்திலும் பலர் இருந்திருக்கின்றனர் அவர்களில் சிலர் கியூம், காண்ட், ஹெகல், ஃபாயபார்க் என்போர் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் தத்துவ அறிஞர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. “என்னுடைய இயக்கவியல் முறை ஹெகலிய முறையில் இருந்து வேறுபட்டு இருப்பது மட்டும் அல்லாமல், நேரடியாகவே அதற்கு எதிரிடையானது ” என்றார் நமது ஆசான் மார்க்ஸ். (பார்க்க: மூலதனம், முதல் தொகுதி, இரண்டாவது ஜெர்மன் பதிப்பின் பின்னுரை,1873, ஜனவரி 24) . இவர்களின் வளர்ச்சியில் இருந்து விஞ்ஞான சோசலிசத்தினை படைத்தவர்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகும். இவர்களைத் தொடர்ந்து லெனின், ஸ்டாலின், மாவோ என மார்க்சியம் வளர்ச்சியடைந்துள்ளது.

மார்க்சியம் லெனினியம் மாவோ சிந்தனை

++++++++++++++++++++++++++++++++++++++++


கார்ல் மார்க்ஸ், பிரெட்றிக் ஏங்கெல்ஸ் இருவரும் விஞ்ஞான சோசலிசத்தின் பிதாமகன்கள் ஆவர். அவர்கள் முதலாளித்துவம் வளர்ச்சியடையும் காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்து, அவற்றை தொழிலாளி வர்க்கம் புரிந்து, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக, அவ்விதிகளை தொழிலாளி வர்க்கத்துக்கு போதித்தனர். மார்க்சும், ஏங்கெல்சும் வர்க்கப் போராட் டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றின் விதிகள் பற்றியும், அரசு பற்றிய தத்துவத்தையும் நமக்குப் போதித்தனர். ஆனால், அவர்கள் தமது கனவு நனவாவதைக் காண, தமது தத்துவங்கள் நடைமுறையாதைக் காணக்கொடுத்து வைக்கவில்லை. அவர்களுடைய வழிகாட்டுதல் தத்துவம் பின்னர் மார்க்சியம் என அழைக்கப்படுகின்றது.

லெனின் அவர்கள், முதலாளித்துவம் அதன் இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய கால கட்டத்தில் புரட்சி இயக்கத்தின் ஊக்கமாக உழைத்த ஒரு மார்க்சியவாதியாவார். வேறுவார்த்தைகளில் சொன்னால், அவர் ஏகாதிபத்திய யுத்த சகாப்தத்தை அறிந்து சோசலிச புரட்சிக்கு வழிகோலினார். தமது காலத்தின் மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப அவர் மார்க்சி யத்தைப் உபயோகித்தார். இவ்வாறு, அவர் மார்க்சியத்தை லெனினியம் என்ற உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தார்.

லெனின் அவர்கள் தமது முதல் கடமையாக, மார்க்சும், ஏங்கெல்சும் மறைந்த பின்னர், அவர்களுடைய வாரிசுகள் தாம் என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் போன்ற இரண்டாவது சர்வதேசியத்தின் தலைவர்களுடன் ஒரு மிகப்பெரும் சித்தாந்தப் போரை நடத்தினர். ஆநால், யதார்த்தத்தில் அவர்களுக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் சம்பந்தா சம்பந்தமே கிடையாது. அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிப் போதனைகளைத் திரித்துப் புரட்டி எழுதினார்கள். விஞ்ஞான சோசலிசத்தின் இம்மாபெரும் பிதாமகன்களின் புரட்சிகர உள்ளடக்கத்துக்கு முழுக்குப் போட்டு, அவற்றுக்குப் பதில் காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் என்ற இந்த அற்பர்கள் பாராளுமன்றப் பாதை மூலம் சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றத் தத்துவங்களை விளம்பரம் செய்தார்கள். அவர்கள் புரட்சிகரக் கட்சிகளாக இருந்த இரண்டாவது சர்வதேசியத்தின் கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக மாற்றி விட்டார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் மார்க்ஸ், ஏங் கெல்ஸ் இருவரின் புரட்சித் தத்துவங்களைத் திரித்து விட்டனர். எனவேதான் லெனின் அவர்க்ளை திரிபுவாதி கள் என்று அழைத்தார். ஆக, மார்க்சியத்தின் அடிப்படை புரட்சிகர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றை உறுதியாகவும், ஒளியுடனும் புதிபித்ததும் லெனினின் முதல் கட மையாக இருந்தது. இந்தக் கடமையை, இன்றும் பிரசித்தி பெற்று புகழுடன் விளங்கும் மார்க்சியத் தொன்னுால்களான ‘அரசும் புரட்சியும்’, ‘பாட்டாளி வர்க்கப் புரட்சியும், துரோகி காட்ஸ்கியும்’ போன்ற பிரகாசமான பல வாதப்பிரதிவாதப் படைப்புகள் மூலம் நிறைவேற்றினர்.

லெனினியம்

ஆனால், லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரனும் கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சி யொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும். இதன் பிரகாரம் அவர் உருவாக்கிய பொல்ஷிவிக் கட்சி, அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது, இது உருக்குப்போன்ற கட்டுப்பாடுடைய, புரட்சிகர மார்க்சிய உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்பவாதத் திலிருந்து விடுதலைபெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட் பாடுகளால் வழிநடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.

இத்தகைய ஒரு கட்சியின் உதவியுடன், லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றி கரமாக வழிநடத்தி, உலகின் முதலாவது சோசலிச அரசை நிறுவினார்.

அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய்வதன் மூலம் லெனின் தத்துவத்தை நடைமுறையாக்கினர்; கனவை நனவாக்கினர். இத்துடன், முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, பாதுகாப்பது சம்பந்தயான பல பிரச்சினை களுக்கும் தீர்வு கண்டார்.

ஆனால்,

படித்தறிய முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அதுமுதல், மார்க்சியம் என்பது மார்க் சியம்-லெனினியம் என அழைக்கப்பட்டது.

ஸ்டாலின் அவர்கள் லெனினின் கடமைகளைத் தொடர்ந்து செய்தார். ஹிட்லரின் பாசிச ஆக்கிரமிப்பின் குரூரத்தை, எதிர்த்து, ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டிவளர்த்து, அதைப் பாதுகாப் பதில் பெரும்பணி புரிந்தார். ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் ஈட்டிய வெற்றியும், உலக பாசிசத்தை நிர்மூலமாக்குவதில் அது வகித்த முக்கிய பாத்திரமும் சோசலிசமும் ஒரு தனிநாட்டின் எல்லைக்கு அப்பால் பரவுவதற்கு துணைசெய்தது மாத்திரமல்ல, உலகத்தில் முற்றிலும் புதிய ஒரு நிலைமையையும், அதாவது, சோசலிசம் புரட்சி இவற்றிற்காக நிற்கும் சக்திகளுக்குச் சாதகமான ஒரு பலாபல நிலைமையையும் தோற்றுவித்தது.

இந்த தீர்க்கமான மாற்றம், 1949ல் சீன புரட்சியின் வெற்றியுடன், மனித குலத்தில் நாலில் ஒரு பகுதி ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய மூன்று மலைகளையும் தூக்கி வீசிவிட்டு, சோசலிசத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியதுடன், மேலும் தீர்க்கமானதாக மாறியது. இவ்வாறு உலகப் புரட்சியின் வெற்றிக்கு மேலும் சாதகமான ஒரு புத்தம் புதிய சூழ்நிலை உருவாகியது.

மாசேதுங் சிந்தனை

தோழர் மாசேதுங் சீன புரட்சியின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியம் – லெனினியத்தைப் பிரயோகித்தார்.

வெளிநாட்டு ஏகாதிபத்தியம், உள்நாட்டு நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் இவற்றுக்கு எதிரான நீடித்த போராட்டத்தின் வளைவுசுளிவுகளுக்கு ஊடாகச் சீன புரட்சி வெற்றிபெற வழிகாட்டி, தலைமை கொடுப்பதன் மூலமும், சீனாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியதன் மூலமும், தோழர் மாவோ அவர்கள் மார்க்சியம் – லெனினியத்தின் பொது உண்மைகளை சீனாவின் ஸ்தூலமான புரட்சி நிலைமைக்கு இனங்கப் பிரயோகிப்பதில் தமது ஈடு இணையற்ற திறமையைக் காட்டினார்.

தோழர் மாவோ அவர்கள் சீன புரட்சியை வெற்றிக்கு வழிநடத்தி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியது மாத்திரமல்ல, தமது காலத்தில் லெனின் அவர்கள் தீர்வு காணுது விட்டுச்சென்ற, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவிவிட்ட பின் எழுந்த பல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கண்டார். (கலாச்சார புரட்சியின் ஊடாக).


தவறற்ற தீர்க்க தரிசனத்துடன், தோழர் மாவோ அவர்கள், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்றுக் காலகட்டம் பூராவும் வர்க்கங்கள் தொடர்ந்து இருக்கும், ஆகவே, சோசலிசப் புரட்சியின் பின்னர்கூட வர்க்கப் போராட்டங்கள் தொடர்ந்து இருக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

காணற்கரிய மேதாவிலாசத்துடன், மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியை தாமாக ஆரம்பித்து தலைமை தாங்குவதன் மூலம், அவர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சி நடத்துவது எப்படி, சோவியத் யூனியனில் ஏற்பட்டதுபோல் சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்படாமல் தடுப்பது எப்படி, சீனாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாத்து,எப்படி, புரட்சியை இறுதிவரை தொடர்ந்து நடத்துவது எப்படி, இறுதியில் சீனாவை உலகப் புரட்சியின் தளமாக்கப் பேணிவைத்திருப்பது எப்படி என்று நடைமுறையில் காட்டினர்.

அதேவேளையில், தோழர் மாவோ அவர்கள் நவீன திரிபுவாதத்தின் நச்சுத் தத்துவங்களுக்கு எதிராகவும், மார்க்சிய லெனினியத்தின் தூய்மையைப் பாதுகாக்கவும் மாபெரும் சித்தாந்தப் போர் ஒன்றை நடத்தினர்.

மார்க்சிய-லெனினியத்தின் உண்மைகளை குருசேவ் நவீன திரிபுவாதி திரித்துப் புரட்டி, அவற்றின் புரட்சிகர ஆத்மாவை திருடிவிடாமல், அவ் வுண்மைகளைக் கண்டுபிடித்து; மீண்டும் வரைந்தார். இவ்வாறு லெனின் அவர்கள் தமது காலத்தில் செய்த அதே கடமையை, தோழர் மாவோ அவர்கள் செய்தார்.

இந்த மகத்தான சிந்தாந்தப் போராட்டம் மார்க்சிய – லெனினியத்தை வாகை சூட வைத்தது மட்டுமல்ல, சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கம் முழுவதுக்கும் புதிய தெம்பை ஊட்டியுள்ளது. உலகப் புரட்சியின் இறுதி வெற் றியை நிச்சயமாக்கியுள்ளது. உலக ஏகாதிபத்தியத்தின் இறுதித் தோல்வியையும், அதன் ஊடாக விளங்கும் நவீன திரிபுவாதத்தின் தோல்வியையும் கூட நிச்சயமாக்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் போக்கில் தோழர் மாவோ அவர் கள் மார்க்சிய-லெனினியத்தை செழுமைப்படுத்தி, அதை ஒரு புதிய கட்டத்துக்கு ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளார். அதையே நாம் மாவோ சிந்தனை என்று அழைக்கின்றோம்.

மாசேதுங் சிந்தனை என்பது மார்க்சிய-லெனினியத்தின் சிகரம். ஆகவே, அதை மார்க்சிய – லெனினியத்திலிருந்து வேறுபட்டதாகவோ அல்லது பிரிந்ததாகவோ கருதக்கூடாது.

லெனின் அவர்கள் மார்க்சியத்தை ஆக்கபூர்வமாக லெனினியம் என்ற கட்டத்துக்கு வளர்த்தார். தோழர் மாவோ அவர்கள் மார்க்சிய்-லெனினியத்தை மாவோ சிந்தனை என்ற கட்டத்துக்கு ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளார்.

எனவேதான், லெனினுடைய காலத்தில், யார் லெனினியத்தை எதிர்த்தாலும், அவர் உண்மையில் மார்க்சியத்தை எதிர்த்தார் என்று கருதப்பட்டது. அதுபோல, இன்று யார் மாசேதுங் சிந்தனையை எதிர்த்தாலும், அவர் உண்மையில் மார்க்சிய-லெனினியத்தை எதிர்க்கின்றர் என நாம் கருதுகின்றோம்.

(மூலம் மாவோவின் சிந்தனை நூல், மொழித் திருத்தம் சுருக்கம் நான்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *