மார்க்சும் கலை, இலக்கியமும்-மாதவன்
மார்க்சும் கலை, இலக்கியமும்-மாதவன்

மார்க்சும் கலை, இலக்கியமும்-மாதவன்

முதலாளித்துவ கலை, இலக்கியங்களில் கொலை, திருட்டு, காதல் ஏமாற்றம், கற்பழிப்புப் போன்ற பாலியல் குற்றங்கள், கடத்தல், கலப் படம், ஏமாற்று, சொத்துப் பிணக்குகள், பிற்போக்கான வன்செயல் கள், துன்பியல் சம்பவங்கள் ஆகியவற்றை நீங்கள் தாராளமாகக் காண லாம். இவை யாவும் முதலாளித்துவ சமுதாய அமைப்பிலுள்ள முரண் பாடுகளின் பிரதிபலிப்பேயாகும். பல கற்பனையாக இருப்பினும் அவை சமூக வாழ்விலிருந்து தப்பிவிட மாட்டாது.

முதலாளித்துவத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் குற்றச் செயல்கள் பயமுறுத்துகின்றன. ஆகவே இக்குற்றங்களையெல்லாம் ஒழிப்பதற்காக முதலாளித்துவம் பொலிஸ்படை, சட்டங்கள், சட்ட சபைப் பிரதிநிதிகள், வக்கீல்கள், நீதிபதிகள், யூரர்கள், துப்பறியும் நிபுணர்கள், ஆய்வுகூடங்கள், சிறைச்சாலைகள், பாதுகாப்பு காவற்காரர் கள், சிறை அதிகாரிகள், சட்டக்கல்லூரிகள், கற்பிக்கும் பேராசிரியர் கள் இவ்வாருகப் பல இலட்சம் மக்கள் பொருள் உற்பத்தியில் ஈடு படாது குருவிச்சைகளாகப் பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். கட்டடங்கள், சிறைச்சாலைகள், துப்பாக்கிகள், பொலிஸ், சிறைக்காவலர் சீருடைகள், குற்றவாளிகளை வதைசெய்யும் கருவிகள், பூட்டுகள், திறப்புகள் இவ்வாருண பயனற்ற பாதுகாப்புப் பண்டங் களும் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.

இதுவே பூர்ஷ்வா நாகரிகமாகும். வேலையற்றவர் தொகையை முத லாளித்துவம் இவ்வாறு குறைக்க முயல்கிறது. தேன் கூட்டிலே கூட உற்பத்தியில் ஈடுபடாத எத்தேனியையும் காண முடியாது.

‘சித்தாந்தவாதி கருத்துக்களையும், கவிஞன் கவிதையையும் மத குரு பிரார்த்தனைகளையும், பேராசிரியர் சுருக்கவிரிவுரைகளையும் உற் பத்தி செய்வதுபோல குற்றவாளி குற்றத்தை உற்பத்தி செய்கிருன்’ என்று மார்க்ஸ் கூறியுள்ளார். இதைக் கட்டுப்படுத்த, முன்னர் கூறிய பல பிரிவினர் உழைப்பில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு முதலாளித்துவத்தில் “குற்றச் செயல்” ஒரு பண்டமா விற்பனையாகிறது.

பின்னர் முதலாளித்துவ கலை, இலக்கியத்திலும், குற்றச் செயல் ஒரு முக்கிய பண்டமாகிறது. “குற்றச் செயல்’ என்ற பண்டம் இங்கு நன்கு விலை போகிறது, பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி விற்பனையாகிறது, சிறு கதைகள், நாவல்கள், துப்பறியும் கதைகள், மர்மக்கதைகள், காட்டுன் கதைகளான கமிக்ஸ் ஆக இலக்கியச் சந்தையை நிரப்பு கிறது. சினிமா, டி. வி. விடியோ படங்களிலும் “குற்றச் செயல்களே? முக்கிய விற்பனைப் பண்டங்கள் ஆகின்றன; செக்ஸ், வன்செயல் குற் றங்கள் இங்கு முக்கிய பங்குகள் வகிக்கின்றன.

குற்றவாளி, ஒழுக்கம் துன்பியல் உணர்வுகளையும் உற்பத்தி செய் கிருன், இதன் மூலம் மக்களது ஒழுக்க, அழகுணர்வு ஆகிய உணர்வு களையும் ஏற்படுத்துகிறன். இவற்றின் மூலம் ஒரு “சேவை’யும் செய் கிருன், சட்டசபை உறுப்பினர் மூலம் குற்றவியல் சட்டங்கள் மட்டு மல்ல கலைத்துறையில் நாவல்கள், துன்பியல் நாடகங்களையும் உற்பத்தி செய்கிருன் என்று மார்க்ஸ் “மூலதனம்” நூலில் பூர்ஷ்வா நாகரிகம் பற் றிக் கூறும்போது குறிப்பிட்டுள்ளார்,

உற்பத்தி உறவுகள் பொருள் உற்பத்தியின்போது மக்களிடை நிறு வப்படும் உறவுகள். தனியாகவும் கூட்டாகவும் பண்டங்களை உற்பத்தி செய்யலாம். மனித வரலாற்றில் 5 வகையான உற்பத்தி உறவுகள் ஏற் பட்டன.

(1) தொன்மைப் பொதுவுடைமை. உற்பத்திக் கருவிகளும் பொ ருட்களும் சமூகத்திற்குச் சொந்தமாயிருத்தன.

(2) அடிமை, (3) நிலவுடைமை, (4) முதலாளித்துவ சமூகங்களில் உற்பத்திக் கருவிகள், சாதனங் கள் உழைப்பவர்களுக்குக் கிட்டாததினுல் முறையே கைவிலங்கு, நிலம், மூலதனத்திற்கு அடிமையாகின்றனர்.

(5) சோஷலிச சமுதாயத்தில் மீண்டும் உற்பத்தி சமூக உடைமை ஆகிறது.

புதுமை பூக்கட்டும்! அடிவானம் செக்கரிட விழித்த மக்கள்

ஆதவன்போய் மறையுமட்டும் வேலைசெய்தும் விடிவேது மில்லாமல் மிடிமை யோடு,

விதியிதுவா எனப்பாரில் வாழும் வாழ்வு! வடிவான மாளிகைவாழ் போடிமார்கள்

வருத்துகின்ற செயலதனை மாற்றவேண்டின், கடிவாளம் எம்கைக்கு மாறவேண்டும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *